Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > உண்மையான தீபாவளியை கொண்டாடலாமா?

உண்மையான தீபாவளியை கொண்டாடலாமா?

print
ப்பசி மாதம் கிருஷ்ண பக்ஷம் சதுர்த்தசியன்று இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்னும் இத்தெய்விகப் பண்டிகை, தீபாலங்காரப் பண்டிகையாக மனைதோறும் மங்களகரமாகக் கொண்டாடப்படுகிறது. நெடுங்காலமாகவே சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளுள் தீபாவளியும் ஒன்று.நம்நாட்டின் பற்பல பகுதிகளிலுள்ள பற்பல மக்களாலும் பற்பல விதத்தில் இப்பண்டிகை கொண்டாடப்படுகின்றது.

diya-photos

ஞான நூல்களுள் “பகவத் கீதை” சிறப்பான இடத்தைப் பெறுவதைப்போல தீபாவளி, பண்டிகைகளுள் உயர்ந்த இடத்தைப் பெறுவதால் இதனை ஆசார்ய சுவாமிகள் “பகவத் கீதையின் தம்பி” என்று சொல்லியுள்ளார்கள்.

தீபம் என்றால் விளக்கு; ஆவளி என்றால் வரிசை. தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்துக் கொண்டாடுவதால் இப்பண்டிகைக்குத் தீபாவளி என்று பெயர் ஏற்பட்டது.

லக்ஷ்மி செல்வத்தின் அதிபதி. அதனால் தீபாவளி அன்று லக்ஷ்மி பூஜை செய்வதால் செல்வம் வளரும் என்பது நம்பிக்கை.

தீபாவளி நன்னாளன்று லக்ஷ்மி பூஜை செய்த பின்பு புதுக் கணக்கு எழுதுவர். கணக்குப் புத்தகங்களின் மீது சந்தனம், மஞ்சள், குங்குமம் இட்டு மலர் தூவுவார்கள். பின்பு பூஜை செய்வார்கள். செல்வம் லக்ஷ்மியின் பேரருள் என்பது அடிப்படையான நம்பிக்கை. பிறகுதான் வியாபாரம் தொடங்குவார்கள்.

கங்கா ஸ்நான தத்துவம்

தீபாவளியன்று புத்தாடை, பட்டாசு, பலகாரங்கள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் கங்கா ஸ்நானம். எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு கங்கா ஸ்நானம் என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து தலைமுழுகினால் நம் பாவம் எல்லாம் போய்விடும் என்பது நம்பிக்கை. கிருஷ்ணன் நரகாசுரனை அழித்த நாளே தீப ஒளி திருநாளாம் தீபாவளி திருநாள் என்று பெயர் பெற்றது. அன்று சிவபெருமான் உலகிலுள்ள நீர்நிலை அனைத்திற்குமே கங்கையின் புனிதத்தை வழங்குகிறார் என்பது ஐதீகம். இந்த ஐதீகத்தின்படி அன்று நம் வீட்டில் உள்ள கிணறு, குழாய் ஆகியவற்றில் வரும் தண்ணீர் அனைத்தும் கங்கை நீராகவே பாவிக்கப்படும். இதனால்தான் தீபாவளி அன்று காலையில் நீராடுவதை கங்காஸ்நானம் ஆச்சா என்று சொல்கிறார்கள்.

Deepavali copyதீபாவளி குளியலில் கங்கையின் புண்ணியம்

தீபாவளி தினத்தில் வெந்நீரில் எண்ணெய் தேய்த்துக் குளித்தால் பீடைகள் விலகி, புண்ணியம் உண்டாகும். அன்றைய தினத்தில் எண்ணெயில் திருமகளும், வெந்நீரில் கங்கையும் ஒன்று சேர்வதால், எண்ணெய்க் குளியல் செய்பவர்க்கு கங்கையில் மூழ்கிக் குளித்த புனிதப்பயன் கிட்டும்! தீபாவளியன்று அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து ஆல், அரசு, அத்தி, மாவிலங்கை ஆகிய மரங்களின் பட்டைகள் போட்டுக் காய்ச்சிய நீரில் கங்கா ஸ்நானம் செய்த பின் புத்தாடை உடுத்தி, பல வகையான பலகாரங்கள் செய்து விஷ்ணுவுக்கும், மகாலட்சுமிக்கும் படைத்து பூஜிக்க வேண்டும்.

அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் உப்பு

தீபாவளியன்று பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களிலும் ஒவ்வொரு தெய்வத்தின் கடாட்சம் இருப்பதாக சாஸ்திரம் கூறுகிறது. எண்ணெய்-லட்சுமி; சிகைக்காய் – சரஸ்வதி; சந்தனம் – பூமாதேவி; குங்குமம் – கௌரி; தண்ணீர் – கங்கை; இனிப்புப் பலகாரம் – அமிர்தம்; நெருப்புப் பொறி – ஜீவாத்மா; புத்தாடை – மகாவிஷ்ணு; லேகியம் – தன்வந்தரி. தீபாவளியன்று உப்பு வாங்குவது அதிர்ஷ்டமாகக் கருதப்படுகிறது. உப்பில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது ஐதிகம்.

குளிக்கும் நேரம்

தீபாவளியன்று சூரியன் உதயமாவதற்கு ஒரு முகூர்த்தம், அதாவது ஒன்றரை மணி நேரம் முன்னதாக நீராட வேண்டும் என்பது விதி. இந்த ஆண்டில் காலை 4.30க்கு நீராடுவது உத்தமம். இதில் இருந்து 5.30 மணிக்குள் வீட்டிலுள்ள எல்லாரும் குளித்து விட வேண்டும். சூரிய உதயத்துக்கு முன்னதாக எண்ணெய்க்குளியல் செய்யக்கூடாது என்பது பொதுவிதி. ஆனால், தீபாவளியன்று மட்டும் வித்தியாசமாக இப்படி செய்தால் தான், நரகாசுரனைப் பற்றி மக்கள் நினைப்பார்கள். அவனைப் போல நம் பிள்ளைகளை அதிக செல்லம் கொடுத்து கெடுத்துவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருப்பார்கள் என பூமாதேவி நினைத்தாள். அதற்கென்றே இப்படி ஒரு விதிவிலக்கான வரத்தைப் பெற்றாள். எனவே, எக்காரணம் காலை 2மணி, 3மணி என்றெல்லாம் யாரும் எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது. சூரிய உதயத்துக்குப் பிறகும் குளிப்பது தவறு.

தீபாவளியன்று பிதுர்கள் வழிபாடு

தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளித்ததும், புதிய ஆடைகளையும், புதிய பலகாரங்களையும் வைத்து வணங்குவது வழக்கம். இது முன்னோர்களுக்கு (பிதுர்களுக்கு) படைக்கும் படையல் ஆகும். அன்று பிதுர்கள் வருவதாக ஐதீகம்.

தீபாவளி சிறப்பு

* தீபாவளி தினத்தன்றுதான் விஷ்ணு, லட்சுமியைத் திருமணம் செய்து கொண்ட நாள்.
* சாவித்திரி, யமனோடு வாதம் செய்து சத்தியவானின் உயிரை மீட்ட நாள்.
* ஆதிசங்கரர், ஞான பீடம் நிறுவிய தினம்.
* நசிகேதஸ், யம லோகம் சென்று வரம்பெற்று திரும்பிய தினம்.
* கோவர்த்தன பூஜை செய்யும் நாள்.
* மகாபலி சக்ரவர்த்தி முடிசூடிய நாள்.
* புத்தர் நிர்வாண தீட்சை பெற்ற தினம்.
* தீபாவளி தினத்தை அரசு விடுமுறையாக அறிவித்து, பட்டாசு வெடித்துக் கொண்டாட வகை செய்தது மொகலாயச் சக்கரவர்த்தி அக்பர்.

தியாகத்திருநாள்

தேவர்களுக்கும், தவசிகளுக்கும் அடுக்கடுக்காகத் தொல்லைகளைக் கொடுத்து வந்தவன் நரகாசுரன் என்பவன். அந்த அரக்கனைக் கண்ணபிரான், சத்திய பாமாவின் துணை கொண்டு சம்ஹாரம் செய்த நாளைத் தான் தீபாவளியாகக் கொண்டாடுகிறோம்.

satyabhama

நரகாசுரன் பரந்தாமனால் தண்டிக்கப்பட்டதும், பூமா தேவியானவள் கண்ணபிரானின் பாதகமலங்களைப் பணிந்து, “சுவாமி! நீங்கள் வராஹ சொரூபியாக எழுந்தருளியபோது நமக்குப் பிறந்தவன்தான் நரகாசுரன். தேவரீர் இவனுக்கு ஞானோபதேசம் செய்து மோக்ஷம் அளித்து அருள வேண்டும்” என்று பிரார்த்தித்தாள். எம்பெருமானுக்கு பிராட்டியார், ரத்தின குண்டலங்களும், வன மாலையும் கௌஸ்துப மணியும், பீதாம்பரமும், வெண் கொற்றக் குடையையும் காணிக்கையாகச் சமர்ப்பணம் செய்தாள். மகனின் மரண நாளை மற்றவர்களின் மங்கல நாளாகத் திகழப் பிரார்த்தித்த அன்னையின் அருளைத் தான் என்னென்பது?

நமக்கு ஏற்படும் துக்கத்தையும் துயரத்தையும் ஒரு பொருட்டாக எண்ணாமல் லோகம் க்ஷேமமாகவும், சாந்தமாகவும் இருக்க வேண்டும் என்று நாம் அனைவரும் எண்ண வேண்டும். அப்படிப்பட்ட நல்ல பக்குவமான மனோநிலையைத் தந்தருள வேண்டும் என்று எம்பெருமானிடம் பிரார்த்திக்க வேண்டும். இந்த உண்மைத் தத்துவத்தை உலகிற்கு உணர்த்திய தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடி சகல மங்களங்களையும் பெறுவோமாக!எனவே, தீபாவளி தியாகத்திருநாள் ஆகிறது.

(ஆக்கத்தில் உதவி : DINAMALAR.COM, LIFCOBLOG)

தீபாவளியை குறித்தும் அதன் தாத்பரியத்தை குறித்தும் அவசியம் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக அளிக்கப்பட்ட பதிவு இது. தீபாவளியென்பது நாம் மட்டும் மகிழ்ச்சியாய் இருப்பதல்ல. நம்மை சுற்றியிருப்பவர்களும் மகிழ்ச்சியாக இருப்பது தான்.

அந்த வகையில் காலை கங்கா ஸ்நானம் முடித்து, பூஜை செய்து இறைவனை வழிபடுவது தவிர  தீபாவளியன்று நீங்கள் செய்யவேண்டியது என்ன தெரியுமா?

============================================================

உண்மையான தீபாவளியை கொண்டாடலாமா?

* தீபாவளி பண்டிகையை நீங்கள் எப்படி சந்தோஷமாக கொண்டாடுகிறீர்களோ அதே போன்று உங்களை சுற்றியிருப்பவர்களும் உங்களை சார்ந்தவர்களும் கொண்டாடுகிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்களிலும் கீழே உள்ளவர்களுக்கு ஆடைகள், பட்டாசு, பலகாரங்கள் உள்ளிட்ட தேவைகள் ஏதேனும் இருப்பின் தாரளமாக செய்யுங்கள்.

* உங்களுக்கு பணிவிடை செய்பவர்கள், உங்களிடம் வேலை செய்பவர்கள், உங்களை சார்ந்திருப்பவர்கள் – இவர்களுக்கு இந்த தீபாவளியை முன்னிட்டு உங்களால் இயன்றதை செய்யுங்கள்.

* உங்கள் உற்றார் உறவினர், நண்பர்கள் எவரேனும் மருத்துவமனையில் இருந்தால் அவர்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களுக்கு தேவையான உதவிகளை உங்களால் இயன்ற அளவிற்க்கு செய்யுங்கள்.

* உங்கள் உறவினர்களில் வாரிசற்ற முதியவர்கள் எவரேனும் இருந்தால் அவர்களுக்கு துணிமணிகள் வாங்கிக்கொண்டு சென்று அவர்களுக்கு அளித்து அவர்களிடம் ஆசிபெறுங்கள்.

* உங்கள் நண்பர்களில் எவரேனும் தீபாவளியை கொண்டாட முடியாத அளவிற்கு பொருளாதார நெருக்கடியில் இருந்தால் அவர்களுக்கு உங்களால் இயன்றதை பொருளாதார ரீதியாக செய்யுங்கள். (கடன் அல்ல… உதவி!) அவர்கள் உங்களிடம் உதவி கேட்கவேண்டும் என்பதல்ல. குறிப்பறிந்து உதவிக்கரம் நீட்டுங்கள். உங்கள் உதவியால் ஒருவர் வீட்டில் தீபாவளி கொண்டாடப்பட்டால் அதை விட சிறந்தது வேறு எதுவும் இருக்க முடியாது.

* குடும்பத்துடன் அன்று அமர்ந்து சாப்பிடுவது அவசியம்.

* காலையோ மாலையோ மறக்காமல் ஏதேனும் தொன்மையான ஆலயத்திற்கு குடும்பத்துடன் சென்று உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் அர்ச்சனை செய்யுங்கள். லோக ஷேமத்தை வேண்டுங்கள்.

மற்றபடி தீபாவளியை முன்னிட்டு நீங்கள் முன்னின்று செய்ய நினைக்கும் பல அறப்பணிகள், தர்ம காரியங்கள், நம் தளம் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சொல்லாலும், செயலாலும், பொருளாலும் துணை நிற்கும் அனைத்து நல்லுலங்களுக்கும் நன்றி.

மனநிறைவும் மகிழ்ச்சியுமே உண்மையான தீபாவளி. அந்த வகையில் நம் எல்லோருக்கும் இந்த தீபாவளி மிகவும் ஸ்பெஷல் தான்!

வாசகர்கள் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். இந்த தீபாவளி உங்களின் இல்லங்களில் மகிழ்ச்சியையும் மன நிறைவையும், ஆரோக்கியத்தையும், சகல சௌபாக்கியங்களையும் வழங்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்!

=============================================
அறிவிப்பு :
நம் தளம் சார்பாக தீபாவளி சிறப்பு வழிபாடு, பூவிருந்தவல்லி வைத்தியநாதசுவாமி திருக்கோவிலில் தீபாவளியன்று காலை நடைபெறும். மாலை 6.00 மணியளவில் நங்கநல்லூரில் உள்ள பார்வையற்ற பெண்கள் காப்பகமான நிலாச்சாரலில் தீபாவளி கொண்டாடப்படவுள்ளது. மறுநாள் திருவள்ளுவர் குருகுலத்தில் உள்ள மாணவர்களுக்கு வடை பாயசத்துடன் அன்னதானம் நடைபெறும். மேலும் பல விஷயங்கள் திட்டமிடப்பட்டுள்ளது. மேற்படி கொண்டாட்டங்களில் நம்முடன் இணைய விருப்பம் உள்ளவர்கள் 9840169215 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பவும். நன்றி.
=============================================

[END]

10 thoughts on “உண்மையான தீபாவளியை கொண்டாடலாமா?

  1. Dear Sundrji

    Happy Morning to Right mantra readers. Thank you for your wonderful post on behalf of Diwali. Through your article, I know the importance of Diwali.

    May God bless you and Right Mantra to reach such a greater heights.

    HAPPY AND SAFE DIWALI TO YOU AND ALL READERS.

    Thanks and regards

    Uma

  2. அன்புள்ள திரு சுந்தர்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் மற்றும் தள வாசகர்கல்லுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

  3. சுந்தர் சார்
    மனநிறைவும் மகிழ்ச்சியுமே உண்மையான தீபாவளி. அந்த வகையில் நம் எல்லோருக்கும் இந்த தீபாவளி மிகவும் ஸ்பெஷல் தான்! –

    அனைவருக்கும் தீபாவளி வாழ்துகள்
    selvi

  4. தீபாவளி திருநாள் பற்றி நாம் தெரிந்து இருந்தாலும் நம் தளத்தில் வசிக்கும் போது ஒரு நிறைவை பெற முடிகிறது.
    நம் தளம் சார்பாக நிறைய நல்ல நல்ல நிகழ்வுகள் நடைபெறுகிறது என்று அறியும் போது மனம் மகிழ்ச்சி அடைகிறது,
    நம் தள வாசகர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  5. சகோதரி பரிமளம் சொல்வது போல் தீபாவளி திருநாள் பற்றி நாம் தெரிந்து இருந்தாலும் “நம் தளத்தில் வாசிக்கும் போது தான் ஒரு நிறைவை பெற முடிகிறது”.

    அதற்க்கு காரணம் நம் தளத்தின் மீது நமது வாசகர்கள் வைத்திருக்கும் நம்பிக்கைதான் .

    சுந்தர் ஜி அவர்களின் தேடல்.உழைப்பு.அபராம்.

    அதற்காக சுந்தர் ஜி அவர்களுக்கு வாசகர்கள் சார்பாக ராயல் சல்லூட் .

    rightnmantra குடும்பத்துடன் இணைந்து தீபாவளி திருநாளில் மகிச்சியுடன் கொண்டாடுவோம் .

    rightnmantra நண்பர்கள் ,வாசகர்கள் ,உழவரபனி குழுவினர்கள் .மகளீரணி சகோதரிகள் அனைவருக்கும் என் தீபாவளி நல் வாழ்த்துக்கள் .

    சுந்தர் ஜி அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன் .

    நண்பர் rightmantra sundar அவர்கள் அடுத்தவருடம் தலை தீபாவளி
    காண அட்வான்ஸ் வாழ்த்துக்கள் .

    தங்களின் வாழ்த்துக்களால்…
    -மனோகர்

  6. டியர் சுந்தர்,
    ரைட் மந்தர வசகர்கல்கு என் இனிய தீபாவளி நல வாழ்த்துகள்.

    நன்றி
    நாராயணன்,

  7. அன்புள்ள சுந்தர் அவர்களுக்கு இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.archanamurali.

  8. ரைட் மந்த்ரா வாசகர்கள் ,நண்பர்கள் மற்றும் சுந்தர் அவர்களுக்கு இனிய தீப திருநாள் வாழ்த்துக்கள்

  9. அன்புள்ள சுந்தர் அவர்களே இந்த வருடம் தீபாவளிக்கு என்ன ப்ரோக்ராம் என்று தெரிய படுத்தும்படி கேட்டுகொல்கிரேம்

Leave a Reply to Archana Murali Cancel reply

Your email address will not be published. Required fields are marked *