Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > சபை நடுவே திரௌபதி கதறிய அந்த கணமே ஏன் கிருஷ்ணர் வரவில்லை? தாமதம் ஏற்பட்டது ஏன்?

சபை நடுவே திரௌபதி கதறிய அந்த கணமே ஏன் கிருஷ்ணர் வரவில்லை? தாமதம் ஏற்பட்டது ஏன்?

print
கௌரவர் சபையில் நூற்றுக்கனக்கானோர் நடுவே திரௌபதி துகிலுரியப்பட்ட சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். அந்த சம்பவமும் அதற்க்கு பின் நிகழ்ந்தவைகளும் நமக்கு உணர்த்தும் பாடங்கள், நீதிகள் அநேகம் அநேகம்.

தன்னை துகிலுரியப்போகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளும் திரௌபதி துச்சாதனன் தன்னை நெருங்குவதற்கு முன்பு சபையில் அங்கும் இங்கும் ஓடுகிறாள். அங்குள்ள பெரியோர்களிடம் தன்னை காப்பாற்றும்படி கெஞ்சுகிறாள். துரியோதனின் கொடுங்கோன்மைக்கு முன்னர் எவருக்கும் தர்மத்தை எடுத்துரைக்க துணிவிருக்கவில்லை.

“துவாரகாபுரி வாசா…..கிருஷ்ணா… காப்பாற்று…. அபயம்…. அபயம்…”  என்று அலறுகிறாள்.

அப்போதும் ஒன்றும் நடந்துவிடவில்லை. துரியோதனன் உள்ளிட்ட கௌரவர்கள் இவளை பார்த்து சிரிக்க, துச்சாதனன் மெல்ல எக்காளமாக ஒரு சிரிப்பு சிரித்த படி நெருங்குகிறான். அவளது சேலையின் தலைப்பை பிடித்து இழுக்க, செய்வதறியாது தவிக்கும் திரௌபதி, இருபுறமும் கைகளை வைத்து தனது மானத்தை மறைத்துக்கொள்கிறாள்.

“கிருஷ்ணா… காப்பாற்று…. உனக்கு இரக்கமில்லையா? நான் கூப்பிடுவது உனக்கு கேட்கவில்லையா?…. கிருஷ்ணா…..” இவள் கதற கதற கௌரவர்களின் சிரிப்பு சப்தம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

துச்சாதனன் துரியோதனனை பார்க்க, “ம்ம்ம்… என்ன தயக்கம்? உருவு அவள் சேலையை” என்று துரியோதனன் கண் ஜாடையிலேயே ஒப்புதல் அளிக்க…. ஏற்கனவே மானத்தை இழந்து நிற்பவளை கழுவிலேற்றும் விதமாக திரௌபதியின் சேலையை மள மள வென உருவ ஆரம்பிக்கிறான் துச்சாதனன்.

அதுவரை தனது சுயபலத்தை நம்பி, தனது மானத்தை இரு கைகளாலும் மறைத்துக்கொண்டு நின்ற திரௌபதி பின்னர் இரு கைகளையும் தலைக்கு மேலே தூக்கி “கிருஷ்ணா.. நீயே அபயம்…. விட்டேன் இரு கைக வேந்தர் சபை நடுவே….” என்று முழுமையாக சரணடைகிறாள்.  நின்ற நிலையிலேயே ஆழ்ந்த மயக்கத்துக்கு சென்றுவிடுகிறாள்.

இதற்கும் மேல் பகவான் சும்மாயிருப்பானா?

அப்போது தான் நடக்கிறது அந்த அதிசயம்! துச்சாதனன் சேலையை இழுக்க இழுக்க அது வளர்ந்துகொண்டே இருக்கிறது. அதற்கு மேல் இழுக்க முடியாது ஒரு கட்டத்தில் துச்சாதனன் களைப்படைந்துவிடுகிறான்.

திரௌபதியை மானபங்கம் செய்யும் கௌரவர்களின் திட்டம் கடைசியில் பிசுபிசுத்துவிடுகிறது.

அன்று மாலை கிருஷ்ணரை சந்திக்கும் திரௌபதி, “அச்சுதா…. இதற்கு முன்பு எனக்கு ஒரு சிறிய பிரச்னை என்றபோது ஓடி வந்தாயே…. ஆனால் இம்முறை அத்துணை பேர் முன்னிலையிலும் உன் பக்தை கதறிய அந்த கணமே ஏன் நீ வரவில்லை ? மிகவும் தாமதம் செய்துவிட்டாயே…. கருணைக் கடலுக்கு இது அடுக்குமா?” என்று கேட்க்கிறாள்.
அதற்க்கு பகவான், “பாஞ்சாலி…. இதற்கு முன்பு நீ என்னை அழைத்தபோது ‘இதயக் கமல வாசா சீக்கிரம் வா….’ என்று அழைத்தாய். உன் இதயத்திலேயே இருந்தபடியால் உடனே வந்துவிட்டேன். ஆனால் இம்முறை “துவாரகாபுரி வாசா என்றல்லவா அழைத்துவிட்டாய்…. நான் துவாரகையிலிருந்து கிளம்பி வர சற்று நேரமாகிவிட்டது. மேலும், சபையில் நீ முதலில் உன் பலத்தை அல்லவா நம்பியிருந்தாய். அதனால் தானே உன் கைகளை குறுக்கே மறைத்துக்கொண்டு நின்றாய். எப்போது நீ இருகைகளையும் தூக்கி ‘அபயம்’ என்று என்னை முழுமையாக சரணடைந்தாயோ அந்தக் கணமே நாம் உன்னை காப்பாற்றிவிட்டோம்” என்றார்.

இதை கேட்கும் திரௌபதி , “கிருஷ்ணா… என்னை மன்னித்துவிடு கிருஷ்ணா” என்று பகவானின் கால்களில் விழுந்துவிடுகிறாள்.

(இப்போதும் இந்த வராலாற்றை படிக்க நேர்ந்தாலோ பார்க்க நேர்ந்தாலோ எவ்வளவு முயன்றாலும் கட்டுபடுத்த முடியாது என்னையுமறியாமல் என் கண்களில் கண்ணீர் பெருகிவிடுவதுண்டு!)

சரணாகதி தத்துவத்தை இதை விட எவரும் எளிதாக விளக்கிவிட முடியாது. இதன் அர்த்தம் ‘நாம் நம் பலத்தை நம்பக்கூடாது என்பதல்ல. இறைவனை முழுமையாக நம்பவேண்டும்’ என்பது தான்.

திரௌபதியின் இடத்தில் இருந்து சற்று நினைத்து பாருங்கள். அத்துணை பேர் நடுவே… தனது மானத்தை மறைத்துக் கொண்டிருந்த கைகளை விட்டுவிட்டு மேலே கூப்பி “கிருஷ்ணா….அபயம்’ என்று சொன்னாள் என்றால் அவளுக்கு பகவானின் பேரில் எந்தளவு நம்பிக்கை இருந்திருக்கவேண்டும்?

அவன் பாதார விந்தங்களை முழுமையாக சரணடைவோம். அவன் நம்மை பார்க்கும் வரை அவன் கால்களை விடவேக்கூடாது.

மேலும் இறைவனை எந்தளவு நாம் நெருக்கமாக நினைக்கிறோமோ அந்தளவு அவன் நமக்கு நெருக்கமாக இருப்பான் என்பதையும் இந்த சம்பவம் மூலம் நாம் உணர்ந்துகொள்ளலாம். உங்கள் பக்தி தூய்மையாக – நம்பிக்கை அதிகமாக – இருந்தால் அவன் உங்கள் அருகிலேயே இருப்பதை உணர்வீர்கள்.

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

………………………………………………………………………………

இதற்கு மேல் ஒரு குடும்பத்தால் சோதனைகளை தாங்க இயலுமா?

என் பெயர் என். சந்திரசேகரன்.

கடந்த பல மாதங்களாக தங்கள் RIGHTMANTRA.COM தளத்தின் வாசகன். காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலை நகரில் வசிக்கிறேன்.

என் பிரச்னைகளை உங்களிடம் சொல்லியாகவேண்டும். ஒன்றரை வருடத்திற்கு முன்பு என் தந்தை வியாபார நிமித்தமாக சைக்கிளில் செல்லும்போது கீழே விழுந்து அடிபட்டுவிட்டது. கடுகளவு காயம் தான். ஆனால் அது ஆறுவதற்கு மூன்று மாதம் ஆகிவிட்டது.

ஒரு வழியாக காயம் ஆறிய பின்னர் காலில் வீக்கம் ஏற்பட்டுவிட்டது. அவரால் சரியாக நடக்கமுடியவில்லை. காயம் ஆறிய இடத்தில் இருந்த கெட்ட நீரை எடுத்து மீண்டும் சிகிச்சை செய்தோம். காயம் ஆறிவிட்டது. ஆனால் மறுபடியும் காலில் வீக்கம் தோன்றி அவரால் நடக்கமுடியவில்லை.

பின்பு எலும்பு டாக்டரை பார்த்து எக்ஸ்ரே ஸ்கேன் உள்ளிட்டவைகளை எடுத்தோம். அவர் ஒன்றுமில்லை என்று சொல்லி மாத்திரைகள் கொடுத்தார். மூன்று மாதம் அதை சாப்பிட்ட பின்னர் கூட சரியாகவில்லை.  பின்பு, நரம்பு மருத்துவரை அனுகி,அவரிடம் ஸ்கேன் எக்ஸ்ரே என அனைத்தும் பார்த்தும் பலனில்லை அவர் ரூ.600/-க்கு மாத்திரைகளை எழுதி தந்தார். அதை சாப்பிட்ட பின் எந்த பலனும் இல்லை.

‘ஆனால் இப்பொது அவருக்கு சிறுநீர் வெளியேறவில்லை. அவசர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டியூப் பொருத்தப்பட்டு ஒரு மாத சோதனைக்கு பின் அறுவை சிகிச்சை தேதி கொடுத்தார்கள். அதற்கும் நாங்கள் தயாராக இருந்தோம். இதற்கிடையே கால் மேலும் மோசமடைந்ததால் இடுப்பால் நகர ஆரம்பித்தார், எனவே அவர் அறுவை சிகிச்சை செய்தால் தாங்க மாட்டார் என் கருதி பின் அதை கை விட்டொம்.

இரண்டு மாதங்கள் ட்யூப் மாற்றி மாற்றி ட்ரீட்மென்ட் கொடுத்தோம். அவர் கஷ்டப்படுவதை பார்க்க சகிக்காமல் அவர் இறந்தாலும் பரவாயில்லை என்று கருதி அறுவை சிகிச்சை செய்ய மீண்டும் மருத்துவரை அணுகினோம். ஆனால் அவர் அவர் முன்பு எடுத்த டெஸ்ட் காலாவதியாகீவிட்டது மீண்டும் டெஸ்ட் எடுக்க வேண்டும், என சொல்லி மீண்டும் அனைத்து டெஸ்ட்களும் எழுதி கொடுத்தார். அதுவும் எடுத்தகிவிட்டது. அறுவை சிகிச்சை நாள் குறிக்கப்பட்டது. தயாராக இருந்தோம்.

இந்நேரம் பார்த்து என் மாமா அதாவது உடன் பிறந்த சகோதரியின் கணவர் புற்று நோயால் இறந்து போனார். எனவெ இப்பொது அறுவை சிகிச்சை  கைவிடப்பட்டது. என் தந்தையின் உடல் மேலும் மோசம் அடைந்தது. இப்பொது இரண்டு நாளுக்கொருமுறை ட்யூப் அடைப்பு ஏற்பட்டது.

எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் மீண்டும் சேர்க்க, இங்கு மறுபடியும் அனைத்து டெஸ்ட்களும்  எடுத்தோம். ஒரு வழியாக அறுவை சிகிச்சை முடிந்து கோளாறு சரிசெய்யப்பட்டது. ஆனால் இப்பொது டாக்டர் மீண்டும் ஒரு அதிர்ச்சியை எங்களுக்கு தந்தார்கள். அது அவருக்கு ஆப்பரேஷன் செய்யும் போது கண்டு பிடிக்கப்பட்டதாம், அவருக்கு (born cancer) உள்ளது என்றும் அதனால் CT SCAN எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

தற்போது அவர் 15 நாட்களாக எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் தான் இருக்கிறார். இது ஒரு புறம் தொடர….என் மனைவி ஒரு மாதமுன்பு குழந்தைகளை பள்ளியில் இருந்து ஸ்கூட்டரில் அழைத்து வரும்பொது குறுக்கே ஒரு பெண்மணி வந்து, அதனால் கீழே விழுந்து வலது கால் முட்டியில் ஸ்கூட்டர் விழுந்துவிட பலத்த உள் காயம்.

கடவுள் அருளால் என் குழந்தைகளுக்கு எதுவும் ஆகவில்லை. அதுவும் மருத்துவரை பபார்த்து சிகிச்சை தொடர.. புத்தூர் கட்டு  அது இது என்று எக்கச்சக்க செலவாகிவிட்டது. பிரயோஜனமும் இல்லை. வீட்டு வேலைகளை அவர் அம்மா தான் (என் மாமியார்) தான் செய்கிறார்கள்.

பண விரயம் நேர விரயம்…. வாய் விட்டு அழவில்லை…. அவ்வளவுதான். அவ்வளவு போராட்டம்…

இதல்லாம் நினைக்கும் போது கடவுளின் மீது விரக்தி ஏற்படுகிறது. இருந்தும் ஏதோ ஓர் மூளையில் சிறு நம்பிக்கை…

எனக்காகவும் என் குடும்பத்திற்காகவும் உங்கல் பிரார்த்தனை கிளப்பில் பிரார்திக்க வேண்டும்.

அன்புடன் வேண்டும்
உங்கல் வாசகன்
N.Chandirasekaran
Maraimalai Nagar
Kanchipuram Dist
Cell:9677267266.

………………………………………………………………………………

நண்பர்களே ஒரு விஷயம் கவனித்தீர்களா… இத்துனை துன்பத்திலும் இன்னும் மனதின் ஓரத்தில் அவருக்கு நம்பிக்கை இருக்கிறது என்கிறார். மேலும் இறைவன் அருளால் ஸ்கூட்டர் விபத்தில் குழந்தைகள் தப்பினார்கள் என்றும் கூறுகிறார்.

நாமெல்லாம் கடவுள் நம்பிக்கையோட இருக்கிறது ஒரு விஷயமே இல்லை. ஆனால் இவரை போல சோதனைகள் மேல் சோதனைகளை சந்தித்து அடி மேல் அடி வாங்கி இனியும் வாங்குவதற்கு பலம் இல்லை என்ற நிலையில் இருப்பவர்கள் கடவுளை நம்புகிறார்கள் அல்லவா…. அதுதானே பெரிய பக்தி… உண்மையான பக்தி!!

இவரது சோதனைகள் முடிவுக்கு வரும் நேரம் வந்துவிட்டது என்றே எனக்கு தோன்றுகிறது.

நான் ஜோதிடனோ ஜோதிடம் படித்தவனோ அல்ல. ஆனால் வாழ்க்கையை படித்தவன். பிரச்னைகளுடனே வளர்ந்து பிரச்னைகளில் போராடியவன். போராடிக்கொண்டிருப்பவன். எனவே சில பிரச்னைகளில் ஆணிவேர் எது என்பதை ஓரளவு யூகித்துவிடுவேன். அவரை தனிப்பட்ட முறையில் தொடர்புகொண்டு ஆறுதல் கூறி உடனே செய்யும்படி சில பரிகாரங்களை ஆலோசனைகளை கூறியிருக்கிறோம். விரைவில் அவரது வாழ்வில் பிரமிக்கத்தக்க முன்னேற்றம் ஏற்படும் என்றே தோன்றுகிறது.

சுபமஸ்து.

(இவரைப் போன்று பிரச்னைகள் மேல் பிரச்னைகள் சந்திப்பவர்கள், பட்ட காலிலேயே திரும்ப திரும்ப அடி படுபவர்கள் என்று நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் உடனடியாக செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து ஒரு விரிவான – விளக்கமான – பதிவை விரைவில் அளிக்கிறேன். அனைவருக்கும் அது பயனுள்ளதாக இருக்கும்.)

நமது சமீபத்திய குல தெய்வ வழிபாடு குறித்த பதிவுகளை படித்து மறந்த அவர் குல தெய்வத்தை உடனே வணங்கி பூஜைகள் செய்வதாக சொல்லியிருக்கிறார்.

நண்பர் என்.சந்திரசேகரன் அவர்களின் தந்தையாரின் ஆரோக்கியத்துக்காவும் அவர்களின் மொத்த குடும்ப நலனுக்காகவும் ஷேமத்திர்க்காகவும் சந்தோஷத்திற்காகவும் இந்த வாரம் பிரார்த்திப்போம்.

================================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்க்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

================================================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

பிரார்த்தனை நாள் : மே 5, 2013 ஞாயிறு

நேரம் : மாலை 5.30 – 5.45

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=============================================================

6 thoughts on “சபை நடுவே திரௌபதி கதறிய அந்த கணமே ஏன் கிருஷ்ணர் வரவில்லை? தாமதம் ஏற்பட்டது ஏன்?

  1. I am heartbroken on hearing these incidents. I pray 100% Uplift in their life with Unexpected Gifts and pleasant miracles. All is well for Mr.ந.Chandirasekaran n his family. This is going to happen .,

  2. சரணாகதி என்பது ‘நாம் நம் பலத்தை நம்பக்கூடாது என்பதல்ல. இறைவனை முழுமையாக நம்பவேண்டும்’ என்பது தான்.
    பொன்னான வார்த்தைகள் ..

    உடன் பிறந்த சகோதரன் கூட நலம் விசாரிக்க நேரம் இல்லை என்று சொல்லும் இந்த காலத்தில் எனக்கு அலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்த உங்கள் சேவை எளிதாக நன்றி என்று சொல்லிவிட முடியாது..கடவுள் நேரடியாக வந்து உதவி செய்யமாட்டான் எதோ ஒரு வடிவில் வந்து உதவி (வழியை மட்டும்)காட்டுவான் என்று கேள்விபட்டிருக்கின்றேன்..அப்படி கண்ணை கட்டி காட்டில் விட்டவனுக்கு கையில் சிறு விளக்கு கிடைத்தது போல..உங்கள் அழைப்பு பெரிய ஆறுதலை தருகிறது..மற்றும் நண்பர் மனோகரன்..அவர்களும் நலம் விசாரித்தார் ..அவர்களுக்கும்..மேலும்..நம் தல வாசர்களுக்கும் என் நன்றியை தெருவித்துகொள்கின்றேன் .
    பிரார்த்தனை கிளப்பில் என்னுடைய வேண்டுகோளை பதிவிட்டதற்கு நன்றியும் மேலும் உங்கள் சேவை மென்மேலும் வளர்ந்து..கண்ணீர் விடும் மனிதர்க்கு துடைக்கும் கை போல இருக்கும் என நம்புகின்றேன் ..தொடரட்டும் உங்கள் சேவை..நானும் உங்களுடன் விரைவில் பங்கு கொள்வேன்…நன்றி.

  3. பிரார்த்தனைகள் நிறைவேற
    எல்லாம் வல்ல இறைவனை
    மனமுருக வேண்டுவோம் !!!

  4. விரைவில் திரு. சந்திரசேகரன் அவர்களின் தந்தை குணமடையவும், அவரது குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் தீரவும் ஆண்டவன் அருள் புரிய வேண்டும். நாமும் அவருக்காகவும், அவரின் குடும்பத்தாருக்க்காகவும் ஆண்டவனை வேண்டுவோம். மிக்க நன்றி.

  5. நண்பர் சந்திரசேகரன் அவர்களே கடவுள் உங்களுக்கு கஷ்டம் மேல் கஷ்டம் கொடுத்திருப்பது ,உங்களுக்கு அடுத்து மிக பெரிய நல்ல விசயங்களை தர போகிறார் என்று நினைத்துகொள்ளுங்கள் கண்டிப்பாக கிடைக்கும்

    உங்கள் தந்தை ,மற்றும் உங்கள் மனைவி பூரணகுணம் அடைய கடவுளை பிராத்திக்கிறேன்

Leave a Reply to Dheepa Cancel reply

Your email address will not be published. Required fields are marked *