Home > ஆலய தரிசனம் (Page 7)

குல தெய்வ வழிபாடு ஏன் அவசியம் ?

ஒருவரின் சந்தோஷமான சுபிட்சமான வாழ்க்கைக்கு குல தெய்வ ஆராதனையும் பித்ருக்களின் ஆசியும் மிக மிக மிக முக்கியம். இவர்களை திருப்தி படுத்தாது நீங்கள் என்ன பரிகாரம் செய்தாலும் அது பயன் தரவே தராது. குல தெய்வ வழிபாட்டின் அவசியம் பற்றி தெரிந்துகொள்ளும் முன், குல தெய்வம் என்றால் என்ன என்று தெரிந்துகொள்வோம். வழி வழியாக, வாழையடி வாழையாக, பரம்பரை பரம்பரையாக நம் பாட்டனார், முப்பாட்டனார், உள்ளிட்ட முன்னோர்கள் வணங்கி வந்த அவர்கள் ஊர் தெய்வமே 'குல

Read More

நம் ராமநவமி தரிசனமும், பொறுமைக்கு கிடைத்த பரிசும்!

ராமநவமித் திருநாளில் நிச்சயம் ஏதாவது ஒரு ராமர் கோவிலுக்கு போய் ராமனை தரிசித்துவிடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். காலையில் நேரமிருக்கலை. சரி சாயந்திரம் போகலாம்னு விட்டுட்டேன். நாம ஏதாவது ஒரு பிளான் பண்ணி டயத்துக்கு கிளம்பனும்னு முடிவு பண்ணா அன்னைக்கு தான் ஆபீஸ்ல அதிக வேலை கொடுப்பாங்க. இன்னைக்கும் அதே தான். அட...ராமா இது என்ன சோதனைன்னு நொந்துட்டேன். ஒரு வழியா வேலையை முடிச்சு ஆபீஸ்ல இருந்து கிளம்பும்போதே மணி 7.30

Read More

மாங்காடு காமாட்சியம்மன் ஆலயத்தில் ஈழத் தமிழர்களுடன் நடைபெற்ற நம் முதல் பிரார்த்தனை

நமது 'ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்' சார்பாக நேற்று துவங்கிய கூட்டு பிரார்த்தனை நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழகம் மட்டுமல்லமால் உலகம் முழுவதும் உள்ள நம் தள வாசகர்கள் பலர் இதில் கலந்துகொண்டு அவரவர் இடங்களில் பிரார்த்தனை செய்தனர். நேற்று பிரதோஷ தினம் என்பதால் பிரார்த்தனை நேரத்தில் (5.30 pm - 5.45 pm) சிவாலயங்களில் பிரார்த்தனை செய்ததாக நம்மை தொடர்பு கொண்ட பலர் கூறினர். நமது பிரார்த்தனை, மாங்காடு காமாட்சியம்மன் ஆலயத்தில்

Read More

விலங்குகள் இறைவனை பூஜித்து முக்தி பெற்ற தலங்கள் – படங்களுடன் சிறப்பு தொகுப்பு!

இறைவன் மீதும் பக்தி செலுத்துவதில் மனிதர்களுக்கு சற்றும் சளைத்தவை அல்ல விலங்குகள். மனிதர்களோ, தேவர்களோ அல்லது ரிஷிகளோ சாபம் காரணமாகவோ அல்லது வேறு நோக்கத்தின் காரணமாகவோ விலங்குகளாகவோ பூச்சிகளாகவோ பிறந்து இறைவனை பூஜித்து பேறு பெற்ற நிகழ்வுகள் பல இருக்கின்றன. இவை எதுவும் கதையல்ல. உண்மையினும் உண்மை. முன்ஜென்மங்கள் தொடர்பு அல்லது  சாபம் எதுவும் இன்றி விலங்காகவே இருந்து அறிந்தோ அறியாமலோ இறைவனை பூஜித்து பேறு பெற்ற நிகழ்வுகளும் இருக்கின்றன. (உதாரணத்திற்கு

Read More

திருவள்ளுவர் கோவிலில் நடைபெற்ற ஏகாம்பரேஸ்வரர் & காமாட்சி திருக்கல்யாணம் – நேரடி கவரேஜ்!

திருமயிலையில் வள்ளுவப் பெருமான் பிறந்த இடத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஆகம விதிப்படி அவருக்கு கோயில் எழுப்பப்பட்டு, பன்னெடுங்காலமாக நித்ய பூஜைகளும் நடந்து வருவது தெரிந்ததே. அது தொடர்பாக ஏற்கனவே நாம் இரு பதிவுகள் அளித்துவிட்டோம். இந்த கோவிலில் மூன்று திருக்கல்யாண உற்சவங்கள் மிக மிக விமரிசையாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். சித்ரா பௌர்ணமி அன்று நடைபெறும் வள்ளுவர் வாசுகி திருக்கல்யாண உற்சவம், தை மாதம் சதய நட்சத்திரத்தில் நடைபெறும் ஏகாம்பரேஸ்வரர்

Read More

சங்கரி சங்கர நாராயண விருட்சம் & நவ நாத சித்தர்கள் — திருவள்ளுவர் திருக்கோவில் பாகம் 2

சென்னை மயிலையில் திருவள்ளுவர் அவதரித்த இடத்தில் அவருக்கென்று உள்ள மிகப் பழமையான கோவில் பற்றி சென்ற பதிவில் பார்த்தோம். கோவிலின் அமைப்பு மற்றும் இதர விஷயங்களை அதில் விளக்கியிருந்தோம். பார்ப்பதற்கு சற்று சாதாரணமாக தெரியும் இந்த கோவிலில் அதிசயங்கள் பல உள்ளடங்கியிருக்கிறது. ஆலய வளாகத்துக்கு உள்ளே கால் வைத்ததுமே ஒரு வித வைப்ரேஷனை உணர முடிகிறது. பரபரப்பான சென்னையின் மையப்பகுதியில் அதுவும் மயிலை போன்ற ஒரு ஜனத்திரள் மிக்க பகுதில் இப்படி

Read More

குமரன் குன்றம் பயணம் – எதிர்பாராமல் அறிமுகம் ஆன நண்பர் & நம்மை தேடி வந்த அரிய வாய்ப்பு!

தைப்பூசத்தையொட்டி இந்த பதிவை சற்று முன்னரோ அல்லது தைப்பூசம் தினத்தன்றோ அளிக்க எண்ணியிருந்தேன். ஆனால் தவிர்க்க இயலாத காரணங்களினால் சற்று தாமதமாகவிட்டது. இந்த பதிவை படிக்கும்போதே குமரன் குன்றத்துக்கு நீங்கள் சென்று வந்ததைப் போல உணர்ந்தால் நான் தன்யனாவேன். தாமதத்திற்கு முருகப் பெருமான் மன்னிக்க வேண்டுகிறேன். படப்பை மலைப்பட்டு மகாவதார் பாபாஜி தியானமந்திர பயணம் பற்றி திட்டமிட்டவுடன் தைப்பூசம் விரைவில் வருகிறதே அதையொட்டி நாம் போகும் வழியில் ஏதாவது முருகன் கோவில்

Read More

நம் மலைப்பட்டு மகாவதார் பாபாஜி தியான மந்திர் பயணம் – Coverage Part 1

ஜனவரி 20, ஞாயிறன்று நாம் திட்டமிட்டதைவிட சிறப்பாக படப்பை - மலைப்பட்டு மகாவதார் பாபாஜி தியான மந்திர் பயணம் முடிவுற்றது. போனஸாக வழியில் இருந்த குன்று முருகன் கோவில் ஒன்று + கல்யாண ஸ்ரீனிவாசப் பெருமாள் & விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவில் ஆகியவற்றையும் தரிசித்தோம். பர்சனல் கமிட்மென்ட் காரணமாக இதற்கு முன்பு நாம் இருமுறை இந்த இடத்திற்கு சென்றபோதும் என் நண்பர்கள் சிலர் கலந்துகொள்ள இயலவில்லை. அவர்களில் நண்பர் சிட்டியும் ஒருவர். மகாவதார் பாபாஜியின்

Read More

படப்பை மகாவதார் பாபாஜி தியான மந்திர் பயணம் – விருப்பமுள்ளவர்கள் பங்கேற்கலாம்!

சென்னை நகருக்கே வெளியே, பல கி.மீ. தொலைவில் (தாம்பரம் - ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில்) உள்ள படப்பையில் மலைப்பட்டு கிராமத்தில் யோகதா சத்சங்க நிறுவனத்தின் தியான மந்திர் & ஆஸ்ரமம் உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் நெருங்கிய நண்பர் திரு.ஹரி நிர்மாணித்திருக்கும் இந்த தியான மந்திருக்கு இதற்கு முன்பு நாம் பலமுறை சென்று வந்திருக்கிறோம். செல்லும் வழி நெடுக பசுமை.... தூய்மையான காற்று என்று நம்மை வேறு ஒரு உலகத்துக்கு அழைத்து செல்லும் ஒரு உன்னத

Read More

திருக்குறள் தந்த திருவள்ளுவர் தம்பதி சமேதராக எழுந்தருளியிருக்கும் பழமை வாய்ந்த கோவில்

இன்று திருவள்ளுவர் தினம். உலகப் பொதுமறையாம் திருக்குறளை இயற்றி தமிழுக்கு பார் முழுதும் பெருமை சேர்த்தவர் திருவள்ளுவர். அவரை கௌரவிக்கும் பொருட்டு அன்னை தமிழுக்கும் அணி சேர்க்கும் விதமாக தமிழக அரசால் பொங்கலுக்கு மறு தினம் திருவள்ளுவர் தினமாக அறிவிக்கப்பட்டு பல ஆண்டு காலமாக இது கொண்டாடப்பட்டு வருகிறது. உலக அளவில் அதிகம் மொழி பெயர்க்கப்பட்ட தமிழ் நூல் என்ற பெருமை திருக்குறளுக்கு உண்டு. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம்,

Read More

குளத்தில் கண்டெடுக்கப்பட்ட வரப் பிரசாதி போரூர் ஸ்ரீ சிவவீர ஆஞ்சநேயர்

அனுமத் ஜெயந்தியை முன்னிட்டு நம் தளவாசகர்களுக்கு ஏதாவது ஒரு ஆஞ்சநேயர் ஆலயத்தை அறிமுகம் செய்து வைக்கவேண்டும் என்று கருதினேன். மிகவும் தொன்மை வாய்ந்த, அதே சமயம் அதிகம் அறியப்படாத ஆலயமாக இருந்தால் உங்களுக்கு பயனாக இருக்குமே என்று கருதி அது தொடர்பான தேடலில் ஈடுப்பட்டபோது, 'வந்தாரை வாழ வைக்கும் வைணவத் தலங்கள்', 'பாடல் பெற்ற சைவ ஸ்தலங்கள்' போன்ற பல நூல்களை எழுதியிருக்கும் நண்பர் சாய்குமாரை தொடர்பு கொண்ட போது 

Read More

சிவன் கோவிலில் காணக் கிடைக்காத அனுமன் சன்னதியுடன் கூடிய மூல நட்சத்திர பரிகாரத் தலம்

அடிக்கடி குடும்பத்தினரை வெளியே அழைத்து செல்வது குடும்பஸ்தர்களின் மிகப் பெரிய கடமைகளில் (?!) ஒன்றாகிவிட்டது. சும்மா பீச், பார்க்குன்னு கூட்டிகிட்டு போய் எத்தனை முறை அவங்களை ஏமாத்துறது சார் என்று பலர் என்னிடம் புலம்புவதுண்டு. அவர்களுக்கு இது போன்ற பக்திச் சுற்றுலா பற்றிய பதிவுகள் மிகவும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. குடும்பத்தினரை வெளியே அழைத்து செல்பவர்களின் பெரும்பாலான தேர்வு சினிமா அல்லது AMUSEMENT PARK என்றழைக்கப்படும் கேளிக்கை பூங்காக்களாகத் தான்

Read More

இறைவனை பார்க்க நாங்கள் சென்றதும்; இறைவனே எங்களிடம் வந்ததும்!

இதுவரை நான் பல முறை புத்தாண்டை கொண்டாடியிருக்கிறேன். கொண்டாட்டம் என்றால் என்னைப் பொருத்தவரை புத்தாண்டு பிறக்கும் நேரம் கண் விழித்திருந்து முதலில் பெற்றோர்களுக்கும் உடன் பிறந்தோருக்கும் வாழ்த்து சொல்வது. பின்னர் நண்பர்களுக்கு ஃபோன் செய்து வாழ்த்து சொல்வது. பொழுது விடிந்ததும் காலை அல்லது மாலை ஏதாவது பிரசித்தி பெற்ற கோவிலுக்கு செல்வது. பதிவு எழுதுவது. மதியம் சிறிது தூங்குவது. நேரம் கிடைத்தால் சினிமா செல்வது. என்னுடைய புத்தாண்டு கொண்டாட்டம் என்பது

Read More

அவனுக்கு தெரியாதா எப்போ, யாருக்கு, என்ன, ஏன் கொடுக்கணும் என்பது?

மார்கழி மாசம் ஆரம்பிச்சதுல இருந்து நானும் நண்பர் மாரீஸ் கண்ணனும் விஸ்வரூப தரிசனத்துக்காக (கோவல் திறந்தவுடன் கிடைக்கும் முதல் தரிசனம்) தினமும் நந்தம்பாக்கம் கோதண்டராமர் கோவிலுக்கு போய்கிட்டிருக்கோம். இது பற்றி ஏற்கனவே உங்ககிட்டே சொல்லியிருக்கேன். பேர் தான் கோதண்டராமர் கோவில். மற்றபடி இங்கே ஸ்ரீ ஸ்ரீனிவாசப்பெருமாள் தான் மெயின் DEITY.  (ராமருக்கு தனி சன்னதி இருக்கு). தினமும் காலை 5.30 மணிக்கு கோ-பூஜையுடன் கூடிய விஸ்வரூப தரிசனத்தை முடித்து, பின்னர் தீர்த்தப்

Read More