Home > பக்திக் கதைகள் (Page 6)

அன்னையின் அருளால் விளைந்த ‘ஆனந்தக் கடல்’ – உண்மை சம்பவம்!

மதுரை அரசாளும் அன்னை மீனாட்சியின் லீலா விநோதங்களையும் திருவிளையாடல்களையும் சொல்ல ஆரம்பித்தால் இந்த ஜென்மம் போதாது. எனினும் இந்த நவராத்திரி நேரத்தில் அன்னையின் பெருமையை பேசவேண்டும், நீங்கள் அதை படிக்கவேண்டும் என்று நாம் விரும்பும் காரணத்தால் இந்த உண்மை சம்பவத்தை பதிவு செய்கிறோம். அன்னைக்கு 'மீனாட்சி' என்ற பெயர் ஏன் வந்தது தெரியுமா? மீன் போன்ற கண்களை உடையவள் என்பதால் அன்னைக்கு மீனாட்சி என்ற பெயர் தோன்றியது. மீன் + ஆட்சி = மீனாட்சி.

Read More

கர்வத்துக்கும் தன்னம்பிக்கைக்கும் என்ன வித்தியாசம் ? MONDAY MORNING SPL 62

அர்ஜூனனுக்கு ஒரு முறை ஒரு சந்தேகம் வந்தது. "இராமர் உண்மையிலேயே சிறந்த வில்லாளி எனில், ஏன் அவர் தன் வில்லைக்கொண்டே சேதுவுக்கு பாலம் கட்டவில்லை. வானரங்களை வைத்து ஏன் பாலம் கட்டினார்?" எப்படியாவது இந்த கேள்விக்கு விடை கண்டுபிடிக்கவேண்டும் என்று விரும்பினான். பாசுபதாஸ்திரம் வேண்டி அவன் சென்று கொண்டிருந்தபோது, ஒரு நதிதீரத்தில் அனுமன் தனது சுய உருவை மறைத்து ஒரு சாதாரண வானரம் போல உருக்கொண்டு அமர்ந்து இராமநாமம் ஜபம் செய்துகொண்டிருப்பதை

Read More

பொருள் தெரியாமல் ஒரு ஸ்லோகத்தை உச்சரிப்பதால் பலன் உண்டா?

அந்த குருகுலத்தில் தினமும் வேதபாராயணமமும் கீதை பாராயணமும் நடக்கும். குருநாதர் சொல்லச் சொல்ல, சீடர்கள் வேத மந்திரங்களை உச்சரிக்கவேண்டும். குரு வேத மந்திரங்களின் அர்த்தத்தை அவர்களுக்கு போதிப்பது கிடையாது. முதலில் அவர்கள் மந்திரங்களை மனப்பாடம் செய்துகொள்ளட்டும் பிழையின்றி உச்சரிக்க கற்றுக்கொள்ளட்டும் பிறகு அர்த்தம் சொல்லிக்கொடுப்பதை பார்த்துக் கொள்ளலாம் என்பது அவர் எண்ணம். ஒரே ஒரு சீடனுக்கு மட்டும் ஒரு சந்தேகம் எழுந்தது. "குருவே என்னை தவறாக நினைக்கவேண்டாம்... பொருள் புரியாமல் அர்த்தம் தெரியாமல்

Read More

முருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்!

'சிக்கலுக்கு வேல் வாங்க செந்தூரில் சம்ஹாரம்' என்று கூறுவார்கள். சிக்கலில் சிங்காரவேலர் திருக்கோவிலில் வேல் வாங்கும் விழாவும், திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவும் புகழ் பெற்றவை என்பதே அதன் பொருளாகும். சிக்கல் சிங்கார வேலர் தாயிடம் வேல் வாங்கும்பொழுது அவருடைய திருமுகத்தில் வியர்வை துளிகள் அரும்பும் அதிசயத்தை இன்று நீங்கள் சிக்கல் சென்றாலும் பார்க்கலாம்.   "மனிதர்களுக்கு தானே வியர்வை அரும்பும். கடவுளுக்கும் வியர்க்குமா என்ன...?" என்று நீங்கள்  கேட்கலாம். குழந்தை வேலனாக பாலசுப்ரமணினாக முருகன் எளிதில்

Read More

தன் பரம பக்தனுக்கு ஏவல் செய்த பரமாத்மா – நரசிம்ம மேத்தாவின் முழு வரலாறு!

வீட்டை விட்டு கோபித்துக்கொண்டு நரசி வெளியேறி, சிவாலயத்தில் தஞ்சம் புகுந்து, சிவ பெருமானின் தரிசனம் பெற்று, கண்ணனின் ராசலீலையை காணும் பெரும் பாக்கியத்தையும் பெற, அங்கே யமுனாதாஸ், வெளியே  சென்ற நரசிம்ம மேத்தாவை எதிர்பார்த்துப் பார்த்து அழுதார்.  மருமகளை அழைத்து கேட்க, அவள் தான் திட்டியதைச் சொல்லி மன்னிப்பும் கேட்டாள்.  உடனே அவர் ஊர் முழுவதும் தேடும் படி ஆட்களை ஏவினர்.  குளம், குட்டை, நதி, வாய்க்கால்கள் முதலிய இடங்களிலும்

Read More

சிவபெருமான் தன் பக்தனுக்கு காட்டிய கண்ணனின் ராசலீலை (உண்மை சம்பவம்)!

கண்ணனையும் சரி, பிறையை சூடிக்கொண்டிருக்கும் கங்காதரனையும் சரி... நமக்கு பிரித்துப் பார்க்க தெரியாது. நம்மை பொருத்தவரை இருவரும் ஒன்று தான். இவரை அழைத்தால் அவர் அருள் புரிவார், அவரை அழைத்தால் இவர் ஓடிவருவார் என்பது நமது திடமான நம்பிக்கை. இந்த சிந்தனை இன்று நேற்று ஊறியதல்ல. பல்லாண்டுகளுக்கு முன்பே, மஹா பெரியவா அவர்களின் பக்தனாக நாம் மாறுவதற்கு முன்பே இந்த சிந்தனை நம்முள் இருந்தது. (சைவ, வைஷ்ணவ பேதம் மஹா

Read More

அரங்கன் மீது கொண்ட காதலால் ‘துலுக்க நாச்சியார்’ ஆன சுல்தானின் மகள்!

ஸ்ரீரங்கத்து அரங்கன் அனைவருக்கும் பொதுவானவன். இவன் மனிதப் பிறவியில் உயர்வு, தாழ்வு பார்த்ததில்லை. ஏன், மதங்களிடையேயும் வேறுபாடு கண்டதில்லை. அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பேரருளாளன் இவன். இந்த பிரமாண்ட ஆலயத்தின் இரண்டாவது பிராகாரத்தில் அமைந்திருக்கும் ‘துலுக்க நாச்சியார்’ சந்நதி, புதிதாக வருபவர்களை வியப்பில் ஆழ்த்தும். ஆமாம், முகமதிய பெண்மணிக்கும் அருள் பாலித்தவன் இந்த அரங்கன். கண்ணன் அடிதொழ ஜாதி வேண்டாம், மதம் வேண்டாம், அன்பு ஒன்றே போதும் என நிருபித்த

Read More

முருகப் பெருமானை நேரில் கண்ட பாக்கியசாலிகள் – வைகாசி விசாகம் – SPL 2

முருகனின் பெயரை மூன்று முறை கூறியதற்கு கிடைத்த தண்டனை! அயோத்யா காண்டம் - குகப்படலத்தில் ஓர் அற்புதமான செய்தியை - தத்துவத்தை முன்வைக்கிறார் கம்பர். குகனுடைய நட்பை-அன்பை ராமபிரான் பெறுவதும், ராமனுடைய தெய்வ தரிசனத்தை குகன் கண்டு கொள்வதும், ராமனுடைய திருவடிப் பெருமையை - சிறப்பைப் பேசுவதும்தான் இப்படலத்தின் சாரம் மற்றும் தனிச்சிறப்பு! ""கேட்டினும் உண்டு ஓர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல்'' என்று வள்ளுவப் பெருந்தகை கூறியதுபோல, இடர்வந்த காலத்தில் உற்ற நண்பனை

Read More

அண்ட சராசரங்களை கிடுகிடுக்க வைத்த நரசிம்மர் ஒரு வேடனிடம் கட்டுண்ட கதை!

நரசிம்ம ஜெயந்தி தொடர்பான இரண்டாம் பதிவு இது. இந்த பதிவை சென்ற ஆண்டே நாம் அளித்திருந்தோம். இன்று, நரசிம்ம ஜெயந்தியையொட்டி மீண்டும் அளிக்கிறோம். இந்த கதைக்காக இந்த அற்புதமான ஓவியத்தை வரைந்திருப்பவர் ரமீஸ் என்னும் இஸ்லாமிய அன்பர். ஓவியக்கல்லூரி மாணவர். நமது தளத்தின் ஓவியர் இவர் தான். அவருக்கு என் நன்றி!! (நமது நரசிம்ம ஜெயந்தி அனுபவம் பற்றிய பதிவு விரைவில்!) நினைத்ததை அடையவேண்டுமா? வழிகாட்டுகிறான் ஒரு வேடன்!! பக்தியெனும் பாதையில் செம்மையாக செல்வோர் பலரை அகந்தை

Read More

தாய் தந்தையரை துதியுங்கள் – உலகம் உங்கள் காலடியில்! அன்னையர் தின ஸ்பெஷல்

இன்று ‘அன்னையர் தினம்’. நம்மை பத்து மாதம் சுமந்து, பெற்று, எத்தனையோ தியாகங்களுக்கும் கஷ்டங்களுக்கும் நடுவே நம்மளை வளர்த்து ஆளாக்கிய நம் நம் அன்னையின் தியாகத்தை நினைவு கூர வேண்டிய நாள். உங்க பெத்தவங்களை சந்தோஷமா நீங்க வெச்சிருந்து அவங்களை மதிச்சி நடந்து வந்தாலே போதும்… உலகம் உங்கள் காலடியில் ஒரு நாள் கிடக்கும் என்பதை உணர்த்தும் வரலாறு ஒன்றை உங்களுக்கு சொல்ல ஆசைப்படுகிறோம். தாய் தந்தையரை துதியுங்கள் – உலகம் உங்கள் காலடியில்! ஜத்வா,

Read More

யாரையும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்பது ஏன் தெரியுமா? – MONDAY MORNING SPL 40

ஒரு சமயம் பகவான் சற்று ஓய்வாக தனது கிரீடம், சங்கு, சக்கரம் முதலியவற்றை அனந்தன் மேல் வைத்துவிட்டு, பாதரக்ஷைகளையும் தரையில் கழற்றி வைத்துவிட்டு சற்று அகன்றார். பகவானின் கிரீடம், சங்கு, சக்கரம் மூன்றும் கர்வத்துடன் பாதரக்ஷைகளைக் கண்டு நகைத்தன. "பார்த்தீர்களா! என்ன இருந்தாலும் மேல்மக்கள் மேல்மக்களே; எங்களை அனந்தன் மேல் வைத்தவர் உங்களை வைக்க வேண்டிய இடத்தில்தான் தரையில் விட்டுச் சென்றிருக்கிறார். இதிலிருந்தே நீங்கள் கீழ்மக்கள் எனத் தெரியவில்லையா? என்றும், “எங்களைப் போல்

Read More

ஆங்கிலேயே கலெக்டருக்கு அருள்புரிந்த அன்னை மீனாக்ஷி! சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!

பொதுவாக நமது பக்தி திரைப்படங்களில் ஆங்கிலேயர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம்பெற்றால், பெரும்பாலும் அந்தந்த இடங்களில், அந்தந்த காலகட்டங்களில் நடைபெற்ற உண்மை சம்பவங்களாகத் தான் அவை இருக்கும். சிறிது கற்பனை சேர்த்து நமது இயக்குனர்கள் திரைப்படங்களில் அற்புதமாக அவற்றை பயன்படுத்தியிருப்பார்கள். அண்மையில் பங்குனி உத்திரத்தன்று, டி.வி.டி.யில் 'ஆதிபராசக்தி' படம் பார்க்க நேர்ந்தது. நமக்கு மிகவும் பிடித்த படங்களுள் ஒன்று 'ஆதிபராசக்தி'. இதில் வரும் 'சொல்லடி அபிராமி', 'நானாட்சி செய்து வரும் நான்மாடக் கூடலிலே'

Read More

தற்காலிக சோகங்களுக்காக வருந்துவானேன்? தங்கக் கதவை திறப்பதற்கே இரும்புக் கதவு மூடப்படுகிறது!

உங்களில் எத்தனையோ பேர் உங்கள் தினசரி வாழ்க்கையில், அலுவலகத்தில், நட்பில், உறவில், வியாபாரத்தில், இக்கட்டான தருணங்களில்  தர்மத்தின் பக்கம் நின்றிருந்து அதனால் பல இன்னல்களை சந்தித்திருப்பீர்கள். ஏன் கெட்டபெயரும் சம்பாதித்திருப்பீர்கள். தர்மத்தின் பக்கம் நின்றதற்காக இப்படி ஒரு தண்டனையா என்று புழுங்கி தவித்திருப்பீர்கள். 'நல்லதுக்கே காலமில்லே' என்கிற விரக்தி கூட பல சமயங்களில் ஏற்பட்டிருக்கும். ஆனால் வேதம் என்ன சொல்கிறது தெரியுமா? 'தர்மோ ரக்ஷதி ரக்ஷித' என்று தான். "தர்மத்தை நீங்கள்

Read More

இறைவனை குறைத்து மதிப்பிடுபவர்கள் கவனத்திற்கு..! சிவராத்திரி SPL (3)

சென்ற டிசம்பர் மாதம் நம் தளத்தின் சார்பாக பாரதி பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்றது நினைவிருக்கலாம். பொதுவாக இது போன்ற விழாக்களில் நாம் என்ன பேசவேண்டும் என்று ஓரளவு முன்கூட்டியே தயார் செய்துகொள்வோம். ஆனால் பாரதி விழாவை பொருத்தவரை ஒய்வு ஒழிச்சலின்றி அடுத்தடுத்த பணிகள், எதிர்பாராத சோதனைகள் என்று நாம் அந்த விழாவை எதிர்கொண்டமையால் எதையும் தயார் செய்துகொள்ள நேரமிருக்கவில்லை. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் விழாவில் நாம் உரையாற்றும்போது, இடையே

Read More