Home > மகா பெரியவா (Page 5)

சாமி குத்தம், தடைபட்ட திருப்பணி, முடித்து வைத்த மகா பெரியவா! – குரு தரிசனம் (20)

மயிலாடுதுறை - சீர்காழி சாலையில் மயிலாடுதுறையிலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது நாகங்குடி என்னும் கிராமம். மெயின்ரோட்டில் சாலையில் அமைந்துள்ளது சிறிய நாகங்குடி. சாலையிலிருந்து சுமார் 2 கி.மீ. உள்ளே சென்றால் பெரிய நாகங்குடி வரும் . சுற்றிலும் வயலும் வரப்புமாக பசுமையாக காட்சியளிக்கும் ஊர் இந்த நாகங்குடி. சுமார் 60 வருடங்களுக்கு முன்னர் (1952) இந்த ஊரில் கோவில் ஒன்றுக்கு திருப்பணி நடைபெற்றது. ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து பொருள்

Read More

இது தான் பக்தி என்பதை உணர்த்திய குடும்பம் – குரு தரிசனம் (19)

மகா பெரியவா தொடர்புடைய இரண்டு ஆத்மானுபவங்கள் இந்த பதிவில் தரப்பட்டுள்ளது. ஒன்றுக்கொன்று தொடர்புடையது. மகா பெரியவாவின் கடாக்ஷத்திற்கு உள்ள மதிப்பை இந்த இரண்டு சம்பவங்களும் உணர்த்துகின்றன. மகா பெரியவாவின் படம் உங்கள் வீட்டில் இருக்கிறதா? அப்போது மகா பெரியவரே பிரத்யட்சமாக அங்கு இருக்கிறார் என்று அர்த்தம். அவர் நம்மை பார்த்துக்கொண்டிருக்க, நாம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதை பக்தர் ஒருவர் உணர்த்தியிருக்கிறார். படியுங்கள்..! பதிவில் குறிப்பிட்டுள்ள பழக்கம் உங்களில் எவருக்கேனும் இருக்குமானால், அவர் பெயரில்

Read More

பார்வையாலேயே குணப்படுத்தும் வைத்தீஸ்வரன் – குரு தரிசனம் (18)

மகா பெரியவாவின் மகிமைகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம். அவருடைய மகிமைகளை படிக்க படிக்க, பரவசம் தான். பக்தர்கள் மனதில் உள்ள அஞ்ஞான இருளை விரட்டி அருள் என்னும் விளக்கி ஏற்றி அவர்கள் வாழ்வை சிறக்க வைப்பதில் அவருக்கு நிகர் அவரே. இப்படி ஒரு மகான் வாழ்ந்த பூமியில் நாமும் வாழ்கிறோம் என்பதே நமக்கு பெருமை தான். அவரின் ஒவ்வொரு செய்கைக்கும் ஒரு காரணம் இருக்கும். காரணமின்றி அவர் எதையும் செய்வதில்லை.

Read More

கேட்டது ஒரு பிள்ளையார் சிலை; கிடைத்ததோ ஒரு கோவில் – குரு தரிசனம் (17)

பெரியவா  எதைச் சொன்னாலும் செய்தாலும் அதில் ஒரு அர்த்தம் ஒளிந்திருக்கும். நமக்கும் ஒரு பாடம் அதில் புதைந்திருக்கும். சிறு வயதிலேயே துறவறம் ஏற்றுக்கொண்டவருக்கு எங்கிருந்து தான் இத்தனை சித்தியும் ஞானமும் வந்ததோ என்று அவர் மகிமைகளை படிக்கும்போது வியக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. ஒரு கிராமத்திலிருந்து முக்கியஸ்தர்கள் சிலர் தரிசனத்துக்கு வந்தார்கள். கிராமத்திலிருந்த விநாயகர் சிலை திருட்டு போய்விட்டது. பெரியவாள் வேறொரு சிலை கொடுத்து உதவ வேண்டும் என்று பிரார்த்தித்தார்கள். "உங்க கிராமத்துல ஏரி

Read More

இறைவனை விட சக்திமிக்கது எது தெரியுமா? — Rightmantra Prayer Club

காசியிலே ஒரு செல்வந்தர் இருந்தார். மிகச் சிறந்த வள்ளல். ஆனால் பூர்வஜன்மப் பலனாக அவரைத் தொழுநோய் பற்றிக்கொண்டது. வாரி வாரி வழங்கிய அந்தச் செல்வரை நன்றாகக் கவனித்துக்கொள்வதற்காக அவரிடம் உதவிகள் பெற்ற பலரும் முன்வந்தனர். அந்தச் செல்வந்தரின் நோய் முற்றிப்போய் புழுக்கள் நெளியத் தொடங்கின. தாம் யாருக்கும் பாரமாக இருப்பதை அவர் விரும்பவில்லை. தனது நண்பர்களையும் ஆதரவாளார்களையும் அழைத்துத் தன்னைக் கங்கைக்கரைக்குக் கூட்டிச்செல்லச்சொன்னார். தான் கங்கையில் மூழ்கி இறந்துவிடப் போகவதாகவும் தன்

Read More

குரு தரிசனம் தந்த பரிசு – அன்றும், இன்றும் – இரண்டு உண்மை சம்பவங்கள் – குரு தரிசனம் (16)

தில்லையில் உள்ளவர் 'நடராஜர்' என்றால் நம் மஹா பெரியவா ஒரு 'தஸராஜர்'. ஆம், தன்னை நோக்கி ஒரு அடி எடுத்து வைப்பவர்களிடம் தான் பத்து அடி எடுத்து வைக்கும் தஸராஜர். நம்மிடம் திடீர் திடீரென சில வாசகர்களும் அன்பர்களும் அலைபேசியில் தொடர்பு கொண்டு தங்கள் மனக்குறைகளை, பகிர்ந்து கொள்வார்கள். நம் வாராந்திர பிரார்த்தனை கிளப்பில் வெளியிட பிரார்த்தனையை சமர்பிப்பார்கள். அவற்றை முறைப்படி நமது பிரார்த்தனை கிளப்பில் வெளியிட்டு உரிய பரிகாரங்களும்

Read More

மகா பெரியவா எரிமலையாய் வெடித்த தருணம் – நெஞ்சை உலுக்கும் சம்பவம் – குரு தரிசனம் (15)

மகா பெரியவா பக்தர்களுக்கு அருளியது தொடர்பாக பல பதிவுகளை வெளியிட்டுள்ளோம். எந்த சூழ்நிலையிலும் மகா பெரியவா கோபங்கொண்டு எவரிடமும் பேசியது கிடையாது. சபித்தது கிடையாது. சில சமயம் பக்தர்கள் தவறுக்காக அவர் கோபப்படுவதுண்டு. காலில் விழுந்தவுடன் அடுத்த நொடி கோபம் நீங்கி சாந்தமாகிவிடுவார். தவறு செய்வது மனித இயல்பு அதை மன்னிப்பது மட்டுமல்ல மறப்பது தான் தெய்வ குணம் என்பது அவருக்கு தெரியும். ஆனால்... தவறுக்கும் தவறான தவறை ஒருவர்

Read More

“ஏம்பா! உங்களுக்கு எப்போ பார்த்தாலும் பெரியவா சேவை தானா?” – குரு தரிசனம் (14)

1952 வரை மடத்தில் கைங்கர்யம் பண்ணிக் கொண்டிருந்த ஒரு பெரியவரின் பெயர் பஞ்சாபகேசன். பெரியவாளுடைய கைங்கர்யம்தான் வாழ்க்கை என்று இருந்த பெரிய பக்தர். தள்ளாமையினால் மடத்திலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டு பெரியவாளை  பிரிய மனசில்லாமல் தஞ்சாவூரில் உள்ள பிள்ளையிடம் வந்தார். உடல்தான் தஞ்சாவூரில் இருந்ததே ஒழிய, மனஸ் பூரா பெரியவாதான்! எனவே தஞ்சாவூரிலும் ஏதோ பெரியவா கைங்கர்யம் என்று பண்ணிக் கொண்டிருந்தார். பிள்ளையாண்டான் கேட்டான், "ஏம்பா! உங்களுக்கு எப்போப் பார்த்தாலும் பெரியவா சேவைதானா? நீங்க

Read More

வாழைப்பழத்துக்கு பதில் மகா பெரியவா கொடுத்த நெற்பொரி. ஏன்? எங்கு? – குரு தரிசனம் (13)

'செய்யும் தொழிலே தெய்வம்; அதில் திறமை தான் நமது செல்வம்'  என்று  கூறுவார்கள். செய்யும் தொழிலை தெய்வமாக பாவித்து அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வருடத்திற்கு ஒரு நாளை தேர்ந்தெடுத்து, கொண்டாடுவது நம் புண்ணிய பூமி பாரதத்தை தவிர வேறு எந்த நாட்டிலாவது நடைமுறையில் உள்ளதா என்று தெரியவில்லை. நமக்கு தெரிந்து அப்படி இருக்க வாய்ப்பில்லை. ஆயுத பூஜை என்றழைக்கப்படும் சரஸ்வதி பூஜையை கொண்டாடுவது பற்றி உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். இருப்பினும்

Read More

நன்றி மறவா நல்லவர் ‘நடிகர் திலகம்’, மகா பெரியவாவை சந்தித்த அந்த தருணம்…

சினிமாவில் நடிக்க வந்த கணேசனுக்கு ஏ.வி.எம் ஸ்டூடியோவில் மேக்கப் டெஸ்ட் எடுத்தார்கள். இந்த சமயத்தில் படத்தை முதலில் இயக்குவதாக இருந்த ஏ.எஸ். சாமிக்குப் பதிலாக கிருஷ்ணன் பஞ்சுவை படத்தின் இயக்குநராக நியமித்திருந்தார்கள். அதேபோல் திருவாரூர் தங்கராசுக்குப் பதிலாக 'பராசக்தி' படத்திற்கு மு.க வசனம் எழுதும்படி ஆகியது. கணேசனை மேக்கப் டெஸ்ட் முடிந்ததும் 'சக்சஸ்' என்ற ஆங்கில வார்த்தையைச் சொல்ல சொன்னார்கள். கணேசனும் 'சக்சஸ்' என்று சொன்னார். 'சக்சஸ்' என்று கூறியது 'சத்தத்'

Read More

“கடமைக்கே நேரமில்லை, இதுல கோவிலுக்கு எங்கே சாமி போறது?” – குரு தரிசனம் (12)

"என் கடமையை செய்யவே எனக்கு நேரமில்லை. இதுல சாமி எங்கே கும்பிடுறது... கோவிலுக்கு எங்கே போறது?" என்று ஆதங்கப்படுபவர்கள் பலர் உண்டு. உண்மைதான். குடும்ப சுழலில் சிக்கிக்கொண்டு கோவில்களுக்கு செல்ல மனமிருந்தும் மார்க்கமின்றி தவிப்பவர்கள் பலர் உண்டு. குறிப்பாக பெண்கள்... ஒவ்வொன்றுக்கும் கணவரிடமோ, பெற்றோரிடமோ அல்லது பிள்ளைகளிடமோ அனுமதி கேட்கவேண்டிய சூழலில் பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு தான் இந்த பதிவு. =============================================================== "நீ கர்மயோகி. ஒரு வினாடி நேரம் தெய்வத்தை நினைச்சாலே போறும்!" கடமையைவிட

Read More

காசியில் கங்கா ஜலம் எங்கு எடுக்கவேண்டும்? – குரு தரிசனம் (11)

காசி ஷேத்ரத்தில் ருத்ரைகாதசீ ஜப-ஹோமம் செய்து, ஒரு குடம் கங்கா ஜலம் கொணர்ந்து பெரியவாளுக்கு பெரியவாளுக்கு சமர்பித்தார், ஒரு  பக்தர். "ருத்ரைகாதசிக்கு எங்கேயிருந்து ஜலம் எடுத்தே?" என்று கேட்டார்கள் பெரியவா. "காசி கேதார்காட் கங்கையில இருந்துதான் ஜலம் எடுத்து வந்தார்கள் வைதீகர்கள்." "காசி பரமேஸ்வரனின் இடம். அங்கிருந்து கங்கை நீர் கங்கை மண் முதலானவைகளை எடுத்து வரக்கூடாது.  நீ கொண்டு வந்திருக்கும் தீர்த்தத்தை ஏதாவது ஒரு வில்வமரத்துக்கு அடியே சேர்த்துவிடு...." "கங்கை, சுத்த கங்கையாக இருக்குமிடத்திலிருந்து

Read More

மகா பெரியவா என்னும் கலங்கரை விளக்கம் – குரு தரிசனம் (10)

திக்கு தெரியாமல் அல்லாடிக் கொண்டிருந்த தன் வாழ்க்கை, மகா பெரியவாளின் தரிசனத்தால் எவ்விதம் முன்னேற்றமடைந்தது என்று ஒரு பெண் எழுத்தாளர் உருக்கமாக கூறியிருக்கிறார். நாத்திகத்தில் ஊறிய தந்தையின் மகளாகப் பிறந்த நான், இருபத்து மூன்று  வயது வரை எந்த ஆலயத்துக்கும் சென்றறியேன். பின்னர்,  வாழ்க்கையில் மிகப்  பெரிய இழப்பு ஏற்பட்ட பின்னர் கொண்ட கணவரையும் பெற்ற தாய் தந்தையரையும் பிரிந்து வாழும் சூழ்நிலை ஏற்பட்டது. வேற்றூரில் அனாதை விடுதி ஒன்றில் குழந்தையுடன் தஞ்சமடைந்தேன்.

Read More

பிள்ளையார் சதுர்த்தி அன்று வெளிப்பட்ட பெரியவா அருள் – குரு தரிசனம் (9)

ரத்தின சுருக்கமாக இருந்தாலும் படிப்பதற்கே மன நிறைவு தரும் பெரியவாளின் மகிமை இது. குரு மகிமையை படிக்கும் அனைவருக்கும் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறி இன்புற்று வாழ முழுமுதற் கடவுளாம் விநாயகப் பெருமானை வேண்டிகொள்கிறோம். வயோதிக ஆடிட்டர், சென்னையிலிருந்து தரிசனத்துக்கு வந்திருந்தார் குடும்பத்துடன். நாட்டுப்பெண் கையில் மூன்று மாதக் குழந்தை. "பேரன்….நட்சத்திரம் விசாகம்…இன்னும் பெயர் வைக்கலை. இவன்தான் முதல் பேரன்.. மற்றப் பையன்களுக்குக் குழந்தை இல்லை." நாட்டுப்பெண் குழந்தையைத் தரையில் கிடத்தினாள், பெரியவாள் பார்வைபடும்படியாக.

Read More