Home > ஆலய தரிசனம் (Page 4)

மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க… ஈசன் மகனோடு மனம் விட்டுப் பேசிப் பாருங்க…

பிரச்சனைகளில் சிக்கித் தவித்து எல்லா தெய்வமும் தம்மை கைவிட்டுவிட்டதாக கருதுபவர்கள், சிறிதும் தயக்கமோ அவநம்பிக்கையோ இன்றி ஓடிப் போய் பற்ற வேண்டிய பாதங்கள் எது தெரியுமா? முருகனின் திருப்பாதங்கள் தான்! முருகனின் பெருமையை நாளெல்லாம் சொல்லிக்கொண்டே போகலாம். முருகனின் அகராதியில் தண்டித்தல் என்ற ஒன்றே கிடையாது. அருள் செய்வது மட்டும்தான் அவனுக்கு தெரியும். அசுரர்கள் அனைவரும் இறை அவதாரங்களால் வதம் செய்யப்பட்டது தான் வரலாறு. ஆனால், சூரபண்மனை முருகன் வதம் செய்யாமல் அருள் செய்து

Read More

மனக்கோயில் கொண்ட மாணிக்கத்துடன் ஒரு மாலை! – சிவராத்திரி ஸ்பெஷல் 6

சென்ற ஜனவரி 18 அன்று போரூர் பாலமுருகன் கோவிலில் உழவாரப்பணி நடைபெற்றது நீங்கள் அறிந்ததே. அன்று மாலை வெளியூரிலிருந்து வந்திருந்த நண்பர் முத்துக்குமார் அவர்களுடன் திருநின்றவூர் இருதயாலீஸ்வரர் கோவிலுக்கு சென்றிருந்தோம். அன்று பிரதோஷம். அந்த ஆலயத்தில் உழவாரப்பணி மேற்கொள்ள நாம் நீண்ட நாட்களாக நாம் திட்டமிட்டுவந்தோம். அது தொடர்பாக ஆலய நிர்வாகி பாலகிருஷ்ணன் என்பவரிடம் பேச கோவில் அலுவலகத்துக்கு சென்றபோது அவரது அறையில் மகா பெரியவாவின் பெரிய படம் ஒன்று இருப்பதை

Read More

தீராத தோல்நோய்களை தீர்க்கும் திருத்தலம் + எருக்கன் இலை பிரசாதம்!

ஒவ்வாமை மற்றும் இதர காரணங்களினால் தீராத தோல் நோயினால் சிலர் அவதிப்படுவதுண்டு. என்ன பரிகாரம் செய்தாலும் என்ன மருத்துவம் பார்த்தாலும் குணமாகாது. சிலருக்கு மறைவாகவும், சிலருக்கு முகம் மற்றும் கைகால்களிலும் பிறர் பார்வையில் நன்கு தெரியும்படியும் இருக்கும். இவர்கள் நான்கு பேருடன் கலந்து பேசவோ, அல்லது பொது இடங்களுக்கு செல்லவோ மிகவும் சங்கடப்படுவார்கள். பாதிப்பு தரும் எரிச்சல் ஒருபுறம், சங்கடம், அவமானம் மறுபுறம் என வேதனையில் தவிப்பார்கள். அத்தகையோருக்கு வரப்பிரசாதமாய் ஒரு

Read More

108 திவ்ய தேசங்களை தரிசித்த பலனைத் தரும் தவறவிடக் கூடாத ஒரு தலம்!

வருடத்தின் கடைசி நாள். தவிர வைகுண்ட ஏகாதசிப் பொழுது. நேற்று வரை இந்த பதிவை இன்று அளிக்கவேண்டும் என்று நாம் நினைக்கவில்லை. இப்படி ஒரு பதிவு அமைவது உண்மையில் அரங்கன் அருள் தான். நினைத்ததைவிட சிறப்பாக அமைந்திருப்பதாக கருதுகிறோம். உண்மையில் வைகுண்ட ஏகாதசிக்கு இதைவிட பொருத்தமான ஒரு பதிவை அளிக்க முடியாது. அரங்கனுக்கு நன்றி. எழுவகைப் பிறவிகளில் மனிதப் பிறவிக்கு மட்டுமே பல்வேறு சிறப்புக்கள் உண்டு. ஆகையால் தான் ஒளவை 'அரிதரிது

Read More

அருள் நிறைந்த ஒரு ஆண்டிற்கு அடித்தளமாய் அமைந்த ஆலய தரிசனங்கள்!

ஆங்கிலப் புத்தாண்டை நாம் கொண்டாடுகிறோமோ இல்லையோ உலகமே கொண்டாடுகிறது. நமது பாரம்பரியத்தை விட்டுக்கொடுக்காமல் அதே சமயம் அர்த்தமுள்ள வகையில் ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்பது நம் வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் இதன் பொருட்டு விடியற்காலை துவங்கி நண்பகல் வரை நண்பர்களுடன் சேர்ந்து பிரசித்தி பெற்ற ஆலயங்களை தரிசிப்பது உண்டு. 2014 ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டை நாம் கொண்டாடிய தருணங்களை இந்த பதிவில் நினைவு கூர்கிறோம். இந்த பதிவை எப்போதோ அளித்திருக்கவேண்டியது. ஆனால்

Read More

தலைவருடன் ஒரு சந்திப்பு!

நாள் கிழமை விஷேடங்களின் போது எத்தனை பிஸியாக நாம் இருந்தாலும் எப்படியாவது ஆலய தரிசனத்தை செய்துவிடுவது என்ற வழக்கத்தை நாம் கடைப்பிடித்து வருகிறோம். உங்களுக்கெல்லாம் சொல்வதால், நாம் அதை முதலில் கடைபிடிக்கவேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். சிவனுக்கு உகந்த நாட்களில் மிக மிக முக்கியமான ஒரு நாள் ஐப்பசி அன்னாபிஷேகம். மற்ற நாட்களில் சிவனை தரிசிக்காதவர்கள் கூட அன்னாபிஷேகத்தின் போது சிவனை தரிசித்தால் போதும் பலன்களை அள்ளிக்கொண்டுவந்துவிடலாம். காரணம், அடிப்படையில் சிவன் ஒரு

Read More

பித்தனாகியும் பரமனைப் பாடிய ஸ்ரீ அப்பைய தீட்சிதர் திவ்ய சரிதம் + அதிஷ்டான தரிசனம்!

உங்களில் எத்தனை பேர் கேள்விப்பட்டிருக்கிறீர்களோ தெரியாது. அப்பைய தீட்சிதர் என்றொரு தலைசிறந்த சிவபக்தர் ஒருவர் 16 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் வாழ்ந்து வந்தார். பல அற்புதங்களை செய்த மகான் இவர்.  இவரது அதிஷ்டானம் கும்பகோணம் - மயிலாடுதுறை  ரூட்டில் உள்ள திருவாலங்காடு என்னும் ஊரில் காவிரிக்கரையில் அமைந்துள்ளது என்று ஒரு நாள் தற்செயலாக கேள்விப்பட்டோம். கும்பகோணம் பயணத்தை நாம் திட்டமிட்டு வந்தபடியால் அது பற்றி மேலும் தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடன் இணையத்தில் தேடியபோது மகேஷ்

Read More

ஆழியார் அறிவுத் திருக்கோவிலில் ஒரு நாள்!

"கடவுள் யார்.... வாழ்க்கை என்றால் என்ன? உலகில் ஏன் வறுமை உள்ளது?" என்ற கேள்விகளை தனக்குள் கேட்டு, அதற்கான பதிலை சமுதாயத்திற்குத் தந்தவர் தான் வேதாத்திரி மகரிஷி. 1911 - ஆகஸ்ட் 14ல் சென்னை அருகே உள்ள கூடுவாஞ்சேரியில் நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர். பத்து வயதாக இருக்கும்போது, மதிய வேளையில் தறியில் நெய்துகொண்டிருந்தார். அவரது அன்னையார் உணவு உண்ண அழைக்கும் வேளை வந்தது. ஆனால் அன்னையாரோ அவரைக் கூப்பிடாமல் சமையலறையில் அமர்ந்து

Read More

காங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்!

மகான்கள் மற்றும் ஞானிகளின் ஒவ்வொரு செயலுக்கும் காரணம் இருக்கும். காரணமின்றி அவர்கள் எதையும் செய்வதில்லை. சாமான்யர்கள் அதை புரிந்துகொள்ள பொறுமை மிகவும் அவசியம். கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி, ஆவணி சுவாதி அன்று கிருபானந்த வாரியார் ஜெயந்தி அன்று நடைபெற்ற சில நிகழ்வுகள் உணர்த்துவதும் அதைத்தான். சில மாதங்களுக்கு முன்பு காங்கேயநல்லூரில் உள்ள கிருபானந்த வாரியார் சுவாமிகளின் அதிஷ்டானத்திற்கு முதன்முறை சென்றிருந்தோம். அப்போதே வாரியாரின் அவதார தினத்தன்று நிச்சயம் மீண்டும்

Read More

புலிக்கால் முனிவர் எனும் வியாக்ரபாதரின் திருச்சமாதி – ஒரு நேரடி தரிசனம்!

நமது ரிஷிகள் தரிசனம் தொடரின் ஆறாம் அத்தியாயம் இது. ஐந்தாம் அத்தியாயத்தில் வியாக்ரபாதரை பற்றி பார்த்தோம். தற்போது அவரது திருச்சமாதி பற்றி பார்ப்போம். ஸ்ரீவியாக்ரபாத முனிவர், பல சிவத் தலங்களை தரிசித்த பின், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து சுமார் 20 கி.மீ. தூரத்தில் சிறுகனூர் கிராமத்துக்கு அருகில் உள்ள ‘திருப்பட்டூர்’ என்ற திருத்தலத்தில் சமாதி ஆனார். திருப்பட்டூர், சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூரிலிருந்து திருச்சி செல்லும் வழியில்

Read More

காங்கேயநல்லூர் வாரியார் சுவாமிகள் ஞானத் திருவளாகம் – ஒரு திவ்ய தரிசனம்!

இன்று ஆவணி சுவாதி! திருமுருக. கிருபானந்த வாரியார் சுவாமிகளின் ஜெயந்தி. 'வாரி’ என்ற சொல்லுக்கு கடல் என்று பொருள். கிருபானந்த வாரியார் ஒரு நடமாடும் கடல். தமிழ்க் கடவுளாகிய முருகன் அவரது தனிக் கடவுள். அருணகிரிநாதரே அவரது மானசீக குரு. சங்க நூல்கள், திருக்குறள், சிலப்பதிகாரம், பெரியபுராணம், கம்பராமாயணம், வில்லிபாரதம், சைவத் திருமுறைகள், திவ்யப் பிரபந்தம், பிள்ளைத்தமிழ் நூல்கள் என்று இப்படி எத்தனை இலக்கியங்கள் உள்ளனவோ அத்தனையும் கற்றறிந்தவர். அதுமட்டுமா

Read More

உன்னை தொழுவதொன்றே இங்கு யான் பெற்ற இன்பம்!

சென்ற ஆடிக்கிருத்திகை அன்று நடைபெற்ற நமது அன்னதானம் மற்றும் முருகனின் தரிசனம் குறித்த பதிவு இது. ஆடிக்கிருத்திகை அன்று முருகனுக்கு மிகவும் விஷேடமான நாள் என்பதால் தளத்தில் சிறப்பு பதிவு ஒன்றை அளித்ததோடு அன்று அன்னதானமும் செய்ய விரும்பினோம். முன்பே கே.கே.நகர் சக்தி விநாயகர் கோவிலில் அதற்குரிய ஏற்பாடுகளை செய்து பணமும் கட்டிவிட்டோம். இதற்கிடையே ஆடிக்கிருத்திகைக்கு முந்தைய தினம் மாலை, அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும்போது, போரூர் ஏரிக்கரை மீதுள்ள ஆதி ஜலகண்டேஸ்வரர்

Read More

புடவை கட்டிக்கொள்ளும் பெருமாள் – சென்னை புறநகரில் ஒரு அதிசய மலைக்கோவில்!

சென்னை சிங்கபெருமாள் கோவில் - ஒரகடம் சாலையில் திருக்கச்சூரை தாண்டி அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆப்பூர். அந்த ஊரில் உள்ள ஒரு மலை மேலே ஒரு சிறிய வைணவத் திருக்கோவில். அந்த கோவிலில் நின்றகோலத்தில் ஒரு அழகிய பெருமாள். "மூர்த்தி சிறிதெனினும் கீர்த்தி பெரிது" என்பது பழமொழி. அந்த பழமொழி உண்மை என்பதை உணர இந்த கோவிலில் வந்து பெருமாளை வழிபட்டு செல்ல வேண்டும். பெருமாள் குடி இருக்கும் இந்த

Read More

மாற்றுக் குறைந்த பொற்காசு மூலம் வாழ்வு செழிக்க ஒரு பாடலை தந்த இறைவன்!

இந்த உலகம் யாரை எதிர்நோக்கி காத்திருக்கிறது தெரியுமா? கடவுளை தேடுபவர்களையோ, ஆன்மீகவாதிகளையோ, செல்வந்தர்களையோ அல்ல. தொண்டு செய்பவர்களை. செயல் வீரர்களை. இறைவன் யாருக்கு உதவிட காத்திருக்கிறான் தெரியுமா? தன்னை தொழுபவர்களுக்கு அல்ல. தொண்டு செய்பவர்களுக்கு உதவிடவே. தொழுபவர்கள் என்றுமே இரண்டாம் பட்சம் தான். தொண்டு செய்பவர்களுக்கு தான் முதலிடம். தொண்டு செய்ய பணம் தேவையில்லை. மனம் போதும். எப்படி என்றால், 'தொண்டு செய்யவேண்டும்' என்று நீங்கள் களம் இறங்கிவிட்டால் அதற்குரிய

Read More