Home > 2015 > March (Page 3)

நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் கரை புரள, சிவலோகத்தில் சில மணித்துளிகள்…!

'வான்கலந்த மாணிக்கவாசகர்' நாடகத்தை உருவாக்கி அதை வெற்றிகரமாக நடத்தி வரும் 'சிவலோகம்' திவாகர் அவர்களை அவரது வீட்டிலேயே சந்தித்து நமது தளம் சார்பாக கௌரவித்து பேட்டி கண்டது நினைவிருக்கலாம். (Please check : 'மாணவர்கள் மனதில் மாணிக்கவாசகர்' - திவாகரும் அவரது திருவாசகத் தொண்டும்!) அந்த பதிவை பார்த்துவிட்டு புதுவையை சேர்ந்த சம்பத்குமார் என்கிற வாசக அன்பர் ஒருவர், நமக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்தது என்னவென்றால்: "சிவலோகம் திவாகர்

Read More

ரமண திருவிளையாடற் திரட்டில் கண்ட முத்துக்கள் மூன்று!

நண்பர் அனுப்பிய 'ரமண திருவிளையாடற் திரட்டு' படித்து வருகிறோம். நூலை படிக்கும்போது ஒரு விஷயம் தெளிவாக புரிகிறது. சித்து விளையாட்டுக்களில் ரமணர் மிகவும் கை தேர்ந்தவர் என்றாலும் அதை காண்பித்து ஒருபோதும் பக்தர்களை ஈர்க்கவோ தக்கவைத்துக்கொள்ளவோ அவர் முயற்சிக்கவில்லை. அதே சமயம் அவரால் இயலாதது எதுவும் இல்லை என்பதற்கும் சான்றுகள் உள்ளன. தன்னை சந்திக்கவரும் அனைவரின் ஆன்மாவையும் விழித்தெழ செய்து 'நாம் யார்?' 'எது உண்மையான பக்தி?' 'எது உண்மையான

Read More

மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க… ஈசன் மகனோடு மனம் விட்டுப் பேசிப் பாருங்க…

பிரச்சனைகளில் சிக்கித் தவித்து எல்லா தெய்வமும் தம்மை கைவிட்டுவிட்டதாக கருதுபவர்கள், சிறிதும் தயக்கமோ அவநம்பிக்கையோ இன்றி ஓடிப் போய் பற்ற வேண்டிய பாதங்கள் எது தெரியுமா? முருகனின் திருப்பாதங்கள் தான்! முருகனின் பெருமையை நாளெல்லாம் சொல்லிக்கொண்டே போகலாம். முருகனின் அகராதியில் தண்டித்தல் என்ற ஒன்றே கிடையாது. அருள் செய்வது மட்டும்தான் அவனுக்கு தெரியும். அசுரர்கள் அனைவரும் இறை அவதாரங்களால் வதம் செய்யப்பட்டது தான் வரலாறு. ஆனால், சூரபண்மனை முருகன் வதம் செய்யாமல் அருள் செய்து

Read More

‘பாதத்தால் சுழலும் மாந்தர்கள் தொல்வினை’ – பன்னிரு திருமுறை இசைவிழாவில் ஒரு அரிய செய்தி!

வேத ஆகம தெய்வ தமிழிசை மன்றமும், ஸ்ரீ கிருஷ்ண கான சபாவும் இணைந்து நடத்தும், 10ம் ஆண்டு, பன்னிரு திருமுறை இசை விழா தி.நகர். கிருஷ்ண கான சபாவில் துவங்கி நடைபெற்று வருகிறது. வரும் 8ம் தேதி வரை நடக்கும் இந்த விழாவில், தமிழகத்தில் உள்ள தலைசிறந்த ஓதுவா மூர்த்திகள் பங்கேற்கின்றனர். தேவார இன்னிசை, பட்டிமன்றம், புலவர்களின் சொற்பொழிவு, உபன்யாசம், ஹரிகதை, இசை சொற்பொழிவு போன்றவை நடக்க உள்ளன. (முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற

Read More

ஒரு முக்கிய அறிவிப்பு + வேண்டுகோள்!

நம் தளத்திற்கான பதிவுகளை தனிமையாக, நிம்மதியாக நேரமின்மையை பற்றிய கவலையின்றி எழுதிடவேண்டும் என்பதற்காகவே ரைட்மந்த்ராவுக்கு என்று தனியே அலுவலகத்தை துவக்கியிருக்கிறோம். அலுவலகத்திற்கு காலை வந்து, சுவாமிக்கு விளக்கேற்றிவிட்டு பதிவை தயார் செய்து அளித்துவிட்டு அடுத்தடுத்து அளிக்க வேண்டிய பதிவுகளுக்கான CONTENT ஐ தயார் செய்வது பின்னர் மதியம் அளிக்க வேண்டிய பதிவை அளிப்பது, மாலை முக்கிய நிகழ்ச்சிகள் ஏதேனும் இருந்தால் கலந்துகொள்வது என்று இப்போதைய SCHEDULE ஓடிக்கொண்டிருக்கிறது. நம்முடைய ஒரே குறிக்கோள்,

Read More

எந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க வேண்டுமா? – MONDAY MORNING SPL 82

எந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க ஓஷோ சொல்லும் வழிமுறை :- அந்தக் கிராமத்தின் ஓய்வு விடுதியில், ஒரு நாள் இரவு ஓஷோவும் மாநில அமைச்சர் ஒருவரும் அடுத்தடுத்த அறைகளில் தங்கி இருந்தனர். இரவு முழுவதும் முப்பது அல்லது நாற்பது நாய்கள் அந்த விடுதியைச் சுற்றி குரைத்துக் கொண்டே இருந்தன. அமைச்சரால் தூங்கவே முடியவில்லை. அவர், அன்று காலை முழுவதும் பயணம் செய்திருந்தார். மறுநாளும் அலைச்சல் இருக்கிறது. அதை நினைக்க நினைக்க அமைச்சருக்குக் கோபம் அதிகமானது. 

Read More