Home > 2014 > July (Page 3)

சென்னையில் 6 வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி – MUST VISIT

நம் இந்து மதத்தின் பாரம்பரியத்தை தெரிந்துகொள்ளும் வகையிலும் பல்வேறு இந்து ஆன்மீக அமைப்புகளின் பணிகள் மற்று பொது நல சேவை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் .இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி' நடைபெற்று வருகிறது. கடந்த மூன்று வருடங்களாக இந்த கண்காட்சிக்கு நாம் சென்று வருகிறோம். (முந்தைய கண்காட்சி தொடர்பான பதிவுகள் இறுதியில் தரப்பட்டுள்ளன). கண்காட்சி நடைபெறும் நாட்கள் : ஜூலை 8 முதல்

Read More

அர்த்தமுள்ள வாழ்க்கை & உண்மையான பக்தி! – Rightmantra Prayer Club

புராதன பெருமை மிக்க அந்த ஊரில் உள்ள சிவன் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. மிகப் பழமையான கோவில் என்பதால் எங்கெங்கிருந்தோ பக்தர்கள் அன்னாபிஷேகத்தை காண அவ்வூருக்கு வந்து குவிந்தனர். உள்ளூர் மக்களும் ஒருவர் கூட வீட்டில் முடங்கியிராது கோவிலில் குழுமிவிட்டனர். இறைவனை தரிசிப்பதில் அனைவருக்கும் அவ்வளவு ஆர்வம். எங்கெங்கு பார்த்தாலும் "ஓம் நமச் சிவாய" "தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!" "திருசிற்றம்பலம்" "சிவ சிவ" என்கிற கோஷங்கள் தான். இந்த அன்னாபிஷேகத்தை காண்பதற்கு ஒரு துறவி தனது

Read More

குன்றத்தூர் சேக்கிழார் விழா – ஒரு நேரடி வர்ணனை!

சென்ற வாரம் சனிக்கிழமை மாலை குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபத்தில் நடைபெற்ற சேக்கிழார் விழாவுக்கு சென்றிருந்தோம். (இந்த விழாவின் பொருட்டு தான் நமது உழவாரப்பணியே அங்கு நடைபெற்றது.) இந்த விழாவில் நிச்சயம் நம் தளம் சார்பாக நாம் கலந்துகொள்ளவேண்டும் என்று விரும்பி எத்தனையோ அலுவல்களுக்கு இடையேயும் உடல்நலம் சற்று குன்றியிருந்த நிலையிலும் அங்கு சென்றிருந்தோம். இப்படி ஒரு விழாவை கண்டதில்லை இனியும் காணப்போவதில்லை என்னுமளவிற்கு பின்னி பெடலெடுத்துவிட்டார்கள். வாய்ப்பை தந்த சேக்கிழார் பெருமானுக்கு

Read More

அனைத்திலும் பிரம்மத்தை கண்ட சுகப்பிரம்ம மகரிஷி! ரிஷிகள் தரிசனம் (4)

இந்த வார ரிஷிகள் தரிசனத்தில் முற்றிலும் வித்தியாசமான ஞான வடிவான ஒரு மகரிஷியை தரிசிக்கவிருக்கிறோம். ரிஷிகளின் அவதார ரகசியங்களை தெரிந்துகொள்வது அத்தனை சுலபமல்ல. நம் நோக்கம் அதுவுமல்ல. ஏனெனில், இவர்களில் பலர் உலகம் தோன்றிய காலம் முதலே இருப்பவர்கள். அவர்களது தியாகங்களையும் பெருமைகளையும் நினைவுகூர்வதே நமது நோக்கம். குருஷேத்திரத்தில் வேதவியாசர் ஹோமத்திற்கான அக்னியை தயார் கொண்டிருந்தார். அப்போது, கிருதாசீ என்ற தேவலோகப் பேரழகி அங்கு வந்தாள். அவளுடைய அழகில் மயங்கிய வியாசர், தான்

Read More

21,600 தரம் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்த பலனை கொடுக்கும் ஒரு அதிசய மந்திரம்!

சைவ சமயக் குரவர்கள் நால்வருள் ஒருவரான மாணிக்கவாசகரின் குருபூஜை இன்று. முதலில் குரு பூஜை என்றால் என்ன என்று தெரிந்துகொள்வோம்... 'இறையடியார்கள், தங்களின்   பிறவி நோக்கம் நிறைவடைந்து இறுதியில் இறைவனுடன் ஐக்கியமான நாளே குரு பூஜை நாளாகும்'. சிவபெருமானை பாடிய சிவனடியார்கள் பலர் இருந்தாலும் அவருக்கு மிக நெருக்கமானவர்களுள் பிரதானமானவர் மாணிக்கவாசகர். மாணிக்கவாசகரின் வாழ்வில் நடைபெற்ற நீங்கள் கேள்விப்பட்டிராத நிகழ்ச்சிகளை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருவதே இப்பதிவின் நோக்கம். இவர்

Read More

வைத்தியர்கள் மனம் குளிர்ந்தால்… HAPPY DOCTORS’ DAY!!

இன்று ஜூலை 1. தேசிய மருத்துவர்கள் தினம்.  உலகில் கடவுளுக்கு இணையாக மதிக்கப்படும் ஒரு நபர் உண்டு என்றால், அவர் மருத்துவராகத்தான் இருப்பார்கள். அவர்களைப் போற்றி பாராட்டும் விதமாக ஆண்டுதோறும் ஜூலை 1-ம் தேதி இந்தியாவில் மருத்துவர்கள் தினம் (Doctor's Day) கொண்டாடப்படுகிறது. பீகார் மாநிலம் பாட்னா அருகே உள்ல பாங்கிபோர் என்ற ஊரில் 1882, ஜூலை 1-ம் தேதி பிறந்தவர் பிதான் சந்திரா ராய் (Dr. Bidhan Chandra

Read More

அன்றும், இன்றும், என்றும், ஆண்டவன் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன தெரியுமா?

கோவிலுக்கு செல்கிறோம். இறைவனை வணங்குகிறோம். அர்ச்சனை செய்கிறோம். விலை உயர்ந்த பொருட்களை காணிக்கையாக தருகிறோம்.மாலை சூட்டுகிறோம். இன்னும் என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்கிறோம்.  இவை அனைத்தும் நமது திருப்திக்காக நாம் செய்வது. ஏற்படுத்திக்கொண்டது. ஆனால் இது எதையுமே இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பதில்லை என்பது தான் உண்மை.  அப்படியெனில் ஆண்டவன் நம்மிடம் உண்மையில் எதிர்பார்ப்பது என்ன? அன்றும், இன்றும், என்றும்... ஆண்டவன் நம்மிடம் எதிர்பார்ப்பது நமது நற்பண்புகளையே. ஆண்டவனுக்கு நீங்கள் ஏதேனும் பரிசளிக்க

Read More