Home > பிரார்த்தனை (Page 3)

“கண் திறந்திட வேண்டும், பெரிய கடவுள் காக்க வேண்டும்” – Rightmantra Prayer Club

இந்த கதை அநேகமாக அனைவருக்கும் தெரிந்த கதையாக இருக்கலாம். இருப்பினும் படியுங்கள். தற்போதைய சூழலுக்கு பொருத்தமான ஒன்று. அவன் ஒரு பக்திமான். அவனது பக்திக்கு இரங்கி கடவுள் அவன் முன் தோன்றி "என்ன வரம் வேண்டுமோ கேள் தருகிறேன்" என்றார். (சும்மா கதைக்காக வைத்துக்கொள்வோமே!) இவனோ இறைவனைவிட நமக்கு பெரிய துணை யாரிருக்கப்போகிறார்கள் என்று கருதி.... "எனக்கு ஒன்றுமே வேண்டாம். என்னோடு ஒருகணமும் பிரியாது இருந்தாயானால் அது போதும். நான் எங்கு சென்றாலும் நீ

Read More

கோர்ட், கேஸ் மற்றும் கடன் பிரச்னைகளில் தவிப்பவர்கள் கவனத்திற்கு…

நம் தளத்தின் பிரார்த்தனை கிளப் பதிவுகளை பொருத்தவரை யாரை தலைமை ஏற்கச் செய்யவேண்டும், என்னென்ன பதிவுகளை அளிக்க வேண்டும் என்று நாம் முன்கூட்டியே தீர்மானிப்பதில்லை. நம்பினால் நம்புங்கள். அது தானாக நடக்கும் ஒன்று. எங்கோ யாரோ ஒரு ஜீவனின் அபயக்குரலுக்கும் தேடுதலுக்கும் பிரார்த்தனைக்கும் நம் பதிவுகள் பதிலாக அமைவதுண்டு. இது பல முறை நடந்திருக்கிறது. மகா பெரியவா தொடர்பான பதிவுகளில் கூட இப்படித் தான். சமீபத்திய திருவாரூர் பயணத்தில் நாம் கவர்

Read More

குருவை மிஞ்சிய சிஷ்யன் – எங்கே, எப்படி? RIGHTMANTRA PRAYER CLUB

இந்துக்களின் புனித நகரான காசியிலே எண்ணற்ற மகான்கள் தோன்றியிருக்கின்றனர். அவர்களுள் ஒருவர் ஆக்ரஜி. சிறந்த விஷ்ணு பக்தரான இவர் பல நற்குணங்களை கொண்டவர். இவரது பக்தியின் தன்மையை கண்டு சாட்சாத் அந்த ஸ்ரீமன் நாராயணனே இவருக்கு அடிக்கடி காட்சி தந்து அளவளாவுவதுண்டு. அந்தளவு உத்தமர். ஒரு முறை காசியிலே தோன்றிய கடுமையான பஞ்சத்தையடுத்து மக்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது கூட மிகவும் சிரமமாயிருந்தது. இந்நிலையில் ஒரு இளம்விதவை,

Read More

ஸ்ரீரங்கம் யானையும் வழக்கறுத்தீஸ்வரரும் – வழக்குகளில் சிக்கித் தவிப்பவர்களுக்கு ஒரு அருமருந்து!

சுமார் நூறு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீரங்கம் பெரிய கோவிலுக்கு அரங்கனின் பக்தர் ஒருவர் யானையையும் பசுவையும் தானமாக வழங்கினார். கோவிலுக்கு கஜம், கோ இரண்டும் ஒரே நேரத்தில் கிடைத்ததையடுத்து ஊர் மக்களும், ஆலய ஊழியர்களும் பெருமகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் யானைக்கு அலங்காரம் செய்வித்து முறைப்படி கோவிலில் ஒப்படைக்க ஏற்பாடுகள் நடந்தது. அனைத்தும் முடிந்த நிலையில், யானைக்கு வடகலை திருமண் சாற்றுவதா (நாமம்) அல்லது தென்கலை திருமண் சாற்றுவதா என்று குழப்பம்

Read More

‘கலியுகத்தில் கடைத்தேற ஒரே வழி!’ – Rightmantra Prayer Club

பரமனை நாமங்களால் துதிக்கின்ற வழிபாடே மற்ற சாதனைகளை விட சிறந்தது என்று விஷ்ணு சஹஸ்ர நாமத்திற்கு எழுதிய பாஷ்யத்தில் ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதாள் குறிப்பிடுகிறார். "இதில் (யாகத்தில் உள்ளது போல) ஹிம்சையில்லை, (பூஜை முதலியவைகளில் உள்ளது போல) இதர திரவியங்களில் அபேட்சையில்ல; தேச-கால நியமம் இல்லை" என்று விசேஷித்து கூறுகிறார். கலியுகத்தில் கடைத்தேற ஒரே வழி - "ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே |

Read More

வேதத்திற்கு ஒரு வேங்கட நரசிம்மன்!

ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்பில் கோரிக்கை சமர்பித்து அது நிறைவேறிய அனுபவங்கள் மேலும் சில கிடைத்திருக்கின்றன. அதை ஒரு தனிப் பதிவில் அளிக்கிறோம். இதற்கிடையே பிரார்த்தனை பதிவு அளிக்கும் நாளான வெள்ளிக்கிழமை Jan 1 விடுமுறை நாள் என்பதால் ஒரு நாள் முன்கூட்டியே (அதாவது நாளை 31/12/2015 வியாழன்) பதிவை அளிக்க தீர்மானித்தோம். யாரை பிரார்த்தனைக்கு தலைமை ஏற்க கேட்டுகொள்வது என்று யோசித்தபோது, ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. பிரார்த்தனை கிளப்புக்கு தலைமை ஏற்பவர்களை பொருத்தவரை அந்தந்த

Read More

மகான்களை பற்றிக்கொள்வதால் நமக்கு என்ன நன்மை ? Rightmantra Prayer Club

ஒரு ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான். அளவில்லா செல்வம் இருந்தாலும் அவனிடத்தே வினயம் (அடக்கம்) சிறிதும் இல்லை. ஞானிகளையும் மகான்களையும் தூஷனை செய்து வந்தான். "மகான்களை பற்றிக்கொள்வதால் நமக்கு என்ன நன்மை ஏற்பட்டுவிடப் போகிறது? கடவுளுக்கும் நமக்கும் இடையே தரகர்கள் போல இவர்கள் எதற்கு? என் தெய்வத்திடம் வேண்டியதை நானே பெற்றுக்கொள்வேன்" என்பதே அவனது வாதம். அந்த ஊருக்கு ஒரு மிகப் பெரிய சாது ஒருவர் வந்தார். அந்த செல்வந்தனிடம் இருந்த அகம்பாவத்தை

Read More

மாமழை போதும்… கருணை மழை வேண்டும் கந்தா! Rightmantra Prayer Club

1964 ம் வருட துவக்கம். ஸ்ரீமடம் சார்பாக நடைபெறும் தர்மகாரியங்கள் மற்றும் அன்னதானம் உள்ளிட்டவைகளுக்கு நிறைய பேர் அரிசி மூட்டை அனுப்பி வந்தார்கள். அப்படி  அளிப்பவர்களை மூட்டைகளை காஞ்சிக்கு அனுப்பாமல் ராமேஸ்வரத்திலுள்ள ஸ்ரீமடத்துக்கு அனுப்பும்படி பெரியவா கட்டளையிட்டு வந்தார்கள். மகா பெரியவாவின் செயல் பலருக்கு விசித்திரமாக இருந்தது. குறிப்பாக ஸ்ரீ மடத்தில் இருந்தவர்களுக்கு. ஒரு கட்டத்தில் ராமேஸ்வரத்தில் அரிசி மூட்டைகளை வைக்க இடமில்லாமல் போனது. எதற்காக இப்படி அங்கே ஏகமாக ஸ்டாக்

Read More

‘அறுமுகனை துதிப்பதால் கிடைக்கக்கூடிய ஆறு பேறுகள்’ – Rightmantra Prayer Club

முருகனின் திருவவதார நிகழ்வு படிக்க படிக்க ஆனந்தம் அளிப்பது. அதி அற்புதமானது. ஆறு விதமான பேறுகளை தரவல்லது. கந்தசஷ்டி துவங்கி நடைபெற்று வருவதையொட்டி கார்த்திகேயனின் திருவவதாரத்தை இந்த பதிவில் பார்ப்போம்! சிவ-பார்வதி கல்யாணம் நடந்து பல நாட்களாகி விட்டன. குமரன் அவதாரம் நிகழவில்லை. சூரபன்மனின் கொடுமை தாங்கமுடியாமல் சென்றுகொண்டிருந்தது. தேவர்கள் சிவபெருமானின் பாதம் பணிந்தனர். தேவர்களின் பால் இரக்கங்கொண்டு சிவபெருமான்,"தேவர்களே! இனியும் துன்புறாதீர்கள்; புதல்வனைத் தருவோம்" என்று அருளிச் செய்து, ஸத்யோஜாதம், வாமதேவம், தத்புருஷம்,

Read More

‘விதியே உனக்கு ஒரு வேண்டுகோள்!’ – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப் (Rightmantra Prayer Club)

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடிய திருமுறை பாடல்களின் மகிமையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் சாலை வசதிகள் எல்லாம் இல்லாத காலகட்டங்களில் தமிழகம் முழுதும் இவர்கள் கால்நடையாகவே பயணம் செய்து, பல திருத்தலங்களை தரிசித்து, நமக்கு 'திருமுறை' என்னும் இந்த அரிய பொக்கிஷத்தை வழங்கியிருக்கிறார்கள். இவர்கள் பதிகம் பாடி புரியாத அதிசயமே இல்லை எனலாம். இந்த பதிவில் சுந்தரர் புரிந்த அதிசயம் ஒன்றை பார்ப்போம். விதியையே புரட்டிப் போட்ட

Read More

முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே – Rightmantra Prayer Club

அவர் ஒரு அரசு உயரதிகாரி.  கடவுள் நம்பிக்கையெல்லாம் அவருக்கு கிடையாது. கோவிலுக்கெல்லாம் செல்வது கிடையாது. அப்படியே சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக சென்றாலும், உள்ளே செல்லமாட்டார். வெளியே உட்கார்ந்துவிடுவார் அல்லது பொழுதுபோக்க கோவிலை சுற்றிப் பார்ப்பார். அவ்வளவு தான். நண்பர் ஒருவர் மத்தூர் மகிஷாஷூர மர்த்தனி ஆலயத்திற்கு சென்றதையடுத்து அவருடன் செல்லவேண்டிய நிர்பந்தம். நண்பர் அம்பாளை தரிசித்து அர்ச்சனை முதலியவற்றை செய்து பிரசாதத்தை பெற்றுக்கொண்டு வெளியே வந்தபோது, கடவுள் நம்பிக்கையற்ற இவரது நண்பர் ஒருவர்

Read More

நல்லருள் பொழியும் நம்பிக்கை கோயில் – Rightmantra Prayer Club

திருவொற்றியூருக்கு சுந்தரர் வந்தபோது சங்கிலி நாச்சியார் என்ற பெண்ணை சந்திக்க நேர்ந்தது. கண்டதும் காதல் கொண்டார். சங்கிலி நாச்சியார் அழகில் மட்டுமல்ல பக்தியிலும் சிறந்தவர். சிவனடியார் ஒருவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று வைராக்கியமாக இருந்தவள். கோவிலில் தியாகராஜருக்கும் வடிவுடையம்மனுக்கு பூ தொடுத்துக் கொடுத்து சிவத்தொண்டு புரிந்து வந்தார். பூர்வ ஜென்ம கணக்குப்படி சுந்தரர் - சங்கிலி இருவருக்கும் காதல் மலர்ந்து திருமணம் நோக்கி அது நகர்ந்தது. "ஏற்கனவே உங்களுக்கு மனைவி இருக்கிறாள்.

Read More

திருநீற்றின் பெருமையை காக்க உயிர்த் தியாகம் செய்த ஏனாதி நாயனார் – Rightmantra Prayer Club

கும்பகோணத்திற்கு தென்கிழக்கில் நான்கு மைல் தொலைவில் அமைந்துள்ள ஏனநல்லூர் என்ற ஊரில் பிறந்தவர் ஏனாதிநாத நாயனார். அந்த நாட்களில், சேனாதிபதிக்கு ஏனாதி என்ற பேர் இருந்தது. அரசர்கள் சேனாதிபதிக்கு ஏனாதிப்பட்டம் என்னும் ஓர் ஆபரணம் நெற்றியில் அணியத் தருவார்கள். அரசர்களுக் கும், அவருடைய படைவீரர்களுக்கும் வாள் பயிற்சி கற்றுதரும் வீரராக வாழ்ந்தவர்தான் ஏனாதிநாத நாயனார். மிகச்சிறப்பான பயிற்சி யின் மூலமாக முதன்மை பெற்று, நல்ல வரு மானமும் பெற்று வாழ்ந்தார். உயர்ந்த

Read More

நல்லோர் தரிசனம் பாப விமோசனம், சிவ கடாக்ஷம்! Righmantra Prayer Club

தில்லையில் 'பெற்றான் சாம்பான்' என்னும் விறகு வெட்டி ஒருவர் இருந்தார். விறகு வெட்டியாக பிறந்தாலும் முற்பிறவியில் சிவத்தொண்டு  செய்ததால், இந்த பிறவியிலும் சிவத்தொண்டு செய்யும் பாக்கியம் அவரையும் அறியாமல் அவருக்கு கிடைத்தது. எப்படி தெரியுமா? சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள மடப்பள்ளிக்கு விறகு வெட்டி தரும் வேலை மூலம். சிவாலயத்தின் மடப்பள்ளி என்பதால் அதை ஒரு வயிற்றுப் பிழைப்பு என்று கருதாமல் மிகவும் கண்ணும் கருத்துமாக ஒரு வேள்வியாக கருதி அந்த

Read More