Home > மகா பெரியவா (Page 3)

அலகிலா விளையாட்டுடையான் ஒரு தாயுடன் விளையாடிய விளையாட்டு!

அலகிலா விளையாட்டுடையானின் மற்றுமொரு விளையாட்டு இது. நாம் கொடுக்க வேண்டிய அறிமுக உரையை கட்டுரையாளரே கொடுத்துவிட்டபடியால் நேரடியாகவே பதிவை பதிகிறோம். உங்களில் சிலர் இதை ஏற்கனவே படித்திருக்கக்கூடும். பரவாயில்லை. மறுபடியும் படியுங்கள். படித்துவிட்டு கண்களில் நீர் துளிர்க்காதவர்கள் யாரேனும் இருந்தால் நம்மை தொடர்புகொள்ளவும். நன்றி! - 'ரைட்மந்த்ரா' சுந்தர், ஆசியர், Rightmantra.com உனக்கு வேணும்னா அவரைத் தரிசனம் பண்ணிக்கோ... எதுக்காக என்னை இழுக்கறே? மஹா பெரியவா என்கிற வார்த்தையே பிராண வாயு. மூச்சுக்காற்று. சகல

Read More

மகா பெரியவாவும் மத்தூர் மஹிஷாசுரமர்த்தனி அம்மனும் !

இது நமது தளத்தின் 1001 வது பதிவு. நமது தளம் துவக்கி விரைவில் மூன்று ஆண்டுகள் நிறைவடையப் போகிறது. சரியாக 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி அன்று துவக்கப்பட்ட நம் தளம் இன்று 34 மாதங்களில் 1001 பதிவை எட்டியுள்ளது. இந்த ஒன்மேன் ஷோவிற்கு உறுதுணையாக இருந்த நம் வாசகர்களுக்கும், நண்பர்களுக்கும் என்றும் நம்மை வழிநடத்தும் கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் எளிமையின் திருவுருவம் மகா பெரியவா அவர்களுக்கும்,

Read More

மகா பெரியவா யார்? பரமேஸ்வரனா, பரந்தாமனா?? – குரு தரிசனம் (43)

மஹா பெரியவாள் ஸ்ரீ பரமேஸ்வரனின் அம்சம் என்று கூறுவதுண்டு. ஆனால் அவர் பரந்தாமனின் அம்சம் என்பதே நமது கருத்து. அதை மெய்பிபப்து போல சில சம்பங்களை இந்த வார குரு தரிசனத்தில் பார்ப்போம். இறுதியில் இது தொடர்பாக எழக்கூடிய சந்தேகங்களுக்கும் நமது சிற்றறிவுக்கு எட்டிய விளக்கங்களை கொடுத்துள்ளோம். நன்றி. "பெருமாளுக்கு இன்னைக்கு நைவேத்தியம் ஏன் செய்யலே?" மகா பெரியவாள் தேனம்பக்கதில் தங்கியிருந்தார்கள். ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவில் சீமா பட்டச்சாரியரை அழைத்து வரும்படி

Read More

ஞானசூரியனும் தியாக சூரியனும் சந்தித்தபோது….! காமராஜர் B’DAY SPL 1

நமக்கு நீண்டகாலமாகவே இது பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்கிற ஆர்வம் இருந்து வந்தது. பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் மகா பெரியவாவை எப்பொழுதாவது சந்தித்திருக்கிறாரா? அவரைப் பற்றி இவரது அபிப்ராயம் என்ன? என்பது தான் அது. குருக்கிருபையால் சமீபத்தில் அதற்கான பதில் கிடைத்தது. அழுத்தந்திருத்தமாகவே. கல்வெட்டில் பொறித்ததை போல...!! இன்று ஜூலை 15 பெருந்தலைவர்  காமராஜர் அவர்களின் பிறந்த நாள். அதையொட்டி இந்த சிறப்பு பதிவு அளிக்கப்படுகிறது. "எப்போவோ வந்திருக்கணும். இப்போ தான் சந்தர்ப்பம் கிடைச்சது" சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு

Read More

“நடமாடும் தெய்வத்துடன் சில நிமிடங்கள்!” – மஹா பெரியவரை சந்தித்த கண்ணதாசன்!

இன்று ஜூன் 24 கவியரசர் கண்ணதாசன் பிறந்தநாள். தமிழ்த் திரையுலகின் மறக்க முடியாத பாடல்களை படைத்த கவிஞன் கண்ணதாசன்.திரைப்படக் கவிஞராக புகழ்பெற்ற கண்ணதாசன் பல கருத்துள்ள பாடல்களை இயற்றியிருக்கிறார். கம்ப ராமாயணத்திலும் பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பாரதியாரை மானசீகக் குருவாகக் கொண்டவர். பகவத் கீதைக்கு உரை எழுதியுள்ளதோடு அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதிக்கு விளக்கவுரையும் எழுதியுள்ளார். நாத்திகம் பேசிக்கொண்டிருந்த கண்ணதாசனை ஆத்திகத்தின் பக்கம் திருப்பிய பெருமை காஞ்சி மஹா பெரியவருக்கும்

Read More

‘சில சமயம் பகவான் மீதே கோபம் வருகிறதே?’ – தெய்வத்திடம் சில கேள்விகள்! (Part II)

சராசரி வாழ்வில் நமக்கு தோன்றும் கேள்விகளுக்கு மஹா பெரியவா அளித்த பதில்களைப் பற்றிய பதிவை சென்ற குரு வாரம் வெளியிட்டது நினைவிருக்கலாம். நம் வாசகர்கள் மத்தியிலும் மஹா ஸ்வாமிகளின் பக்தர்கள் மத்தியிலும் அந்த பதிவு அமோக வரவேற்பை பெற்றதோடல்லாமல், அந்த பதிவை தொடரவேண்டும் என்றும் பலர் நம்மிடம் கேட்டுக்கொண்டார்கள். வெகு ஜனக் கோரிக்கையையடுத்து அந்த பதிவின் இரண்டாம் பாகமாக மேலும் சுமார் 10 கேள்விகளுக்கு மஹா ஸ்வாமிகளின் பதில்கள் தரப்பட்டுள்ளது. 'தெய்வத்தின்

Read More

“தினமும் நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டியது எதை ஸ்வாமி?” தெய்வத்திடம் சில கேள்விகள்!

இன்றைய அவசர யுகத்தில் எத்தனையோ கேள்விகள் நம் மனதில் வட்டமடிக்கின்றன. அவற்றுக்குரிய சரியான பதிலை தரும் மெய்ஞானிகள் தான் யாருமில்லை என்கிற அபிப்ராயம் பலருக்கு இருக்கிறது. ஆனால், உங்கள் மனதில் எழக்கூடிய பல்வேறு கேள்விகளுக்கு அன்றே காஞ்சி மகான் பதிலளித்திருக்கிறார் தெரியுமா? சற்று அழுத்தமாகவே!! ஆம்... தன் தெய்வத்தின் குரலில். பாமரர்களின் மனதில் எழக்கூடிய சந்தேகங்களை வினாக்களாக அடுக்கி வைத்துக்கொண்டு 'தெய்வத்தின் குரல்' என்னும் அந்த பொக்கிஷத்தில் அவர் கூறியிருப்பவற்றை

Read More

தர்மம் தழைக்க தோன்றிய தயாபரன் – மகா பெரியவா ஜயந்தி Spl & Excl.Pics!

இன்று வைகாசி அனுஷம். மகா பெரியவா ஜயந்தி. ஏதாவது வித்தியாசமான பதிவாக உங்களுக்கு அளிக்கவேண்டும் என்றெண்ணியபோது முன்பு எப்போதோ தயார் செய்து வைத்த இந்த கட்டுரை கண்ணில்பட்டது. அற்புதமான பதிவு. அபாரமான நடை. பதிவின் ஒரு வார்த்தையை கூட மிஸ் செய்யாதீர்கள். அத்தனையும் விலைமதிப்பற்ற முத்துக்கள். மகா பெரியவாவின் பிறப்பு, அவரது அவதார நோக்கம், அவரது மகிமைகள், அவரது சக்தி, அவர் நம்மிடம் வலியுறுத்துவது என்ன... இப்படி எல்லாவற்றையும் அலசி ஆராயந்திருக்கிறார்

Read More

மகா பெரியவாளின் ஜயந்தி மஹோத்சவம் @ அயோத்யா மண்டபம் – ஒரு நேரடி ரிப்போர்ட்

கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக விளங்கி தம்மை நாடி வருவோரின் பாபங்களை தனது அருட்பார்வையினால் பொசுக்கி, இகபர சுகங்களை அவர்களுக்கு அளித்து வரும் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாளின் 122 வது மஹா அனுஷ ஜெயந்தி மஹோத்சவம் காஞ்சி ஸ்ரீ மடம், விழுப்புரத்தில் உள்ள அவரது அவதார தலம், கோவிந்தபுரத்தில் உள்ள அவரது தபோவனம், மேற்கு மாம்பலத்தில் உள்ள ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி

Read More

எது நிஜமான பக்தி?

சமீபத்திய 'சக்தி விகடன்' இதழில் படித்த கதை இது. சிறிய கதை தான். ஆனால் வலுவான மெசேஜ். அதுவும் குருவாரத்தில் பகிர்வதற்கு ஏற்றாற்போல் குருவின் உபதேசத்துடன் சேர்ந்து இருந்ததால் இங்கே பகிர்கிறோம். பிளஸ்டூ தேர்வுக் காலம் துவங்கி முடிவுகள் வரும் வரையிலும் பக்திப் பழமாகத் திகழ்ந்தான் பக்கத்து வீட்டு பார்த்தசாரதி. விடியற்காலையில் தெருமுக்கு பிள்ளையாருக்கு 108 தோப்புக்கரணம், வீட்டில் பூஜையறையில் உட்கார்ந்து அனுமனிடம் பிரார்த்தனை, மாலையில் சிவாலயத்தில் நவகிரக தரிசனம்... மற்றபடி

Read More

“கேட்டால் கொடுக்கும் தெய்வம். கேளாமலே கொடுப்பவர் குரு!” – குரு தரிசனம் (37)

மகா பெரியவா ஸ்தூல சரீரத்தோடு இருந்தபோதும் சரி... தற்போது அதிஷ்டானத்தில் சூட்சும சரீரத்தோடு இருக்கும் போதும் சரி... ஸ்ரீமடம் ஒரு கற்பக விருட்சமாக திகழ்ந்து, வேண்டுவோருக்கு வேண்டியதை கொடுத்து வந்துள்ளது. பிள்ளையின் பசியறிந்து பாலூட்டும் அன்னையை போல, பெரியவா பல சமயங்களில் தன்னை நாடி வந்தவர்கள் கேட்காமலே அவர்களின் உள்ளக் கிடைக்கையை அறிந்து அவர்களுக்கு உதவியிருக்கிறார். அதுவும் ஸ்ரீமடத்தின் ஊழியர்கள் மற்றும் அணுக்கத் தொண்டர்கள் என்றால் அது பற்றி சொல்லவேண்டுமா என்ன? மகா

Read More

தாயுமானவளை அனுப்பிய தாயுமானவன் – குரு தரிசனம் (36)

மகா பெரியவா மடத்து ஊழியர்களையும், தன் அணுக்கத் தொண்டர்ளையும் எந்தளவு தாய்ப் பறவை தனது குஞ்சுகளை காப்பது போல காத்திருக்கிறார் என்பதை அறியும்போது மெய்சிலிர்க்கிறது. அது பற்றி பல்வேறு சம்பவங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். படித்திருப்பீர்கள். "TAKE CARE OF YOUR EMPLOYEES. THEY WILL TAKE CARE OF YOUR  PROSPECTS" என்று ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு. அது எத்தனை ஆழ்ந்த பொருள் உடையது தெரியுமா? மகா பெரியவாவை பொறுத்தவரை மடத்து

Read More

மடத்துக்கு சென்றால் மகா பெரியவா கேட்கும் முதல் கேள்வி என்ன தெரியுமா? – குரு தரிசனம் (35)

மும்பையிலிருந்து எஸ்.சந்திரசேகரன் என்கிற வாசகர் நம்மை சென்ற மாத மத்தியில் தொடர்பு கொண்டார். கூகுளில் பெரியவா தொடர்பாக ஏதோ தேடலில் இருந்தபோது  நம் தளத்தை பார்க்க நேர்ந்ததாகவும், அது முதல் தவறாமல் படித்துவருவதாகவும் பதிவுகள் ஒவ்வொன்றும் அருமை என்றும் கூறினார். அவருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டோம். மேலும் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் இருக்கும் துயர் ஒன்றை பற்றி கூறி நமது பிரார்த்தனை கிளப்பில் அதை வெளியிட்டு பிரார்த்தனை செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டார். "உங்கள்

Read More

நெற்றியில் குங்குமம்; நெஞ்சில் உன் திருநாமம்! – குரு தரிசனம் (34)

காஞ்சி ஸ்ரீ மடத்தில் கோ பூஜை, கஜ பூஜை உள்ளிட்ட மகா பெரியவா செய்த பல்வேறு பூஜைகளில் உதவியாக இருந்தவரும், காஞ்சி காமாக்ஷி அம்மன் கோவிலில் இருபதாண்டுகளுக்கும் மேல் பூஜை செய்தவருமான பெரியவர் திரு.டி.ஆர்.சந்திரமௌலி சாஸ்திரிகளுடனான நமது சந்திப்பு பற்றிய குறுந்தொடர் இது. 1923 ஆண்டு, கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவில் அருகே உள்ள கூகூரில் பிறந்தார் திரு.டி.ஆர்.சந்திரமௌலி சாஸ்திரிகள். இந்த ஊரில் எழுந்தருளியிருக்கும் சுவாமியின் பெயர் ஆம்பரவனேஸ்வரர். அம்பாள்

Read More