Home > 2016 > March (Page 2)

ஸ்ரீராகவேந்திரர் குடிகொண்டுள்ள மந்த்ராலய மண்ணின் மகிமை!

நினைத்த மாத்திரத்தில் சில தலங்களுக்கு செல்ல முடியாது. திருவருள் இருந்தால் தான் செல்லமுடியும். ஆனால், சில தலங்களுக்கு செல்ல திருவருள் மட்டுமல்ல குருவருளும் வேண்டும். அதில் மந்த்ராலயமும் ஒன்று. மந்த்ராலயம் சாதாரண பூமி அல்ல. கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக விளங்கி இன்றும் தம்மை நாடி வருவோருக்கு தனது புண்ணியப் பலன்களை வாரி வாரி வழங்கி வரும் மகான் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் ஜீவ பிருந்தாவனத்தில் உள்ள பூமி.

Read More

கடனில் சிக்கித் தவிப்போரை மீட்கும் திருச்சேறை ஸ்ரீ ரிண விமோசன லிங்கேஸ்வரர்!

நோயில்லா உடலும், கடனில்லா வாழ்க்கையுமே நிம்மதி என்கிற வீட்டின் திறவுகோல். ஆனால் இன்றைய காலகட்டத்தில் இரண்டுமே அத்தனை சுலபமில்லை. நோயில்லா வாழ்வு கூட லட்சத்தில் சிலருக்கு சாத்தியம். ஆனால் கடனில்லா வாழ்வு என்பது கோடியில் ஒருவருக்கு கூட சாத்தியமில்லை என்னும் அளவிற்கு கடன்கள் நம்மை ஆட்டிப்படைக்கின்றன. காலையில் கடனுடன் எழுந்திருப்பதைவிட இரவு பட்டினியோடு படுக்கச் செல்வதே மேல் என்று கூறுவார்கள். கடனில்லா வாழ்வே வாழ்வு. இன்றைக்கு வீடு வாங்குவது முதல் சாதாரண டூ-வீலர்

Read More

முந்தி நின்ற வினைகளவை போகச் சிந்தி நெஞ்சே – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

நமது தளத்தின் மிக முக்கியமான ஒரு அம்சம் வாராந்திர பிரார்த்தனை கிளப். கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேல் நடந்து வரும் இந்த பிரார்த்தனை கிளப்பில் பல வாசகர்களின் பிரார்த்தனைகள் இடம்பெற்றுள்ளன. பல அருளாளர்கள் தலைமை ஏற்று பிரார்த்தனை செய்துவருகிறார்கள். அவை நிறைவேறிய அனுபவங்களை ஏற்கனவே நாம் பார்த்திருக்கிறோம். இதோ தற்போது மேலும் சில வெற்றிச் செய்திகள் கிடைத்திருக்கின்றன. பிரார்த்தனை கிளப்பை பொறுத்தவரை பெரும்பாலும், பிரார்த்தனையை சமர்பிக்க மட்டுமே தளத்திற்கு வருபவர்கள் பலர் உண்டு.

Read More

சொல்லுக்குச் செய்கை பொன்னாகும் வரும் துன்பத்தில் இன்பம் பட்டாகும்!

சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்னர் 'சுந்தரகாண்டம்' தொடர்பான பதிவுகள் நம் தளத்தில் பரபரப்பாக இருந்த நேரம். ஒரு வாசகர் நம்மை தொடர்புகொண்டு 'சுந்தரகாண்டம்' நூலை தனக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். சொன்னபடி அனுப்பி வைத்தோம். அடுத்த வாரம் நமக்கு அலைபேசியில் ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். மிக முக்கியமான ஒரு விஷயம் நம்மிடம் பேச விரும்புவதாகவும் எப்போது தொடர்புகொள்ளலாம் என்றும் கேட்டார். தேநீர் இடைவேளையில் கூப்பிடும்படி தகவல் அனுப்பியிருந்தோம். சொன்னபடி அழைத்தவர் தான் ரயில்வேயிலிருந்து ஒய்வுபெற்றுவிட்டதாகவும்,

Read More

கோவிந்த தீட்சிதர் – மன்னராட்சியிலும் மக்களுக்கான ஆட்சியை தந்த மகான்!

அக்காலங்களில் குடிமக்களை பரிபாலனம் செய்யும் ராஜாவுக்கு முக்கிய விஷயங்களில் ஆலோசனை கூற 'ராஜகுரு' என்று ஒருவர் உண்டு. சரித்திரத்தில் இவர்களுக்கு முக்கிய பங்குண்டு. பல சாம்ராஜ்ஜியங்கள் சரிந்ததற்க்கும் நிமிர்ந்ததற்கும் இவர்களே முக்கிய காரணம். அந்தளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொறுப்பு இந்த 'ராஜகுரு' என்னும் பதவி. தஞ்சையை ஆண்ட சேவப்ப நாயக், அச்சுதப்ப நாயக், ரகுநாத நாயக் ஆகிய மூன்று நாயக்க மன்னர்களுக்கு ராஜகுருவாகத் திகழ்ந்தவர் கோவிந்த தீட்சிதர் (1515-1634) என்பவர்.

Read More

என் கடன் பணி செய்து கிடப்பதே!

நமது திருக்கடம்பூர் சிவராத்திரி சிறப்பு தரிசனம் மிக மிக சிறப்பாக நடந்தேறியது. எந்த வித திட்டமிடலும் இல்லாமல் அதே சமயம் அருமையாக அனைத்தும் நடந்து முடிந்தது. நினைத்துப் பார்த்தால் கனவு போல இருக்கிறது. இந்த கோவிலுக்கு செல்லவேண்டும் இங்கு சில மணிநேரங்களையாவது கழிக்கவேண்டும் என்கிற ஆசை பல நாட்களாக இருந்து வந்தது. இருப்பினும் முறையான தொடர்பு கிடைக்கவில்லை. மேலும் இந்த ஆலயத்தின் புகைப்படங்களை பார்த்தவுடன் அழகில் சொக்கிப் போய் இந்த ஆலயம்

Read More

ஒதுக்கிய உலகத்தைத் தன் திறமையால் ஜெயித்துக் காட்டிய நர்த்தகி நடராஜ் – மகளிர் தின சிறப்பு பதிவு!

நர்த்தகி நடராஜ். இதுவரை நாம் சந்தித்த சாதனையாளர்களுள் மிக முக்கியமானவர். தனது சாதனைகளால் நம்மை பிரமிக்க வைத்தவர். மிகப் பெரிய நாட்டிய தாரகை. அரவாணிகள் என்று அழைக்கப்பட்டவர்களுக்கு 'திருநங்கை' என்று பெயர் சூட்டியது இவர் தான்.  வைஜயந்தி மாலா உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு நாட்டியம் கற்றுத் தந்த கிட்டப்பா பிள்ளையிடம் நாட்டியம் கற்றவர். இவரது கதையையும் கடந்து வந்த பாதையையும் கேட்க கேட்க பிரமிப்பும் வியப்பும் தான் மேலிட்டது. மகளிர் தினத்துக்கு

Read More

12 ஜோதிர்லிங்கங்கள் தரிசனம் – ஒரு நேரடி அனுபவம் – மகா சிவராத்திரி சிறப்பு பதிவு

சென்னை சைதாப்பேட்டையில் பிரம்மா குமாரிகளின் 12 ஜோதிர்லிங்க தரிசனக் காட்சி நடைபெற்று வருகிறது. பாரதத்தின் 12 ஜோதிர்லிங்க சிவத்தலங்களையும் ஒரே இடத்தில் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கிறது. அதுவும் அந்தந்த தலங்களின் லிங்கங்களை அதே உருவில் அங்கு சென்று நேரிலேயே தரிசனம் செய்வது போன்ற ஓர் அற்புத உணர்வு கிடைக்கிறது. இது சிவராத்திரியை முன்னிட்டு சென்னை மக்களுக்கு கிடைத்துள்ள வரப்பிரசாதமாகும். இந்த கண்காட்சி பற்றி கேள்விப்பட்டவுடன் நமது தளத்தில் சிவராத்திரி சிறப்பு பதிவாக

Read More

சிவராத்திரியன்று பிரசாதத்தை திருடிக்கொண்டு ஓடிய திருடனுக்கு என்ன ஆனது? – சிவராத்திரி SPL 5

சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிக்க பலர் விரும்பினாலும் அதன் கடுமையை நினைத்து அஞ்சுகிறார்கள். நாம் ஏற்கனவே பல முறை பல பதிவுகளில் சொல்லியிருக்கிறோம், சிவராத்திரி அன்று உணவு எதுவும் உட்கொள்ளாமல் வயிற்றை காயப்போட்டு கண் விழித்தாலே அதற்கு பலன் உண்டு என்று. அது எத்தனை உண்மை என்பதை வலியுறுத்தும் கீழ்கண்ட கதையை படியுங்கள்... சிவராத்திரி அன்று கண்விழித்து, தூக்கம் துறந்த திருடனின் கதை - சிவராத்திரி விரத மகிமை! அவந்தி மாநகரில் சிவபக்தியும் ஆச்சாரமும் ஞானமும்

Read More

வரும் சிவராத்திரி 3 கோடி விரதத்திற்கு சமமான உத்தம சிவராத்திரி – முழு தகவல்கள் – சிவராத்திரி SPL 4

சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி என்கிற பதிவை முந்தைய ஆண்டுகளிலேயே நாம் அளித்திருந்தாலும் புதிதாக நம் தளத்திற்கு வரும் வாசகர்களுக்கு தேதி மற்றும் திதி குறித்த குழப்பம் ஏற்படுகிறது. எனவே சிற்சில திருத்தங்களுடன் மீண்டும் ஒரு முழுமையான பதிவை அளிக்க விரும்பி இதை பதிவு செய்கிறோம். மேலும் இந்த ஆண்டு மகா சிவராத்திரிக்கு 'உத்தம சிவராத்திரி' என்கிற ஒரு பெருமை இருக்கிறது. அதையும் பதிவில் விளக்கியிருக்கிறோம். சிவராத்திரி விரதம் குறித்த சிந்தனை உங்களுக்கு வந்தாலே நீங்கள்

Read More

இனி கும்பகோணம் மகாமகம் செல்பவர்கள் கவனத்திற்கு…

இந்த ஆண்டு மகாமகம் நமக்கு மறக்க முடியாத பசுமையான பல நினைவுகளை தந்துள்ளது. முதல் முறை நண்பர்களுடன் சென்று (Feb 19) நீராடியது. அடுத்த முறை (March 1) பெற்றோருடன். மாசி மாதம் முழுதும் (மார்ச் 13 வரை) மகாமக புனித நீராடலாம் என்பதால் இனி மகாமகம் செல்பவர்கள் கவனத்திற்கு விஷயங்களை சொல்ல கடமைபட்டிருக்கிறோம். * முறைப்படி மகாமகம் நீராடவேண்டும் என்றால் இரண்டு நாட்கள் அங்கு இருக்கவேண்டும். மகாமகக் குளம் என்பது

Read More

‘நின்றும் இருந்தும் கிடந்தும்’ செய்த ஒரு சிவபக்தி!

தமிழ்த் தாத்தா உ.வே.சா. அவர்களின் பிறந்த நாளன்று (பிப்ரவரி 19) கும்பகோணம் - தஞ்சை மார்க்கத்தில் பாபநாசம் அருகே உள்ள அவரது சொந்த ஊரான உத்தமதானபுரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்திற்கு சென்று நாமும் நண்பர் சிட்டியும் அவருக்கு அஞ்சலி செலுத்தியது நினைவிருக்கலாம். 19 காலை கும்பகோணம் சென்றதும் குளித்து முடித்து தயாராகி பாபநாசம் புறப்பட்டோம். பாபநாசம் கும்பகோணம் - தஞ்சை சாலையில் 12 கி.மீ தொலைவில் உள்ளது. பாபநாசத்தில் இறங்கியதும் கடைவீதியில்

Read More

காகம் சிவகணங்களில் ஒன்றான கதை – அவிநாசி அற்புதங்கள் – சிவராத்திரி SPL 3

இறைவன் மீது பக்தி செலுத்துவதில் மனிதர்களை விட சில சமயம் விலங்குகள் ஒரு படி மன்னிக்க பல படிகள் மேலே நிற்பதுண்டு. சில நேரங்களில் அறிந்தும் சில நேரங்களில் அறியாமலும் அவை பக்தி செலுத்தும். அதன் பலனாக நாம் ஆண்டுக்கணக்கில் தவமிருந்தாலும் பெற அரிதான சிவகடாக்ஷத்தை அவை எளிதாக பெற்றுவிடும். சிவ வழிபாட்டை பொறுத்தவரை அறிந்து செய்தாலோ அல்லது அறியாமல் செய்தாலோ அணுவளவு இருந்தால் கூட அதற்கு மலையளவு பலன் உண்டு. சிவ

Read More

வாசகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!

கடந்த 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 'விநாயகர் சதுர்த்தி' அன்று நம் தளம் துவக்கப்பட்டு கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களுக்கும் மேல் ஆகிறது. நம் நேரத்தை ரைட்மந்த்ராவுக்கு என்றே பிரதானமாக ஒதுக்கவேண்டி, நம் பணியை துறந்து தளத்தை முழுமையாக நடத்த துவங்கிய பின்னர் கடந்த ஓராண்டாக வாசகர்கள் அளிக்கும் பொருளுதவி (Voluntary Subscription) மூலம் தான் இந்த தளம் நடைபெற்று வருகிறது. இதுவரை ஆன்மீகம், சுயமுன்னேற்றம், ஆலய தரிசனம் உள்ளிட்ட

Read More