Home > 2015 > December (Page 2)

பெரியவா மீட்ட பரமேஸ்வரனும் பரந்தாமனும் – சிலிர்க்க வைக்கும் நிகழ்வு!

சுமார் முப்பது முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நாள் மடத்தில் பெரியவா அணுக்கத் தொண்டர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார். "இங்கே ஏகாம்பரேஸ்வரர் கோவில் பக்கத்துல ஒரு தெருவுல ஒரு சிவன் கோவிலும் பெருமாள் கோவிலும் இருக்குன்னு மடத்து குறிப்புக்கள் சொல்றது. உங்க யாருக்காச்சும் அது பத்தி தெரியுமா??" சிஷ்யர்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டார்கள். "எங்களுக்கு தெரிஞ்சி அப்படி எதுவும் இல்லியே பெரியவா" பெரியவா தீர்க்கமாக யோசித்தார். "மடத்து குறிப்புக்கள் தப்பா இருக்காதே..." "நேர்லேயே போய் பார்த்துடுவோமே..." என்றவர் உடனே பரிவாரங்களுடன் மடத்து

Read More

குன்றத்தூர் திருமுறை விநாயகரும் அவரது சிறப்பும்!

தீபாவளி சிறப்பு பதிவுகளில் இன்னும் ஒன்றே ஒன்று பாக்கியிருக்கிறது. குன்றத்தூரில் திருமுறை விநாயகருக்கு நடந்த அபிஷேகம் குறித்த பதிவு தான் அது. அந்த பதிவை அளிக்கும் முன்னர், திருமுறை விநாயகரைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும். அது என்ன திருமுறை விநாயகர்? இந்த கோவில் எங்கேயுள்ளது? யார் கட்டியது ? நமது பன்னிரு திருமுறைகளில் மிக மிக பழமையான அச்சுப் பிரதிகள் (* சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் அச்சில் ஏறிய முதல் பிரதிகள்

Read More

சேவை இங்கே சுலபமல்ல!

ஒவ்வொரு ஆண்டு பருவ மழையின் போது சென்னை சற்று திக்கி திணறினாலும் முன்னெப்போதும் இல்லாத அளவு இந்த முறை தான் கதி கலங்கிப் போனது. அதற்குரிய காரணங்களுக்கு சென்றால் அரசியலோடு கூடிய பதிவை அளிக்கவேண்டியிருக்கும். எனவே நாம் அதில் போகவேண்டாம். இந்த மழை வெள்ள பாதிப்பை இரண்டு கட்டங்களாக பிரிக்கலாம். நவம்பர் துவக்கத்தில் பெய்த மழை & டிசம்பர் ஒன்றாம் தேதி பெய்த மழை. முதல் கட்டத்தில் கொட்டித் தீர்த்த மழையால் முடிச்சூர், தாம்பரம்,

Read More

மார்கழியில் என்ன செய்யலாம் ? என்ன செய்யக்கூடாது ?

நாளை மறுநாள் அதாவது 17/12/2015 வியாழக்கிழமை மார்கழி மாதம் துவங்குகிறது. மாதங்களில் தனிச்சிறப்பு மிக்கது மார்கழி. மார்கழி மாதம் திருக்கோவில் சென்று சுவாமியை தரிசனம் செய்தால் அந்த ஆண்டு முழுதும் தரிசனம் செய்ததற்கான பலன் கிடைத்துவிடும். காரணம் நமக்கு ஒருவருடம் தேவர்களுக்கு ஒரு நாள் என்கிற கணக்கில் தேவலோகத்தில் சுப்ரபாதம் கேட்கும் நேரம் மார்கழி மாதம் ஆகும். ஆடி முதல் நாளிலிருந்து மார்கழி முடிய தேவலோகத்தில் இராத்ரிகாலமாகும். ஆகையால் தை

Read More

அக்கினிக் குஞ்சு மூட்டிய காட்டுத் தீ ! – தனி ஒருவன் (1)

மக்களுக்கு இன்று தெய்வ நம்பிக்கையைவிட தன்னம்பிக்கையே அதிகம் தேவைப்படுகிறது. தெய்வநம்பிக்கை இல்லாதவர்கள் கூட வாழ்க்கையில் ஜெயித்துவிடலாம். ஆனால், தன்னம்பிக்கை இல்லாதவர் வாழ்க்கையில் ஜெயிக்கவே முடியாது. அவர்கள் முன்பு அந்த கடவுளே வந்து உதவிக்கு நின்றாலும் அவர்களால் முடியாது. எனவே தான், சமீபத்திய வேலூர் சொற்பொழிவின் தலைப்பை கூட, "சோதனைகளை சாதனைகளாக்குவோம்!" என்று தேர்ந்தெடுத்தோம். சொற்பொழிவின் முதலில் நாம் சொன்னது என்ன தெரியுமா? "நீ என்ன பார்க்கிறாயோ அது விதி. அதை எப்படி பார்க்கிறாயோ

Read More

திகிலூட்டிய மழை வெள்ளம் – கைகொடுத்த ‘கோளறு பதிகம்’!

வாசக அன்பர்களுக்கும் ரைட்மந்த்ரா குடும்பத்தினருக்கும் வணக்கம். சரியாக சென்ற டிசம்பர் 1 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சென்னையின் கறுப்பு நாளன்று அடைமழை பெய்ய ஆரம்பித்த நேரம், அலுவலகத்துக்கு புறப்பட்டவன் மழை ஓயட்டும் அதன் பிறகு கிளம்பலாம் என்று அப்படியே வீட்டில் அமர்ந்துவிட்டோம். நேரத்தை வீணாக்கவேண்டாம் என்று கணினியில் அமர்ந்து பதிவுகளை தயார் செய்துகொண்டிருந்தோம். அதுவரை போக்குக்காட்டிவிட்டு பின்னர் 10.00 மணியளவில் வலுக்கத் துவங்கிய மழை 11.00 am, 12.00 pm, 1.00

Read More

சோதனைகளை சாதனைகளாக்குவோம்!

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர சுவாமி பக்த சபை, வேலூர் சார்பில் வருகின்ற வெள்ளிக்கிழமை (11/12/2015) 4ம் ஆண்டு குரு பூஜை மஹோத்சவம் வேலூரில் கொசப்பேட்டையில் நடைபெறவிருக்கிறது. குருராஜர் அருளால் மேற்படி வைபவத்தில் பங்கேற்று "சோதனைகளை சாதனைகளாக்குவோம்" என்கிற தலைப்பில் அடியேன் ஆன்மிக / சுயமுன்னேற்ற சொற்பொழிவாற்றவிருக்கிறேன். நாடு தற்போது மிகவும் சோதனையான ஒரு காலகட்டத்தில் இருப்பதால், மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக மேற்படி தலைப்பை தேர்வு செய்தோம். வேலூர் மற்றும் சுற்றுப் புறங்களில் வசிக்கும்

Read More