Home > 2015 > July (Page 2)

பள்ளி மாணவர்களுக்கு இலவச திருமுறை வகுப்பு – சங்கர் அவர்களின் அயராத சிவத்தொண்டு!

'மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - மழலைகள் போதிக்கும் ஒரு பாடம்!' என்கிற தலைப்பில் கடந்த மாதம் ஒரு பதிவளித்திருந்தது நினைவிருக்கலாம். குன்றத்தூரில் பள்ளி மாணவ மாணவியருக்கு கடந்த 10 வருடங்களாக முழுக்க முழுக்க சேவையின் அடிப்படையில் திருமுறைகள் கற்றுத் தரும் திரு.சங்கர் அவர்களை நாம் விரைவில் சந்திக்கவிருப்பதாக கூறியிருந்தோம். அது பற்றிய பதிவு இது. மார்கழி மாதத்தில் ஒரு நாள் நாம் நாகேஸ்வரர் ஆலயத்திற்கு சென்றிருந்தபோது, அந்த அதிகாலை வேளையிலும்

Read More

‘பின் டிராப் சைலன்ஸ்’ என்று சொல்வார்களே… அதன் அர்த்தம் தெரியுமா?

ஆண்டவனிடம் எதை வேண்டுகிறீர்களோ இல்லையோ... "எந்த ஒரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளக் கூடிய, சமாளிக்கக் கூடிய சமயோசிதமான அறிவை எனக்கு கொடு" என்று அவசியம் வேண்டிக் கொள்ளுங்கள். சமயோசித அறிவு ஒன்று இருந்தால் போதும். மற்ற அனைத்து செல்வங்களும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து விடும். சமயோசித அறிவு இல்லையென்றால் வித்தை, வீரம், செல்வம், கீர்த்தி என அனைத்தும் இருந்தும் பயனற்றுப் போய்விடும். பெரியோர்கள் சமயோசித அறிவை வெளிப்படுத்திய சில தருணங்களை இங்கே

Read More

பக்தனுக்காக தேரோட்டத்தை நிறுத்திய ஜகந்நாதர் – திருமால் திருவிளையாடல் (2)

புருஷோத்தம ஷேத்ரம் எனப்படும் பூரியில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ஜகந்நாதர் தன் அடியவர்கள் வாழ்வில் நிகழ்த்திய திருவிளையாடல்களின் தொகுப்பு இந்த குறுந்தொடர். சென்ற அத்தியாயத்தில் மனோகர் தாஸ் என்னும் அடியவரிடம் ஜகந்நாதர் நிகழ்த்திய திருவிளையாடலை கண்டோம். தற்போது ரசிக முராரி என்ற பக்தரிடம் அவர் நிகழ்த்திய திருவிளையாடலை காண்போம். ஒரிஸ்ஸாவில் உள்ள பாலசோர் மாவட்டத்தில் பாயும் சுபர்ணரேகா என்னும் நதி தீரத்தில் அமைந்துள்ள ரோகினி நகர் என்னும் ஊரில் 1590 ல் பிறந்தவர் ரசிக முராரி

Read More

இறைநம்பிக்கை Vs தன்னம்பிக்கை!

தாயின் கருவிலிருக்கும்போது மருத்துவர்கள் அளித்த ஒரு தவறான மருந்து காரணமாக ஸ்டலோனுக்கு பிறக்கும் போதே உடலின் ஒரு பாகம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தது. பள்ளியில் படிக்கும் போது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கோணலான முகம் சக மாணவர்களின் கேலிப் பொருளாக இருந்தது. எனவே அவர் தன்னை கேலி, கிண்டல் செய்பவர்கள் தன்னைப் பார்த்தால் பயப்படவேண்டும் என்பதற்காகவே பாடி பில்டிங்கில் ஈடுபட்டார். நாட்பட நாட்பட அவருக்கு சினிமாவில் நடிக்கவேண்டும் என்கிற ஆசை அரும்பியது. 1974 ஆண்டு வாக்கில்

Read More

‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

நமது பிரார்த்தனை கிளப் துவக்கி இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. பல வாசகர்கள் இந்த காலகட்டங்களில் பிரார்த்தனைக்கு கோரிக்கையை அனுப்பியிருக்கின்றனர். அவற்றுள், கோரிக்கை நிறைவேறிய சிலரது அனுபவங்களைப் பார்ப்போம். பொதுவாகவே பிரார்த்தனை என்பது மிக மிக சக்தி மிக்கது. இறைவனுக்கும் நமக்கும் நேரடி தொடர்பை ஏற்படுத்தும் ஒரு உன்னதமான விஷயம். ஆண்டவனிடம் "எனக்கு அது வேண்டும், இது வேண்டும், இதை தந்தால் நான் உனக்கு அதை செய்கிறேன்" என்றெல்லாம் சொல்வது பிரார்த்தனையல்ல. அது

Read More

சிவன் துவக்கிய ஆனந்தலஹரி, சங்கரர் முடித்த சௌந்தர்யலஹரி – காலடி பயணம் (4)

நமது 'காலடி நோக்கி ஒரு பயணம்' தொடரின் எதிர்பாராத ஒரு வரவு இந்த பதிவு. தனியாக அளிப்பதைவிட அந்த தொடருக்கு மத்தியில் அளித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றவே  இத்துடன் அளிக்கிறோம். நாடெங்கும் சுற்றுப் பயணம் செய்து சனாதன தர்மத்தை நிலைநிறுத்தி, காணாபத்யம் (கணபதி), சைவம் (சிவன்), வைணவம் (விஷ்ணு), கௌமாரம் (முருகன்), சாக்தம் (சக்தி), சௌரம் (சூரியன்) ஆகிய ஷண்மதங்களை ஸ்தாபித்த பின்னர் ஆதிசங்கரருக்கு சிவசொரூபத்தில் கலப்பதற்கு முன்பு ஒரு முக்கிய

Read More

முதல்வர் பதவி ஏற்க காமராஜர் விதித்த நிபந்தனை – காமராஜர் B’DAY SPL 2

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் சிறப்பு பதிவு 2 இது. பதவியால் பெருமை பெற்றவர்கள் மத்தியில் பதவிக்கே பெருமை தேடித் தந்தவர் காமராஜர். அவரை பற்றி படிக்க படிக்க பிரமிப்பு, ஆச்சரியம், மகிழ்ச்சி, நெகிழ்ச்சி என பலவித உணர்சிகள் நம்மை ஆட்கொள்கின்றன. படிப்பறிவில்லாத ஒருவரால் இப்படியெல்லாம் கூட இந்த தேசத்தை பரிபாலனம் செய்ய முடியுமா என்று வியப்பு ஏற்படுகிறது. நிர்வாகத்தை தெரிந்துகொள்ளவேண்டும் என்றால் முதலில் காமராஜரை ஒருவர் படிக்கவேண்டும். அரசியல் நாகரீகத்தை தெரிந்துகொள்ளவேண்டும்

Read More

ஞானசூரியனும் தியாக சூரியனும் சந்தித்தபோது….! காமராஜர் B’DAY SPL 1

நமக்கு நீண்டகாலமாகவே இது பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்கிற ஆர்வம் இருந்து வந்தது. பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் மகா பெரியவாவை எப்பொழுதாவது சந்தித்திருக்கிறாரா? அவரைப் பற்றி இவரது அபிப்ராயம் என்ன? என்பது தான் அது. குருக்கிருபையால் சமீபத்தில் அதற்கான பதில் கிடைத்தது. அழுத்தந்திருத்தமாகவே. கல்வெட்டில் பொறித்ததை போல...!! இன்று ஜூலை 15 பெருந்தலைவர்  காமராஜர் அவர்களின் பிறந்த நாள். அதையொட்டி இந்த சிறப்பு பதிவு அளிக்கப்படுகிறது. "எப்போவோ வந்திருக்கணும். இப்போ தான் சந்தர்ப்பம் கிடைச்சது" சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு

Read More

ஏதாவது அதிசயம் நடந்தாதான் என் வாழ்க்கை மாறும்னு சொல்றவரா நீங்க? கண்டதும் கேட்டதும் (8)

நாம் படித்த, கேட்ட, உணர்ந்த விஷயங்களின் தொகுப்பு இது. ஒருவகையில் நொறுக்குத் தீனி. ஆனால் உடலுக்கும் உள்ளத்துக்கும் உற்சாகமூட்டும் நொறுக்குத்தீனி! இதில் உள்ள நல்ல விஷயங்களை படிக்க மட்டுமல்ல... பின்பற்றவும் செய்தால் வாழ்க்கை வளம் பெறும் என்பது உறுதி!! 1) யார் முட்டாள் ? ஒரு பிச்சைக்காரன் விலை உயர்ந்த வைரத்தை வழியில் கண்டெடுத்தான் அதன் மதிப்பு என்னவென்று தெரியாமலே அதை தன்னுடன் இருந்த கழுதையின் காதில் மாட்டிவிட்டான். அதை கண்கானித்துக் கொண்டிருந்த ஒரு

Read More

‘யார் எந்த உயரத்தில் இருந்தாலும் மனிதர்களை மதிக்கணும்!’

பிரபல இசையமைப்பாளர், 'மெல்லிசை மன்னர்' திரு.எம்.எஸ்.விஸ்வநாதன் இன்று இறைவனடி சேர்ந்துவிட்டார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த சிறப்பு பதிவை தருகிறோம். தன்னை ஆளாக்கிய தன் குரு மீது இவர் வைத்திருந்த பக்தியும் பாசமும் சிலிர்க்கவைக்கும் ஒன்று. இறுதியில் தரப்பட்டுள்ள நெகிழ வைக்கும் குறிப்புக்களில் உள்ள செய்தியை படியுங்கள் புரியும். ''அலுவலகத்தில் பியூனாக இருந்தாலும் அவரை நீங்கள், 'ஆபீஸ் பையன் அவர்களே’னு மரியாதை கொடுத்துதான் அழைப்பீர்கள் என்று என் நண்பர் சொன்னார். அப்படியா?'' எம்.எஸ்.வி.

Read More

ஒரு ‘பாஸ்வேர்ட்’ எப்படி வாழ்க்கையை மாற்றியது ?

ஒரு பாஸ்வேர்ட் எப்படி வாழ்க்கையை மாற்றியது? ரீடர்ஸ் டைஜஸ்டில் வந்த ஒரு உண்மை சம்பவம். எப்போதும் போல அந்த திங்கட்கிழமை காலை எனக்கு அருமையாகவே இருந்தது. அந்த செய்தியை என் கணினித் திரையில் பார்க்கும் வரை. "உங்கள் பாஸ்வேர்ட் காலாவதியாகிவிட்டது" - இப்படி ஒரு சர்வர் மெசேஜ் என்னுடைய கம்ப்யூட்டர் ஸ்க்ரீனில் மின்னியது. பாஸ்வேர்டை நாமே உருவாக்குவது என்பது ஒன்றும் பெரிய கஷ்டமான காரியம் அல்ல. ஆனால் எங்கள் நிறுவனத்தில் அது

Read More

அருமையான பணியை தந்து இறுதியில் அற்புதமான பரிசை தந்த திரிசூலநாதர்!

திரிசூலம் திரிசூலநாதர் கோவிலில் நடைபெற்ற உழவாரப்பணி பற்றிய பதிவு இது. திரிசூலம் கோவில், சென்னையில் உள்ள புராதனம் மிக்க சிவாலயங்களில் ஒன்று. 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. (தளத்தில் இந்த ஆலயம் பற்றி ஆலய தரிசனம் பகுதியில் விரிவான பதிவு அளிக்கப்பட்டுள்ளது). உழவாரப்பணி நடைபெற்ற மே 24, அக்னி நட்சத்திரம் தகித்துக் கொண்டிருந்த காலம் என்பதால், பணிக்கு எத்தனை பேர் வருவார்கள் என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், வருவதாக ஒப்புக்கொண்ட சில

Read More

வெற்றிகரமான பிரார்த்தனைக்கு ஒரு வழிகாட்டி!

நமது தளத்தின் மிகப் பெரிய பணிகளுள் ஒன்று வாராந்திர பிரார்த்தனை கிளப். ஒவ்வொரு வாரமும் நாம் பிறருக்காக, இந்த நாட்டுக்காக, இந்த சமூகத்துக்காக பிரார்த்திக்கும் ஒரு நல்ல வாய்ப்பை இறைவன் நமக்கு ஏற்படுத்தித் தந்திருக்கிறான். ஆனால இதை சரியாக பயன்படுத்திக்கொண்டு எத்தனை பேர் அவனுடைய அருளுக்கு பாத்திரமாகி வருகிறார்கள் என்று தான் தெரியவில்லை. ஒரு சில வாசகர்கள் தவிர்க்க இயலாத காரணங்களினால் அந்த வாரத்து பிரார்த்தனை பதிவை படிக்க இயலாமல் போகும்போது,

Read More

திருமுறை பெற்றுத் தந்த வேலை – உண்மை சம்பவம்!!

மாங்காட்டில் ஆன்மீக வழிபாட்டு சபையின் சார்பாக கடந்த மே மாதம் நடைபெற்ற நம்பியாண்டார் நம்பி குரு பூஜை பற்றிய சிறப்பு பதிவு இது. சைவ சமயம், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் & மாணிக்கவாசகர் ஆகிய நால்வருக்கு எத்தனை கடமைப்பட்டுள்ளதோ அதே அளவு, நம்பியாண்டார் நம்பிக்கும் கடமைப்பட்டுள்ளது. ஏனெனில் இவரது முயற்சியால் தான் நமக்கு திருமுறைகள் கிடைத்தது. திருநாரையூரில் பிறந்த நம்பி சைவத் திருமுறைகளைத் தொகுத்ததோடு பல நூல்களையும் இயற்றியுள்ளார். 10ம் நூற்றாண்டில்

Read More