Home > 2015 > May (Page 2)

வேதமாகிய மலைகளுக்கு நடுவில் எழுந்தருளியிருக்கும் திரிசூலம் திரிசூலநாதர்!

உழவாரப்பணிக்கு கோவிலை தேர்ந்தெடுக்கும்போது பல விஷயங்களை மனதில் கொள்ள வேண்டியிருக்கிறது. அதில் ஒன்று : அதிகம் வெளியுலகினரால் அறியப்படாத அதே சமயம் தொன்மையும் சிறப்பும் வாய்ந்த கோவிலாக இருக்கவேண்டும் என்பது. எனவே நமது தளத்தின் உழவாரப்பணிக்காக கோவிலை தேடியபோது, சில ஆண்டுகளுக்கு முன்னர் (2012 ஆம் ஆண்டு) நாம் சென்று வந்த திரிசூலம் திரிசூலநாதர் கோவில் நினைவுக்கு வந்தது. திரிசூலம் திரிசூலநாதர் கோவில், சென்னையில் உள்ள மிக மிக பழைமையான தலங்களுள் ஒன்று.

Read More

பாண்டுரங்கன் சுமந்த மூட்டை!

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பண்டரிபுரம் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு தலமாகும். மதுரையில் எழுந்தருளியிருக்கும் சோமசுந்தரப் பெருமான் எப்படி எண்ணற்ற திருவிளையாடல்களை நிகழ்தியுள்ளாரோ அதே போன்று பண்டரிபுரத்தில் எழுந்தருளியிருக்கும் பாண்டுரங்கன் எண்ணற்ற லீலைகள் நிகழ்த்தியுள்ளார். சோமசுந்தரக் கடவுள் நிகழ்த்திய லீலைகள் யாவும் 1100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை. ஆனால் பண்டரிபுரத்தில் பாண்டுரங்கன் நிகழ்த்தியுள்ள லீலைகள் யாவும் வெகு சமீபத்தில் அதாவது 14 ஆம் நூற்றாண்டு முதல் 18 ஆம் நூற்றாண்டு

Read More

‘எப்படி வாழ்ந்தாலும் பிரச்னைகள் வருது. எப்படித் தான் வாழ்வது?’

இன்றைக்கு பெரும்பாலானோரிடம் உள்ள பிரச்சனை, கேள்வி, "வாழ்க்கையை எப்படி எடுத்துக்கொள்வது? எப்படி வாழ்வது?" என்பது தான். ஏனென்றால், தீவிர இறை நம்பிக்கை கொண்டு தெய்வத்துக்கு பிடித்தமான ஒரு வாழ்க்கையை வாழ்பவர்கள் கூட பல நேரங்களில் சோதனைகளை சந்திக்கிறார்கள். வெறுத்துப் போய்விடுகிறார்கள். ஒரு விஷயத்தை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும். நாம் யாரும் கடவுள் அல்ல. மனிதர்கள். இறைவன் ஒருவனுக்கு தான் நினைப்பது நடக்கும். 'நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை' என்று கண்ணதாசன் கூறியதில் ஆழமான

Read More

“வருவான்டி தருவான்டி மலையாண்டி!” Rightmantra Prayer Club

அருணகிரிநாதரால் பாடப்பட்ட பழநி ஆண்டவன் சந்நிதியில் மூன்று வயது குழந்தையைக் கிடத்தி விட்டு பெற்றோர் அழுதனர். "பழநியாண்டவா! நீயே இப்படி செய்யலாமா? எங்கள் குழந்தையைக் காப்பாற்று! உன்னை விட்டால் எங்களுக்கு வேறு யார் துணை?'' என்று கதறினார்கள். இரவு வந்தது. அங்கேயே படுத்து விட்டனர். மறுநாள் காலை அதிசயம் நிகழ்ந்திருந்தது. குழந்தையின் உடம்பில் இருந்த முத்துக்கள் குறைந்து இருந்தன. ஆம்! வைசூரியால் பாதிக்கப்பட்ட குழந்தைக்காகவே அதன் பெற்றோர் முருகனிடம் வேண்டிக் கொண்டிருந்தனர். பாதிப்பு குறைந்ததும் வீடு

Read More

உழைத்து வாழ வேண்டும்; பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே!

கடந்த அக்டோபர் மாதம் நவராத்திரியை முன்னிட்டு வாரியாரின் வாரிசுகள் செல்வி.வள்ளி & லோச்சனா அவர்களின் இசை நிகழ்ச்சியை மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நாம் ஏற்பாடு செய்திருந்தது நினைவிருக்கலாம். அந்நிகழ்ச்சிக்கு பக்கவாத்தியமாக வயலின் இசைக்க வந்திருந்தவர் மணலியை சேர்ந்த திரு.குமார் என்பவர். அபாரமாக வயலின் வாசித்த திரு.குமார் (வயது 26) அவர்கள் பார்வையற்றவர் என்பதை அறிந்தபோது ஒரு பக்கம் நெகிழ்ச்சி மறுபக்கம் வியப்பு. அந்நிகழ்ச்சியின் முடிவில் அவருக்கு சன்மானம் அளித்து

Read More

எந்த கண்களில் பார்வை இருக்கிறது? எதில் இல்லை?

ரமண திருவிளையாடற் திரட்டில் மூழ்கியெடுத்த மேலும் சில முத்துக்கள் இவை. சிறு சம்பவம் தான். ஆனால் அதன் மூலம் ரமணர் உணர்த்தும் நீதியும், சொடுக்கும் சாட்டையும் இருக்கிறதே... சுரீர் ரகம்!! எது அவமானம்? ஒரு முறை பகவான் மதிய உணவு அருந்தும்போது, பாடசாலை மாணவன் மோர் பரிமாறினான். பகவானுக்கு மோர் பரிமாறும்போது, "இன்னும் கொஞ்சம் மோர் விடு!" என்றார். பகவான் வழக்கமாக இரண்டாவது முறையாக ஏதும் கேட்பதில்லை. ஆனால் வழக்கத்திற்கு மாறாக இரண்டாவது முறை மோர்

Read More

தாயுமானவளை அனுப்பிய தாயுமானவன் – குரு தரிசனம் (36)

மகா பெரியவா மடத்து ஊழியர்களையும், தன் அணுக்கத் தொண்டர்ளையும் எந்தளவு தாய்ப் பறவை தனது குஞ்சுகளை காப்பது போல காத்திருக்கிறார் என்பதை அறியும்போது மெய்சிலிர்க்கிறது. அது பற்றி பல்வேறு சம்பவங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். படித்திருப்பீர்கள். "TAKE CARE OF YOUR EMPLOYEES. THEY WILL TAKE CARE OF YOUR  PROSPECTS" என்று ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு. அது எத்தனை ஆழ்ந்த பொருள் உடையது தெரியுமா? மகா பெரியவாவை பொறுத்தவரை மடத்து

Read More

“முருகா! முட்டாளே, மவனே, உன்னைச் சும்மா விடமாட்டேன்!!”

சாண்டோ சின்னப்பா தேவரின் வாழ்க்கை வரலாற்றை படிக்கும்போது இப்படியெல்லாம் கூட ஒருவர் இறைவன் மீது பக்தி செய்ய முடியுமா என்று ஆச்சரியம் தான் மேலிடுகிறது. தந்தைக்கே பிரணவத்தின் பொருளுரைத்த அந்த சுவாமிநாதனை, தேவர்களின் சேனாபதியை, அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகனை, தேவர் ஒருமையில் அதட்டுவதும் அதைக் கேட்டு முருகன் ஓடோடி வந்து அவர் கேட்பதை செய்து தருவதும்... அட.... அட... ஒரு உணர்ச்சிக் கவிதை! சில வருடங்களுக்கு முன்பு ஒரு கடுமையான

Read More

திருநாவுக்கரசர் பதிகம் பாடி புரிந்த அற்புதங்கள்!

சைவ சமயக் குரவர் நால்வருள் தனிச்சிறப்பு மிக்கவர் அப்பர் பெருமான் என்று அழைக்கப்பட்ட திருநாவுக்கரசர். இன்று (சித்திரை சதயம்) அவரது குரு பூஜை. அதாவது இறைவனோடு அவர் இரண்டறக் கலந்த நாள். நால்வருள் அதிக ஆண்டுகள் வாழ்ந்து மூப்பிலும் சிவத்தொண்டு செய்தவர் இவரே. திருஞானசம்பந்தரும் இவரும் சம காலத்தவர்கள் (கி.பி.6 ஆம் நூற்றாண்டு). இவரது இயற்பெயர் மருள்நீக்கியார். சைவ சமயத்தில் பிறந்தும் மருள்நீக்கியார் சமண சமயத்தால் ஈர்க்கப்பட்டார். பாடலிபுரம் சென்று சமண நூல்களை

Read More

நினைப்பதை அடைய இதோ ஒரு சூத்திரம்!

நீங்கள் இப்போதுள்ள நிலைமைக்கு, அது நல்ல நிலைமையோ அல்லது மோசமான நிலைமையோ காரணம் யார் தெரியுமா? அது நீங்கள் தான்! நீங்கள் மறுத்தாலும் உங்கள் மனசாட்சி இதை மறுக்காது. சரி தானே? ஒரே ஒரு விஷயத்தை மட்டும் நீங்கள் நன்கு நினைவில் கொள்ளவேண்டும். எப்போது நீங்கள் உதவி கேட்டாலும் உங்களுக்கு மறுக்காமல், தயங்காமல் உதவக்கூடிய ஒரு நபர் யார் தெரியுமா? நீங்கள் தான்! நீங்கள் தான் உங்களுக்கு உதவமுடியும். கடவுளும்

Read More

“நான் உனக்காக காத்திருக்கிறேன்!”

கூரத்தாழ்வார் கி.பி.10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இராமானுஜரின் மாணாக்கருள் முதன்மையானவர். ஸ்ரீவத்சாங்கர் என்ற இயற்பெயர் கொண்டு மிகுந்த தனவந்தனாகவும், ஞானவானாகவும் காஞ்சிபுரத்தை அடுத்த கூரம் என்னும் ஊரில் வாழ்ந்தவர். ஞானத்தில் சிறந்த ஆண்டாள் இவரது மனைவியின் பெயர். தேசத்தின் பிறப்பகுதிகளில் இருந்து காஞ்சிபுரத்தில் கோயில் கொண்டுள்ள வரதராசப் பெருமாளை வழிபட வரும் அடியார்களுக்கு தினமும் அன்னதானம் செய்வதையே பெரும்பேறாய் செய்துவந்தவர். ஒருமுறை திருக்கச்சி நம்பிகளிடம் பெருந்தேவி தாயார் (காஞ்சிபுரத்தில் கோயில் கொண்டுள்ள

Read More

தேர்வில் தோற்றால் வாழ்க்கையில் தோற்றதாக அர்த்தமா? MUST SHARE!!

பிளஸ்-டூ பரீட்சை முடிவுகள் வெளியாகிவிட்டன. சாதித்த மாணவ மாணவியர் பற்றிய செய்திகளுக்கிடையே தோல்வியடைந்த மாணவர்களின் தற்கொலை பற்றிய செய்திகளையும் படிக்க நேர்வது மனதை பிசைகிறது. வெற்றிகரமான வாழ்க்கையில் படிப்பு, தேர்வில் தேர்ச்சி இவையெல்லாம் ஒரு அங்கம், அவ்வளவே. ஆனால் அது மட்டுமே வாழ்க்கையாகிவிடாது. இந்தத் தேர்வில் வென்று விட்டால், அதுவே இறுதி வெற்றியும் அல்ல; இதில் தோல்வியோ அல்லது தொய்வோ அடைந்துவிட்டால் அதுவும் இறுதி கிடையாது. நமது தள வாசகி ஒருவரின்

Read More

மடத்துக்கு சென்றால் மகா பெரியவா கேட்கும் முதல் கேள்வி என்ன தெரியுமா? – குரு தரிசனம் (35)

மும்பையிலிருந்து எஸ்.சந்திரசேகரன் என்கிற வாசகர் நம்மை சென்ற மாத மத்தியில் தொடர்பு கொண்டார். கூகுளில் பெரியவா தொடர்பாக ஏதோ தேடலில் இருந்தபோது  நம் தளத்தை பார்க்க நேர்ந்ததாகவும், அது முதல் தவறாமல் படித்துவருவதாகவும் பதிவுகள் ஒவ்வொன்றும் அருமை என்றும் கூறினார். அவருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டோம். மேலும் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் இருக்கும் துயர் ஒன்றை பற்றி கூறி நமது பிரார்த்தனை கிளப்பில் அதை வெளியிட்டு பிரார்த்தனை செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டார். "உங்கள்

Read More

வருமுன் காப்போம்!

காலடி புறப்படுவதற்கு நான்கைந்து நாட்களுக்கு முன்னர் நமக்கு முகத்தில் திடீரென்று மூன்று பெரிய கட்டிகள் அடுத்தடுத்து வந்துவிட்டன. ஆரம்பத்தில் ஒரு சிறிய பரு போல வந்த கட்டி அப்படியே கொஞ்ச கொஞ்சமாக பெரிசாகி, இரண்டே நாட்களில் முகமே விகாரமாகிவிட்டது. இந்தளவு பெரிய கட்டிகளை முகத்தில் வைத்துக்கொண்டு எப்படி காலடி செல்வது என்று வருந்தினோம். அடுத்தடுத்து வெளியூர் பயணங்களால் (அப்போது தான் வள்ளிமலைக்கு சென்று திரும்பியிருந்தோம்) உடல் சூடாகிவிட்டது போல... அதனால் கட்டி

Read More