Home > 2014 > October (Page 2)

வாரியார் ஸ்வாமிகள் முருகப் பெருமானிடம் அனுதினமும் வேண்டி நின்றது என்ன?

இன்று ஐப்பசி 1. ஆயில்யம் நட்சத்திரம். திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் குரு பூஜை. கிருபானந்த வாரியார் சென்ற நூற்றாண்டு கண்ட தலைசிறந்த முருக பக்தர். நாத்திகப் பிரசாரம் தமிழகத்தில் வேரூன்றி பரவிய இக்கட்டான காலகட்டங்களில், ஆத்திகத்தை பரவச் செய்தவர். தினமும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். "அருள்மொழி அரசு", என்றும்

Read More

ஆழியார் அறிவுத் திருக்கோவிலில் ஒரு நாள்!

"கடவுள் யார்.... வாழ்க்கை என்றால் என்ன? உலகில் ஏன் வறுமை உள்ளது?" என்ற கேள்விகளை தனக்குள் கேட்டு, அதற்கான பதிலை சமுதாயத்திற்குத் தந்தவர் தான் வேதாத்திரி மகரிஷி. 1911 - ஆகஸ்ட் 14ல் சென்னை அருகே உள்ள கூடுவாஞ்சேரியில் நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர். பத்து வயதாக இருக்கும்போது, மதிய வேளையில் தறியில் நெய்துகொண்டிருந்தார். அவரது அன்னையார் உணவு உண்ண அழைக்கும் வேளை வந்தது. ஆனால் அன்னையாரோ அவரைக் கூப்பிடாமல் சமையலறையில் அமர்ந்து

Read More

மகா பெரியவா எரிமலையாய் வெடித்த தருணம் – நெஞ்சை உலுக்கும் சம்பவம் – குரு தரிசனம் (15)

மகா பெரியவா பக்தர்களுக்கு அருளியது தொடர்பாக பல பதிவுகளை வெளியிட்டுள்ளோம். எந்த சூழ்நிலையிலும் மகா பெரியவா கோபங்கொண்டு எவரிடமும் பேசியது கிடையாது. சபித்தது கிடையாது. சில சமயம் பக்தர்கள் தவறுக்காக அவர் கோபப்படுவதுண்டு. காலில் விழுந்தவுடன் அடுத்த நொடி கோபம் நீங்கி சாந்தமாகிவிடுவார். தவறு செய்வது மனித இயல்பு அதை மன்னிப்பது மட்டுமல்ல மறப்பது தான் தெய்வ குணம் என்பது அவருக்கு தெரியும். ஆனால்... தவறுக்கும் தவறான தவறை ஒருவர்

Read More

வாழ்வுக்கு வழிகாட்டும் 27 நட்சத்திரங்களுக்குரிய பரிகாரத் திருத்தலங்கள்!

ஒருவர் தன் பிறந்த நாளை ஆங்கில தேதியில் கொண்டாடுவதற்கு பதில், அவரவர் பிறந்த தமிழ் மாதத்தில் வரும் ஜன்ம நட்சத்திரத்தன்று கொண்டாடுவது தான் மிகவும் சரி. உங்கள் பிறந்த நாளன்று செய்யவேண்டியவை குறித்தும் செய்யக்கூடாதவை குறித்தும் நாம் ஒரு பதிவு அளித்திருந்தது நினைவிருக்கலாம். (கடைசியில் பதிவின் முகவரி தரப்பட்டுள்ளது!) கீழே 27 நட்சதிரங்களுக்குரிய பரிகாரத் தலங்கள் பற்றிய விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. உங்கள் பிறந்த நாளன்றோ (தமிழ் மாதப்படி) அல்லது ஒவ்வொரு மாதமும் வரும் ஜென்ம

Read More

“வணக்கம் அண்ணா!”

விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய தினம் என்று  கருதுகிறோம்.... வீட்டில் சானலை மாற்றி மாற்றி பார்த்துகொண்டிருக்கையில் பிரபல எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்கள் பொதிகை சானலில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தார்கள். சற்று வித்தியாசமான நிகழ்ச்சி அது. இருபக்கமும் திருநங்கைகள் அமர்ந்திருக்க, நடுவில் சக்கர நாற்காலியில் ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்கு துணையாக ஒரு வயதான பெண்மணி பின்னால் நின்றுகொண்டிருந்தார். அவரை பார்த்து, அவரது திறமையை பார்த்து அவர் வாழ்க்கையை எதிர்கொண்டதை பார்த்து, திருநங்கைகள்

Read More

முன்னேற துடிப்பவர்கள் மனதில் செதுக்க வேண்டிய வைர வரிகள் — MONDAY MORNING SPL 64

நம்மில் நிறைய பேர் ஒரு புது நட்பை தேர்ந்தெடுப்பது எதை அடிப்படையாக வைத்து என்று பார்த்தோமானால் அது பெரும்பாலும் புகழ்ச்சியை அடிப்படையாக வைத்து தான் இருக்கும். ஆனால் அது சரியான முறையா? "இந்திரனே, சந்திரனே, இவரைப் போல யாரும் இல்லை... உன்னைப் போல அந்த வேலையை செய்து முடிக்க யாருமில்லை!" என்று புகழ்ந்து கூறினால் போதும் சிலருக்கு உச்சி குளிர்ந்துவிடுகிறது. அதற்கு பிறகு அவர்களுக்கு வைக்கப்படும் ஆப்பு கண்களுக்கு தெரிவதில்லை. ஒரு

Read More

“நான் உன்னை மறவேன். நீ என்னை மறக்காதே!” — ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்!!

வள்ளிமலை ஸ்வாமிகள் என்றழைக்கப்பட்ட சச்சிதானந்த ஸ்வாமிகள், தான் ஜீவனோடு இருந்தபோதே வள்ளிமலை ஆஸ்ரமத்தை வள்ளிமலையில் நிறுவினார். மகா மந்திரம் என்றழைக்கப்பட்ட திருப்புகழின் பெருமைகளை பரப்ப, திருப்புகழ் பஜனை சபைகளை நிறுவ சென்னை உட்பட பல நகரங்களுக்கு அடிக்கடி சென்றுவருவார். அவரால் நாத்திகத்தை கைவிட்டு ஆத்திகத்தை தழுவியர் பலர் உண்டு. அவர் நிகழ்த்திய அற்புதங்கள் பலப் பல. (Please check : அடியார் பசி தீர்க்க ஓடிவந்த முருகன் ! ரைட்மந்த்ரா பிரார்த்தனை

Read More

“ஏம்பா! உங்களுக்கு எப்போ பார்த்தாலும் பெரியவா சேவை தானா?” – குரு தரிசனம் (14)

1952 வரை மடத்தில் கைங்கர்யம் பண்ணிக் கொண்டிருந்த ஒரு பெரியவரின் பெயர் பஞ்சாபகேசன். பெரியவாளுடைய கைங்கர்யம்தான் வாழ்க்கை என்று இருந்த பெரிய பக்தர். தள்ளாமையினால் மடத்திலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டு பெரியவாளை  பிரிய மனசில்லாமல் தஞ்சாவூரில் உள்ள பிள்ளையிடம் வந்தார். உடல்தான் தஞ்சாவூரில் இருந்ததே ஒழிய, மனஸ் பூரா பெரியவாதான்! எனவே தஞ்சாவூரிலும் ஏதோ பெரியவா கைங்கர்யம் என்று பண்ணிக் கொண்டிருந்தார். பிள்ளையாண்டான் கேட்டான், "ஏம்பா! உங்களுக்கு எப்போப் பார்த்தாலும் பெரியவா சேவைதானா? நீங்க

Read More

ஆளும் வளரனும் அறிவும் வளரனும் என்று முழங்கிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!

'எனது முதலமைச்சர் நாற்காலியின் மூன்று கால்கள் எவற்றால் ஆனவை என்று எனக்குத் தெரியாது. ஆனால், நான்காவது கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களால் ஆனது!'' - 1982ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். வானொலிக்கு அளித்த பேட்டியின்போது கூறியது இது. அவரது ஆழ்மனதில் இருந்து வந்த வார்த்தைகள் இவை. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இறந்து இரண்டு தலைமுறைகள் கடந்துவிட்டன. ஆனால், இன்றளவும் காலத்தால் துருப்பிடிக்காத தெம்பும் உறுதியும் கொண்டதாக திகழ்கின்றன அவரது

Read More

வேதம் தழைக்க சென்னையில் ஓர் வேத வித்யா ஆஸ்ரமம்!

சென்ற ஆண்டு தீபாவளியை முன்னிட்டு நம் தளம் சார்பாக நங்கநல்லூரில் உள்ள 'நிலாச்சாரல்' என்னும் பார்வைத் திறன் சவால் கொண்ட மாணவிகள் இல்லத்தில் அம்மாணவிகளுக்கு தோடு, மாலை உள்ளிட்ட தீபாவளி பேன்ஸிகிட் மற்றும் புத்தாடைகள்  தானமளித்து கொண்டாடியது நினைவிருக்கலாம். மிகுந்த மனநிறைவை நமக்கும் நமது வாசகர்களுக்கும் தந்தது அது. இந்த ஆண்டும் தீபாவளியை அர்த்தமுள்ள வகையில் கொண்டாடவேண்டும் என்று முடிவு செய்திருந்தோம். அப்போது தோன்றியது தான் இப்போது நாம் சொல்லவிருக்கும் கைங்கரியம். வேதம் படிப்பவர்களோ

Read More

உணவும், உறக்கமும், நிம்மதியும், செல்வமும் நல்கி இறுதியில் சிவபதம் அருளும் பதிகம்!

எத்தனை தான் விழுந்து விழுந்து, ஓடியாடி சம்பாதித்தாலும், மாட மாளிகை கூட கோபுரங்கள் கட்டி வசித்தாலும், செல்வத்தில் புரண்டாலும், நல்ல விரும்பிய உணவை சாப்பிடும் நிலையில் ஒருவர் இருக்கவேண்டும்; படுத்தவுடன் உறக்கம் வரவேண்டும். இது தான் வாழ்க்கை. ஆனால் இன்று எத்தனை பேருக்கு இது கிடைக்கிறது? இன்றைய நோய்களின் பெருக்கத்திற்குக் காரணம் மேற்கூறிய இரண்டும் இல்லாதது தான். நல்ல உணவு, உறக்கம். இப்போதெல்லாம் தலைவலி என்று மருத்துவமனைக்கு சென்றாலே குறைந்தது ஆயிரம்

Read More

கண்ணீர் அஞ்சலி : நம் வாசகி பரிமளம் அவர்களின் கணவர் சிவனடி சேர்ந்தார் !

இன்று காலை அந்த செய்தி வந்தபோது நம்மால் நம்ப முடியவில்லை. திங்கட்கிழமை பரபரப்பில் அலுவலகத்தில் இருந்தபோது நமக்கு சகோதரி பரிமளம் அவர்களிடமிருந்து அழைப்பு வந்தது. மீட்டிங்கில் இருந்தபடியால் அட்டெண்ட் செய்ய முடியவில்லை. திரும்பவும் அழைப்பு வந்தது. என்ன அவசரம் என்று தெரியவில்லையே என்று வெளியே வந்து அழைப்பை அட்டெண்ட் செய்தபோது தான் அந்த அதிர்ச்சிக்குரிய தகவல் நமக்கு கிடைத்தது. பரிமளம் அவர்களின் கணவர் திரு.மணிமாறன் (55) அவர்கள் இன்று காலை உணவு

Read More

இந்த உலகம் யாரை கொண்டாடும்? — MONDAY MORNING SPL 63

அந்த ஊரில் ஒரு மிகப் பெரிய செல்வந்தன் வாழ்ந்து வந்தான். அவனது கருமித்தனத்தால் ஊரார் அவனை அடியோடு வெறுத்தனர். ஒரு நாள் ஊராரிடம் அவன் சொன்னான்.... "உங்களுக்கு என்னை பற்றி இப்போது தெரியாது. கடவுளுக்கு  தெரியும். நான் போகும்போது எதுவும் கொண்டுபோகப் போவதில்லை. அது எனக்கு தெரியும். எனவே என் சொத்துக்களில் கணிசமான ஒரு பகுதியை இந்த ஊருக்கும் பல தர்மகாரியங்களுக்கும் உயில் எழுதி வைத்துவிட்டுத் தான் செல்வேன்!" என்றான். அவன்

Read More

சுப்பிரமணிய சிவா — வ.உ.சி. என்கிற துப்பாக்கியின் தோட்டா!

“கப்பலோட்டிய சிதம்பரனாரைப் புகழ்வோர், அவருக்கு வலக்கரமாக இருந்த சுப்பிரமணிய சிவாவை மறக்க முடியாது. சிதம்பரனார் துப்பாக்கி என்றால், அதனுள் தோட்டாவாக இருந்து செயல்பட்டவர் சிவா. வ. உ. தம்பரனாருடனும் மகாகவி பாரதியாருடனும் நெருங்கிப் பழகியவர் சுப்பிரமணிய சிவா. 'வீரமுரசு' எனப் புகழ்பெற்றவர் இவர் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் 1884, அக்டோபர் 4-ம் நாள் பிறந்தார். இவர் தந்தையார் ராஜம் ஐயர், தாயார் நாகம்மாள் (நாகலட்சுமி). பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியம்.

Read More