Home > 2014 > July (Page 2)

துதிக்காதவரையும் தடுத்தாட்கொள்ளும் தண்டாயுதபாணி – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப் !

அகிலாண்ட கோடி பிராமாண்ட நாயகன் எனப்படும் முருகப் பெருமானின் பெருமையை நாளெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கலாம். வேதங்களுக்கெல்லாம் தலைவனான அந்த வேதநாயகத்துக்கே பிரணவத்தின் பொருளை உரைத்த சுவாமிநாதனாயிற்றே நம் கந்தவேல். ஸ்ரீ வைகுண்டதில் குமரகுருபரன் ஊமையாக இருந்தார். தனது குறை தீர திருச்செந்தூரில் 42 நாட்கள் விரதமிருந்தும் பலன் கிட்டாததால் கடலில் விழ எத்தனித்தபோது, அர்ச்சகர் வடிவில் வந்த முருகன் பூவைக் காட்ட, ஊமையாக இருந்த குமரகுருபரன் "பூமருவும்' என்று தொடங்கி கந்தர் கலிவெண்பா

Read More

“கண் போனால் என்ன? கால் போனால் என்ன?” – தேவாரத் திருப்பணியில் அசத்தும் ஞானப்பிரகாசம்!

சுமார் இருபது, இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இயக்குனர் சிகரம் திரு.கே.பாலச்சந்தர் அவர்களின் இயக்கத்தில், வெளியான 'வானமே எல்லை' என்கிற படத்தில், வாழ்க்கையில் பல்வேறு மட்டங்களில் தோல்வியடைந்து, வஞ்சிக்கப்பட்டு, விரக்தியின் விளிம்புக்கு தள்ளப்பட்டு தற்கொலைக்கு முயலும் 3 இளைஞர்களும் 2 இளம்பெண்களும் சந்தித்துக்கொள்வார்கள். ஒரு மாதம் இஷ்டப்படி வாழ்ந்துவிட்டு 30 வது நாள் கடைசியில் தற்கொலை செய்துகொள்வது என்று தீர்மானம் எடுப்பார்கள். ஐந்து பேர்களில் ஒரு இளைஞனின் தந்தையாக வரும் திரு.ராஜேஷ், "நான்

Read More

மாற்றுக் குறைந்த பொற்காசு மூலம் வாழ்வு செழிக்க ஒரு பாடலை தந்த இறைவன்!

இந்த உலகம் யாரை எதிர்நோக்கி காத்திருக்கிறது தெரியுமா? கடவுளை தேடுபவர்களையோ, ஆன்மீகவாதிகளையோ, செல்வந்தர்களையோ அல்ல. தொண்டு செய்பவர்களை. செயல் வீரர்களை. இறைவன் யாருக்கு உதவிட காத்திருக்கிறான் தெரியுமா? தன்னை தொழுபவர்களுக்கு அல்ல. தொண்டு செய்பவர்களுக்கு உதவிடவே. தொழுபவர்கள் என்றுமே இரண்டாம் பட்சம் தான். தொண்டு செய்பவர்களுக்கு தான் முதலிடம். தொண்டு செய்ய பணம் தேவையில்லை. மனம் போதும். எப்படி என்றால், 'தொண்டு செய்யவேண்டும்' என்று நீங்கள் களம் இறங்கிவிட்டால் அதற்குரிய

Read More

காமராஜர் வாழ்வில் நடைபெற்ற நெகிழ வைக்கும் சில சம்பவங்கள் – காமராஜர் B’DAY SPL 2

கர்மவீரர் காமராஜரின் பிறந்த நாள் ஸ்பெஷல் இரண்டாம் பகுதி இது. அவசியம் அனைவரும் படிக்கவேண்டிய, படித்து பகிரவேண்டிய ஒன்று. பதிவின் இறுதியில் உங்களில் பலர் தெரிந்துகொள்ள விரும்பும் ஒரு முக்கிய தகவல் உள்ளது. பதவி ஆசையே இல்லாத ஒரே பாமரனை பதவியிலேற்றி வைத்த பெருமையைப் பாரதம் பெறக் காரணமானவர்தான் கர்மவீரர் காமராஜர். பதவி ஆசை இல்லாத அவரை பதவியில் அமர்த்தியதால் தான் பதவி மூலம் அவர் பலன் பெற முயலவே இல்லை. கிடைத்த பதவியை

Read More

காமராஜரும் ராமராஜ்ஜியமும்! கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் ஸ்பெஷல்!!

'அரசியலில் நேர்மை; பொதுவாழ்வில் தூய்மை' என்ற சொல்லுக்கு  உதாரணமாக விளங்கிய பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் இன்று. காமராஜர் தமிழகத்தை ஆண்ட 1954 - 1963 காலகட்டத்தை தமிழகத்தின் பொற்காலம் எனலாம். இன்றைக்கு தமிழகத்தின் முதுகெலும்பாக உள்ள பல தொழிற்சாலைகள் மற்றும் பாசன திட்டங்கள் காமராஜரின் காலத்தில் ஏற்படுத்தப்பட்டவையே. ஊழல்களும், அரசியலில் ஆடம்பரங்களும், அதிகார துஷ்பிரயோகங்களும், ஆணவமும் தலைவிரித்து ஆடும் இன்றைய காலகட்டத்தில், ‘காமராஜரைப் போல ஒரு அரசியல்வாதி மீண்டும் பிறந்து

Read More

ஒரு சிலந்தி மனிதனுக்கு கற்றுத் தரும் பாடங்கள் – MONDAY MORNING SPL 52

ஒரு தொழிலோ அல்லது வேறு என்ன காரியமாக இருந்தாலும் அதை செய்கின்ற காலத்தில் எதிர்பாரா இடையூறுகள் எது வந்தாலும் சோர்ந்து போகாமல், தவறுகளை திருத்தி, நன்கு ஆராய்ந்து அதில் முழுக்கவனம் செலுத்தி எடுத்த காரியத்தை முடித்து விட வேண்டும். கீழ்கண்ட இந்த கதை பலருக்கு தெரிந்திருக்கும். சிலருக்கு தெரிந்திருக்காது. இருப்பினும் அனைவரும் ஒரு முறை படிக்கவேண்டும். ஸ்காட்லாண்டில் நாட்டில் ராபர்ட் புரூஸ்  (1274 AD - 1329 AD) என்ற அரசன் தன்னுடைய

Read More

குருவின் பெருமையும் குருவின் திருவடி பெருமையும் – குரு பூர்ணிமா சிறப்பு பதிவு!

இன்று குரு பூர்ணிமா. குரு பூர்ணிமா என்பது ஆடி மாதத்தில் வரும் முதல் பௌர்ணமி. இந்த நாள் அன்று சீடர்கள் (மாணவர்கள்) தங்களுக்கு கல்வி அறிவு புகட்டிய குருவை (ஆசிரியரை) போற்றும் முகமாக குரு வழிபாடு எனும் குரு பூஜை செய்வார்கள். இதனை துறவிகள் வியாசபூசை என்றும் வியாச ஜெயந்தி என்றும் அழைப்பர். இவ்வழிப்பாட்டை வேத வேதாந்தக் கல்வி பயின்றவர்கள் தங்களது குருமார்களை நினைவு கூறும் வகையில் இந்த குரு பூர்ணிமா

Read More

தன்னை இகழ்ந்தவருக்கும் அருள் செய்த ஸ்ரீ ராகவேந்திரர் – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்

ஸ்ரீ ராகவேந்திரர் மந்த்ராலயத்தில் பிருந்தாவனப் பிரவேசம் செய்த பின்பு பல ஆண்டுகள் கழித்து நடந்த ஒரு நிகழ்ச்சி இது. ஸ்ரீ வியாச தத்வக்ஞ தீர்த்தர் என்பார் மிகச் சிறந்த ஆச்சார்யாள்களில் ஒருவராக திகழ்ந்து வந்தார். அவரிடம் பல சிஷ்யர்கள் பாடம் பயின்று வந்தனர். ஒரு நாள் தனது சிஷ்யர்களுக்கு 'நியாய சுதா' என்ற நூலை போதித்து வந்தார். 'நியாய சுதா' என்பது மிகவும் கடினமான நூல். இதை புரிந்துகொள்வதென்பது அவ்வளவு சாமான்யமானதல்ல.

Read More

திருவருளும் குருவருளும் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (1)

மந்த்ராலய மகான் ஸ்ரீ ராகவேந்திரரை பற்றி, 'ஸ்ரீ ராகவேந்திர தரிசனம்' என்ற பெயரில் நமது தளத்தில் தொடர் துவங்கவிருப்பது பற்றி அறிவித்திருந்தோம். ஏற்கனவே இணையத்தில், பல்வேறு புத்தகங்களில் அங்கே இங்கே என இருக்கும் செய்திகளை திரட்டி தராமல், நாமே களத்தில் இறங்கி இதுவரை வாசகர்கள் அறிந்திராத தகவல்களை, மகிமைகளை சேகரித்து அவற்றையே உங்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று விரும்பினோம். ஏற்கனவே நேரம் என்பது நமக்கு அரிதான ஒன்றாகிவிட்டநிலையில், "இதற்கெல்லாம் எங்கிருந்து இவருக்கு

Read More

மகா பெரியவா கொடுப்பதிலும் அர்த்தம் உண்டு; மறுப்பதிலும் அர்த்தம் உண்டு – குரு தரிசனம் (3)

"இறைவன் கொடுப்பதிலும் அர்த்தம் உண்டு. கொடுக்க மறுப்பதிலும் அர்த்தம் உண்டு" என்று கூறுவார்கள். நாம் வருந்தி வருந்தி கேட்பது நமக்கு நன்மை தருமா என்பதை  நாம் அறியமாட்டோம். அவன் ஒருவனே அறிவான். எனவே நமது அபிலாஷைகளை அவன் பாதார விந்தங்களில் சமர்பித்துவிட்டு நமது கடமையை நாம் செய்துவரவேண்டும். குருவருளும் அப்படித்தான். குரு கொடுத்தால் நூறு நன்மை. மறுத்தால் இருநூறு நன்மை. கீழ்கண்ட சம்பவமும் உணர்த்துவது அதைத் தான். கிரி ட்ரேடிங்

Read More

ஆங்கில மீடியம் Vs தமிழ் மீடியம் = தேவை ஒரு புரிதல்!

எப்போது மின்சாரம் வரும், எப்போது போகும் என்றே தெரியாத அளவுக்கு கடும் மின்வெட்டில் நாம் திணறி வருகிறபடியால் வீட்டில் கணினியில் அமர்ந்து பதிவு எழுதவே முடிவதில்லை. எதற்கும் இருக்கட்டும், இது போன்ற சூழ்நிலைகளில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று நாம் சில வாரங்களுக்கு முன்பு தயார் செய்த ஒரு பதிவை தற்போது அளிக்கிறோம். நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறோம். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள். சமீபத்தில் நண்பர் ஒருவரிடம் பேசும்போது  சொன்னார், "என்

Read More

கை ரிக்‌ஷா இழுத்தவர் ஜனாதிபதி மாளிகையின் விருந்தினராக உயர்ந்த வரலாறு!

"ஒரு இலக்கை அடையவேண்டும் என்று தீர்மானித்து நீ உழைக்க ஆரம்பித்துவிட்டால், உன்னை தடுக்கக்கூடிய சக்தி இந்த பிரபஞ்சத்திலேயே கிடையாது!" சுவாமி விவேகானந்தர் சொன்ன இந்த வாக்கியம் எத்தனை எத்தனை உண்மை! தோல்வியால் துவண்டவர்களை, இந்த உலகம் நினைவில் வைத்திருப்பதில்லை. தோல்வி உங்களுக்கு, புதிய உற்சாகத்தையும், வைராக்கியத்தையும் கொடுக்க வேண்டுமே தவிர, விரக்தியைக் கொடுக்கக் கூடாது. யாருக்கும் முதல் முயற்சியிலேயே, மிகப் பெரிய வெற்றி கிடைத்து விடுவதில்லை. தோல்வி என்றைக்கும் நிரந்தரமானதல்ல. நம்முடைய

Read More

ஆயிரக்கணக்கான கிளிகளின் காட்ஃபாதரின் குமுறலை கொஞ்சம் கேளுங்கள்!

ராயப்பேட்டையில் எக்ஸ்ப்ரெஸ் அவென்யூ அருகே தன்னைத் தேடி தினசரி வரும் ஆயிரக்கணக்கான கிளிகளுக்கு இருவேளையும் உணவளிக்கும் சேகர் அவர்களை நாம் சந்தித்ததும், அவரது சேவையில் நம்மை இணைத்துக்கொண்டு மாதந்தோறும் அவருக்கு உதவி வருவதும் நீங்கள் அறிந்ததே. மாதம் ஒருமுறையாவது சேகர் அவர்களை சந்திக்காமல் நாம் இருப்பதில்லை. இந்த மாதம் நம் கோட்டாப்படி கிளிகளுக்கு அரிசி வாங்கித் தரவேண்டி (75 கிலோ) திரு.சேகர் அவர்களை தொடர்பு கொண்டு நாம் வருவதாக சொன்ன போது,

Read More

ஐநூறு கோடியும் ஐந்து நிமிடங்களும் – MONDAY MORNING SPL 51

அந்த  செல்வந்தனுக்கு அன்று மரணத்துக்கு நாள் குறிக்கப்பட்டிருந்தது. அவனது உயிரை கவர்ந்து வர எமதர்மன்,  எமதூதன் ஒருவனை அனுப்பியிருந்தான். செல்வந்தன் வழக்கம் போல காலையில் படுக்கையிலிருந்து எழுந்தான். எழும்போதே அவனுக்கு எதிரே கையில் பாசக்கயிற்றுடன் கூற்றுவனின் சேவகன் நின்றுகொண்டிருப்பதை பார்த்து திடுக்கிடுகிறான். "யார் நீ? உனக்கென்ன வேண்டும்?" "நான் எமதர்மராஜனின் ஏவலாள். இன்றோடு, இத்தோடு உன் ஆயுள் முடிகிறது. புறப்படு என்னோடு!" "நான் சாவதற்கு தயாராக இல்லை. எனக்கு இன்னும் கடமைகள் பல பாக்கியிருக்கிறது.

Read More