Home > 2014 > February (Page 2)

ஒரே இடத்தில் அனைத்து தெய்வங்களும் எழுந்தருளிய மாசிமக தீர்த்தவாரி – Excl. Coverage!

மாசி மாதத்தில் நடத்தப்படும் மாசி மகத்தையொட்டி சைவத் திருத்தலங்களிலும், வைணவத் திருத்தலங்களிலும் பிரம்மோத்சவம், மாசி மகோத்சவம் என விழா நடத்தப்படும். இதையடுத்து அந்தந்த ஆலயங்களின் உற்சவ மூர்த்திகள் பல்லக்குகளில் எழுந்தருளி கடற்கரையில் தீர்த்தவாரி செய்தனர். (* இந்த பதிவில் அதிகபட்ச புகைப்படங்களை அளித்திருப்பதால் பேஜ் லோட் ஆவதற்கு சற்று நேரம் பிடிக்கும். எனவே இணையம் முழுமையாக லோட் ஆன பிறகு பொறுமையாக பார்க்கவும்.) ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் அதுவும் சமுத்திரக் கரையில்

Read More

நிலம், கடல், வானம் இவற்றை விட பெரியது எது தெரியுமா ? RIGHTMANTRA PRAYER CLUB

சோழ நாட்டினை இரண்டாம் குலோத்துங்கன் ஆண்டு வந்தான். இவனுக்கு அநபாயச் சோழன் என்னும் சிறப்புப் பெயரும் உண்டு. அவன் தனது அரசவைக்கு முதலமைச்சரை நியமிக்க விரும்பினான். அறிவும், திருவும் நிறைந்த ஒருவரையே இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கத் திட்டமிட்டு மூன்று  கேள்விகளை அறிவித்தான். இந்த மூன்று கேள்விகளுக்கும் விடை சொல்பவர்களை முதலமைச்சராகத் தேர்வு செய்ய விரும்புவதாக அறிவித்தான். கேள்விகளாவன: 1. நிலத்தைக் காட்டிலும் பெரியது எது? 2. கடலைக் காட்டிலும் பெரியது எது? 3.  வானத்தைக் காட்டிலும்

Read More

நந்தி இறைவனிடம் கேட்ட பதினாறு பேறுகள்! சிவராத்திரி SPL (2)

சிவபெருமான், நந்தி பகவானுக்கு பட்டாபிஷேகம் செய்து கணங்களின் தலைவனாக நியமித்தபோது, சிவனடியார்கள் வேண்டும் பதினாறு பேறுகளை வரமருள வேண்டும் என்று இறைவனிடம் கேட்டுக்கொண்டார் நந்தீஸ்வரர். அவை என்ன தெரியுமா? மறைகள் நிந்தனை சைவ நிந்தனை பொறா மனமும் தறுகண் ஐம் புலன்களுக் கேவல் செய்யுறாச் சதுரும் பிறவி தீதெனாப் பேதையர் தம்மொடு பிணக்கும் உறுதி நல்லறம் செய்பவர் தங்களோ டுறவும் யாது நல்லன்பர் கேட்கினும் உதவுறும் இயல்பும் மாத வத்தினோர் ஒறுப்பினும் வணங்கிடு

Read More

காதலர் தினம் – கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்!

பத்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை 'காதலர் தினம்' என்கிற வார்த்தையையே நம் இளைய தலைமுறையினர் அறியமாட்டார்கள். புகழ் பெற்ற தனியார் தொலைகாட்சி ஒன்று போணியாகாத ஒரு காதல் திரைப்படத்தை வாங்கி வைத்திருக்க, அதை ஒளிபரப்ப கண்டுபிடித்த சந்தை டெக்னிக் தான் இந்த 'காதலர் தினம்'. 'காதலர் தின சிறப்பு திரைப்படம்' என்று அது அந்த விஷ விதையை தூவி வைத்து ஆரம்பித்து வைத்த வழக்கம் இன்று கொடிக்கட்டி பறக்கிறது.

Read More

ரிஷபம் சிவபெருமானின் வாகனமானது எப்படி? நந்தி தேவரின் திவ்ய சரித்திரம் – சிவராத்திரி SPL (1)

பிப்ரவரி 27 ஆம் தேதி மஹா சிவராத்திரி. சிவராத்திரிக்கு உங்கள் அனைவரையும் தயார் படுத்துவதன் பொருட்டு இப்பொழுதிலிருந்தே சிறப்பு பதிவுகளை துவக்குகிறோம். சரியாக சிவராத்திரிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் சிவராத்திரி விரதம் எப்படி இருப்பது என்பது குறித்த பதிவோடு இந்த தொடர் நிறைவு பெறும். நாம் அளிக்கவிருந்த சிவநாம மகிமை தொடர்பான பதிவுகளும் இதனூடே தொடர்ந்து அளிக்கப்படும். இந்த தொடரில் சிவநாம மகிமை, சிவபெருமானின் பெருமை, சிறப்பு, எளிமை முதலியவற்றை முற்றிலும்

Read More

“இவரை எதுக்கு உங்க விசிட்டிங் கார்டுல போட்டிருக்கீங்க?”

ஒரு சிலர் தொட்டதெல்லாம் பொன்னாகும் என்பார்கள். ஆனால் இவர் தொட்டதெல்லாம் தோல்வியிலேயே முடிந்துள்ளது. இருப்பினும் கற்பனைக்கும் எட்டாத உயரத்தைத் தன்னம்பிக்கையாலும் தன் தளராத முயற்சியாலும் பெற்ற இவர் நிரந்தரமாக சரித்திரத்தில் மட்டுமல்ல, மக்கள் மனத்திலும் இடம்பிடித்துவிட்டார். இவரைப் பற்றி மட்டும் இதுவரை 16000 - ஆம் பதினாறாயிரம் புத்தகங்கள் வெளி வந்துள்ளன. தற்போது அச்சில் குறைந்தது 25 புத்தகங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு முறையும் இவரைப் பற்றிய புத்தகம் வெளிவரும் போதும்

Read More

முடியவேண்டிய இடத்தில் ஒரு துவக்கம், துவங்கவேண்டிய இடத்தில் ஒரு முடிவு!

சமீபத்தில் நாளிதழ்களில் நாம் படித்த இரண்டு செய்திகள் நம் கவனத்தை மிகவும் கவர்ந்தன. காரணம் அந்த செய்திகள் உணர்த்திய வாழ்வியல் பேருண்மைகள். நம் வாசகர்கள் நிச்சயம் அது பற்றி தெரிந்கொள்ளவேண்டும். நாம் அனைவரும் இத்தோடு முடிந்துவிட்டது என்று நினைக்கும் இடங்களில் தான் சிலருக்கு வாழ்க்கை தொடங்குகிறது. தொடங்க வேண்டிய இடங்களில் சிலருக்கு முடிந்துவிடுகிறது. நேர்மறை சிந்தனையாலும் நல்ல பழக்கவழக்கங்களாலும் அணுகுமுறைகளில் ஏற்படுத்திக்கொண்ட மாற்றத்தாலும் முடிந்து போனதாக கருதப்பட்ட ஒருவரது வாழ்க்கை துளிர்த்திருக்கிறது. கூடா

Read More

திருவாரூர் தந்த திருஞானசம்பந்தருடன் நம் தியாகேசர் தரிசனம்!

திருவாரூர் தியாகேசரின் அருளால் நமது ஆலயதரிசனம் + சாதனையாளர் சுற்றுப் பயணம் மிக மிக சிறப்பாக நடந்தேறியது. நமது வாசகர்களும் அதில் பங்கேற்று சிறப்பித்தது மறக்க முடியாத ஒன்று. இப்போதைக்கு நமது சுற்றுப் பயணம் ஒரு குவிக் அப்டேட். என்ன சொல்வது... எதை சொல்வது... எப்படி சொல்வது... திணறித்தான் போனோம்! வாசகர் ஒருவர் கேட்டுக்கொண்டையடுத்து முன்னதாக வால்பாறை செல்லும் வழியில், ஆழியாரில் அமைந்துள்ள வேதாத்திரி மகரிஷியின் அறிவுத் திருக்கோவில் சென்றிருந்தோம். நம்முடன் திருப்பூரை

Read More

போகும் பாதையில் புயலா? – MONDAY MORNING SPL 31

தன் தந்தை அருகில் அமர்ந்திருக்க, காரை இளம் பெண் ஒருவர் டிரைவ் செய்து கொண்டிருந்தாள். அந்நேரத்தில் மழையுடன் கூடிய பெரும்புயல் ஒன்று அவர்கள் சென்றுகொண்டிருந்த பாதையை தாக்கியது. முன்னால் கார்களில் சென்றுகொண்டிருந்தவர்கள் எல்லாரும் மேற்கொண்டு செல்ல முடியாமல் அவரவர் வாகனங்களை ஓரங்கட்டினர். "அப்பா... நான் என்ன செய்யட்டும்?" பெண் பதட்டத்துடன் கேட்டாள். "நீ பாட்டுக்கு போய்கிட்டே இரு..." என்றார் தந்தை. சில நூறு மீட்டர்கள் சென்றபிறகு, மிகப் பெரிய MULTI-AXLE டிரக் ஒன்று கூட புயலுக்கு

Read More

ஆலய தரிசனம் & சாதனையாளர் சந்திப்பு – நம் திருவாரூர், கோவிந்தபுரம், திருக்கடவூர் பயணம்!

ரைட்மந்த்ரா குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நெருங்கிய நண்பர் ஒருவரின் இல்ல திருமணத்தில் கலந்துகொள்ள வியாழன் இரவு (பிப்ரவரி 6) பொள்ளாச்சி கிளம்புகிறோம். இது போன்று BREAK  நமக்கு கிடைப்பது மிகவும் அபூர்வம் என்பதால் இந்த பயணத்தை அப்படியே நமது தளத்திற்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. இதை தொடர்ந்து இறையருளால் ஆலய தரிசனம், சாதனையாளர் சந்திப்பு உள்ளிட்ட நமது தளத்தின் முக்கிய அம்சங்களை இந்த பயணத்தில் ஏற்பாடு

Read More

ரத சப்தமி – சூரிய பகவானின் அருளை பெற அருமையான வாய்ப்பு !

பிரத்யட்ச தெய்வம் என்று கொண்டாடப்படும் சூரியனின் வட திசைப் பயணம், தை முதல் நாள் தொடங்குகிறது என்று சொன்னாலும், அந்தப் பயணம் தைமாதம் ‘சப்தமி’ நாளில்தான் ஆரம்பமாகிறது. திருப்பத்தில் ஓடிவரும் ஏழுபேரும் ஒரே நேர்க்கோட்டில் வருவது தாமதப்படும் என்பதை விளையாட்டுப் போட்டியில் நாம் பார்த்திருக்கிறோம். அதுபோல ஏழு குதிரைகளும் ஒரு சேரத் திரும்பி, பயணம் தொடங்கும் நாள் தை மாத சப்தமி. ரத சப்தமி விரதம் மகத்துவம் வாய்ந்த விரதங்களில்

Read More

நினைப்பது நிறைவேறும்; தட்டுங்கள் திறக்கப்படும்!

நம் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பு முனையாக அமைந்தது பார்வைத் திறன் சவால் கொண்ட சாதனையாளர் திரு.இளங்கோ அவர்களின் நட்பும் அறிமுகமும் என்றால் மிகையாகாது. இது பற்றி ஏற்கனவே நாம் பலமுறை கூறியிருக்கிறோம். பார்வையற்றவர்கள் குறித்த நமது மதிப்பீட்டையே இளங்கோ அவர்கள் மாற்றிவிட்டார் என்றால் மிகையாகாது. பிறவியில் இருந்தே பார்வை இல்லாத ஒருவர், கஷ்டப்பட்டு, படித்து, முன்னேறி இன்று ஒரு நிறுவனத்திற்கு தலைமை பொறுப்பேற்று, பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும்,  தொழில் நிறுவனங்களுக்கும், சென்று

Read More

புற்றுநோயை ஆரத்தி எடுத்து வரவேற்கும் உணவு பழக்கவழக்கங்கள் – ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!!

"இன்னாருக்கு தான் கேன்சர் வரும்" என்று கூற முடியாதபடி, எவருக்கு வேண்டுமானாலும் இன்று கேன்சர் எனப்படும் புற்றுநோய் சர்வசாதாரணமாக வருகிறது. நமது தளத்தின் பிரார்த்தனை கிளப்புக்கு இதுவரை வந்த கோரிக்கைகளில் பெரும்பாலானவை புற்றுநோய் பாதிப்பு சம்பந்தப்பட்ட கோரிக்கைகளே. புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் புற்றுநோய் நிச்சயம் வரும் என்றாலும் அவற்றை பயன்படுத்தாதவர்களுக்கு அது வரவே வராது என்று கூறமுடியாது. காரணம்... மாறிவிட்ட உணவு முறைகள் மற்றும் பழக்கவழக்கங்கள். உயிர்க்கொல்லி நோய்களில் முதன்மையானதாக விளங்குவது

Read More

உதை மேல் உதை – ஒட்டகச் சிவிங்கி கற்றுத் தரும் பாடம் – MONDAY MORNING SPL 30

இறைவன் படைப்பில், ஒவ்வொரு விலங்கிடமும் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய மகத்தான விஷயம் ஏதாவது ஒன்று இருக்கும். ஒட்டகச் சிவிங்கிகள் குட்டி போடுவதே ஒரு ஆச்சரியமான நிகழ்வு தான். தாயானது பிரசவிக்கும்போது குட்டி, சுமார் 6 அடி உயரத்தில் இருந்து கீழே விழும். தாய் அதனை திரும்பி பார்த்து தனது குட்டியை உறுதி செய்துகொள்ளும். இயற்கையின் விதிப்படி ஒட்டகச் சிவிங்கியின் குட்டி பிறந்த ஒரு மணிநேரத்துக்குள் தானே எழுந்து நிற்கும் வல்லமையை பெற்றுவிடும். எப்படியெனில் பிறந்த

Read More