Home > 2013 > December (Page 2)

ஆருத்ரா தரிசனம் – சிவபெருமானின் திருநடனத்தை காண ஆதிசேடனை அனுப்பிய திருமால்!

18/12/2013 புதன் மார்கழி திருவாதிரை. சிறப்பு மிக்க ஆருத்ரா தரிசனம். சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் திருவாதிரை நட்சத்திரமாகும். திரு என்ற அடைமொழி கொண்ட இரு நட்சத்திரங்கள் திருவாதிரையும், திருவோணமும் ஆகும். இதில் திருவாதிரை சிவபெருமானுக்கும், திருவோணம் திருமாலுக்கும் உகந்தவையாகச் சிறப்பிக்கப்படுகின்றன. இதில் இருந்தே திருவாதிரை நட்சத்திரத்தின் சிறப்பு நமக்கு விளங்கும். ஒரு சிறப்பு, மற்றொரு சிறப்புடன் சேரும்போது அவற்றின் சிறப்பு பன்மடங்காகும் என்பதில் சந்தேகமில்லை. அதேபோன்றுதான் சிறப்பான மார்கழி மாதத்தில் வரும்

Read More

கட்ட பஞ்சாயத்து தெரியும் – ஏழைகளுக்கு உதவும் ‘சட்ட பஞ்சாயத்து’ தெரியுமா?

பகவத் சேவைக்கு இணையான மகத்தான சேவைகள் பல உங்கள் கவனத்தை வேண்டி காத்திருக்கின்றன தெரியுமா? சக மனிதர்கள் வாழ்வு மேம்படவும் அவர்கள் வாழ்வு சிறக்கவும் ஆற்றும் சமூக காரியங்களே அவை. 'மக்கள் சேவையே என்றும் மகேசன் சேவை'. கிராமப்புறத்தில் உள்ள ஒரு ஏழை விவசாயியோ, அல்லது நெசவுத் தொழிலாளியோ அல்லது ஒரு ஏழை விதவைத் தாயோ தங்களுக்கு கிடைக்கவேண்டிய அரசாங்க உதவித் தொகைக்காக எத்தனை அலைய வேண்டியிருக்கிறது தெரியுமா? அதையும் மீறி

Read More

மிளகளவு கைங்கரியமும் மலையளவு புண்ணியமும்! மார்கழி முதல் நாள் தரிசனம்!!

எப்போது ஆலயத்திற்கு செல்லவில்லை என்றாலும் மார்கழி மாதம் மட்டுமாவது ஆலயத்திற்கு தவறாமல் செல்லவேண்டும். ஏனெனில் வருடம் முழுவதும் ஆலயத்திற்கு சென்ற பலன் இந்த ஒரு மாதம் சென்றால் கிடைக்கும். அதுவும் மார்கழி அதிகாலை இறைவனை விஸ்வரூப தரிசனத்தில் தரிசிப்பது மிகவும் விஷேஷம். அவரவர் சௌகரியப்படி தொன்மை வாய்ந்த ஆலயம் ஏதேனும் ஒன்றை அவர்கள் பகுதிக்கு அருகாமையில் தேர்ந்தெடுத்து சென்று வருதல் நலம். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஆலயம் வணிக நோக்கில் கட்டப்பட்டதாக இல்லாமல்

Read More

உள்ளிருக்கும் முத்தை அறியாமல் சிப்பியை ஒதுக்குவதா? – MONDAY MORNING SPL 24

ஒரு இளைஞன் வெளியூர் சென்று திரும்பும்போது பாலைவனத்தின் வழியே திரும்ப நேர்ந்தது. அப்போது ஒரு சுனையில் நீரை கண்டான். ஆவலுடன் ஓடிச்சென்று நீரை பருகியவன், அந்த நீரின் சுவையில் அளவற்ற மகிழ்ச்சியடைந்தான். குடிமக்களை சிறந்த முறையில் பரிபாலனம் செய்யக்கூடிய தனது நாட்டு மன்னனுக்கு அந்த நீரை கொடுத்தால் அவர் மிகவும் மகிழ்ச்சியடைவார் என்று கருதி, தன்னுடைய தோல் பையில் அந்த நீரை கொஞ்சம் நிரப்பிக்கொண்டான். நான்கு நாட்கள் பயண முடிவில் தன்னுடைய

Read More

மணிகண்டனை தேடி வந்த முருகன்! ஒரு உண்மை சம்பவம்!!

பாரதி விழாவில் எத்தனையோ நெகிழவைக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதில் ஒன்றை தற்போது பார்ப்போம். கடந்த கந்தசஷ்டியின்போதும், அதற்கு அடுத்த நாள் நடைபெற்ற சுப்ரமணியசுவாமி திருக்கல்யாணத்தின்போதும் குன்றத்தூர் முருகனுக்கு பூக்களும் மாலையும் நாம் வாங்கித் தர விரும்பியபோது வடபழனியில் கடை வைத்திருக்கும் மணிகண்டன் என்பவர் நமக்கு பூக்களை விலை மலிவாக கொடுத்ததோடல்லாமல் நமது கைங்கரியத்தில் அவரும் பங்கேற்று மாலைகளை இலவசமாக தந்து நமக்கு இன்ப அதிர்ச்சி அளித்தது உங்களுக்கு தெரிந்திருக்கும். அது குறித்து

Read More

பாக்கியசாலிகள் யார் தெரியுமா? Rightmantra Prayer Club

நம்மிடம் இல்லாதவற்றுக்காக இறைவனுக்கு நன்றி கூறுவோம். ஏனெனில் அவை தான் இறைவனை நமக்கு அடையாளம் காட்டுகின்றன! நமக்கு ஏதாவது தெரியவில்லை என்றால் இறைவனுக்கு நன்றி கூறுவோம். ஏனெனில் புதியவைகளை கற்றுக்கொள்ள அது வாய்ப்பளிக்கிறது. சோதனையான காலகட்டம் வரும்போது இறைவனுக்கு நன்றி கூறுவோம். ஏனெனில் அது தான் நம்மை சுற்றியிருப்பவர்களை நமக்கு அடையாளம் காட்டுகிறது. நம்மிடம் உள்ள குறைபாட்டுக்காக இறைவனுக்கு நன்றி கூறுவோம். ஏனெனில், அது நம்மை நாம் மேம்படுத்திக்கொள்ள உதவுகிறது. நாம் செய்த தவறுகளுக்காக இறைவனுக்கு

Read More

எதை தவற விட்டாலும் மார்கழியை தவற விடவேண்டாம்!

மாதங்களில் மிக மிக மேன்மை பெற்றதும் மகத்துவம் பெற்றதுமான மார்கழி மாதம் இன்னும் இரண்டு நாட்களில் (திங்கள் டிசம்பர் 16 முதல்) பிறக்கவிருக்கிறது. மார்கழி மாதத்தை பீடை மாதம் என்பார்கள். அதன் அர்த்தம் என்ன தெரியுமா? 'பீடுடைய மாதம்' அதாவது செல்வம் பொருந்திய மாதம் என்பது! அது நாளடைவில் மருவி பீடை மாதம் என்று வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஒரு மாதம் முழுதும் இறை வழிபாட்டிற்கு என்றே ஒதுக்க வேண்டும் என்பதால்

Read More

வயிற்றுக்கு சோறிட வேண்டும், இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம்!

பாரதி விழா நடைபெற்ற இடத்தில் மேடை அமைப்பு மற்றும் STAGE BACKDROP ஆகியவைகளை வடிவமைப்பது தொடர்பாக அளவெடுக்க டிசம்பர் 1, அதாவது சென்ற ஞாயிறுக்கு முந்தைய ஞாயிறு, நம் நிகழ்ச்சி நடந்த இடமான சக்தி விநாயகர் கோவிலுக்கு சென்றிருந்தோம். அது தொடர்பாக யோசனைகள் கேட்க, வீடியோ கிராபர் மற்றும் ஆடியோ அமைப்பாளர் ஆகியோரையும் அன்று வரச் சொல்லியிருந்தோம். அவர்களும் வந்திருந்தார்கள். அவர்கள் முன்னிலையில் நாம் MEASUREMENT செய்து கொண்டிருந்தபோது, நிகழ்ச்சி நடைபெற்ற

Read More

ராம நாமமும் சுந்தரகாண்டமும் வாசகரின் வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்கள்!

நம் தளம் சார்பாக பலருக்கு சுந்தரகாண்டம் நூலை அனுப்பியிருக்கிறோம். அனுப்பி வருகிறோம். பலர் அதை படித்தும் வருகிறார்கள். சிலருக்கு அவர்கள் வாழ்வில் வியத்தகு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஏற்பட்டு வருகின்றன. (அது குறித்து சில மின்னஞ்சல்கள் வந்து அதை நாம் இங்கு பகிர்ந்தும் இருக்கிறோம் என்பது நீங்கள் அறிந்ததே!) இன்னும் சிலருக்கு தங்கள் வாழ்வில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் அறியாமையினால் அது குறித்து அவர்கள் உணரவில்லை. காரணம் முன்னேற்றம் / மாற்றம் என்றாலே

Read More

இறைவனுக்கு மிக அருகில் நம்மை கொண்டு செல்வது எது ?

நம் பாரதி விழாவின் சிறப்பு விருந்தினர்களில் ஒருவரான மதுரா டிராவல்ஸ் திரு.வீ.கே.டி பாலன் அவர்கள் தனது 'சொல்ல துடிக்குது மனசு' நூலில் எழுதியுள்ள அருமையான சம்பவம் இது. இறைவனையும் இறைவனது செயல்பாடுகளையும் குறைவாக மதிப்பிட்டு அவனை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைத்து வைத்து அதையும் பெருமையடித்து கொள்வோர் அவசியம் உணரவேண்டிய உண்மை இது. "தன் தெய்வமே உயர்ந்தது மற்ற தெய்வங்கள் தாழ்ந்தது என்று கருதுவது அறிவிலிகளின் செயல்" என்று கூறுகிறார் பாரதியார். பேதங்கள்

Read More

நமக்கென்று ஒரு சொந்த வீடு – உங்கள் கனவு இல்லத்தை வாங்க / கட்ட வழிகாட்டும் பதிகம்!

மாதம் ரூ.5 ஆயிரம் சம்பாதிப்பவரானாலும் சரி, 5 லட்சம் சம்பாதிப்பவரானாலும் சரி இந்த ஆசை இல்லாதவர் எவரும் இருக்க முடியாது. உலகம் என்னும் ஓட்டப்பந்தய மைதானத்தில் ஓடிக்கொண்டிருப்பவர்கள் ஒருவர் விடாமல் அனைவருக்கும் இந்த ஆசை உண்டு. நம்மை சுற்றியுள்ள ஐந்தறிவு விலங்குகள் கூட தங்களுக்கென்று ஒரு இருப்பிடத்தை கட்டிக்கொள்ளும் போது நமக்கென்று சொந்த வீடு ஒன்று வேண்டும் என்கிற கனவு இல்லாதவர் எவரும் இருக்க முடியுமா? சிறியதோ பெரியதோ மாடமாளிகையோ ஒலைக்குடிசையோ

Read More

பாரதி விழாவும் எறும்புகளும் – MONDAY MORNING SPL 23

பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சரின் மடத்தில் எறும்புகள் தொல்லை இருந்தது. ஏதாவது ஒரு உணவுப் பொருளை வைத்துவிட்டால் போதும் எறும்புகள் அவற்றை மொய்த்துவிடும். மடத்தில் ஒரு முறை ஒரு விழாவிற்காக லட்டுக்கள் செய்யப்பட்டன. ஒரு பெரிய தட்டு நிறைய அடுக்கி வைக்கப்பட்ட லட்டுக்களை இரவு நேரத்தில் எறும்புகளிடம் இருந்து எப்படி காப்பாற்றுவது என்று சீடர்களுக்கு கவலை ஏற்பட்டது. அதுபற்றி பகவானிடமே கேட்டார்கள். அதற்கு மெலிதாக சிரித்தவாறே பதில் அளித்த பகவான், சீடர்களிடம் லட்டு நிறைந்த

Read More

நம்பினோர் கெடுவதில்லை! இது நான்மறை தீர்ப்பு!!

நம் தளத்தின் சார்பாக டிசம்பர் 8, ஞாயிறு மாலை நடைபெற்ற 2013 ஆம் ஆண்டு பாரதி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. பாரதி விழாவின் சிறப்பு விருந்தினர்களில் ஒருவரான திரு.வீ.கே.டி. பாலன் அவர்களின் தாயார் எதிர்பாராத விதமாக சில நாட்களுக்கு முன்னர் இயற்கை எய்துவிட, அச்செய்தி நமக்கு பேரிடியாக அமைந்தது. போதாகுறைக்கு சென்னையை திடீரென்று புயல் மையம் கொண்டு பயமுறுத்த, சனிக்கிழமை முழுதும் மழை சென்னையை புரட்டி எடுத்தது. ஞாயிறும் மழை

Read More

மனதில் உறுதி வேண்டும்!

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பல. (குறள் 337) மேற்படி குறளுக்கு பொருள் என்னவென்றால், அடுத்த நொடி வாழ்க்கை எவருக்கும் இங்கே நிச்சயமில்லை. இதில் அவர்கள் கனவுகள் மட்டும் கோடிகளில் இருக்கும்! பாரதி விழாவுக்கான ஏற்பாடுகளை ஒரு பக்கம் தீவிரமாக போய்க்கொண்டிருக்கும் நிலையில், நேற்று மாலை பணிமுடித்து சுமார் 7.30 மணியளவில் அலுவலகத்தைவிட்டு வெளியே வருகிறோம். அப்போது தான் எமக்கு அந்த எஸ்.எம்.எஸ். வந்தது. "மதுரா டிராவல்ஸ் அதிபர் வீ.கே.டி. பாலன்

Read More