Home > 2013 > September (Page 2)

மனித முயற்சியும் தெய்வத்தின் அனுக்ரஹமும் சேரும்போது…

இரண்டு நாள் கரூர் பயணத்தில் எக்கச்சக்க அனுபவங்கள். எதை சொல்வது எதை விடுவது என்று தெரியவில்லை. கருவூரார் சன்னதி மற்றும் பசுபதீஸ்வரர் - அலங்காரவல்லி அம்பாளின் தரிசனம், சதாசிவ பிரம்மேந்திராள் அதிஷ்டானம், ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமிகளின் சமாதி என்று ஒவ்வொரு இடத்திலும் ஒரு ஆத்மானுபவம். ஏகப்பட்ட புகைப்படங்களை எடுத்து குவித்திருக்கிறேன். ஒவ்வொன்றாக எத்தனை விரைவில் பகிர்ந்துகொள்ளமுடியுமோ அத்தனை விரைவில் பகிர்ந்துகொள்கிறேன். இவை தவிர, மஹாளய ஸ்பெஷல் உள்ளிட்ட வேறு பல விஷயங்கள்

Read More

அண்ணன்-தம்பி தனித்தனியே சிரார்த்தம் செய்யவேண்டுமா? மஹாளய SPL 2

சிரார்த்தம், தர்ப்பணம் ஆகியவற்றுக்கு என்ன வித்தியாசம் என்று வாசகி ஒருவர் கேட்டிருக்கிறார். அது பற்றிய விளக்கம் இத்துடன் தரப்பட்டுள்ளது. மேலும் வரும் செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 4 வரை வரக்கூடிய இந்த மஹாளய புண்ணிய காலத்தை பயன்படுத்தி தத்தங்கள் பிதுர் கடன்களை தவறாமல் செலுத்தி சகல வித துன்பங்களிலும் இருந்து விடுதலை பெறவேண்டும் என்று நாம் கருதுகிறோம். ஆகவே இந்த மஹாளய காலம் முடிவடையும் வரை அது தொடர்பான

Read More

ஒரு கப் காஃபியும் நம் வாழ்க்கையும் – Monday Morning Spl 11

ஒரு பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்த மாணவர்கள் கேம்பஸ் தேர்விலும் வெற்றி பெற்று மிகப் பெரிய நிறுவனங்களில் பணியில் சேர்கின்றனர். தங்களுக்கு நல்ல முறையில் கல்வி போதித்து ஓய்வு பெற்ற தங்கள் பேராசிரியர் ஒருவரின் பிறந்த நாளன்று அவருக்கு வாழ்த்தும் நன்றியும் தெரிவிப்பதற்காக அவர் வீட்டுக்கு சென்றனர். மாணவர்களும் பேராசிரியரும் ஒருவருக்கொருவர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். மெல்ல அவர்கள் பேச்சு பணியிடத்திலும் வாழ்க்கையிலும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை குறித்து திரும்பியது. மாணவர்கள் வாழ்க்கை

Read More

நற்பலன்களை வாரி வழங்கும் பித்ருக்களுக்குரிய மஹாளய புண்ணிய காலம் – மஹாளய SPL 1

இந்த வாழ்வில் நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் யாவும் நமது முற்பிறப்பு பாப புண்ணியத்துக்கு ஏற்பவே அமையும். நம்பினாலும் நம்பாவிட்டாலும் உண்மை இதுவே. அப்படி நமக்கு கிடைக்கவேண்டிய நற்பலன்களை சரியாக பெற்றுத்தருவதில் பித்ருக்கள் எனப்படும் நம் முன்னோர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். இந்த வாழ்வில் நாம் அவசியம் செய்ய வேண்டிய கடமைகளுள் பிதுர் காரியங்களும் ஒன்று. பித்ருக்களுக்கு செய்யவேண்டிய கடமையை செய்ய தவறினால் அவர்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். சுபகாரியத்

Read More

கடவுள் என்னும் முதலாளிக்கு எந்த தொழிலாளியை பிடிக்கும் ? Rightmantra Prayer Club

கடவுள் என்னும் முதலாளிக்கு எந்த தொழிலாளியை பிடிக்கும் ? இது பற்றி யாராவது எப்பொழுதாவது யோசித்திருக்கிறீர்களா? மகா பெரியவா அவர்கள் இது பற்றி கூறிய ஒரு அற்புதமான உதாரணத்திலிருந்து இந்த கேள்விக்கான விடையை பார்ப்போம்.... ஒரு நிறுவனத்தின் முதலாளியின் கீழே இரண்டு பேர் பணிபுரிகின்றனர். அதில் ஒருவன், சரியான சோம்பேறி. தனது வேலைகளை சரிவர செய்வதில்லை. மற்றவர்கள் செய்வதிலும் உதவுவதில்லை. ஆனால் முதலாளியை கண்டால் மட்டும் ஓடிப் போய் கூழை கும்பிடு

Read More

விரும்பிய வேலை கிடைக்க, மழலை வரம் கிட்ட, வாஸ்து தோஷம் நீங்க, மாதவிடாய்க் கோளாறுகள் நீங்க – பரிகாரம்… பரிகாரம்!

பாரம்பரியமிக்க ஒவ்வொரு ஆலயத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு. சக்தி உண்டு. அந்தந்த கோவிலின் வரலாற்றுடன் தொடர்புடையவர்கள் - மற்றவர்கள் நன்மைக்காக - குறிப்பிட்ட கோரிக்கைகளை வரமாக பெறும்போது அது பரிகாரத் தலமாகிறது. அந்த வகையில் பிரசித்தி பெற்று விளங்கும் சில பரிகாரத் தலங்களை பார்ப்போம். மழையின் காரணமாக வீட்டில் பிராட்பேண்ட் இணைப்பு பழுதடைந்துள்ளது. புகார் அளித்துள்ளேன். எனவே முன்னெப்போதோ தயார் செய்த இந்த பதிவை STANDBY பதிவாக அளிக்கிறேன். நம்பிக்கையுடன் பரிகாரம் செய்யுங்கள்.

Read More

“நெருநல் உளனொருவன் இன்றில்லை…” – ஒரு சிவ பக்தையின் இறுதிப் பயணம்!

திருக்கழுக்குன்றம் தாமாதரன் ஐயா அவர்களின் திருவாசகம் முற்றோதல் சென்ற மாதம் 18 ஆம் தேதி சீர்காழி பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்றது. சம்பந்தர் ஞானப்பால் அருந்திய தலமாதலால் சீர்காழி செல்ல பேராவல் கொண்டிருந்தோம். எனவே அந்த சந்தர்ப்பத்தை நழுவவிட விரும்பவில்லை. அதே சமயம் பணியிடத்து கமிட்மென்ட்டுகளால் கடைசி வரை நாம் சீர்காழி செல்வது நிச்சயமாக இருக்கவில்லை. எனவே நண்பர்கள் எவரையும் சீர்காழிக்கு அழைக்கவில்லை. ஒரு வழியாக 17 ஆம் தேதி சனிக்கிழமை அரை

Read More

ஓநாய் சண்டையில நீங்க எந்த ஓநாய் பக்கம்? Monday Morning Spl 10

தனது பேரக்குழந்தையுடன் அந்த பெரியவர் வாக்கிங் வந்துகொண்டிருந்தார். குழந்தை ஜாலியாக அக்கம் பக்கம், சாலையில் போவோர் வருவோர் ஆகியோரை வேடிக்கை பார்த்தபடி நடந்து வந்து கொண்டிருந்தான். "எனக்குள் ஒரு மிகப் பெரிய போராட்டம் நடந்துகிட்டுருக்கு செல்லம்" "என்ன தாத்தா அது?" "இரண்டு ஓநாய்களுக்கிடையேயான கடும் சண்டை அது." "என்னது ஓநாயா?" "ஆமாம்... ஒரு ஓநாய் அசிங்கமாகவும் கொடூரமாகவும் இருக்கிறது. அதனிடம் காமம், கோபம், பொறாமை, சுயபச்சாதாபம், ஏமாற்றம், தாழ்வுமனப்பான்மை, தற்பெருமை, ஆணவம், சுயநலம் போன்ற அருவருக்கத்தக்க குணங்கள்

Read More

விநாயகருக்கு அர்ச்சித்த அருகம்புல்லுக்கு ஈடு இணை இந்த உலகில் உண்டா? விநாயகர் சதுர்த்தி SPL

இந்த விநாயகர் சதுர்த்தியோடு நம் தளம் துவங்கி ஒரு வருடம் ஆகிறது. மக்களின் ரசனைகளும் ஆர்வங்களும் தரமற்ற விஷயங்களில் விரயமாகிக்கொண்டிருக்கும் இன்றைய காலகட்டங்களில், வாழ்வில் வெற்றி பெறுவதற்கும் சாதிப்பதற்கும் குறுக்கு வழிகளை தேடி அனைவரும் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு சூழ்நிலையில் ஆன்மீகத்திற்கும் சுயமுன்னேற்றத்திற்கும் என பிரத்யேகமாக ஒரு தளத்தை துவக்கி, அதில் தினசரி பதிவை அளித்து அதை நடத்துவது என்பது சாதாரண காரியமல்ல. திருவருள் துணையிருந்தால் மட்டுமே அது சாத்தியம். உங்கள் பலரின்

Read More

கடவுள் என்ற ஒருவர் இருந்தால் ஏன் இத்தனை துன்பங்கள்? Rightmantra Prayer Club

ஹேர் கட் செய்துகொள்வதற்கும் தாடியை ட்ரிம் செய்து கொள்வதற்கும் சலூனுக்கு சென்றான் அவன். பார்பர் அவனுக்கு முடியை வெட்டிக்கொண்டே பேச்சு கொடுத்தார். சற்று நேரத்தில் இருவரும் நன்கு பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். பகுத்தறிவுவாதியான அந்த பார்பர், "எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. கடவுள் இருக்கிறார் என்று நான் கருதவில்லை!" என்றார். "ஏன் அப்படி சொல்கிறீர்கள் ?" என்று இவன் கேட்க, "கொஞ்சம் கண்ணை நல்லா திறந்து வெச்சிகிட்டு ரோட்டுல நடந்து பாருங்க. எத்தனை மக்கள் கஷ்டப்படுறாங்க.

Read More

வறுமையில் வாடும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் குடும்பத்தினர் – கல்விக்கே கடன் வாங்கும் பரிதாபம்!

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மிக முக்கியமான ஒருவராக நினைவு கூறப்பட்டவர், வ.உ.சி. என்று அழைக்கப்பட்ட வள்ளிநாயகம் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை அவர்கள். இவரைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். படித்திருக்கிறேன். பல ஆண்டுகளுக்கு முன்பு, இவரது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த 'கப்பலோட்டிய தமிழன்' படத்தை பார்த்திருக்கிறேன். அதற்கு பிறகு பல ஆண்டுகள் ஓடிவிட்டபோதும் அவரை நினைவு கூர்ந்ததில்லை. ஆனால் ரைட்மந்த்ரா நடத்திக்கொண்டிருக்கும் புண்ணியமோ என்னவோ,

Read More

பகத்சிங் பிறந்தநாள் பேச்சுப்போட்டி – ரைட்மந்த்ரா ஆண்டு விழாவில் பேச பள்ளி மாணவர்களுக்கு ஓர் வாய்ப்பு!

அன்புடையீர், வரும் செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி ஆன்மீக, சுயமுன்னேற்ற கருத்துக்களை பதிவு செய்துவரும்  நம் www.rightmantra.com இணையதளத்தின் முதலாம் ஆண்டு விழா நடைபெறவிருக்கிறது. தேசியத்தையும், தெய்வீகத்தையும், தன்னம்பிக்கையையும் இணைக்கும் பல்வேறு பயனுள்ள நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்ப்பட்டு வருகின்றன. விழாவின் ஒரு அங்கமாக சுதந்திர போராட்ட வீரர்  புரட்சியாளர் பகத்சிங் அவர்களின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை

Read More

எழுத்தறிவித்த நம் இறைவனுக்கு இன்று நன்றி கூர்வோம் – ஆசிரியர் தின ஸ்பெஷல்!

ஆசிரியப் பணியின் இலக்கணங்கள் தற்போது மாறிவிட்டாலும் நாளை பாரதத்தின் தூண்களாம் மாணவர்கள் ஏற்றம் பெற தன்னலம் கருதாது உழைக்கும் ஆசிரியர்கள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் அத்தனை பேருக்கும் எங்கள் வந்தனங்கள். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறப்பு பதிவு எழுத நினைத்தேன். ஆனால் பல்வேறு அலுவல்களில் ஈடுப்பட்டுள்ளமையால் நேரம் கிட்டவில்லை. எனவே தினமலர் மற்றும் கல்ச்சுரல் இந்தியா ஆகிய தளங்களில் இருந்து இரு கட்டுரைகளை எடுத்து அவற்றை ஒன்றாக்கி தந்திருக்கிறேன். உங்கள் வாழ்நாளில்

Read More

அள்ளித் தரும் இந்த வங்கியிடம் பெற்றுக்கொள்ளத் தயாரா? பொருளாதார தன்னிறைவை நோக்கி ஒரு பயணம் – Part 2

பொருளாதார தன்னிறைவை நோக்கி ஓர் பயணம் பற்றிய தொடரின் இரண்டாவது அத்தியாயம் இது. இந்த தொடரை பொருத்தவரை பொருளாதார தன்னிறைவை நீங்கள் பெறுவதற்கு உங்களை தகுதியுடையவராய் ஆக்குவதே நம் நோக்கம். சுருங்கச் சொன்னால் மீனை தருவதை விட மீன் பிடிக்க கற்றுத் தருவதே நம் நோக்கம். இந்த தொடரில் இரண்டாம் அத்தியாயத்திற்கு வேறொரு கட்டுரையை தான் நாம் எழுதி வந்தோம். ஆனால் சமீபத்தில் இணையத்தில் படித்த ஒன்று இந்த தொடரில்

Read More