Home > 2013 > August (Page 2)

‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – நம் தள வாசகியின் நெகிழ்ச்சியான அனுபவம்!

பிரார்த்தனை பதிவில் நாம் வழக்கமாக அளிக்கும் கதைக்கு பதில் இந்த வாரம் ஒரு உண்மை சம்பவத்தை அளிக்க எண்ணியுள்ளேன். சில வாரங்களுக்கு முன்பு நமது பிரார்த்தனை கிளப்பில் பிரார்த்தனைக்கு மனு செய்திருந்த நம் தள வாசகி திருமதி.உஷா அவர்கள் சமீபத்தில் நமக்கு அனுப்பியுள்ள நெகிழ்ச்சியான மின்னஞ்சலை இணைத்துள்ளேன். தனது மகளுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்க பிரார்த்தனை செய்யும்படி கேட்டிருந்தார். நாமும் அது பற்றி பதிவளித்திருந்தோம். பிரார்த்தனையும் நல்லபடியாக நடந்துமுடிந்தது. (http://rightmantra.com/?p=4209) அவருடைய மகளுக்கு வேலை

Read More

லக்ஷ்மி ராவே மா இண்டிகி – இன்று வரலட்சுமி விரதம் – சிறப்பு பதிவு !

இன்று வரலக்ஷ்மி விரதம். நமது பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்று. செல்வத்திற்கும் சகல சௌபாக்கியங்களுக்கும் அதிபதியாக விளங்கும் அன்னை லக்ஷ்மியை இன்று பூஜித்து நன்றி செலுத்தவேண்டிய நாள். நமது தளம் சார்பாக பல சிறப்பு தகவல்களுடன் விசேஷ பதிவு ஒன்று அளிக்க எனக்கு ஆசை. ஆனால் அப்படி அளித்திருந்தால் அதை சற்று முன்கூட்டியே அளித்திருக்கவேண்டும். இடைவிடாத பணிகள் காரணமாக பதிவு எழுத நேரம் கிட்டவில்லை. விடுமுறை நாட்களிலும் நம் தளத்தின் மாதாந்திர

Read More

50 காசுகள் to லட்சங்களை புரட்டும் சங்கிலி தொடர் உணவகங்கள் – ஒரு மெழுகுவர்த்தியின் பயணம்!

பொதுவாக பதிவு எழுதுவதைவிட அதற்கு முன்னுரை கொடுப்பது மிகவும் சவாலான விஷயம். முன்னுரை சரியாக அமையவில்லை என்றால் உள்ளே நாம் என்னதான் நல்ல CONTENT கொடுத்திருந்தாலும் அது எடுபடாது. பேட்ரீசியா அவர்களுடனான நமது சந்திப்பை விளக்கும் இந்த பதிவை பொறுத்தவரை முன்னுரை கொடுப்பது எனக்கு மிக மிக கடினமாக இருந்தது. காரணம்.......... என்ன சொல்லி, எதைச் சொல்லி, முன்னுரை அளிப்பது? * இப்படியும் கூட நம்மிடையே ஒரு சாதனையாளர் இருக்கிறார் நடமாடுகிறார் என்று

Read More

ஒளவையை தேடி வந்த அனுமன்!

சாதனையாளர்கள் & நல்லோர்களை சந்திக்க புறப்பட்டுள்ள நமது நெடும்பயணத்தின் சில அத்தியாயங்கள் இவை. தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருப்பவனுக்கு இடையிடையே  தாகம் எடுக்குமல்லவா? அப்படி தாகம் எடுக்கும்போது சற்று இளைப்பாற என் பாதையில் இறைவன் அமைக்கும் சோலைகள் தான் இந்த சந்திப்புக்கள். இவை என்னை முழுமையாக ரீ-சார்ஜ் செய்வது மட்டுமின்றி மனதை மிகவும் பக்குவப்படுத்துகின்றன. இறைவன் நம்முடன் இருக்கிறான் என்கிற தைரியத்தை, ஆன்ம பலத்தை தருகிறது. திருவாசகம் முற்றோதல் சில வாரங்களுக்கு முன்பு வேலூர்

Read More

சாதனையாளர்களை தேடி ஒரு பயணம்!

சாதனையாளர்களை தேடி புறப்பட்ட நம் பயணத்தில் இதுவரை ஆறு சாதனையாளர்களை சந்தித்து விட்டேன்.  என் வாழ்நாளில் 1001 சாதனையாளர்களை சந்திப்பது என்று இலக்கு வைத்திருக்கிறேன். 'நீ சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் உனக்கு ஒரு ஆசான்' என்று ஒரு பொன்மொழி உண்டு. அப்படியிருக்கும்போது ஒவ்வொரு சாதனையாளரும் எத்தனை ஆசான்கள் என்று நினைத்துப் பாருங்கள். இதுவரை நாம் சந்தித்த ஒவ்வொரு சாதனையாளரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்னுமளவிற்கு ஒருவரையொருவர் விஞ்சி நிற்கிறார்கள். ஒவ்வொருவரும்

Read More

“என்ன சொன்னே? குடும்பத்துல பிரச்னைன்னு தானே?” MONDAY MORNING SPL

அமெரிக்காவில் விடுதி ஒன்றில் உள்ள பாரில் இரண்டு பேர் சந்தித்துக்கொண்டனர். ஒருவன் இந்தியன். மற்றொருவன் அமெரிக்கன். இந்தியன் அமெரிக்கனிடம் சொன்னான், "இந்தியாவில் உள்ள என் பெற்றோர்கள் என்னை என் உறவுக்காரப் பெண் ஒருத்தியை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்துகிறார்கள். அவர்கள் பார்த்துள்ள அந்த பெண்ணோ ஒரு சரியான பட்டிக்காடு. நகரத்துக்கு நாகரீகமே தெரியாதவள். நான் அவளை பார்த்தது கூட கிடையாது. இதை எங்கள் ஊரில் ARRANGED MARRIAGE என்று சொல்வோம். எனக்கோ ஒரு

Read More

இறையருளை பெற உறுதியான இறுதியான வழி! ‘Rightmantra Prayer Club’ ஸ்பெஷல்!!

தூரதேசத்துக்கு சென்று பல வேலைகள் செய்து பொருளீட்டிக்கொண்டு திரும்புகின்றனர் அந்த மூவரும். வரும் வழியில் ஆற்று வெள்ளத்தில் சிக்கி அவர்கள் சம்பாதித்த பொருட்கள் அனைத்தையும் இழந்துவிடுகிறார்கள். ஆற்றை ஒட்டிய ஒரு மிகப் பெரும் மலைப்பகுதியை கடந்து தான் இவர்கள் தங்கள் ஊருக்கு செல்லமுடியும். ஏற்கனவே பொருட்களை இழந்துவிட்ட இவர்களுக்கு பசியெடுக்க.... அந்த பகுதியில் சாப்பிட ஏதாவது கிடைக்குமா என்று தேடுகிறார்கள். மிகப் பெரும் முயற்சிக்கு பிறகு - கிட்டத்தட்ட பசியால் மயக்கமடைந்து

Read More

தேவை இன்று ஒரு கபீர்தாசர் – ரம்ஜான் சிறப்பு பதிவு !

பூமியில் மதத்தின் பெயரால் அமைதி குறைந்து மக்களிடையே  துவேஷம் தலைதூக்கும் போதெல்லாம் இறைவன் மக்களை நல்வழிப்படுத்த தனது அடியவர்களை அனுப்புகிறான். அப்படி இறைவனால் அனுப்பப் பட்டவர்களில் ஒருவரைப் பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். பொறைகளில் உயர்ந்த பொறையாகிய சமயப் பொறை (நன்றி : வாலி!) குறைந்து வரும் காலகட்டமிது. இது போன்றதொரு காலகட்டம் சில நூறாண்டுகளுக்கு முன்பு கூட நம் நாட்டில் ஏற்பட்டது. அப்போது இறைவனின் கட்டளைப்படி பாரத பூமியில்

Read More

தாயை மீட்டுத் தந்த சுந்தரகாண்டம்! வாசகியின் நெகிழவைக்கும் அனுபவம்!!

நம் தளவாசகர்கள் சமீபத்தில் தங்களுக்கு நிகழ்ந்ததாக கூறிய அனுபவங்கள் இவை. இரண்டுமே மெய்சிலிர்க்க வைப்பவை. சுந்தரகாண்டத்தின் மகிமையை பற்றி சில தொடர் பதிவுகளை அளித்து 'சுந்தரகாண்டத்தை தினசரி படித்து வாருங்கள். உங்கள் பிரச்னைகள் அனைத்தும் பஞ்சாய் பறந்துவிடும்' என்று சில வாரங்களுக்கு முன்பு சொல்லியிருந்தேன். தேவைப்பட்டால்  வாங்கி அனுப்புகிறேன் என்றும் கூறியிருந்தேன். இதையடுத்து நம் வாசகர்கள் பலர் அந்நூலை அனுப்புமாறு நம்மை கேட்டுக்கொண்டார்கள். இதுவரை பலருக்கு அனுப்பியிருக்கிறேன். யார் யார் அதற்கு

Read More

ஆடிப்பெருக்கு & ஆடி அமாவாசை – ஊர் கூடி இழுத்த அன்னதானத் தேர்!

வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தான தர்மங்கள் செய்யவேண்டும். குறிப்பாக அன்னதானத்தை எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்யவேண்டும். அன்னதானம் கலியுகத்திற்கு ஏற்ற ஒரு தானம். எவரும் சுலபமாக செய்யக்கூடியது. ஆனால் எண்ணிலடங்கா பலன்கள் தர வல்லது. சாதாரண நாளிலேயே அன்னதானம் செய்தாலே பெரும் புண்ணியம். அதுவும் ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை போன்ற விஷேட நாட்களில் செய்தால் பன்மடங்கு புண்ணியம். (இது குறித்த கதை ஒன்றைத் தான் சில நாட்களுக்கு முன்பு நாம் அளித்தோம்!) ஆடிப்பெருக்கு என்பது

Read More

கங்கா – அழகேசன் கதை – இன்று இக்கதையை படித்தால் புண்ணியம் !

ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று காலை நென்மேலி சென்றிருந்தோம். நாம் ஒரு கணக்கு போட்டால் ஆண்டவன் ஒரு கணக்கு போடுகிறான். எல்லாவற்றையும் முடித்துவிட்டு அலுவலகம் வரும்போது மதியம் ஆகிவிட்டது. மதியத்திற்கு மேல் உணவு இடைவேளையில் தயார் செய்த பதிவு இது. ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி அமாவாசை அனுபவங்கள் நாளை விரிவான பதிவாக வரும். தினமலர் இணையத்தில் கண்ட ஒரு கதையை இப்போதைக்கு தருகிறேன். இந்தக் கதையை படித்தாலோ கூறக்கேட்டாலோ புண்ணியம் என்று

Read More

கண்காணிக்க எவரும் இல்லாதபோது நீங்கள் எப்படி? MONDAY MORNING SPL

அந்த ஊரில் அவன் ஒரு புகழ் பெற்ற சிற்பி. பக்கத்து ஊரில் கட்டப்பட்டு வரும் ஒரு கோவிலில் வைப்பதற்காக பல சிலைகளை கல்லில் செதுக்கிக் கொண்டிருந்தான். அவனை பார்ப்பதற்காக வந்த அந்த ஊர் பெரிய மனிதர் ஒருவர் வந்தார். அப்போது ஒரு அழகான தெய்வத்தின் சிறிய சிலை ஒன்றை சிற்பி மிகவும் மெனக்கெட்டு செதுக்கி கொண்டிருந்தான். அருகில் கோவிலுக்கு தேவையான தூண்கள், படிக்கற்கள் உள்ளிட்ட பல செதுக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தன.

Read More

யார் நட்பை பெறவேண்டும்? யார் நட்பை விடவேண்டும்? FRIENDSHIP DAY SPL!

இன்று நட்பு தினம். FRIENDSHIP DAY. ஒருவரின் வெற்றிக்கு உழைப்பு எந்தளவு அவசியமோ அதே அளவு நல்லவர்களின் நட்பும் அவசியம். நமது பெற்றோரையும் சகோதர சகோதரிகளையும் நம்மால் தீர்மானிக்க முடியாது. ஆனால் நண்பன் யாராக இருக்கவேண்டும் என்று தீர்மானிக்க முடியும். ஒருவரின் வாழ்க்கையையே திசைமாற்றும் வல்லமை கொண்டது நட்பு என்பதால் நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்கவேண்டும். நட்பு குறித்தும் நண்பர்கள் குறித்தும் இலக்கணங்கள் மாறிவிட்ட இன்றைய காலகட்டங்களில், நட்பு என்றால் எப்படிப்பட்டதாக

Read More

உங்கள் உலகம் பெரிதாகி துன்பங்கள் கடுகாக வேண்டுமா?

ஒரு முறை சரக்கு கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகிவிடுகிறது. கப்பலில் பணியில் இருந்த இரண்டு ஊழியர்கள் மட்டும் தப்பிவிடுகின்றனர். நீச்சலடித்து அருகில் இருந்த மனிதர்கள் சஞ்சாரம் இல்லாத தீவில் இருவரும் கரை சேர்கின்றனர். கடவுளிடம் பிரார்த்தனை செய்வதை தவிர அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை. யாருடைய பிரார்த்தனை வலிமையானது என்று பார்ப்பதற்காக அந்த தீவை இரு பகுதிகளாக பிரித்து ஒரு பகுதியின் ஓரத்தில் ஒருவனும் மற்றொரு பகுதியின் ஓரத்தில் இன்னொருவனும் இருப்பது என்று

Read More