Home > 2013 > June (Page 2)

உங்கள் துயரம் முடிவுக்கு வந்தது! விதியையே மாற்றும் வல்லமை கொண்ட சுந்தர காண்ட பாராயணம்!!

'கடவுள் Vs கர்மா' தொடரில் விதியை வெல்ல நாம் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்த கடைசி பகுதியை நாம் இன்னும் அளிக்கவில்லை. "அந்த தொடரின் கடைசி பகுதியை சீக்கிரம் போடுங்கள் சார். விதியை வெல்ல என்ன செய்யவேண்டும் என்று தெரிந்துகொண்டு அதன் படி செய்ய உத்தேசித்திருக்கிறேன். அப்போதாவது என் நிலைமை சரியாகிறதா பார்க்கலாம்" என்று தொழிலில் கடும் நஷ்டமடைந்து அனைத்தையும் இழந்த நிலையில் இருக்கும் வாசகர் ஒருவர் நம்மிடம்

Read More

“வாழும் வரை போராடு; வழி உண்டு என்றே பாடு!”

"வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல். 'சரிதான் போடா தலைவிதி' என்பது வெறும் கூச்சல்!" என்கிற வாலியின் வைர வரிகள் தான் இவரது கதையை கேட்கும்போது நினைவுக்கு வருகிறது. தோல்விகளை, அவமதிப்புக்களை, புறக்கணிப்புகளை கண்டு துவண்டுபோகாமல் விடாமுயற்சியுடன் செயல்பட்ட ஒருவர் சாதித்துக் காட்டியுள்ள உண்மை சம்பவம் இது. எத்தனையோ வசதி வாய்ப்புக்கள் இருந்தும் படிக்காம அரியர்ஸ் குவித்துவரும் மாணவர்கள் அவசியம் அறிய வேண்டிய வரலாறு இது. ஆங்கில இணையதளம் ஒன்றில் இந்த சாதனையாளரை பற்றி வெளியான கட்டுரையை படித்ததும்,

Read More

கற்கை நன்றே கற்கை நன்றே உயிரை கொடுத்தும் கற்கை நன்றே! MUST READ!!

குழந்தைகளை தயார் செய்து அவர்களை குறித்த நேரத்தில் பள்ளிக்கு அனுப்புவது என்பது இங்கிருக்கும் பெற்றோர்களுக்கு ஒரு பெரிய யுத்தம் போலத் தான். இத்தனைக்கும் நகர்ப்புறங்களில் பெரும்பாலான மாணவ மாணவிகள் ஸ்கூல் பஸ்ஸில் தான் தங்கள் பள்ளிகளுக்கு செல்கின்றனர். அவர்களை பஸ் ஸ்டாப்பில் கொண்டு போய் விடுவதற்கே இங்கு பெற்றோர் பலருக்கு மூச்சு முட்டிவிடுகிறது. மேலும் சில மாணவர்களை பெற்றோரே பாதுக்காப்பாக ஸ்கூலில் கொண்டு போய் விடுகின்றனர். மேலும் சிலர் தாங்களாகவே

Read More

ஆண்டவனை ஆழம் பார்க்கலாமா?

ஒரு ஊரில் ஒரு ஆதரவற்ற ஏழைப் பெண் ஒருத்தி இருந்தாள். அவளுக்கு என்று சொந்தம் அவள் வளர்க்கும் சில மாடுகள் தான். அந்த மாடுகளிடமிருந்து பாலை கறந்து அக்கம் பக்கத்து கிராமங்களில் உள்ள பல வீடுகளுக்கு சென்று தினசரி கொடுப்பதை அவள் வழக்கமாக கொண்டிருந்தாள். அதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து வாழ்ந்து வந்தாள். ஊரின் எல்லையில் இருக்கும் ஒரு சன்னியாசியின் ஆஸ்ரமத்துக்கும் இவள் தான் தினசரி பால் கொடுப்பது வழக்கம். ஒரு

Read More

இடுப்பில் சிறு துண்டு & கையில் எப்போதும் ஒரு பாய் – இது தான் லோமச மகரிஷி – ரிஷிகள் தரிசனம் (2)

ரிஷிகளை தேடி புறப்பட்ட நமது பயணத்தின் இரண்டாம் அத்தியாயம் இது. ரிஷிமூலம் பார்ப்பது நமது நோக்கமல்ல. மகரிஷிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. அந்த சிறப்பை பெற அவர்கள் எத்தகைய அருந்தவம் செய்தார்கள், தங்கள் வாழ்வின் மூலமும் வாக்கின் மூலமும் அவர்கள் இந்த வையத்துக்கு உணர்த்துவது என்ன என்பதை ஆராய்ந்து எடுத்துக் கூறுவதே நமது நோக்கம். சென்ற அத்தியாயத்தில் ததீசி மகரிஷியை பற்றி பார்த்தோம். இப்போது லோமச மகரிஷியை பற்றி பார்ப்போம். ஓம்

Read More

இந்த காலத்தில் இப்படியும் ஒரு நடிகையா? வியக்க வைக்கும் ஏஞ்சலினா ஜோலி!

'தான் உண்டு, தன் வேலை உண்டு, தன் முதலீடுகள் உண்டு, தன் குடும்பம் உண்டு' என்று உலகமே சுயநலம் சார்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறது. அதுவும் கோடிகளில் புரளும் சினிமா நட்சத்திரங்களை பற்றி கேட்கவே வேண்டாம். அதுவும் குறிப்பாக நடிகைகளை பற்றி கேட்கவே வேண்டாம். வார மாத இதழ்களுக்கு பேட்டி கொடுப்பதும், டி.வி.நிகழ்ச்சிகளில் தோன்றுவதும், கவர்ச்சியாக பத்திரிகை அட்டைகளுக்கு போஸ் கொடுப்பதும், சான்ஸ் பிடிக்க திரைப்பட நிகழ்ச்சிகளில் கவர்ச்சியாக ஆடை அணிந்து கலந்து

Read More

வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா? அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள்!

சென்ற பதிவை பார்த்துவிட்டு சிவக்குமார் என்னும் நண்பர் 'வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களை தினசரி விளக்கேற்றும்படி கேட்டுக்கொள்ளவேண்டும். இப்படி செய்தால் அவர்களின் முகப் பொலிவு பன்மடங்கு கூடும்' என்பதை விளக்கி எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். மிகவும் பயனுள்ள பலருக்கும் உபயோகமான தகவல் என்பதால், அதை இங்கு தனி பதிவாக தந்திருக்கிறேன். மேலும் விளக்கேற்றுவதற்கு எந்தெந்த எண்ணைகளை பயன்படுத்தலாம், எதை பயன்படுத்தக்கூடாது, என்ன திரிகளுக்கு என்ன பலன், எந்த நேரத்தில் எந்த

Read More

“பிரார்த்தனை செய்றதாலே என்ன யூஸ்… அதனால என்ன மாறிடப்போகுது…?” என்று நினைப்பவரா… READ THIS REAL INCIDENT!

இது ஒரு உண்மை சம்பவம். தினசரி வீட்டில் பூஜையறையில் சுவாமி படத்தின் முன் விளக்கேற்றிவிட்டு ஒரு சில வினாடிகள் பிரார்த்தனை செய்ய அந்த பெண் தவறுவதேயில்லை. அதை ஒரு வழக்கமாகவே ஆக்கிக்கொண்டார்கள். தனக்காக, தன் கணவர், குடும்பம் மற்றும் மகளுக்காக பிரார்த்தனை செய்து வந்தவர்கள், தற்போது முன் பின் அறிமுகமில்லாதவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். அம்மா இப்படி தினசரி விளக்கேற்றி பிரார்த்தனை செய்து வருவதை கவனிக்கும் அவளது ஒரே மகள் (வயது

Read More