Home > 2013 > March (Page 2)

விலங்குகள் இறைவனை பூஜித்து முக்தி பெற்ற தலங்கள் – படங்களுடன் சிறப்பு தொகுப்பு!

இறைவன் மீதும் பக்தி செலுத்துவதில் மனிதர்களுக்கு சற்றும் சளைத்தவை அல்ல விலங்குகள். மனிதர்களோ, தேவர்களோ அல்லது ரிஷிகளோ சாபம் காரணமாகவோ அல்லது வேறு நோக்கத்தின் காரணமாகவோ விலங்குகளாகவோ பூச்சிகளாகவோ பிறந்து இறைவனை பூஜித்து பேறு பெற்ற நிகழ்வுகள் பல இருக்கின்றன. இவை எதுவும் கதையல்ல. உண்மையினும் உண்மை. முன்ஜென்மங்கள் தொடர்பு அல்லது  சாபம் எதுவும் இன்றி விலங்காகவே இருந்து அறிந்தோ அறியாமலோ இறைவனை பூஜித்து பேறு பெற்ற நிகழ்வுகளும் இருக்கின்றன. (உதாரணத்திற்கு

Read More

இன்னும் பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா!

தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட சைவத் திருமுறைகள் பாடிய 63 நாயன்மார்களும், திவ்விய பிரபந்தம் பாடிய பன்னிரு ஆழ்வார்களும் பிறந்த தமிழ் நாட்டில் பக்தி இலக்கியங்களுக்கு ஏற்பட்டுள்ள நிலையை பாருங்கள். சமீபத்தில் இணையத்தில் படித்த தினமலர் நாளிதழ் கட்டுரை செய்தி ஒன்றை இங்கே பகிர்ந்துகொண்டிருக்கிறேன். இந்த கட்டுரை சம்பந்தப்பட்ட நாளிதழில் வெளியாகி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆனாலும் ஆட்சிகள் மாறியும் காட்சிகள் மாறவில்லை என்பதே நிதர்சனம். இன்னும் பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் பல

Read More

தாயை இழந்து தவிக்கும் குரங்குக் குட்டி மீது சிறுத்தை காட்டும் பாசம்! MUST WATCH VIDEO!!

ஐந்தறிவு கொண்ட மிருகங்கள் ஆறறிவு கொண்ட மனிதனை விட பன்மடங்கு இரக்க குணத்திலும் தாய்மையிலும் மேல் என்பதை நிரூபிக்கும் மற்றொரு உண்மை நிகழ்வு இது. இந்த வீடியோவை பார்த்து கண் கலங்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. ஆப்பிரிக்காவில் உள்ள போட்ஸ்வானாவில் உள்ள காடுகளில் 'நேஷனல் ஜியாகரபி' சானலுக்காக சில ஆண்டுகளுக்கு முன்பு  படம்பிடிக்கப்பட்ட வீடியோ இது. நண்பர் ஒருவர் என்னுடைய பர்சனல் ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார். அனைவரும் பார்க்கட்டுமே என்று இங்கு தனிப் பதிவாக தருகிறேன். காட்டில் பசியோடு திரியும் சிறுத்தை

Read More

சீரான சிறுநீரக செயல்பாட்டிற்கு உதவும் உணவுப் பொருட்கள்!

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் வரக்கூடிய இரண்டாம் வியாழக்கிழமையை உலக சிறுநீரக தினமாக கொண்டாடுகிறார்கள். இந்த வருடம் மார்ச் 14 உலக சிறுநீரக தினமாகும் (World Kidney Day). நமது உடலின் மிக முக்கிய உறுப்பான சிறுநீரகத்தை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்தவேண்டி இந்த நாள் கொண்டாடப்படுகிறது. பணம் சம்பாதிச்சு குவிச்சிட்டா வாழ்க்கையில் ஜெயித்துவிட்டதாக பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். நிச்சயம் அல்ல. எந்தக் காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்"

Read More

இவர்களின் சேவையை விட பெரியது இந்த உலகில் உண்டா? “இதோ எந்தன் தெய்வம்” – (3)

திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவிலை நாங்கள் சுத்தம் செய்யும்போது அந்த கோவிலை தினந்தோறும் கூட்டிப் பெருக்கும் ஒரு வயதான அம்மா சிறிதும் சலிப்படையாமல் குப்பை விழ விழ பெருக்கிக்கொண்டே இருந்ததை கவனித்தோம். அவர்கள் பாட்டுக்கு தனக்குள் ஏதோ பேசிக்கொண்டே இருந்தார்கள். "இப்படி குப்பைகளை போட்டுவிட்டு நமக்கு ஓயாமல் வேலை வைக்கிறார்களே..." என்று எல்லோரையும் திட்டிக்கொண்டு பெருக்குகிறார்கள் போல... என்று நினைத்துக் கொண்டேன். அப்புறம் தான் புரிந்தது அவர் புத்தி சுவாதீனம் இல்லாதவர்

Read More

மகா சிவராத்திரி அனுபவம் + உழவாரப்பணி என்னும் இன்ஸ்டன்ட் மருந்து + கூலி MUST READ

சிவராத்திரி அன்று காலையில் நாம் ஆற்றிய உழவாரப்பணியின் மூலமாக நாம் ஆலயங்களுக்கு செல்லும்போது செய்யும் சிறு சிறு தவறுகள் கூட ஆலயத்தை எப்படி அசுத்தப்படுத்துகின்றன என்று நன்கு தெரிந்துகொண்டோம். கோவிலை பராமரிப்பதும் சுத்தம் செய்வதும் எவ்வளவு கஷ்டமான காரியம் என்றும் அறிந்துகொண்டோம். அந்த வகையில் இந்த உழவாரப்பணி இனி நாங்கள் கோவிலுக்கு செல்லும்போது எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று எங்களுக்கு புரிய வைக்கும் பாடமாக அமைந்தது என்றால் மிகையாகாது. உதாரணத்திற்கு முன்பு கோவிலுக்கு

Read More

திருவேற்காடு வேதபுரீஸ்வரர் திருக்கோவிலில் இனிதே நடைபெற்ற நமது உழவாரப்பணி – Quick Update

இறைவன் அருளால் நமது தளத்தின் சார்பாக - திருவேற்காடு பாலாம்பிகை உடனுறை அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோவிலில் - இன்று துவங்கிய உழாவாரப்பணி வெகு சிறப்பாக நடைபெற்றதோடு மட்டுமல்லாமல் ஆலய நிர்வாகத்தினரால் மிகவும் பாராட்டப்பட்டது. இந்த அரிய வாய்ப்பை நமக்கும் நமது நண்பர்களுக்கும் நல்கிய ஈசனின் கருணையை என்னவென்று சொல்வது? இன்றைக்கு காலையில் நாம் இந்த பணிக்காக கோவிலுக்கு செல்லும்போது ஆங்காங்கே குப்பைகள் மற்றும் உணவருந்திய இலைகளுடன் குப்பை கூளங்களுடன் காட்சியளித்தது. (நேற்று சனிப்பிரதோஷம்

Read More

அவன் வேலைக்கு அவன் விரும்புகிறவர்களை அவனே தேர்ந்தெடுப்பான்!

சிவராத்திரியை முன்னிட்டு ஏதாவது ஒரு தொன்மையான சிவாலயத்தில் உழவாரப்பணி மேற்கொள்ளவேண்டும் என்று நாம் முடிவு செய்தபோது முதலில் மனதில் தோன்றியது திருவேற்காடு பாலாம்பிகை உடனுறை அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோவில் தான். எனவே அதற்கு முறைப்படி அனுமதி பெறவேண்டி இரண்டு நாட்களுக்கு முன்னே கோவிலுக்கு சென்று அங்கு நிர்வாகத்தினரிடம் பேசி  அனுமதி பெற்றேன். அங்கு அர்ச்சகரிடம் பேசும்போது "எத்தனை பேர் வருவீர்கள்?" என்று கேட்டார். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. திரு திருவென

Read More

பெண்ணினத்திற்கு பெருமை சேர்த்த மாதரசிகள் – பெண்கள் தின ஸ்பெஷல் !

இன்று பெண்கள் தினம். காலையே ஏதாவது சிறப்பு பதிவு அளிக்க எண்ணியிருந்தேன். நேரமின்மை காரணமாக அளிக்க முடியவில்லை. 'சிவராத்திரி' தொடர்பாக மூன்று பதிவுகள் அளித்ததே அந்த சிவனின் அருளால் தான். இல்லையென்றால் ஒரு பதிவுகூட அளித்திருக்க முடியாது. பெண்கள் தினத்திற்காக பயனுள்ள பதிவு ஏதாவது நிச்சயம் அளித்தே ஆகவேண்டும் என்று தான் இந்த பதிவை அளிக்கிறேன். பெண்களை சிறந்த முறையில் நடத்த வேண்டும் என்பதை சாத்திரங்கள் பல இடங்களில் வலியுறுத்தியிருக்கின்றன. எத்தனையோ சிறப்புக்கள்

Read More

விரதமிருப்பது தவிர சிவராத்திரியன்று நீங்கள் வேறு என்ன செய்யலாம்? சிவராத்திரி 3

ஞானமும் ஆழ்ந்த பக்தியும் கைவரப்பெற்று கடுமையான விரதங்கள் இருந்தால் தான் இறைவனின் அன்புக்கும் அருளுக்கும் நாம் பாத்திரமாவோம் என்றில்லை. இதயத்தின் ஓரத்தில் ஓரளவு சேவை மனப்பான்மை இருந்தாலே போதும் இந்த கலியுகத்தில் கடைத்தேற. திருக்குறிப்பு தொண்டர் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். சலவைத் தொழில் செய்து வந்த இவர், சிவனடியார்களின் ஆடைகளை இலவசமாக துவைத்து தரும் அரும்பணியை செய்து இறைவவனின் அருளுக்கு பாத்திரமானார். 63 நாயன்மார்களுள் ஒருவர் என்ற சிறப்பை பெற்றார். இதிலிருந்து

Read More

சிவராத்திரி விரதத்தை விட மேன்மையான ஒன்று – நீங்கள் தயாரா? சிவராத்திரி ஸ்பெஷல் 2

சிவராத்திரி அன்று விரதமிருந்து கோவில்களுக்கு சென்று சிவபெருமானை தரிசிப்பதை விட உயர்ந்த ஒன்று எதுவும் இருக்கிறதா என்ன? என்று இந்த பதிவின் தலைப்பை பார்க்கும் உங்களுக்கு ஆச்சரியம் மேலிடலாம். சிவராத்திரி போன்ற நேரங்களில் விரதமிருப்பது, இறைவனை தரிசிப்பது போன்றவை ஒரு புறம் இருக்கட்டும். இவையெல்லாம் நமது நன்மைக்காகவும் நமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காகவும் நாம் செய்வது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெரிய அளவில் கூடும் சிவராத்திரி போன்ற வைபவங்களில் நாம் செய்யக்கூடிய

Read More

சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி? முழு தகவல்கள் – சிவராத்திரி ஸ்பெஷல் 1

சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி என்பது குறித்து முந்தைய ஆண்டுகளில் நாம் அளித்த பதிவு இது. சிவராத்திரி போன்ற முக்கிய வைபவங்களை பற்றி சிறு வயது முதலே கேள்விப்பட்டிருந்தாலும் அதன் மகத்துவத்தை நான் அறிந்திருந்தாலும் என்னை அறியாத ஒரு வாழ்க்கையை நான் வாழ்ந்து வந்தபடியால் இந்த முக்கிய விரதங்களை சரிவர அனுஷ்டிக்காமல் இருந்து வந்தேன். எனக்கு ஏற்பட்ட சோதனைகளும் போராட்டங்களுமே என்னை ஆன்மிகம் நோக்கி  திருப்பின. நான் 'என்னை' அறியச் செய்தன. நரசிம்மர்

Read More

இதை படிக்க நேர்ந்தால் நீங்கள் பாக்கியசாலி!

நமது தளம் சார்பாக சென்ற மாதம் நடைபெற்ற 'மகா பெரியவா மகிமைகள்' நிகழ்ச்சியை நாம் ஏற்பாடு செய்ததே ஒரு சுவாரஸ்யமான சம்பவம் தான்.  திரு.சுவாமிநாதன் அவர்களுடன் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது எப்படி என்று நமது நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியபோது பார்வையாளர்களிடம் சுவாமிநாதனே சொன்னார். அவரது உரையை பற்றிய பதிவை அளிக்கும்போது அதை பற்றி கூறுகிறேன். அதற்கு முன்பு இந்த முக்கிய விஷயத்தை விளக்கவேண்டும். திரு.சுவாமிநாதன் சென்னையிலும் மற்ற ஊர்களிலும் 'குரு மகிமை'

Read More

நான்கு யுகங்களில் சிறந்தது எது? ஏன்? MUST READ!

ஒவ்வொரு யுகத்திலும் இறைவனை அடைய, அவன் அருளை பெற பல முறைகளை முன்னோர்கள் கையாண்டுள்ளனர். அவை அனைத்தும் அந்தந்த யுகங்களின் சூழ்நிலை மற்றும் தர்மங்களை (Rules & Scenario) சார்ந்தே இருக்கும். பூமி தோன்றி எத்தனையோ லட்சம் ஆண்டுகள் உருண்டோடி விட்டன. கிருதயுகம், திரேதா யுகம், துவாபர யுகம் என கடந்து இப்போது கலியுகத்தில் நாம் வாழ்கிறோம்கலியுகம் நடந்துவருகிறது. கொடுமையான கலியுகத்தில் - கலிகாலத்தில் - வாழ்கிறோம் என்று வருத்தப்படுகிறோம்.

Read More