Home > ரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு (Page 2)

அலகிலா விளையாட்டுடையானின் அன்பு சாம்ராஜ்ஜியத்தில் ஒரு புதிய வரவு! குரு தரிசனம் (33)

சென்ற ஞாயிறு காலை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தன் அவர்களின் நினைவு மண்டபத்தில் இளம்பிறை மணிமாறன் அவர்களின் சொற்பொழிவை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. முந்தைய நாள் மாலை தூத்துக்குடியிலிருந்து சென்னை வந்திருந்த இளம்பிறை மணிமாறன் அவர்களை மயிலாப்பூரில் அவர் தங்கியிருந்த இடத்திற்கே நேரில் சந்திக்க சென்றிருந்தோம். இளம்பிறை அவர்களுடன் அவரது கணவர் மணிமாறனும் வந்திருந்தார். திரு.மணிமாறன் அவர்களுடன் ஏற்கனவே நமக்கு அறிமுகம் உண்டு. இருந்தாலும்

Read More

“மகா பெரியவா நாவினின்று வருவது வார்த்தைகள் அல்ல. சத்திய வாக்கு!” – குரு தரிசனம் (28)

நம் தள வாசகர் நண்பர் நாராயணன் அவர்கள். இவர் தந்தை திரு.சாரங்கன், காஞ்சியில் ஒரு வங்கியில் உயர் அதிகாரியாக பணியாற்றி வந்தார். அப்போது காஞ்சி காமாட்சியம்மன் கோவிலுக்கும், சங்கர மடத்துக்கும் அடிக்கடி செல்வதுண்டு. மடத்திற்கு சென்று மஹா பெரியவாவிடம் அடிக்கடி ஆசி பெற்று வருவார். அப்போது மஹா பெரியவாவின் மாணவர்களில் ஒருவருடன் நன்கு அறிமுகம் ஏற்பட்டது. நண்பர் நாராயணன் நம்மிடம் ஒரு நாள், "சுந்தர்ஜி, எனக்கு காஞ்சிபுரத்தில் மஹா பெரியவாவுடன் நெருங்கி

Read More

‘மாணவர்கள் மனதில் மாணிக்கவாசகர்’ – திவாகரும் அவரது திருவாசகத் தொண்டும்!

இன்றைய குழந்தைகள் எதைத் தெரிந்துகொள்ளவேண்டுமோ அதை தெரிந்துகொள்ளாமல் வளர்கிறார்கள். எதை கற்கவேண்டுமோ அதை கடைசி வரை கற்றுக்கொள்ளாமலேயே பள்ளிபடிப்பையும் முடித்துவிடுகிறார்கள். பொதிமாடு போல மூட்டை மூட்டையாக புத்தகங்களை சுமந்து சென்று அவர்கள் கற்கும் கல்வியில் 5% கூட நிஜ வாழ்க்கைக்கு அவர்களுக்கு எந்த விதத்திலும் உதவுவதில்லை. நமது கல்வி முறை அப்படி. தமிழகம் முழுதும் பள்ளிக் குழந்தைகளின் நிலை இது தான். இன்று பள்ளி செல்லும் குழந்தைகள் எத்தனை பேருக்கு

Read More

ஸ்ரீராமுலுவின் பசி தீர்க்க ஓடி வந்த ஸ்ரீனிவாசன் – உண்மை சம்பவம்!!

சென்ற மார்கழி மாதம் ஒரு நாள், போரூரை அடுத்துள்ள மதனந்தபுரத்தில் உள்ள நம் வாசகர் ஒருவரின் இல்லத்தில் நடைபெற்ற மார்கழி பஜனையில் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற அவரின் அழைப்பை ஏற்று சென்றிருந்தோம். அப்போது அங்கு வந்திருந்தவர்களில் நெற்றி  நிறைய திருநாமம் இட்டுக்கொண்டு காட்சியளித்த ஸ்ரீராமுலு நம்மை மிகவும் ஈர்த்தார். பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக்கொண்டோம். இருப்பினும் விரிவாக பேச சந்தர்ப்பம்  கிடைக்கவில்லை. மார்கழி கடைசி நாளன்றும் நாம் பஜனையில் பங்கேற்று பேசவேண்டும் என்று நமக்கு அழைப்பு

Read More

நேதாஜிக்கு எடைக்கு எடை பொன் கொடுத்த தமிழர்கள் – INA வீரரின் சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள்!

இன்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்தநாள். இதையொட்டி இந்தியாவை வெள்ளையர்களிடமிருந்து மீட்க நேதாஜி துவக்கிய இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவரும் சுதந்திர போராட்ட தியாகியுமான திரு.முத்தப்பா (வயது 86) அவர்களை வடபழனியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மாலை சந்தித்து ஆசிபெற்றோம். சந்திப்புக்கு நம்முடன் நம் நண்பர் முருகன் என்பவரும் வந்திருந்தார். (சென்ற ஆண்டுக்கு முந்தைய ஆண்டும் இவரை சந்தித்து நாம் ஆசிபெற்றது குறிப்பிடத்தக்கது.) இவர் சொந்த ஊர் பரமக்குடி.

Read More

‘என்னை தாலாட்ட வருவாரோ?’ ஏழுமலைக்காக தினமும் ஏங்கும் வேதபுரீஸ்வரர்!

மார்கழியின் மகத்துவம் பற்றி சமீபத்தில் நாம் அளித்த பதிவில் இந்த ஆண்டு மார்கழி தரிசனத்திற்கு ஒரே ஆலயமாக செல்லாமல் எங்கள் பகுதியை சுற்றிலும் உள்ள அனைத்து தொன்மையான ஆலயங்களுக்கும் ஒவ்வொரு நாளும் ஒரு ஆலயம் வீதம் செல்லவிருப்பதாக கூறியிருந்தோம். அதை படித்த நம் வாசகி தாமரை வெங்கட் அவர்கள், நாம் திருவேற்காடு வரும்போது தகவல் தெரிவிக்கும்படியும், தன் குடும்பத்தினருடன் தாம் வேதபுரீஸ்வரரை தரிசிக்க வருவதாகவும் கூறியிருந்தார். (அவர்கள் வசிப்பது திருவேற்காடு.) (Check

Read More

ராதாபாய் – விழியிழந்தும் பிறருக்கு வழிகாட்டும் பாரதி கண்ட புதுமைப் பெண்!

நம் வாசகர்கள் ஈரோடு திரு.ஞானப்பிரகாசம் & தமிழ்செல்வி தம்பதியினரிடம் ஒரு நாள் பேசிக்கொண்டிருந்தபோது, ஐந்து வருடத்துக்குள் 1000 சாதனையாளர்களை சந்திக்கும் நமது லட்சியத்தை பற்றி குறிப்பிட்டு நமது புதுக்கோட்டை பயணத்தை பற்றியும் ஆலங்குடி கணேசன் அவர்களை சந்திக்கவிருப்பதையும் கூறினோம். அப்போது அவர்கள் நீங்கள் புதுக்கோட்டை செல்வதென்றால் அவசியம் ராதாபாய் என்பவரை சந்திக்கவேண்டும் என்று கூறி அவரைப் பற்றிய விபரங்களை நமக்கு கூறினர். அவர்கள் கூறியதை கேட்டவுடனேயே ராதாபாய் அவர்களை சந்திக்க

Read More

இது ஆனந்தம் விளையாடும் வீடு!

டிசம்பர் 3. இன்று சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம். மாற்றுத் திறனாளிகள் என்றாலே சமூகத்தில் வித்தியாசமாகப் பார்க்கப்படும் நிலையில், அந்தத் தடைக்கல்லை, வெற்றிப்படிக்கட்டாக மாற்றுபவர்கள் ஒரு சிலரே.  விதி தங்களை முடக்கிப் போட்டுவிட்டபோதும் தன்னம்பிக்கை தான் உற்ற தோழன், சாதிக்க வேண்டும் என்ற வெறி தான் தங்கள் வழிகாட்டி என்று எண்ணி விடாமுயற்சி செய்து, தற்போது நமக்கிடையே தலைநிமிர்ந்து வாழ்ந்து  வரும் இருவரைப் பற்றி இன்று அவசியம் தெரிந்துகொள்வோம். இவர்கள் இருவரைப்

Read More

தமிழகத்தின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களுள் ஒருவரை சந்திப்போமா?

பரட்டை தலை, சரியாக பட்டன்கள் போடாத ஒரு அழுக்கு சிலுக்கு சட்டை, சீரற்ற கறை படிந்த பற்கள், ஏற்றம் இறக்கமாய் கட்டிய லுங்கி... அந்த முதியவரை பார்த்தால் அக்மார்க் கிராமத்து பெரிசு என்று தான் சொல்லத் தோன்றும். ஆனால், நமக்கு தெரிந்து தமிழகத்திலேயே மிகப் பெரிய செல்வந்தர் இவர் தான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம்... இவர் தான் தமிழகத்திலேயே மிகப் பெரிய செல்வந்தர்!! எப்படி? யார் இவர்?? இவர்  சேர்த்துள்ள

Read More

ஒரு கவர்ச்சி நடிகையின் மறுப்பக்கம்!

போலிகளை கொண்டாடிக் கொண்டும் உண்மையை இழித்தும் பழித்தும் பேசி வரும் காலம் இது. கலிகாலம் அல்லவா? நடிகைகள் என்றாலே அவர்களை இளக்காரமாக பார்க்கும் வழக்கம் பலருக்கு இன்று இருக்கிறது. அதிலும் கவர்ச்சி நடிகைகள் என்றால் கேட்கவே வேண்டாம். காரணம், நம்மவர்கள் 'புரிதல்' அப்படி. மனிதர்களை எடைபோடுவதில் கெட்டிக்காரர்கள் அல்லவா நாம்! இழுத்துப் போர்த்திக்கொண்டு நடிப்பவர்கள் அனைவரும் உத்தமிகளும் அல்ல. கவர்ச்சி காட்டி நடிப்பவர்கள் அனைவரும் தரம் தாழ்ந்தவர்களும் அல்ல. தமிழ் பட

Read More

“வணக்கம் அண்ணா!”

விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய தினம் என்று  கருதுகிறோம்.... வீட்டில் சானலை மாற்றி மாற்றி பார்த்துகொண்டிருக்கையில் பிரபல எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்கள் பொதிகை சானலில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தார்கள். சற்று வித்தியாசமான நிகழ்ச்சி அது. இருபக்கமும் திருநங்கைகள் அமர்ந்திருக்க, நடுவில் சக்கர நாற்காலியில் ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்கு துணையாக ஒரு வயதான பெண்மணி பின்னால் நின்றுகொண்டிருந்தார். அவரை பார்த்து, அவரது திறமையை பார்த்து அவர் வாழ்க்கையை எதிர்கொண்டதை பார்த்து, திருநங்கைகள்

Read More

திருமுறை, திருப்புகழ் விளக்கை அனைவருக்கும் ஒளிரச் செய்யும் ஓர் அன்னை!

வீட்டுக்கே நடராஜரை வரவழைத்து அதற்குரிய பணத்தையும் அவரையே தரவைத்த  அந்த பெருமை பெற்றவர்..... கோவையை சேர்ந்த திருமுறை தமிழ்மணி திருமதி. ஸ்வர்ணா சோமசுந்தரம் அவர்கள். சைவ ஒழுக்கம் மிகுந்த பாரம்பரியமான குடும்பத்தில் பிறந்தும் புகுந்தும் நாளும் தமிழிசையில் திளைத்து அதில் தேர்ச்சியும், அனுபவமும் பெற்றவர். பார்வையற்ற நண்பர் ஈரோடு பன்னிரு திருமுறை ஆசிரியர் ஞானப்பிரகாசம் அவர்களின் குரு. தற்போது 73 ஆம் அகவையில் இருக்கும் அன்னை ஸ்வர்ணா சோமசுந்தரம் சைவத்துக்கும் பக்தி

Read More

உருகிய பக்தை… வீட்டுக்கே வந்த நடராஜர்! உண்மை சம்பவம்!! – நவராத்திரி SPL 1

அந்த மாதரசி ஒரு தலைசிறந்த சிவபக்தை. தேவாரம், திருப்புகழ் மற்றும் இதர சைவ ஆகமங்களிளெல்லாம் அசாத்திய பாண்டித்யம் பெற்றவர். அவரது பரம்பரையே பக்தி நெறியில் ஊறித் திளைத்த ஒன்று எனும்போது அவருடைய உதிரத்தில் சிவபக்தி இரண்டற கலந்திருப்பதில் வியப்பென்ன? தான் கற்ற பன்னிரு திருமுறை, திருப்புகழ் ஆகியவற்றை அடுத்தவர்களுக்கு குறிப்பாக அடுத்த தலைமுறைக்கு வணிக நோக்கமின்றி சொல்லிக் கொடுத்து வருபவர். வீட்டில் சுமார் மூன்று அடியில் நடராஜர் விக்ரகம் ஒன்றை ஸ்தாபித்து  அதன்

Read More

தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!

வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி, ஆவணி சுவாதி அன்று வாரியார் ஸ்வாமிகள் அவதாரத் திருநாள். நாளை 29 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி. அதையொட்டிய சிறப்பு பதிவு இது. காங்கேயநல்லூரில் வாரியார் ஸ்வாமிகள் அதிஷ்டானத்திற்கு எதிரே அமைந்துள்ள முருகன் கோவிலில் லட்சதீப விழா. வாரியார் ஸ்வாமிகள் கலையரங்கம் பக்தர்களால் நிறைந்திருக்கிறது. தொடர் ஆன்மீக சொற்பொழிவுகளுக்கு நடுவே தீந்தமிழில் திருவாசகப் பாடல் மழலைக் குரலில் ஒலிக்க சபையில் கனத்த அமைதி. காதலாகிக் கசிந்து

Read More