Home > நீதிக்கதைகள் (Page 2)

Hard work vs Smart work!

சிலர் கடுமையாக உழைத்துக்கொண்டே இருப்பார்கள். முன்னேற்றமே இருக்காது. ஆனால் அவர்களை விட குறைவாக உழைப்பவர்கள் அவர்களை தாண்டி போய்விடுவார்கள். அது ஏன் என்று யோசித்ததுண்டா? கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு! இரண்டு விறகு வெட்டிகள் ஒரு பெரிய மர வியாபாரியிடம் பணிக்கு சேர்ந்தார்கள். ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் பணி. எவ்வளவுக்கெவ்வளவு வெட்டுகிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு பணம் ஊதியமாக கிடைக்கும். இருவரையும் வேறு வேறு பகுதிக்கு அனுப்பினார் வியாபாரி. முதல் நாள் இருவரும் ஒரே

Read More

ஞானிகளுக்கெல்லாம் பெரிய ஞானி யார்?

ஒரு ஊரில் ஒரு பழுத்த வயது முதிர்ந்த ஞானி வசித்து வந்தார். அவருக்கு தெரியாத விஷயங்களே இல்லை எனுமளவுக்கு அத்தனை விஷயங்களை தெரிந்துவைத்திருந்தார். அவரது கேள்வி ஞானத்தையும் கல்வி ஞானத்தையும் கண்டு அனைவரும் வியந்தனர். இந்நிலையில், பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு மலைக்கிராமத்தில் உள்ள ஒரு ஆஸ்ரமத்தில் இவரை விட மிகப் பெரிய ஞானி ஒருவர் வசித்து வருவதாகவும் அவருக்கு இன்னும் அதிக விஷயங்கள் தெரியும் என்றும் ஊருக்குள்

Read More

வெற்றுப் படகுகளை கண்டால் என்ன செய்வீர்கள்?

பலரை டீல் செய்யவேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள், குறிப்பாக தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், வணிகத்தில் ஈடுபடுகிறவர்கள், நான்கு பேரோடு பழக நேர்பவர்கள் முக்கியமான கைவிட வேண்டிய ஒரு குணம் 'கோபம்'. அர்த்தமற்ற கோபம் ஒருவரை அழித்துவிடும். பகைவர்களை உற்பத்தி செய்யும். சற்று யோசித்துப் பார்த்தால் நமக்கு வரும் கோபங்களில் பெரும்பாலானவை அர்த்தமற்றவையே. இந்த கதையில் வரும் துறவியை போல. நண்பர் ஸ்ரீராம் வாட்ஸ் ஆப்பில் நமக்கு அனுப்பிய ஒரு அருமையான ஆங்கில ஜென்

Read More

நம்முடைய மதிப்பை உயர்த்துவது எது?

கஷ்டம், கஷ்டம், கஷ்டத்துக்கு மேல் கஷ்டம், தாங்க முடியலே... எதுக்குத் தான்பா இந்த கஷ்டம்... என்கிற கேள்வி மனதில் இல்லாதவர்கள் இல்லை. இந்தப் பதிவு அதற்கு விடையளிக்கக் கூடும்.  சமீபத்தில் முகநூலில் படித்த ஒரு அற்புதமான கதையை இங்கு உங்களிடம் பகிர்கிறோம். அனைவருக்கும் தேவையான ஒரு நீதி! பிரபல வில்லுப்பாட்டுக் கலைஞர் திரு.சுப்பு ஆறுமுகம் கூறுகிறார் : "மஹா பெரியவாள் சொல்கிற கதைகளை வில்லுப்பாட்டில் பொருத்தமான இடத்தில் நான் சொல்வது ஒரு பக்கம்

Read More

Think before you decide!

உறவுகளிடமும் நண்பர்களிடமும் சில சமயம், அவர்களின் நிலைமையை புரிந்துகொள்ளாமல் நாம் நமக்கு தோன்றியதை கற்பனை செய்துகொண்டு நாமாகவே ஒரு தவறான அனுமானத்திற்கு வந்துவிடுகிறோம். இது சரியா? நாம் கண்டவரை இங்கு எதுவுமே நிரந்தரம் இல்லை. மனித வாழ்கையும் மனித மனமும் நம்முடனான பிறரது அணுகுமுறைகளும் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றத்திற்கு உள்ளாகக்கூடியவை. எந்தவொரு விஷயத்தையும் பற்றி இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பு, சம்பந்தப்பட்டவர்களின் சூழ்நிலையை ஒரு முறை எண்ணிப் பார்த்தல்

Read More

அள்ளிக்கொடுத்த வள்ளலும் நன்றி மறந்த புதுப்பணக்காரனும்!

ஒரு செல்வந்தன் ஒரு முறை சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தான். அப்போது சாப்பிட்டே பல நாட்கள் ஆனது போல தோற்றமளித்த ஒரு பிச்சைக்காரனை பார்த்தான். அவனை பரிதாபத்துடன் பார்த்தவன், "பார்க்க வாட்டசாட்டமே இருக்கிறாய்... நீ ஏன் பிச்சை எடுக்கிறாய்?" என்று கேட்டான். "சார்... எனக்கு திடீர் என்று வேலை போய்விட்டது. கடந்த ஒரு வருடமாக நான் வேறு வேலைக்கு முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். எதுவும் கிடைக்கவில்லை. உங்களைப் பார்த்தால் பெரிய மனிதர் போல இருக்கிறீர்கள். எனக்கு நீங்கள்

Read More

கழுதையை கட்டி வைத்த கயிறு நம்மை கட்டலாமோ?

அந்த சலவைத் தொழிலாளியிடம் ஐந்து கழுதைகள் இருந்தன. பொதி சுமக்க இரண்டு கழுதைகளே போதும் என்கிற நிலையில் மற்ற கழுதைகளை பராமரிக்க முடியாத காரணத்தால் அவற்றை விற்பதற்கு சந்தைக்கு ஓட்டிக்கொண்டு சென்றான். செல்லும் வழியில் ஒரு ஆற்றைக் கண்டவன் அதில் நீராடிவிட்டு சற்று இளைப்பாற நினைத்தான். அருகே இருக்கும் மரம் ஒன்றில் கழுதைகளை கட்டிப் போட்டுவிட்டு ஆற்றுக்கு செல்லலாம் என்று முடிவு செய்தான். ஆனால் இரண்டு கழுதைகளை கட்ட மட்டுமே அவனிடம்

Read More

எதிர்பாராத பிரச்சனைகளும் நமது பிரார்த்தனையும்!

நினைவு தெரிந்த நாள் முதல் ஒரு பெரிய சரக்கு கப்பலில் வேலை செய்து வந்தார் அவர். ஒரு கட்டத்தில் எத்தனை கடினமான புயல்வீசும் கடற்பரப்பானாலும் அதில் லாவகமாக கப்பலை செலுத்தும் வித்தையை கற்றுக்கொண்டுவிட்டார். இவரின் திறமையை கேள்விப்பட்ட ஒரு பெரிய கப்பல் வியாபாரி, இவரை தனது பெரிய பயணிகள் கப்பல் ஒன்றின் மாலுமியாக நல்ல சம்பளத்தில் நியமித்துவிட்டான். தினசரி கப்பல் கிளம்பும்போது, அதை இயக்குவதற்கு முன்னர், சில நிமிடங்கள அமைதியாக அமர்ந்து "இறைவா... இன்று

Read More

மும்பை to பெங்களூரு to சான் ஃபிரான்சிஸ்கோ!

அது ஒரு கோடைக்காலம். மும்பையிலிருந்து பெங்களூருக்கு சென்றுகொண்டிருந்த உதயன் எக்ஸ்பிரஸ் ரயிலில் நான் பெங்களூரு செல்வதற்காக குல்பர்காவில் காத்துக்கொண்டிருந்தேன். ட்ரெயின் வந்ததும் எனக்கு பெர்த் ஒதுக்கப்பட்டிருந்த இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட ரிசர்வ்டு கோச்சில் ஏறினேன். கோச் ஆல்ரெடி நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. அன்-ரிசர்வ்டு பயணிகளும் நிறைய பேர் ஏறியிருப்பது புரிந்தது. நான் என் சீட்டில் அமர்ந்ததும் ரயில் நகர ஆரம்பித்தது. அடுத்த ஸ்டேஷன் ஷஹாபாத் வந்த சற்று நேரத்திற்கெல்லாம்

Read More

ஆட்டுக்குட்டிகளும் மனஅமைதியும்!

அந்தக் கிராமத்தில் ஒரு ஏழை விவசாயி இருந்தான். அவனுக்கு பக்கத்து வீட்டில் ஒரு வேட்டைக்காரன் இருந்தான். வேட்டைக்காரனிடம் அவன் வேட்டைக்கு பயன்படுத்தும் வேட்டை நாய்கள் சில இருந்தன. வேட்டைக்காரனின் நாய்கள் அடிக்கடி வேலி தாண்டி சென்று விவசாயியின் ஆட்டுக்குட்டிகளை துரத்துவதும் கடித்து குதறுவதும் இருந்தன. இதனால் கலக்கமுற்ற விவசாயி தன் அண்டைவீட்டுக்காரனான வேட்டைக்காரனை சந்தித்து "அப்பா... உன் நாய்களை கொஞ்சம் பார்த்துக்கொள். அவை அடிக்கடி என் பகுதிக்கு வந்து ஆடுகளை தாக்குகின்றன.

Read More

உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான, அவசரமான கேள்வி!

பெற்றோருடன் நமது நேற்றைய மகாமகம் பயணம் ஈசனருளால் மிகச் சிறப்பாக நடந்தேறியது. அடுத்த பதிவில் விரிவாக அது பற்றி பார்ப்போம். இப்போதைக்கு நாம் படித்த, ரசித்த, வியந்த ஒரு அருமையான கதையை தருகிறோம். முகநூலில் நண்பர் ஒருவர் பகிர்ந்தது இது. பலனை எதிர்பாராமல் செய்கின்ற செயல்களுக்கான விளைவுகள்! அர்சுணனும் கிருஷ்ணனும் ஒருமுறை ஊருக்கு வெளியில் உலாவிக் கொண்டிருந்த போது வழியில் மரத்தடியில் உட்கார்ந்திருந்த ஒரு வயோதிகர் ஏதாவது தர்மம் செய்யும் படி கேட்டார். அர்சுணன் மனமிரங்கி 1000 பொற்காசுக்களை கொடுக்க,

Read More

உயர உயர பறக்க வேண்டுமா?

பிப்ரவரி 01, 2016, திங்கட்கிழமை. உலகம் முழுதும் இன்றைய நாளில் ஒரு நாளைக்கு சுமார் 80,000 பயணிகள் விமானங்கள் சுமார் 4000 சர்வதேச விமான நிலையங்களிலிருந்து இயக்கப்படுகின்றன. இதை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் இந்த நேரம் சுமார் 20 லட்சம் பேர் விமானங்களில் பறந்துகொண்டிருக்கின்றனர். ******************************* 1800 களின் துவக்கம். அமெரிக்காவில் ஒரு ஏரியின் கரையோரம் உள்ள பெஞ்சில் தன் தாயுடன் ஒரு சிறுவன் அமர்ந்திருக்கிறான். கூட்டம் கூட்டமாக பறவைகள் பறந்து செல்வதை ஆர்வமுடன் பார்க்கிறான். "பறவைகள் மட்டும்

Read More

வாழ்க்கையில் வெற்றி என்பது உண்மையில் என்ன?

வெற்றிகரமான வாழ்க்கை என்றால் என்ன? இது பற்றி எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? வெற்றிகரமான வாழ்க்கைக்கு ஒரு DEFINITION கொடுப்பது சுலபமல்ல. அவரவர் பார்வையில் வெற்றிகரமான வாழ்க்கை என்பதன் அர்த்தம் வேறு. சமூகத்தின் பார்வையில் அதன் அர்த்தம் வேறு. ஆண்டவனின் பார்வையிலோ அது முற்றிலும் வேறு. இந்த ஊர்லயே எட்டு கார் வெச்சிருக்கிறது நான் ஒருத்தன் தான் சார்... படித்து பட்டம் பெற்று பல நாடுகளுக்கு சென்று பொருளீட்டி, புதிய வியாபாரத்தை துவக்கி வெற்றி மேல் வெற்றி

Read More

எதுக்கு இந்த விஷப்பரீட்சை? உன்னால ஜெயிக்க முடியுமா??

பல வித போர்க் கலைகளில் பயிற்சி பெற்ற வீரர்கள் அந்த நாட்டின் முப்படைகளில் இருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் பலவித போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் அளித்து தகுதியானவர்களை தனது படையில் சேர்த்துக்கொள்வது அந்நாட்டு மன்னனது வழக்கம். பல சலுகைகளோடு கிடைக்கும் அராசங்க உத்தியோகம் என்பதால் அந்த போட்டிகளில் பலர் கலந்துகொண்டு சிலர் வெற்றி பெற்று ஒவ்வொரு ஆண்டும் படையில் சேர்ந்து வந்தனர். இந்நிலையில் வாட்படை பிரிவை சற்று விரிவுபடுத்த

Read More