Home > Featured (Page 2)

சிவலிங்கம் சாட்சி சொன்ன கதை!

'திருவிளையாடல்' படத்தில் இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை என்னும் பாட்டில் சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ - மாமன் திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ?" என்றொரு வரியை கவியரசர் எழுதியிருப்பார். சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ - மாமன் திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ? பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படி பட்ட உன்னை பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன? கண்ணதாசன் ஒரு பக்தி திரைப்படத்தில் பக்தி பாடலில் இப்படி ஒரு வரியை சும்மா எழுதுவாரா?

Read More

ஹரிஹர கிருபா கடாக்ஷம்!

இந்த சிவராத்திரிக்கு (24/02/2017 வெள்ளிக்கிழமை) மற்றுமொரு விசேஷமும் உண்டு. பிரதோஷம், சிவராத்திரி, திருவோணம் மூன்றும் சேர்ந்து வருவதே அது. எனவே நாளைய தினம் விரதம் இருப்பவர்கள் பிரதோஷம், சிவராத்திரி, திருவோண விரதம் மூன்று விரதமும் இருந்த பலன் கிடைத்துவிடும். எனவே மும்மடங்கு பலன் உண்டு. நாளை சிவாலயத்துடன் முடிந்தால் வைணவ ஆலயத்தையும் நாளை தரிசிக்கவும். ஹரிஹர கிருபா கடாக்ஷம் கிடைக்கும். "அரியும் சிவனும் ஒன்னு; இதை அறியாதவன் வாயில் மண்ணு" — இந்த

Read More

சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி ? தன்னையுமறியாமல் விரதம் இருந்து கயிலை வாசம் பெற்றவள் கதை!

சிவராத்திரிக்கு கண் விழிப்பது ஏன்? சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி? அதன் பலன் என்ன? என்று இந்தப் பதிவில் பார்ப்போம். விரதங்களிலேயே கடுமையானதும் அதையே நேரம் எளிமையானதும் சிவராத்திரி தான். புரியவில்லையா? தன்னையுமறியாமல் விரதம் இருந்து கயிலை வாசம் பெற்றவள் கதை! வேடன் ஒருவன் இரவு முழுதும் விழித்திருந்து தன்னையுமறியாமல் சிவலிங்கத்துக்கு விலாவதில் அர்ச்சனை செய்து உய்வு பெற்ற கதை உங்களுக்கு தெரிந்திருக்கும். அதே போன்று வேறு ஒரு கதை. முன்பொரு காலத்தில் ரூபாவாதி என்றொரு

Read More

கனவில் தோன்றி கோவில் கட்டச் சொன்ன மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர்!

எந்த ஜென்மத்தில் அடியேன் செய்த புண்ணியமோ தெரியாது. ரைட்மந்த்ரா தளம் துவக்கப்பட்ட இந்த ஐந்தாண்டுகளில் பல சிவாலயங்களை பாடல் பெற்ற தலங்களை தரிசித்துவிட்டோம். ஒவ்வொரு தலமும் ஒன்றையொன்று விஞ்சி நிற்கும் சிறப்பை பெற்றிருப்பதை என்னவென்று சொல்வது? இந்த ஆலயங்கள் எல்லாம் ஏதோ பொருளால் கட்டப்பட்டவை என்று பலர் கருதுகிறார்கள். இல்லை. இவை அருளால் கட்டப்பட்டவை. பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, உலகின் தலைசிறந்த கட்டிடக்கலை வல்லுநர்களை ஒப்பந்தம் செய்தாலும்

Read More

முட்டாளின் அடையாளம் எது?

தென்கச்சி கோ.சாமிநாதன் அவர்களை அனைவருக்கும் தெரிந்திருக்கும். "இன்று ஒரு தகவல்" என்று வானொலியில் தினந்தோறும் அற்புதமான கருத்துக்களை கதைகளை எளிமையாக பாமரருக்கும் புரியும் வண்ணம் சொல்லி வந்தவர். சுயமுன்னேற்றம் மற்றும் ஆளுமை குறித்து அவர் பல கருத்துக்களை கூறியிருக்கிறார். தினமணியில் அவர் அப்படி எழுதிய நம்மைக் கவர்ந்த கட்டுரை ஒன்றை இங்கே தருகிறோம். முட்டாளின் அடையாளம் எது? "சார் இந்த உலகத்திலே அறிவாளிகளைவிட முட்டாள்கள்கிட்டதான் அதிக எச்சரிக்கையா நடந்துக்க வேண்டியிருக்கு" என்றார் அனுபவப்பட்ட ஒருத்தர். "அப்படிங்களா?"

Read More

புளிய மரப் பொந்தில் மறைக்கப்பட்ட அம்பலப் புளி!

ஒவ்வொரு ஆண்டும் மஹா சிவராத்திரி சமயத்தில் நம் தளத்தில் சிவராத்திரி ஸ்பெஷல் பதிவுகள் வெளிவந்தாலும், அண்மைக் காலங்களில் நாம் ஈஸ்வரன் குறித்து பல பதிவுகள் அளித்து வருவதால் தனியாக தொடர் ஏதும் இந்த ஆண்டு அளிக்கவில்லை. இது போன்ற பதிவுகளே சிந்தைக்கு சிவானந்தம் அளிப்பதால் தனியாக சிவராத்திரி சிறப்பு தொடர் தேவையில்லை என்று கருதுகிறோம். சிவராத்திரி விரதம் முதன்முதலாக இருக்க ஆசைப்படுபவர்கள் மற்றும் இன்னும் சிறப்பாக விரதமிருக்க ஆசைப்படுபவர்கள் நலனுக்காக இந்தப் பதிவின் இறுதியில்

Read More

“மீனை வாயில் வைத்து பாடு, வாதம் தீரும்” – இது குருவாயூரப்பன் லீலை!

ஆங்கில வைத்தியம் எனப்படும் அலோபதி கடந்த எழுபது எழுபத்தைந்து ஆண்டுகளாகத் தான் நடைமுறையில் உள்ளது. அதற்கு முன்பு, பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை நாட்டு வைத்தியம் தான். மந்திரத்தால் வியாதி குணமானவர்கள் கூட பலர் உண்டு. அதைத்தான் 'மணி மந்திர ஔஷதம்' என்றார்கள். கோவில்களில் பஜனம் என்று சொல்லக்கூடிய விரத முறையை அனுஷ்டித்து சுவாமி பிரசாதத்தையே மருந்தாக உட்கொண்டு வியாதிகள் நீங்கப் பெற்றவர்கள் பலர் உண்டு. கி.பி.1560 வது ஆண்டு.

Read More

பசுவுக்கும் நீதி வழங்கிய மனுநீதிச் சோழனின் கதை + புகைப்படங்கள் – Rightmantra Prayer Club

பெரிய புராணத்தில் திருவாரூரின் சிறப்பை சொல்ல முற்பட்ட சேக்கிழார் "நீதி நெறி தவறாத மனுநீதி சோழன் ஆண்ட பூமி இது!" என்று அடைமொழி கொடுத்து மனுநீதி சோழன் கதையை சொல்லி பின்னர் தான் பெரிய புராணத்தையே தொடங்குகிறார். அப்படியெனில் மனுநீதிச் சோழனின் சிறப்பை பார்த்துக்கொள்ளுங்கள். திருவாரூரைத் தலைநகரமாகக் கொண்டு சோழ நாட்டை ஆண்ட சோழ மன்னர் பலருள் மனுநீதிச் சோழன் என்பவனும் ஒருவன். அவன் நீதியிலும் நேர்மையிலும் சிறந்து விளங்கினான். எல்லா உயிர்களுக்கும்

Read More

யார் வேண்டுமானாலும் ருத்ராட்ஷம் அணியலாமா…?

சிவபுண்ணியக் கதைகள் தொடரில் ஒரு அத்தியாயத்தில் ருத்திராட்சம் அணிந்ததால் அனைத்தும் திரும்பக் கிடைத்த ஒரு சிறுவனைப் பற்றிய கதையை பகிர்ந்தது நினைவிருக்கலாம். (ருத்ராக்ஷம் தந்த புது வாழ்வு - சிவபுண்ணியக் கதைகள் (7)) அது முதலே வாசகர்கள் ருத்திராக்ஷம் பற்றி ஒரு விரிவான பதிவை அளிக்கும்படி கேட்டுவந்தார்கள். சிவசின்னங்களில் தலையாயது திருநீறும் ருத்திராட்சமும். சிவமஹா புராணம், கந்த புராணம், ருத்திராட்ச மகாத்மியம் போன்ற பல நூல்களில் ருத்திராட்சம் பற்றிய குறிப்புக்கள், விதிமுறைகள் காணப்படுகின்றன. அவற்றையெல்லாம் ஒன்று

Read More

திரிதிராஷ்டிரன் ஏன் நூறு பிள்ளைகளையும் இழந்தான்?

குருசேஷத்திர போர் முடிந்து தர்மருக்கு முடிசூட்டுவிழா நடந்துகொண்டிருந்தது. அப்போது திருதராஷ்டிரன் கிருஷ்ணரிடம், "கிருஷ்ணா நான் குருடனாய் இருந்தபோதிலும், விதுரர் சொல்கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேன். அப்படியிருக்க ஒருவர்கூட மீதமில்லாமல் எனது நூறு மைந்தர்களும் இறந்ததற்குக் காரணம் என்ன?" என்றார். அதற்கு கிருஷ்ணர் நேரடியாக பதில் சொல்லாமல், "உனக்கு நான் ஒரு கதை கூறுகிறேன். அதன் பின் ஒரு கேள்வி கேட்கிறேன். நீ அதற்கு பதில் சொன்னால், நான் உனக்கு பதில்

Read More

சுவாமி பெயருக்கு அர்ச்சனை செய்வது சரியா?

இந்த நவீன ஃபாஸ்ட் புட் உலகத்தில் அனைத்துமே சுருங்கிவிட்டது. விரைவாகிவிட்டது. கோவில்களில் அர்ச்சனை மட்டும் விதிவிலக்கா? சுமார் 20 - 25 வருடங்களுக்கு முன்பு கோவில்களில் அர்ச்சனை செய்யச் சென்றால் குருக்கள் சங்கல்பம் செய்துவிட்டு சன்னதிக்கு சென்றால் வெளியே வர இருப்பது நிமிடங்களாகும். இன்று? ஓரிரு மந்திரங்கள் கூறிவிட்டு வந்துவிடுகிறார்கள். இது அவர்கள் தவறு அல்ல. காலம் அப்படி மாறிவிட்டது. இந்த சூழ்நிலையில், கோவில்களில் அர்ச்சனை செய்யும்போது சிலர் ஏதோ பெரிய தியாகம் செய்வதாக நினைத்து "சுவாமி

Read More

கோத்திரம் தெரியாதவர்களுக்கு என்ன கோத்திரம்? வழிகாட்டும் மகா பெரியவா!!

மகா பெரியவா தான் வாழ்ந்த காலத்தில் எத்தனையோ பேருக்கு எத்தனையோ விஷயங்களில் தீர்வு சொல்லியிருக்கிறார். சாஸ்திர சம்பிரதாயங்களை கரைத்து குடித்தவர் மட்டும் அல்ல, ஜோதிடமும் நன்கு அறிந்தவர் பெரியவா.  குருவார்த்தையே அருமருந்து அல்லவா? பையனுக்கு என்ன கோத்திரம்? திருச்சி ரயில்வே அலுவலகத்தில் பணி, இரண்டு பையன்கள், ஒரு பெண். மகா சுவாமிகளிடம் அபார பக்தி. பெரியவாள் எங்கே முகாமிட்டிருந்தாலும் வருடத்துக்கு நாலைந்து முறை, குடும்பத்தோடு தரிசனத்துக்கு வருவார். மின்னல் வேக தரிசனம் இல்லை. ஓரிரு நாள்கள்

Read More

சொகுசும்… சுதந்திரமும்!

அந்த ஊரில் உள்ள மைதானத்தில் நாய் கண்காட்சி மிகவும் பிரபலம். மிகப் பெரிய செல்வந்தர்கள் அரசியல்வாதிகள் மற்றும் திரைப்பட நட்சத்திரங்கள் அந்த நாய் கண்காட்சிக்கு தாங்கள் வளர்க்கும் பல உயர் ரக நாய்களை அழைத்து வருவார்கள். அந்த நாய்களை பார்க்கவே பலர் வருவார்கள். ஒவ்வொன்றும் அப்படி இருக்கும். இந்த முறையும் கண்காட்சி தடபுடலாக தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அவரவர் தாங்கள் கொண்டு வந்த நாயை வைத்தே தங்கள் அந்தஸ்த்தை சொல்லாமல் சொல்லினர். உள்ளூர் மக்களும்

Read More

குரங்குக் கூட்டம் உணர்த்திய பேருண்மை!

இந்தப் பதிவு இன்றைய தேவை. நம் ஒட்டுமொத்த எதிர்காலமும் அடங்கியிருக்கிறது. ஒரு தேர்தலில் ராட்சத பலத்துடன் மெஜாரிட்டி பெறும் ஒரு அரசியல் கட்சி அடுத்த தேர்தலில் ஒற்றை இலக்க எண்கள் வாங்கி மண்ணை கவ்வுவது எப்படி? அதே போல ஒரு குறிப்பிட்ட பிரச்னை குறித்த விழிப்புணர்வும், எழுச்சியும் கோடிக்கணக்கான மக்களிடம் வெகு சீக்கிரம் பரவுவது எப்படி? எத்தனையோ பேர் சொல்லியும் மக்களிடம் எடுபடாத கருத்துக்கள், ஒரு சிலர் சொல்லும்போது மட்டும்

Read More