Home > ஆன்மிகம் (Page 2)

ருணம், ரோகம், சத்ருக்கள் தொல்லையா? கைகொடுக்கும் ‘ஸ்ரீ சுதர்சன சதகம்’

ஸ்ரீமந் நாராயணனின் பஞ்ச ஆயுதங்கள் என்று அழைக்கப்படுபவை ஸ்ரீபாஞ்சஜன்யம், ஸ்ரீசுதர்சனம், ஸ்ரீகௌமோதகீ, ஸ்ரீநந்தகம், ஸ்ரீசார்ங்கம் (சங்கு, சக்கரம், கதை, வாள், வில்) ஆகியன. இவை உணர்வற்ற வெறும் ஆயுதங்கள் அல்ல. ஜீவன் உள்ளவை. இந்த ஆயுதங்களாக இருந்து திருமாலுக்குப் பணிபுரியும் வைகுண்டத்திலிருக்கும் 'நித்ய சூரிகள்' என்ற தேவர்கள். ஆழ்வார்களில் பொய்கை ஆழ்வார் பாஞ்ச சன்னியம் என்ற சங்கின் அம்சமாகவும், பூதத்தாழ்வார் கதையின் அம்சமாகவும், பேயாழ்வார் நந்தகம் என்ற வாளின் அம்சமாகவும், திருமழிசை ஆழ்வார்

Read More

யார் சொல்வது பலிக்கும்?

'நாவானது நல்ல விஷயங்களையே பேசவேண்டும்' என்பதன் அவசியம் பற்றி ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஒரு பதிவை எழுதிக்கொண்டிருந்தோம். இன்சொல் பேசுவதைப் பற்றி கவியரசு கண்ணதாசன் ஏதாவது கூறியிருந்தால் அதை பதிவில் சேர்த்தால் நன்றாக இருக்குமே என்று அர்த்தமுள்ள இந்துமதத்தை புரட்டியபோது அருமையான இந்த அத்தியாயம் கண்ணில் பட்டது. முதலில் இதை அளிப்போம்; நாம் எழுதிக்கொண்டிருக்கும் பதிவை பின்னர் அளிக்கலாம் என்று முடிவு செய்து இந்தப் பதிவை தட்டச்சு செய்தோம். நல்ல வார்த்தைகளை பேசுவதைப் பற்றியும்,

Read More

வைத்தியநாத சாஸ்திரிகளும் ஒரு கல்யாண ரிசப்ஷனும்!

திருவாரூரில் கமலாம்பிகை பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் வைத்தியநாத சாஸ்திரிகள். அந்தக் காலத்து பி.லிட். வைதீகமான குடும்பத்தில் பிறந்தவர். படித்தது தமிழ் தான் என்றாலும் ஆங்கிலத்திலும் அபார புலமை மிக்கவர். ஆங்கில ஆசிரியர் வரவில்லை என்றால் அன்று இவர் தான் ஆங்கில பாடம் எடுப்பார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். அந்தளவு இரு மொழிகளிலும் பாண்டித்யம் மிக்கவர். திருவாரூரிலேயே பிறந்து வளர்ந்தவர் என்பதால் நினைவு தெரிந்த நாள் முதல் தினமும் பெரிய கோவிலுக்கு

Read More

உருவத்தை பார்ப்பவன் மனிதனடா அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா…!

ஒரு முறை ஐந்து விரல்களும் தங்களுக்குள் பேசிக்கொண்டன. நடுவிரல் முதலில் ஆரம்பித்தது. "நம் அனைவரிலும் பெரியவன் நான் தான். உயரமானவன். அழகானவன்...." என்றது. இதைக் கேட்ட மோதிர விரல் சொன்னது, "நீ உயரமானவனாக இருக்கலாம். ஆனால் விலை உயர்ந்த மோதிரத்தை என் கைகளில் போட்டுத் தான் அழகுப் பார்க்கிறார்கள். எனவே தான் என் பெயரே மோதிர விரல். உங்கள் அனைவரையும் விட மதிப்பு மிக்கவன் நான் தான்" என்றது. ஆட்காட்டி விரல் சும்மாயிருக்குமா? "நீங்கள் எல்லாம்

Read More

வான்மழையா அருள்மழையா? ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஜயந்தி SPL

இன்று சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் ஜயந்தி. திருவண்ணாமலை என்றால் நினைவுக்கு வருபவர் பகவான் ஸ்ரீ ரமணர். ரமணருக்கும் மூத்தவர் சேஷாத்திரி சுவாமிகள். மஹா பெரியவா சேஷாத்ரி சுவாமிகள் மீது பெரும் பக்தி கொண்டிருந்தார். பல முறை பக்தர்களிடம் சுவாமிகள் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். அவர் தொடர்ந்து வலியுறுத்துவது எல்லாம், மனதை எப்பொழுதும் இறைவனோடு வைத்திருக்க வேண்டும், சிந்தனைகள் சிதறக்கூடாது என்பதுதான். கடந்த சில அத்தியாயங்களில், நாம் படித்த அவரது அறிவுரைகள், நமது முயற்சிக்குப்

Read More

காத்திருக்கிறார் காவிரிக்கரை கணபதி!

தஞ்சை - திருவையாறு சாலையில் இருக்கும் நடுக்காவிரி காவிரிக்கரை பிரசன்ன கணபதி பற்றிய பதிவை அனைவரும் படித்திருப்பீர்கள். மகா பெரியவாவின் ஞான திருஷ்டியால் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய பிள்ளையார் இவர். மேலும் சந்தான பிராப்தி இல்லாமல் வாடிய ஒரு குடும்பத்திற்கே விமோசனம் அளித்தவர். (Check : தேடி வந்து துயர் துடைத்த தெய்வம்!) இந்த அதிசயத்தை பற்றி நாம் 2014 ஆம் ஆண்டு கேள்விப்பட்ட போதே நடுக்காவிரிக்கு நமது பெற்றோரை

Read More

தேடி வந்து துயர் துடைத்த தெய்வம்!

அடுத்து ஒரு முக்கியமான பதிவை அளிக்கவிருக்கிறோம். அதைப் படிக்கும் முன்னர் இந்தப் பதிவை அனைவரும் படிப்பது அவசியம். (இது மீள் பதிவு!) மஹா பெரியவா அவர்கள் தன் பக்தர்கள் வாழ்வில் நிகழ்த்திய, நிகழ்த்தி வரும் அற்புதங்கள் அநேகம் அநேகம். அவற்றுள் ஒன்றான இந்த அற்புதம், சாட்சியோடு உங்கள் முன்னே! Part I தேடி வந்து துயர் துடைத்த தெய்வம்! திருவையாறு க்ஷேத்ரத்தில் காவிரி, குடமுருட்டி, வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு என்ற ஐந்து நதிகள் பாய்வதால், திருவையாறு என்று பெயர்

Read More

ஞானிகள் மற்றும் தவசீலர்கள் ஏன் இறுதிக்காலத்தில் நோய்வாய்ப்படுகின்றனர்?

இன்றைக்கும் ஆன்மீக அன்பர்களை குடைந்து கொண்டிருக்கும் கேள்வி இது தான். மாபெரும் ஞானிகள், யோகிகள், தவசீலர்கள் ஏன் இறுதிக்காலத்தில் நோய்வாய்ப்பட்டு இறக்கின்றனர்? அவர்களது சக்தியினால் தங்களது நோயை அவர்கள் போக்கிக்கொள்ளமுடியாதா? இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரிய ஞானிகளுள் ஒருவரும் தலைசிறந்த ஆன்மீகவாதியுமான ரமணர் முதல் பாம்பன் சுவாமிகள் வரை பலர் இறுதிக்காலத்தில் கொடுநோய் கண்டு போராடி பின்பே மடிந்திருக்கின்றனர். (வள்ளிமலை சுவாமிகள் உட்பட!) வாழும்காலத்தே அவர்கள் செய்த அற்புதங்கள் குறித்த பல

Read More

அரங்கனை நம்புகிறவர்களுக்கு அற்புதங்களுக்கு குறைவேது?

இது நம் சொந்த வாழ்வில் சமீபத்தில் நடந்த ஒரு சுப நிகழ்வைப் பற்றிய பதிவு. நம் சொந்த வாழ்வில் நடந்தாலும் இதில் எல்லாருக்குமே ஒரு மெஸ்ஸேஜ் இருப்பதாக கருதுவதால் இங்கு தளத்தில் பகிர்கிறோம். நமக்கு மூர்த்தி பேதம் கிடையாது. அப்பன் மீது வைக்கும் அந்தப் பற்றை அவன் மகன் சுப்பன் மீதும் வைக்க முடியும். அவன் மாமன் மீதும் வைக்கமுடியும். யாரைத் தொழுகிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதில் கவனம் செலுத்தினால்

Read More

நம் பாரதி விழாவில் மலைக்க வைத்த மழலைகள்…!

வெற்றிகரமாக நடைபெற்ற நமது பாரதி விழாவின் முக்கிய அம்சங்களில் ஒன்று நமது நண்பர்கள் மற்றும் வாசகர்களின் குழந்தைகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள். குழந்தைகள் பங்களிப்பு இல்லாத எந்த ஒரு விழாவும், வழிபாடும் முழுமை பெறுவதில்லை என்பது நமது ஆணித்தரமான கருத்து. நம்மை சார்ந்தவர்கள் மற்றும் அன்புக்குரியவர்கள் வீட்டுக் குழந்தைகளின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக கடந்த சில ஆண்டுகளாக நமது தளத்தின் நிகழ்ச்சிகளில் அவர்களுக்கு மேடையளித்து வருகிறோம். அந்த வகையில் சமீபத்திய ரைட்மந்த்ரா ஆண்டு

Read More

துரை… ராஜதுரை!

திருத்தணியில் ஒவ்வொரு புத்தாண்டுக்கும் நடைபெறும் படிவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இதை தொடர்ந்து நூற்றுக்கணக்கான பஜனை குழுவினர் படிக்கட்டுகளில் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் பக்தி பாடல்களை பாடியவாறு மலைக்கோவிலக்கு சென்று முருகபெருமானை தரிசனம் செய்வார்கள். விழாவில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு முருகனை தரிசித்து செல்வார்கள். திருத்தணி முருகன் கோவிலில் இன்று 31–ந்தேதி படி பஜனை திருவிழாவும் நாளை ஜனவரி 1–ந் தேதி ஆங்கில புத்தாண்டு விழாவும் நடைபெற உள்ளது.

Read More

ரமணர் உபதேசித்த மோட்ச மந்திரம் என்ன தெரியுமா?- ஸ்ரீ ரமண ஜயந்தி SPL

எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி உள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர் அவர் உளந்தான் சுத்த சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும் இடமென நான் தெரிந்தேன்… அந்த வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திட என் சிந்தைமிக விழைந்ததாலோ! - வள்ளலார்  பகவான் ஸ்ரீ ரமணர், சத்குரு சேஷாத்ரி சுவாமிகள், ஞானானந்தகிரி சுவாமிகள், மகா பெரியவா போன்ற ஞானிகள் எப்படி வாழ்ந்தார்கள் என்று கூறும் வரிகள் இவை. இன்று ஸ்ரீ ரமண ஜயந்தி. எல்லாரும் மற்றவர்களை ஆராய முற்பட்ட காலத்தில், 'நான் யார் என்று

Read More

ராமாயணத்தில் அனுமனின் முதல் ராம, சீதா தரிசனம்! A THERAPEUTIC MYTH!!

இன்று அனுமத் ஜெயந்தி. (சில கோவில்களில் நாளை). இராமாயணத்தில் மிக முக்கியமான பாத்திரம் ஆஞ்சநேயர். ஆஞ்சநேயரின் என்ட்ரிக்கு பின்னர் தான் ராமருக்கும் சரி சீதைக்கும் சரி நல்ல செய்திகள் கிடைக்கத் துவங்கின. எனவே தான் அந்த பாகத்திற்கு சுந்தர காண்டம் என்று பெயர் வைத்தார் வால்மீகி. இராமாயணத்தில் உள்ள ஒவ்வொரு சர்க்கத்திற்கும் ஒரு பாராயண பலன் உண்டு. அதுவும் அனுமன் ராமரையும் சீதா தேவியையும் முதன்முதலில் சந்திக்கும் பகுதி மிக முக்கியமானது.

Read More

நல்லோர் தரிசனம் பாப விமோசனம்!

கோவிலுக்கு போவது சுவாமி தரிசனம் செய்வது விரதமிருப்பது பதிகங்கள் ஓதுவது தான் நன்மையைத் தரும் என்று எண்ணிவிடக்கூடாது. நல்லவர்கள் சத்சங்கம் மிகவும் முக்கியம். நல்லோர் தரிசனம் பாப விமோசனம். எனவே தான் வள்ளுவரும் , உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல் - குறள் 442 (வந்த துன்பத்தை நீக்கி இனி துன்பம் வராமல் முன்னதாகவே காக்கும் தன்மையுடையவரைப் போற்றி நட்பாக்கி கொள்ளவேண்டும்!) என்று கூறினார். நமது பாரதி விழாவின் வெற்றிக்கு மிக முக்கிய

Read More