Home > ஆலய தரிசனம் (Page 2)

கடனில் சிக்கித் தவிப்போரை மீட்கும் திருச்சேறை ஸ்ரீ ரிண விமோசன லிங்கேஸ்வரர்!

நோயில்லா உடலும், கடனில்லா வாழ்க்கையுமே நிம்மதி என்கிற வீட்டின் திறவுகோல். ஆனால் இன்றைய காலகட்டத்தில் இரண்டுமே அத்தனை சுலபமில்லை. நோயில்லா வாழ்வு கூட லட்சத்தில் சிலருக்கு சாத்தியம். ஆனால் கடனில்லா வாழ்வு என்பது கோடியில் ஒருவருக்கு கூட சாத்தியமில்லை என்னும் அளவிற்கு கடன்கள் நம்மை ஆட்டிப்படைக்கின்றன. காலையில் கடனுடன் எழுந்திருப்பதைவிட இரவு பட்டினியோடு படுக்கச் செல்வதே மேல் என்று கூறுவார்கள். கடனில்லா வாழ்வே வாழ்வு. இன்றைக்கு வீடு வாங்குவது முதல் சாதாரண டூ-வீலர்

Read More

நந்தனாருக்காக விலகிய நந்தி – திருப்புன்கூர் ஒரு நேரடி தரிசனம்!

'உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்' தனது அடியவர்கள் வாழ்வில் பல்வேறு காலகட்டங்களில் புரிந்த புரிந்துவரும் அற்புதங்கள் எண்ணிலடங்கா. குறிப்பாக சைவ சமயக் குரவர்கள் நால்வரிடமும் இதர நாயன்மார்களிடமும் அவன் நிகழ்த்திய பல்வேறு லீலைகளை திருவிளையாடல்களை படிக்கும்போது "எத்தனை எத்தனை பாக்கியசாலிகள் இவர்கள்" என்று மெய்சிலிர்க்கும். உள்ளம் பூரிக்கும். காதலாகி கண்ணீர் கசிந்திருகும். இந்த அற்புதங்கள் எல்லாம் கற்பனைகள் அல்ல. உண்மையில் நடந்தவை. அவற்றில் பலவற்றுக்கு ஆதாரங்கள் நமது அரும்பெரும் பொக்கிஷங்களான திருக்கோவில்களில்

Read More

அபயம் தருவான் அஞ்சனை மைந்தன் – காக்களூர் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் தரிசனம் !

இன்று (09/01/2016) அனுமத் ஜெயந்தி. சப்த சிரஞ்சீவிகளில் ஒருவர் அனுமன். நாமெல்லாம் ஒரு சிறு கஷ்டம் வந்தாலே துவண்டுவிடுகிறோம். ஆனால், அஞ்சனை வயிற்றில் கருத்தரித்தது முதலே பல கஷ்டங்களை சந்தித்து, முட்கள் நிரம்பிய பாதையில் பயணித்தவர் அனுமன் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? விடாமுயற்சியும் சுறுசுறுப்பும் இடுக்கண் அழியாமையும் இவரது அணிகலன்கள். ராம நாமம் இவரது மூச்சு. ஏற்கனவே நமது தளத்தில் அனுமனை பற்றி பல பதிவுகள் வந்துள்ளன. (சுட்டிகள் இறுதியில்

Read More

ஸ்ரீரங்கம் யானையும் வழக்கறுத்தீஸ்வரரும் – வழக்குகளில் சிக்கித் தவிப்பவர்களுக்கு ஒரு அருமருந்து!

சுமார் நூறு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீரங்கம் பெரிய கோவிலுக்கு அரங்கனின் பக்தர் ஒருவர் யானையையும் பசுவையும் தானமாக வழங்கினார். கோவிலுக்கு கஜம், கோ இரண்டும் ஒரே நேரத்தில் கிடைத்ததையடுத்து ஊர் மக்களும், ஆலய ஊழியர்களும் பெருமகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் யானைக்கு அலங்காரம் செய்வித்து முறைப்படி கோவிலில் ஒப்படைக்க ஏற்பாடுகள் நடந்தது. அனைத்தும் முடிந்த நிலையில், யானைக்கு வடகலை திருமண் சாற்றுவதா (நாமம்) அல்லது தென்கலை திருமண் சாற்றுவதா என்று குழப்பம்

Read More

மலையென வந்ததை பனியென நீக்கிய அஸ்திவாரம் – 2015 புத்தாண்டு ஆலய தரிசன அனுபவம்!

"நாம் ஏன் ஆலயம் செல்லவேண்டும்? இறைவன் தான் எல்லா இடங்களிலும் இருக்கிறானே?" என்ற புளித்துப் போன கேள்வியை சிலர் அடிக்கடி கேட்டு வருகிறார்கள் அல்லது கேட்க நினைக்கிறார்கள். இதற்கு ஒரே பதில் : "ஆலயம் தொழுவது சாலவும் நன்று!" என்பது தான். (* கிட்டத்தட்ட 60 புகைப்படங்கள் இந்த பதிவில் உள்ளன. எனவே உங்கள் கணினியிலோ அல்லது மொபைலிலோ இந்த பதிவு LOAD ஆவதற்கு சற்று அவகாசம் பிடிக்கும். சற்று பொறுமையாக இருந்து

Read More

வாக்கு தரும் நல்வாழ்வு தரும் – பிள்ளையாருடன் துவங்கும் புத்தாண்டு!!

ஆங்கில புத்தாண்டு தினத்தை பொருத்தவரை உலகமே கொண்டாடுகிறது. நாமும் கொண்டாடுவதில் தவறில்லை. ஆனால் எப்படி கொண்டாடுகிறோம் என்பதில் தான் விஷயமே இருக்கிறது. நட்சத்திர ஹோட்டல் பப்புகளிலும், கிளப்புகளிலும் மதுக்கோப்பைகளை கையில் வைத்துக்கொண்டு 'சியர்ஸ்' சொல்லி புத்தாண்டை வரவேற்பவர்கள் ஒருவிதம். நட்டநடு ராத்திரி கடற்கரையில் கூடி, பின்னர் பைக்குகளில் அசுரத்தனமான ஆபத்தான வேகத்தில் "ஆ... ஊ..." என்று கூச்சலிட்டபடி  சாலைகளில் "ஹாப்பி நியூ இயர்" என்று கத்திக்கொண்டே புத்தாண்டை வரவேற்பவர் ஒருவிதம். தனியார் தொலைக்காட்சிகளில் அரைகுறை

Read More

குன்றத்தூர் கோவிந்தனின் கதை!

சைவத்தையும் வைணவத்தையும் இணைக்கும் ஒரு சங்கமமாக கோவில் நகரான குன்றத்தூர் விளங்குகிறது. இங்கு சுப்ரமணிய சுவாமியின் மலைக்கோவிலுக்கு செல்லும் வழியில் அடிவாரத்தில் மகாவிஷ்ணு ஊரகப் பெருமாள் என்ற பெயரில் ஒரு அழகிய கோவிலில் எழுந்தருளியிருக்கிறார். தாயார் பெயர் திருவிருந்தவல்லி தாயார். (செல்வம் மிகுந்த என்று பொருள்!). இந்தக் கோயிலுக்கும் காஞ்சிக் கோயிலுக்கும் ஒரு சம்பந்தம் உண்டு. குலோத்துங்க சோழன் இந்தப் பகுதியை ஆண்டு வந்த காலத்தில் அவனை ஒரு தோஷம் பற்றிக்

Read More

பெரியவா மீட்ட பரமேஸ்வரனும் பரந்தாமனும் – சிலிர்க்க வைக்கும் நிகழ்வு!

சுமார் முப்பது முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நாள் மடத்தில் பெரியவா அணுக்கத் தொண்டர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார். "இங்கே ஏகாம்பரேஸ்வரர் கோவில் பக்கத்துல ஒரு தெருவுல ஒரு சிவன் கோவிலும் பெருமாள் கோவிலும் இருக்குன்னு மடத்து குறிப்புக்கள் சொல்றது. உங்க யாருக்காச்சும் அது பத்தி தெரியுமா??" சிஷ்யர்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டார்கள். "எங்களுக்கு தெரிஞ்சி அப்படி எதுவும் இல்லியே பெரியவா" பெரியவா தீர்க்கமாக யோசித்தார். "மடத்து குறிப்புக்கள் தப்பா இருக்காதே..." "நேர்லேயே போய் பார்த்துடுவோமே..." என்றவர் உடனே பரிவாரங்களுடன் மடத்து

Read More

குன்றத்தூர் திருமுறை விநாயகரும் அவரது சிறப்பும்!

தீபாவளி சிறப்பு பதிவுகளில் இன்னும் ஒன்றே ஒன்று பாக்கியிருக்கிறது. குன்றத்தூரில் திருமுறை விநாயகருக்கு நடந்த அபிஷேகம் குறித்த பதிவு தான் அது. அந்த பதிவை அளிக்கும் முன்னர், திருமுறை விநாயகரைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும். அது என்ன திருமுறை விநாயகர்? இந்த கோவில் எங்கேயுள்ளது? யார் கட்டியது ? நமது பன்னிரு திருமுறைகளில் மிக மிக பழமையான அச்சுப் பிரதிகள் (* சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் அச்சில் ஏறிய முதல் பிரதிகள்

Read More

நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா…

இது 2010 டிசம்பரில் நடந்த சம்பவம். 2012 மார்ச்சில் எழுதப்பட்டது. இப்போதைக்கு பதிவை கவனமாக படிக்கவும். கருத்துக்களை உள் வாங்கிக்கொள்ளவும். கட்டுரையாளர் எத்தகைய சூழ்நிலையில் இருந்தார் என்று மட்டும் புரிந்துகொண்டால் போதும். "இனி நான் வாழவே வழியில்லை" என்ற நிலையில் இருப்பவர்கள் ஒவ்வொருவரும்  அவசியம் இதை படிக்கவேண்டும். யார், யாருக்கு, எங்கே எழுதினார்கள் என்கிற விபரங்களை எல்லாம் பின்னர் சொல்கிறோம்.  ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை....! 2010... December... சில

Read More

திருப்பாம்புரம் – ஐந்து தலங்களின் பெருமையை ஒருங்கே பெற்ற ஒரே தலம்!

ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம், 18 வருட ராகு தசை, 7 வருட கேது தசை, லக்னத்திற்கு 2 ல் ராகுவோ, கேதுவோ இருப்பது, லக்னத்திற்கு  8ல் கேதுவோ, ராகுவோ இருப்பது, ராகு புத்தி, கேது புத்தி, களத்திர தோஷம், புத்திர தோஷம், திருமணத்தடை, கனவில் அடிக்கடி பாம்பு வருதல், தெரிந்தோ தெரியாமலோ பாம்பைக் கொல்லுதல், கடன் தொல்லைகள் இருந்தால் அவர்கள் யாவர்க்கும் அருமருந்தாக விளங்கும் ஒரு ஆலயத்தை பற்றி

Read More

இல்லறமும் நல்லறமும் கூடவே சொந்த வீட்டையும் அருளும் சிறுவாபுரி பாலசுப்ரமணியர் !

சில வாரங்களுக்கு முன்னர் ஒரு நாள் மாலை அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது வடபழனி அருகே சென்று கொண்டிருக்கும்போது ஒரு அலைபேசி வந்தது. பேசியவர் தன் பெயர் மணிவண்ணன் என்றும் தினமலரில் உதவி ஆசிரியராக பணிபுரிவதாகவும் சொன்னார்.  நீண்டநாட்களாக நமது தளத்தை பார்த்துவருவதாக கூறி நமது பணிகளுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார். (இவர் நமது தளத்தில் ஒரு சில முறை பின்னூட்டங்களை இட்டிருக்கிறார்). ஒரு ஐந்து நிமிடம் பேசலாமா என்று கேட்டுவிட்டு

Read More

பூவிருந்தவல்லி to சுருட்டப்பள்ளி – அடியார்களின் அடியொற்றி ஒரு பயணம்!

பூவிருந்தவல்லி வரதராஜப் பெருமாள் கோவிலிலிருந்து திருமலைக்கு பாதயாத்திரை புறப்பட்ட ஸ்ரீராமுலு குழுவினரை கௌரவிக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக அந்நேரம் புகைப்படமெடுத்தவர் செய்த தவறால் நாம் ஸ்ரீராமுலு அவர்களை கௌரவிப்பது போன்ற புகைப்படங்கள் மட்டும் கேமிராவில் பதிவாகவில்லை என்று கூறியிருந்தோம் நினைவிருக்கிறதா? அதை தொடர்ந்து சுருட்டப்பள்ளியில் ஸ்ரீராமுலு அவர்களை மறுநாள் சந்திப்பது என்று முடிவானது. முன்னதாக மத்தூர் சென்று மகிஷாஷூர மர்த்தனியை தரிசித்துவிட்டு பின்பு அங்கிருந்து நேரே நகரி வழியாக நல்லாட்டூர், பிச்சாட்டூர் தொடர்ந்து

Read More

மகா பெரியவாவும் மத்தூர் மஹிஷாசுரமர்த்தனி அம்மனும் !

இது நமது தளத்தின் 1001 வது பதிவு. நமது தளம் துவக்கி விரைவில் மூன்று ஆண்டுகள் நிறைவடையப் போகிறது. சரியாக 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி அன்று துவக்கப்பட்ட நம் தளம் இன்று 34 மாதங்களில் 1001 பதிவை எட்டியுள்ளது. இந்த ஒன்மேன் ஷோவிற்கு உறுதுணையாக இருந்த நம் வாசகர்களுக்கும், நண்பர்களுக்கும் என்றும் நம்மை வழிநடத்தும் கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் எளிமையின் திருவுருவம் மகா பெரியவா அவர்களுக்கும்,

Read More