Home > பிரார்த்தனை (Page 2)

திருவாசகம் கேட்டு பிறந்த குழந்தை! – Rightmantra Prayer Club

சைவ சமயக் குரவர்கள் நால்வருள் ஒருவர் மாணிக்கவாசகர். பன்னிரு திருமுறைகளில் இவர் பாடிய திருவாசகமும், திருக்கோவையாரும் எட்டாம் திருமுறைகளாக தொகுக்கப்பட்டுள்ளன. இவர் 9 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர். இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் முதலமைச்சராக பணியாற்றினார். பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து போற்றப்படுகிறது. ஞான நெறியைப் பின்பற்றிய இவர் 32 ஆண்டுகளே வாழ்ந்து ஆனி மகத்தில்

Read More

அடியவருக்கு ஒன்று என்றால் அரங்கன் பொறுப்பானா? – Rightmantra Prayer Club

ஸ்ரீமத் ராமானுஜர் ஒரு முறை வரதராஜப் பெருமாளை தரிசிப்பதற்காக சிஷ்யர்களுடன் காஞ்சிக்கு யாத்திரை புறப்பட்டார். செல்லும் வழியில் எங்கும் தங்குவது என்ற யோசனை எழுந்தது. யக்ஞேசன் என்ற சீடன் ஒருவன் வசிக்கும் ஊர் வழியில் இருப்பது தெரிந்தது. அவன் வீட்டில் தங்குவோம் என்று முடிவு செய்தவர், தனது சிஷ்யர்களை அழைத்து யக்ஞேசனிடம் தமது வருகையை பற்றி தகவல் தெரிவித்துவிடுமாறு கூறியனுப்பினார். தனது குரு தனது இல்லத்திற்கு எழுந்தருளுவது கேள்விப்பட்ட யக்ஞேசன் மிகவும்

Read More

வேள்விச் சாலைக்குள் நாய்களுடன் புகுந்த சண்டாளன் யார்? – Rightmantra Prayer Club

சோழ நாட்டிலுள்ள திருவம்பர் என்னும் தலத்தில் தூய அந்தணர் மரபிலே பிறந்தவர் சோமாசி மாற நாயனார் என்பவர். இவர் அறவொழுக்கங்களில் நெறிபிறழாது முறையோடு வாழ்ந்து சிவபக்தி செய்து அனைவராலும் போற்றப்படும் அளவிற்கு விளங்கினார். இவரது திருமேனியிலே எந்நேரமும் திருவெண்ணீறு துலங்கும். நாவிலே 'நமச்சிவாய' மந்திரம் ஒலிக்கும். இவர் சிவத்தலங்கள் தோறும் சென்று சிவதரிசனம் செய்து வந்தார். இவர் வேள்விகளை (யாகங்கள்) தவறாமல் நடத்தி வந்தார். அப்படி நடத்தி வந்த வேள்விகள் பலவற்றிலும்

Read More

எது மிகச் சிறந்த பரிகாரம், வழிபாடு? – Rightmantra Prayer Club

இந்த கதையை நாம் பல ஆண்டுகளுக்கு முன்னர் படித்திருக்கிறோம். எங்கு என்று நினைவில் இல்லை. சமீபத்தில் நமக்கு வாட்ஸ்ஆப்பில் வந்தது. பொதுவாக நம் கதைதான் "இதோ பாருங்க நல்லாயிருகுல்ல..." என்று நமக்கே வாட்ஸ்ஆப்பில் வரும். அதிசயமாக வேறொருவர் கதை வந்தது. இக்கதையில் கூறப்படும் கருத்து அனைவரும் சிந்திக்கவேண்டிய ஒன்று. பதிவின் இறுதியில் இந்த பதிவை முதன்முதலில் பகிர்ந்தவர் கூறியிருப்பதை கவனியுங்கள். நம் கருத்தும் அதுவே தான். * பதிவுக்குள் செல்லும் முன் ஒரு முக்கிய விஷயம்

Read More

ஈசனருளால் இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை – Rightmantra Prayer Club

நாயன்மார்கள் ஒவ்வொருவரும் தாங்கள் செய்த தொண்டால், மேற்கொண்ட சிவபக்தியால் தனித்தன்மை பெற்று விளங்கினார்கள். "இது தான் பக்தி, இப்படித் தான் தொண்டு செய்யவேண்டும், இப்படித் தான் வாழவேண்டும்" என்று எடுத்துக்காட்டினார்கள். 'இறைவனுக்காக எதையும் துறக்கலாம். ஆனால், எதற்காகவும் இறைவனை துறந்துவிடக்கூடாது' என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். இன்று சித்திரை பரணி. சிறுத்தொண்ட நாயனாரது குருபூஜை. சிறுத்தொண்ட நாயனாரது சரிதம் மிக மிக தனித்தன்மை வாய்ந்தது. வாத்ஸல்யத்திலேயே மிகப்பெரிய வாத்ஸல்யமான புத்திர வாத்ஸல்யத்தை சிவனுக்காக

Read More

திருக்குறிப்புத் தொண்டரை ஆட்கொண்ட முக்தீஸ்வரர் தரிசனம் – Rightmantra Prayer Club

பக்தி இலக்கிய வரலாற்றில் மிகப் பெரும் புரட்சி செய்த நூல் சேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணம் எனப்படும் 'பெரியபுராணம்'. காரணம், இறைவனின் அருளைப் பெற ஒருவர் தான் செய்யும் தொழிலை எல்லாம் விட்டுவிட்டு முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்கிற கருத்தை உடைத்து நொறுக்கி - இல்லறத்தில் ஈடுபட்டபடியே ஒருவர் தொண்டு செய்து இறையருளை பெறமுடியும் - என்பதை உணர்த்திய வாழ்வியல் வழிகாட்டி பெரியபுராணம். இந்த 63 நாயன்மார்களும் கி.பி. 4 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 8 ஆம்

Read More

எண்ணம்போல் வாழ்க்கை! செயல்போல் உயர்வு!! – Rightmantra Prayer Club

இன்றைய பிரார்த்தனை கிளப் பதிவு தவிர்க்க இயலாத காரணத்தால் ஒரே ஒரு பிரார்த்தனையுடன் அளிக்கப்படுகிறது. அதுவும் அவசரம் கருதி. நம் ரைட்மந்த்ரா அலுவலகத்தை பொறுத்தவரை கூரியர் ஆட்கள், தபால்காரர்கள் மற்றும் இதர சர்வீஸ் துறையில் இருப்பவர்கள் உள்ளே வர நேர்ந்தால் அவர்கள் தங்கள் காலணிகளை அணிந்துகொண்டே உள்ளே வரலாம். ஷூவையோ செருப்பையோ கழற்றிவிட்டு தான் உள்ளே வரவேண்டும் என்கிற அவசியம் அவர்களுக்கு இல்லை. காரணம் அவர்கள் இருக்கப்போவது ஒரு சில நொடிகள்.

Read More

புற்றுநோயிலிருந்து மீண்ட மகள் – ஒரு தாயின் நெகிழ்ச்சியான கடிதம்!

கோவையிலிருந்து திருமதி.ராணி என்பவர் தமது மகள் சிவசக்தி (35) என்பவருக்கு தொண்டையில் புற்றுநோய் ஏற்பட்டு அது நீங்க நமது பிரார்த்தனை கிளப்பில் கோரிக்கை சமர்பித்ததும் அது பின்னர் நீங்கியது குறித்தும் 'முந்தி நின்ற வினைகளவை போகச் சிந்தி நெஞ்சே' என்கிற பதிவில் குறிப்பிட்டிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். இது குறித்த தகவலை ராணி அவர்கள் நமக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தி நன்றியும் கூறியிருந்தார். அதை அப்போது நாம் தயார் செய்துகொண்டிருந்த மேற்படி பதிவில்

Read More

வறுமையால் வாடிய பக்தனுக்கு ஈசன் கொடுத்த சிபாரிசுக் கடிதம் – Rightmantra Prayer Club

திருவிளையாடலில் வரும் பாணபத்திரரை அனைவருக்கும் தெரியும். அவருக்காக எம்பெருமான் விறகு முதலானவற்றை சுமந்து பாடல்கள் பாடி பாணபத்திரரை போட்டிக்கு பாட அழைத்த ஏமநாத பாகவதரை மதுரையைவிட்டே இரவோடிரவாக ஓடச் செய்ததும் தெரியும். ஆனால் அதற்கு பிறகு என்ன நடந்தது? ஆரம்பம் முதலே வறுமையில் வாடியவர் பாணபத்திரர். அவரது பிரச்னை தீர்ந்ததா? படிக்க படிக்க பரவசத்தில் ஆழ்த்தும் அற்புதமான சம்பவம் இது! பக்தனுக்காக திருடனாய் மாறிய பரமேஸ்வரன்!  மதுரையில் வாழ்ந்து வந்த பாணபத்திரர் தினமும் எம்பெருமான் திருவடி

Read More

சிவபுண்ணியம் செய்த ஏழைக்கு குபேரன் ஏவல் புரிந்த கதை – Rightmantra Prayer Club

'சிவபுண்ணியம்' என்ற ஒன்று இருக்கிறது. சிவமஹா புராணமும் கந்தபுராணமும் படிப்பவர்களுக்கு அது தெரிந்திருக்கும். அதாவது சிவபெருமான் தொடர்பான நேரடியான அல்லது மறைமுகமான கைங்கரியத்தில் ஈடுபடுவதால் அல்லது அதற்கு உதவுவதால் கிடைக்கக்கூடிய புண்ணியம். இது பற்றிய கதைகள் பிரமிக்க வைப்பவை. எப்பேற்பட்ட துராத்மாக்களுக்கும், பாபிகளுக்கும் சிவபுண்ணியம் செய்யக்கூடிய வாய்ப்பு கிடைக்கும்போது அவர்கள் மன்னிக்கப்பட்டு சிவபெருமானால் ரட்சிக்கப்படுகிறார்கள் என்பதே பல கதைகளில் நாம் அறியக்கூடிய உண்மை. அப்படியென்றால் சிவகைங்கரியத்தை மனமுவந்து செய்பவர்கள் கிடைக்கக்கூடிய

Read More

முந்தி நின்ற வினைகளவை போகச் சிந்தி நெஞ்சே – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

நமது தளத்தின் மிக முக்கியமான ஒரு அம்சம் வாராந்திர பிரார்த்தனை கிளப். கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேல் நடந்து வரும் இந்த பிரார்த்தனை கிளப்பில் பல வாசகர்களின் பிரார்த்தனைகள் இடம்பெற்றுள்ளன. பல அருளாளர்கள் தலைமை ஏற்று பிரார்த்தனை செய்துவருகிறார்கள். அவை நிறைவேறிய அனுபவங்களை ஏற்கனவே நாம் பார்த்திருக்கிறோம். இதோ தற்போது மேலும் சில வெற்றிச் செய்திகள் கிடைத்திருக்கின்றன. பிரார்த்தனை கிளப்பை பொறுத்தவரை பெரும்பாலும், பிரார்த்தனையை சமர்பிக்க மட்டுமே தளத்திற்கு வருபவர்கள் பலர் உண்டு.

Read More

அஞ்சனை செய்த தவமும் அனுமன் அவதாரமும் – RIGHTMANTRA PRAYER CLUB

திரேதா யுகத்தில் கேசரி என்னும் நல்லொழுக்கங்கள் மிக்க சிவபக்தன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு நீண்ட நாட்களாகியும் புத்திரப்பேறு இல்லை. எனவே சிவபெருமானை நோக்கி கடும் தவம் இருந்தான். ஒரு கட்டத்தில் உணவு, நீர் முதலியவற்றை கூட துறந்து காற்றையே உணவாக கொண்டு தவமிருந்தான். அவனது கடும் தவத்துக்கு இரங்கிய சிவபெருமான், அவன் முன் பிரத்யட்சமாகி "உன் கடும் தவம் கண்டு மகிழ்ந்தோம். உனக்கு வேண்டியது என்ன கேள் மகனே" என்றார். "என் குலம்

Read More

அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழு சார்பாக பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வழிபாடு

சென்னை சைதாப்பேட்டையில் இயங்கி வரும் 'அண்ணாமலை ஆன்மீக வழிபாட்டு குழு'வினர் பல வியத்தகு ஆன்மிக பணிகளை ஆற்றி வருவது அறிந்ததே. ஆண்டு தோறும் நடைபெறும் சிறுவாபுரி வள்ளி மணவாளப் பெருமான் திருக்கல்யாண உற்சவம், பழனி தைப்பூச அன்னதானம் இவர்களது ஆன்மீக பணிகளில் முக்கியமானவை. அது தவிர கல்விப் பணியும் ஆற்றிவருகின்றனர். கல்விப் பணியின்றி ஆன்மீக பணி நிறைவு பெறாது. அந்தவகையில் இக்குழுவினரின் பணி மிகவும் அவசியமான ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி

Read More

பக்தனுக்காக சாட்சி சொன்ன சொக்கநாதர் – RIGHTMANTRA PRAYER CLUB

மதுரையை ஆண்ட சுந்தரபாத சேகரன் என்கிற மன்னனின் ஆட்சியில் தனபதி என்கிற வணிகன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு சுசீலை என்கிற கற்பிற் சிறந்த இல்லாள் இருந்தாள். தனபதி-சுசீலை தம்பதியினருக்கு எல்லாம் இருந்தும் ஒரு பெரிய குறை. நீண்டநாட்களாக அவர்களுக்கு புத்திர பாக்கியம் இல்லை. "கண்ணே...!" என்று கொஞ்சி மகிழ ஒரு குழந்தை இல்லாததால் மிகவும் மனம் வருந்திய தம்பதிகள் மதுரையில் எழுந்தருளிருக்கும் சொக்கநாதப் பெருமானிடம் அடிக்கடி சென்று இது குறித்து முறையிட்டு

Read More