Home > மகா பெரியவா (Page 2)

காற்றை நிறுத்திய காத்தவராயன்!

மகா பெரியவாவை பற்றி அடுத்தப் பதிவை எப்போது அளிக்கப்போகிறீர்கள் என்று பல வாசகர்கள் கேட்டபடி இருக்கிறார்கள். நமது  ஆக்கத்தில் பிரத்யேகமாக உருவான பெரியவா பற்றிய சிறப்பு பதிவுகள் (Rightmantra Exclusive) விரைவில் வருகிறது. சற்று பொறுமையாக இருந்தால் மிகப் பெரிய விருந்தை ருசிக்கலாம். நமக்கு முன்பை விட பதிவுகள் எழுத, தயாரிக்க தற்போது நிறைய நேரம் பிடிக்கிறது. காரணம் நம் தளத்தின் பதிவுகளின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டது. எனவே நமது பொறுப்பும்

Read More

பெரியவா சொன்னா அந்த பெருமாளே சொன்ன மாதிரி – சிகையால் கிடைத்த மரியாதை!

இன்று மகா பெரியவா ஜயந்தி. நாட்டின் பல இடங்களில் வெகு விமரிசையாக அது தொடர்பான உற்சவங்கள் நடைபெற்றுவருகின்றன. சென்னையில் மட்டும் நான்கைந்து இடங்களில் விமரிசையாக பெரியவா ஜயந்தி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அவருக்கு ப்ரீதியான வேத பாராயணம், கோ- பூஜை, விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம், ஹோமங்கள், அன்னதானம் போன்றவற்றோடு பல அமைப்புக்கள் இதை விமரிசையாக கொண்டாடிவருகிறார்கள். நாம் ஏதாவது ஒரு நிகழ்வில் நேரடியாக பங்கேற்க வேண்டும் என்று நினைத்தோம்.

Read More

”வா சங்கரா, இப்படி வந்து உட்கார்” – திருவாய் மலர்ந்த தெய்வம்!

மகா பெரியவாளைப் பற்றி நம் தளத்தில் அளித்து சில வாரங்கள் ஆகிறது. காரணம் அனைவருக்கும் மிகப் பெரிய விருந்து ஒன்று தயாராகி வருகிறது. அதற்குள் பலர், 'ஏன் பெரியவாளை பற்றி அளிப்பதில்லை? ரமணரைப் பற்றிய பதிவுகள் அருமை. இருப்பினும் மஹா பெரியவாளைப் பற்றியும் அளித்தால் எங்களுக்கு டபுள் ட்ரீட் கிடைக்குமே...!' என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். குருவாரம் அன்று தான் குருவைப் பற்றி பதிவு அளிக்கவேண்டும் என்பதில்லையே. எனவே இன்று ஒரு அற்புதமான

Read More

தன் புண்ணியத்தை ஈந்து நம் பாவத்தை கரைக்கும் கருணைக்கடல்!

மகான்கள் வாழும் காலத்தை விட அவர்கள் மறைந்த பின்பே அதிகம் கொண்டாடப்படுகிறார்கள். ஈசன் வகுத்த இந்த விதியின் சூட்சுமம் இன்று வரை விளங்கப்படாத ஒன்று. சுவாமி விவேகானந்தர், மகாகவி பாரதி முதல் பெருந்தலைவர் காமராஜர் வரை பல அருளாளர்கள் நம்மிடையே வாழ்ந்த போது அவர்களின் அருமையை நாம் உணரவில்லை. இன்றைக்கு அவர்கள் மீண்டும் பிறக்கமாட்டார்களா நம்மை வழி நடத்தமாட்டார்களா என்று ஏங்கிக்கொண்டிருக்கிறோம். காஞ்சி மகா பெரியவாவை பொருத்தவரை, அவர் வாழும்போதே அவருடைய

Read More

சேற்றுக்குள் மறைந்திருந்த ஸ்ரீ அனந்த பத்மநாப ஈஸ்வரர்! விசேஷ புகைப்படங்கள்!!

காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலை ஒட்டியுள்ள லிங்கப்பன் தெருவில், ஒரு வீட்டு  புழக்கடையில் கழிவறைக்கு கீழே சிவலிங்கமும், ரங்கநாதர் திருவுருவச் சிலைகளும் பெரியவாவின் அருளால் மீட்கப்பட்டது பற்றி முந்தைய பதிவில் பார்த்தோமல்லவா? (பெரியவா மீட்ட பரமேஸ்வரனும் பரந்தாமனும் - சிலிர்க்க வைக்கும் நிகழ்வு) அதன் புகைப்படங்கள் அடங்கிய பிரத்யேகப் பதிவு இது. சென்ற பதிவிலேயே புகைப்படங்களை அளித்திருக்கவேண்டியது. மகத்தான விஷயங்களுக்கு காத்திருப்பதில் ஒரு தனி சுகம் உண்டு. எனவே அடுத்த நாள் அளிக்க

Read More

பெரியவா மீட்ட பரமேஸ்வரனும் பரந்தாமனும் – சிலிர்க்க வைக்கும் நிகழ்வு!

சுமார் முப்பது முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நாள் மடத்தில் பெரியவா அணுக்கத் தொண்டர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார். "இங்கே ஏகாம்பரேஸ்வரர் கோவில் பக்கத்துல ஒரு தெருவுல ஒரு சிவன் கோவிலும் பெருமாள் கோவிலும் இருக்குன்னு மடத்து குறிப்புக்கள் சொல்றது. உங்க யாருக்காச்சும் அது பத்தி தெரியுமா??" சிஷ்யர்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டார்கள். "எங்களுக்கு தெரிஞ்சி அப்படி எதுவும் இல்லியே பெரியவா" பெரியவா தீர்க்கமாக யோசித்தார். "மடத்து குறிப்புக்கள் தப்பா இருக்காதே..." "நேர்லேயே போய் பார்த்துடுவோமே..." என்றவர் உடனே பரிவாரங்களுடன் மடத்து

Read More

திகிலூட்டிய மழை வெள்ளம் – கைகொடுத்த ‘கோளறு பதிகம்’!

வாசக அன்பர்களுக்கும் ரைட்மந்த்ரா குடும்பத்தினருக்கும் வணக்கம். சரியாக சென்ற டிசம்பர் 1 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சென்னையின் கறுப்பு நாளன்று அடைமழை பெய்ய ஆரம்பித்த நேரம், அலுவலகத்துக்கு புறப்பட்டவன் மழை ஓயட்டும் அதன் பிறகு கிளம்பலாம் என்று அப்படியே வீட்டில் அமர்ந்துவிட்டோம். நேரத்தை வீணாக்கவேண்டாம் என்று கணினியில் அமர்ந்து பதிவுகளை தயார் செய்துகொண்டிருந்தோம். அதுவரை போக்குக்காட்டிவிட்டு பின்னர் 10.00 மணியளவில் வலுக்கத் துவங்கிய மழை 11.00 am, 12.00 pm, 1.00

Read More

ஏமாற நாங்களில்லை என் பெரியவாளே – மஹா பெரியவா லீலாம்ருதம்!

"மாயம் பல செய்து புறக்கண்ணை மறைத்தாலும் ஈசன் நானில்லை என்று ஏய்த்திட்டாலும் ஏமாற நாங்களில்லை என் பெரியவாளே" காஞ்சியில் மஹா பெரியவாளின் அதிஷ்டானத்திற்கு செல்லும் யாவரும், பிரதக்ஷிணம் வரும் போது இந்த படத்தை பார்க்காமல் இருக்கமுடியாது. தன்னையுமறியாமல் பெரியவா தன்னுடைய தெய்வாம்சத்தை வெளிப்படுத்திய தருணங்களில் ஒன்று இது. (நம்மைப் பொருத்தவரை அவர் ஸ்ரீஹரியின் அம்சம்!) 'தந்தது உன் தன்னை கொண்டது என் தன்னை' என்னும் அரிய நூலில் காணப்படும் மீளா அடிமை என்றழைக்கப்படும் பிரதோஷம் மாமாவின்

Read More

மானுடம் உய்ய பொழிந்த அமிர்த தாரை – அதிதி தேவோ பவ – (1)

ரைட்மந்த்ரா தளத்தில் பல ஆன்மீக தொடர்கள் வெளியாகி வந்துகொண்டிருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட விஷயத்தை பற்றி நிறைய எழுத வேண்டியிருக்கிறது எனும்போது தொடராக அதை வெளியிடுவது நமது வழக்கம். பெயர் தான் 'தொடர்' என்பதே தவிர, தனித் தனியாக படித்தாலும் புரியும் விதமாக ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு சம்பவம் சொல்லப்பட்டிருக்கும். தொடர்களை அறிமுகப்படுத்தி எழுதுவதன் நோக்கமே ஒரே பதிவில் அளவுக்கதிகமாக திணிக்க முடியாது என்பதாலும் பதிவுகளை தயார் செய்யவும், புகைப்படங்கள், ஓவியங்கள்

Read More

அபலையின் கண்ணீரை துடைத்த ஆபத்பாந்தவன்!

மகா பெரியவாவின் பதிவுகளை பொருத்தவரை என்னென்ன பதிவுகளை அளிக்க வேண்டும் என்று நாம் முன்கூட்டியே தீர்மானிப்பதில்லை. நம்பினால் நம்புங்கள். அது தானாக நடக்கும் ஒன்று. எங்கோ யாரோ ஒரு ஜீவனின் அபயக்குரலுக்கும் தேடுதலுக்கும் பிரார்த்தனைக்கும் நம் பதிவுகள் பதிலாக அமைவதுண்டு. இது பல முறை நடந்திருக்கிறது. இன்று நாம் அளிக்க நினைத்த பதிவு ஒன்று அளிப்பதோ வேறு ஒன்று. பெரியவாவின் விருப்பம் இது தான் போல! சம்பந்தப்பட்டவர்களுக்கு நிச்சயம் இது ஒரு

Read More

நவராத்திரி & கொலு – ஏழ்மையில் வாடிய குடும்பத்தில் பெரியவா போட்ட ‘ஆனந்த’ குண்டுகள்!

மகா பெரியவா தொடர்புடைய பதிவுகள் எனும்போது நமது முயற்சியில் விளையும் பிரத்யேக பதிவுகளை நாம் அவ்வப்போது அளித்து வந்தாலும், 'டைமிங்'கான பதிவுகள் சில நேரங்களில் தேவைப்படுகின்றன. காரணம், படிக்கும் அனைவருக்கும் சம்பந்தப்பட்ட விஷயத்தில் நம்பிக்கையும் பற்றும் ஏற்படும். மகா பெரியவா ஒரு விஷயத்தை சொன்னால் அது சாட்சாத் அந்த சர்வேஸ்வரனே சொன்னது போல என்பதால் ஒரு பண்டிகை நாளோ விஷேடமோ வருகிறபோது, பெரியவா அது குறித்து என்ன திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்

Read More

நடமாடும் தெய்வத்தின் மாசற்ற மகிமை!

மகா பெரியவா தொடர்புடைய பல அனுபவங்களை சம்பந்தப்பட்ட பக்தர்களையும் அணுக்கத் தொண்டர்களையும் நேரடியாகவே சென்று அவர்கள் இருப்பிடத்திலேயே சந்தித்து அவர்கள் கூறியதை பல முறை இங்கே நம் தளத்தில் பகிர்ந்திருக்கிறோம். அள்ள அள்ள குறையாத அருட்சுனைகள் அவை. இந்நிலையில் நமது அலுவலகத்திற்கு சென்ற வாரம் நண்பரும் வாசகருமான திரு.திருக்கருகாவூர் ராஜன்கணேஷ் என்பவர் வந்திருந்தார். நீண்ட நாட்களாகவே நம் அலுவலகம் வந்து நம்மை சந்தித்து அளவளாவ வேண்டும் என்று சொல்லிகொண்டிருந்தார். நமது நூல்

Read More

புடவை முதல் கோலம் வரை – மகா பெரியவா பெண்களுக்கு சொல்லும் டிப்ஸ்!

பெரியவாவிடம் ஒரு பிரச்னையை கொண்டு வந்து தீர்வு கிடைக்காமல் திரும்பியவர்களே இல்லை. அந்தளவு ஒரு அவர் தீர்வுகளின் என்ஸைக்லோபீடியாவாக இருந்தார். அவருடைய ஞானமும் நுண்ணறிவும் மனித மனதிற்கும் ஆராய்ச்சிக்கும் இன்றும் புரியாத சூட்சுமங்கள். இதையெல்லாம் அவர் எந்தப் பள்ளியில் போய் படித்தார் என்பது இன்று வரை புரியாத ஒன்று. அதே போன்று அவரது ஒவ்வொரு சொல்லிலும் செயலில் ஜீவகாருண்யம் வெளிப்படும். இது தொடர்பான இரண்டு சம்பவங்களை பார்ப்போம். இரண்டுமே பெண்களுக்கு

Read More

மஹா பெரியவாவின் ஜட்ஜ்மெண்ட்டும் அனுக்ரஹ தெரபியும்!

இந்த வாரம் மூன்று வெவ்வேறு சம்பவங்கள். பெரியவா தொடர்புடைய ஒவ்வொரு அனுக்ரஹத்திலும் சம்பந்தப்பட்ட பக்தர்கள் தவிர, பிறருக்கும் ஒரு மெசேஜ் ஒளிந்திருக்கும். பெரியவாவின் திருவுளம் எப்படியோ அப்படியே நடந்துகொண்டால் நமக்கு எந்தவித ஏமாற்றமும் இல்லை. ஆன்ம அறிவோடு உலகியல் அறிவு மோதும்போது உலகியல் அறிவு எப்போதும் தோற்றுவிடுகிறது. எனவே குருவிடத்தில் என்றும் எப்போதும் பரிபூரண சரணாகதி அடைந்துவிடுவது சிறந்தது. =============================================================== Also check : யாருக்கு தானமளிக்க வேண்டும்? யாருக்கு அளிக்கக்கூடாது? பாத்திரமறிந்து பிச்சையிடு! =============================================================== டாக்குமெண்டை

Read More