Home > Contact us…. > About me…

About me…

தேடிச் சோறு நிதம் தின்று
பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம்
வாடித் துன்பமிக உழன்று
பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து
நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி
கொடுங்
கூற்றுக் கிரையனப்பின் மாயும்
பல
வேடிக்கை மனிதரைப் போலே
நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ…?

முழுமுதற் கடவுள் விநாயகப் பெருமானை வேண்டி வணங்கி, அவனுக்கு உகந்த ‘விநாயக சதுர்த்தி’ நன்னாளில் 19/09/2012 அன்று இந்த பயணத்தை துவக்கினேன்.

E-PUBLISHING துறையில் 15 ஆண்டு அனுபவம். கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் ஒரு தனியார் நிறுவனத்தில் CHIEF LAYOUT DESIGNER ஆக பணிபுரிந்துகொண்டே ஒய்வு நேரத்தில் இந்த தளத்தை நடத்திவந்தேன். ஒரு கட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டே தளத்தை நடத்துவது கஷ்டமாக இருந்தது. ரைட்மந்த்ராவுக்கு எனது உழைப்பும் கவனமும் அதிகம் தேவைப்பட்டது. தனியே ஒரு அலுவலகம் அமைத்தே தீரவேண்டிய நிர்பந்தம். எனவே பணியை துறந்து, அரும்பாடுபட்டு பிப்ரவரி 1, 2015 அன்று இந்த தளத்திற்கு என்று பிரத்யேக அலுவலகத்தை மேற்கு மாம்பலத்தில் அமைத்தேன்.

ரைட்மந்த்ராவுக்காக பதிவுகள் எழுதுவது, சாதனையாளர்களை சந்திப்பது அவர்களை பேட்டி எடுப்பது என்று போக பதிப்புத் துறையில் 15 ஆண்டுகளுக்கு மேல் கொண்டுள்ள அனுபவத்தை வைத்து ஃப்ரீலான்ஸ் டிசைனிங் பணிகள் சிலவற்றை மேற்கொண்டு வருகிறேன்.

RMS copy copyசிறு வயது முதலே கதை, கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உண்டு. கடந்த பல ஆண்டுகளாக இணையத்தில் கருத்து பரிமாற்றம் செய்த அனுபவமும், பதிவு எழுதிய அனுபவம் உண்டு. கடற்கரை மணலில் எழுதப்படும் எழுத்தை போல அல்லாமல், காலத்தால் அழியாத கல்வெட்டாய்  என் எழுத்துக்கள் இருப்பதையே நான் விரும்புகிறேன்.

எம் எழுத்துக்கள் அறநெறியையும், தெய்வ பக்தியையும் பரவச் செய்யவும், வாழ்க்கையில் சாதிக்கவேண்டும் என்கிற தாகம் உள்ளவர்களுக்கு சரியான வழிகாட்டுவதற்கும் பயன்படவேண்டும் என்று விரும்பியே இந்த எளிய முயற்சியை துவக்கியிருக்கிறேன்.

கடந்த காலங்களில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மற்றும் அது எனக்கு தந்த பாடங்கள் இந்த பயணதிலும்,  இனி ஈடுபடவிருக்கும்  துறையிலும் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் அவன் நடத்தும் நாடகத்தில் காரணமின்றி காரியங்கள் நடப்பதில்லை. பொருளின்றி பாத்திரங்கள் பேசுவதில்லை.

எதிர்கால லட்சியம் என்று பார்த்தால்… உதவி நாடி வருவோர்க்கு கிள்ளிக் கொடுக்காமல் அள்ளிக் கொடுக்கும் வண்ணம் பொருளாதாரத் தன்னிறைவு பெறுவதும் சமூகத்தில் ஒரு உயர்ந்த அந்தஸ்தை பெறுவதும் தான். பணத்தில் மட்டுமல்ல குணத்திலும் கோடீஸ்வரனாக உயர்வதே என் விருப்பம்.

ஆயிரக்கணக்கானோருக்கு வேலை தருவது என் நீண்ட நாள் கனவு. அதற்குரிய பாதையில் தற்போது உழைக்கத் துவங்கியிருக்கிறேன். மற்றபடி… அனைவருக்கும் உள்ள நியாயமான லௌகீக அபிலாஷைகள் அனைத்தும் உண்டு.

எனக்கு தக்க வாழ்க்கை துணையை தேடிக்கொண்டிருக்கிறேன். தேடல் தொடர்கிறது.

இந்த தளம் துவக்க எனக்கு மிகப் பெரும் உந்துதலாக இருந்த SHIVATEMPLES.COM திரு.நாரயணசாமி அவர்களுக்கும், LIVINGEXTRA.COM நண்பர் திரு.ரிஷி அவர்களுக்கும் என் நன்றி!

வாழ்க்கையில் போராடுபவர்களுக்கும், தேடல் உள்ளவர்களுக்கும், தெய்வ பக்தியும் தன்னம்பிக்கையும் உள்ளவர்களுக்கும் உற்ற துணையாக இந்த தளம் விளங்கி வருகிறது.

ஆன்மிகம், சுயமுன்னேற்றம், தன்னம்பிக்கை, ஆலய தரிசனம், மருத்துவம், ஆரோக்கியம், பக்தி இலக்கியங்கள், தமிழ் நன்னெறி நூல்கள், இதிகாசங்கள், பிரபலங்களின் பேட்டிகள், சாதனையாளர்களுடன் சந்திப்பு, பல்துறை நிபுணர்களின் பங்களிப்பு என வாழ்க்கைக்கு பயனுள்ள விஷயங்கள் மட்டுமே இந்த தளத்தில் இடம்பெறும்.

எவருக்கும் அறிவுரை கூறுவது என் நோக்கமல்ல. THOUGHTS SHARING மட்டுமே எனது நோக்கம். தளத்தில் வெளியாகும் பதிவுகளில் அறிவுரை கூறும் தொனி தென்பட்டால் அது எனக்கும் சேர்த்து நான் கூறுவதாக கருத வேண்டுகிறேன்.

கடவுளை நாம் ஏற்றுகொண்டிருக்கிறோமா இல்லையா என்பது ஒரு விஷயமே அல்ல. அவர் நம்மை ஏற்றுக்கொள்ளும் நிலைமையில் நம்முடைய வாழ்க்கையும் செயல்பாடும் இருக்கிறதா என்பதையே அனைவரும் ஆராய வேண்டும் என்பது என் அபிப்பிராயம். நல்லவனாக இருந்து நாலு பேருக்கு நம்மால் இயன்ற நன்மையை செய்வதைவிட மிகப் பெரிய ஆன்மிகம் இந்த உலகில் எதுவும் இல்லை. கடவுள் என்பவர் ஏதோ கோவில் கருவறையில் மட்டும் இருப்பவர் அல்ல என்று அழுத்தம் திருத்தமாக நம்புபவன் நான்.

‘கற்றது கையளவு. கல்லாதது உலகளவு’.

வாருங்கள்…. வாழ்ந்துகாட்டுவோம்… சிகரத்தை எட்டுவோம்!

எல்லாரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ திருவருள் துணைபுரியட்டும்!

=============================================================

நமது தளத்திற்கும் நமது சேவைகளுக்கும் நன்கொடை அளிக்க விரும்பினால், கீழ்கண்ட லிங்க்கை செக் செய்யவும். அதில் நாம் செய்து வரும் சேவைகள் மற்றும் நம் தளத்தின் வங்கிக் கணக்கு எண் ஆகிய விபரங்கள் தரப்பட்டுள்ளன.

http://rightmantra.com/?page_id=7762

=============================================================

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

=============================================================

என்றென்றும் நன்றியுடன்…

Rightmantra Sundar,
Founder & Editor,
www.rightmantra.com and Right Mantra Soul Solutions
Mobile : 9840169215 | E-mail : editor@rightmantra.com

One thought on “About me…

  1. Today i have visited our website and very much enjoyed while reading.
    R S Sankaranarayanna
    Moibile 9840118620

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *