நம்மை பொருத்தவரை கடந்த சில மாதங்களாக அவர் மீது ஒரு சிறிய மனஸ்தாபம். ஆகையால் தான் அவர் மகனை பிடித்துக்கொண்டு திரிகிறோம். அப்பா கவனிக்கலேன்னா பிள்ளை கிட்டே போறதும், பிள்ளை கவனிக்கலேன்னா அப்பா கிட்டே ஓடி வர்றதும் நமக்கெல்லாம் ஒன்னும் புதுசில்லையே…
“என்னடா இவன்… நம்மளையே கதின்னு சுத்திக்கிட்டுருந்தான்… இப்போ நம்ம பையன் கிட்டே போய்ட்டானே”ன்னு நிச்சயம் ஈஸ்வரன் நினைக்கமாட்டார். “தகப்பனை விட பிள்ளை ரொம்பவும் சக்திமிக்கவன், கருணாமூர்த்தி” என்று ஒருவன் மகனிடம் சென்றால், அதைவிட ஒரு தகப்பனுக்கு வேறு என்ன பெருமை வேண்டும்?
பிரணவத்தின் பொருளையே பிள்ளை முருகனிடம் மண்டியிட்டு உபதேசம் பெற்றவர் தானே ஈஸ்வரன். ஆசிரியர், மாணவன் என்கிற உறவுக்கு முன், அப்பா பிள்ளை என்கிற உறவு முறை பெரிதல்ல. ஆசிரியனே முதல் மரியாதைக்கு உரியவன் என்று உலகிற்கு உணர்த்தியவன் அல்லவா அவன்…
சிவராத்திரி விரதம் வருது… அந்த விரதத்தை ஒரு முறை அனுஷ்டித்து பாருங்கள்… அதற்கு பிறகு உங்கள் வாழ்க்கையின் போக்கிலேயே மாற்றம் தெரிய ஆரம்பித்துவிடும். “நான் சிவராத்திரி விரதம் இருந்தவனாக்கும்” என்று அதற்கு பிறகு நீங்கள் கர்வத்தோடு தான் திரிவீர்கள். (இந்த கர்வம் தப்பில்லை !).
சிவராத்திரி விரதத்தை எப்படி அனுஷ்டிப்பது என்று இப்போதே தெரிந்துகொள்ள விரும்பினால், சென்ற ஆண்டு சிவராத்திரி குறித்து நாம் அளித்த பதிவுகளை கீழ்கண்ட முகவரியில் சென்று பாருங்கள்.
=============================================================
சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி? முழு தகவல்கள் – சிவராத்திரி ஸ்பெஷல் 1
சிவராத்திரி விரதத்தை விட மேன்மையான ஒன்று – நீங்கள் தயாரா? சிவராத்திரி ஸ்பெஷல் 2
விரதமிருப்பது தவிர சிவராத்திரியன்று நீங்கள் வேறு என்ன செய்யலாம்? சிவராத்திரி 3
=============================================================
சிவ பரிவாரம் – ஒரு தலைவனின் லட்சணம் !
சமீபத்தில் நாம் படித்து உருகிய ஒரு விஷயத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம். ஒரு தலைவருக்குரிய லட்சணத்துடன் சிவபெருமான் எப்படி திகழ்கிறார் என்பதை கீழ்கண்ட பதிவில் பார்ப்போம்.
சிவபெருமானின் குடும்பத்தில் ஒரு பூரணமான ஒற்றுமையைக் காணலாம். பரமசிவன் ஒரு நல்ல யோகி. ஆதி சக்தியான அன்னபூரணி தேவி அவரது மனைவி. அன்னமிடும் அன்பு நிறைந்தவள். அதோடு மகாசக்தி நிரம்பியவன்.
அன்பான கணவன் மனைவி அவரவர் சுதந்திரம் அவரவருக்கு, இந்தத் தம்பதிகளுள் யார் உயர்வு என்ற கேள்விக்கு இடமில்லை. இருவருக்கும் சம பாகம். எனவே இருவருக்கும் சேர்ந்து ஒரே சரீரம், அர்த்த நாரீஸ்வர தத்துவத்தில் உள்ள தாம்பத்ய மாதுர்யம் எத்தனை மனோ கரமானது!
அடுத்து திறமைசாலிகளான குமாரர்கள். ஒருவர் தடைகளை விளையாட்டாக விளக்குபவர். இன்னொருவர் தேவர்களின் சேனையை நன்கு நடத்தி வெற்றிகளைச் சாதிப்பவர்.
காளைக்கும் சிங்கத்திற்கும் ஒத்து வராது. இருந்தாலும் கைலாசத்தில் நந்தீஸ்வரரும், அம்பாளின் வாகனமான சிம்மமும் நட்போடு மிளிரும். அதுபோல் சுவாமியின் திருமேனி மீது நெளியும் பாம்புகள் பெரிய மகனின் மூஞ்சுரொடு சிநேகமாக இருக்கும்.
குமார சுவாமியின் மயில் பாம்புகளுடன் தோழமை கொள்ளும். இவை பிறவி பகையை மறந்து சிவா சந்நிதியில் அன்போடு பழகி வீட்டை அமைதியாக வைத்துள்ளன . அன்பே சிவம் என்ற சைவ சித்தாந்தம் ஸ்பஷ்டமாக சிவனின் வீட்டில் காணப்படுகிறது.
ஜகதீஸ்வரனாக, சர்வ ஜகத்தின் ஐஸ்வர்யத்திற்கும் அதிபதியாக விச்வனாதனக இருந்தாலும் அவரது வைராக்கியம் அவருக்கே உரிய தனி குணம்.
பிறவிப் பகையை விளக்கக் கூடிய நிர்வாக சாமர்த்தியம் ஒரு தலைவனிடம் இருக்க வேண்டிய முதல் குணம்.
வீட்டில் வேறுபட்ட குணங்கள் கொண்ட உறுபினர்கள் இருந்தாலும், ஒற்றுமையைச் சாதிக்க முடியும் என்று சிவ பரிவாரம் போதிக்கிறது.
இன்னொரு புறம் பாற்கடலைகே கடைந்த போது விஷம் வெளி வந்ததும் அனைவரும் சிவா சிவா காப்பாற்று என்று அரண்டு ஓடினார்கள். அபோது அபயமளித்து முன் வந்து ஆதரவு காட்டியது ஹரன் ஒருவரே. அதற்குப் பின் பாற்கடலின் இருந்து எவ்வளவோ செல்வங்கள் வெளிவந்தன.
அப்போது சிவனின் நினைவு யாருக்கும் வரவில்லை. கஷ்டம் வரும் பொது தேவைபட்டவர் காலகாலன், செல்வங்கள் வந்தபோது தெய்வம் நினைவுக்கு வருவதென்பது கஷ்டம் தானே. எப்படி அவற்றை பகிர்ந்து கொள்ளலாம் என்ற பதட்டமே தவிர தேவர்களுக்கோ அசுரர்களுக்கோ ஈசனின் ஞாபகம் வரவில்லை. செல்வத்திற்கோ சுகத்திற்கோ ஆசைப்படவுமில்லை சிவன்.
இதுவும் ஒரு தலைவனுக்கான லட்சணம், போகங்களுக்கின்றி தியாகம் செய்ய முன் நிற்பவனே உண்மையான தலைவன். பிறர் நலனுக்காக எத்தனை சிரமங்கள் வந்தாலும் பொறுத்துக் கொள்ளும் உறுதிமிக்க உலகைக் காப்பவன் வைபவமானது மிகச் சிறந்த தலைவருக்கான இலக்கணமாக நாமறிய முடிகிறது.
பெரியவர் சிறியவர் என்ற பேதம் பாராமல் அனைவரையும் அரவணைக்கும் பரம் தயாளு சங்கரன் என்று சகோதரி நிவேதிதா பரவசத்துடன் விவரித்துள்ளார். ஆத்மாவின் உயர்வே முக்தி. ஆடம்பரமான பௌதிக உலகம் அல்ல. என்று அடித்துக் கூறும் சிவ தத்துவமே நம் சாஸ்திரங்கள் எடுத்துக் கூறும் சரம சித்தாந்தம்.
SIVA EMBODIES ETERNAL INDIA சாஸ்வதமான இந்திய இதயத்தின் வெளிப்படை உருவமே பரமசிவன் என்றார் விவேகனந்தர்
உலகில் வேறுபட்ட உணர்வுகள் இருப்பது சகஜம். நீரில் நெருப்புமிருக்கும், விஷத்தோடு அமுதமும் இருக்கும். வேறுபாடுகளைப் பல வகைப் பாடுகளாக ஏற்றுத் தகுந்த கட்டுபாட்டுடன் நடப்பதன் மூலமே வேற்றுமையில் ஒற்றுமையைக் காண முடியும்.
அதுவே சிவ ரூபத்தில் காண கிடைக்கிறது. சிரசின் மேல் நீர், நெற்றியில் நெருப்பு, தலை முடி மேல் அமிர்த கிரணம் கொண்ட சந்திரன், தொண்டைக் குழியில் விஷம்.
இவ்விதம் சகல விஸ்வ உணர்சிகளின் தொகுப்பனவர் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டானவர். கருணைக்கு விலக்கனவர் விவேச்வர மூர்த்தி அவரே ஆடி குருவாக ஒளிரும் மாதேவர். (நன்றி : ஸ்ரீ ராம கிருஷ்ண விஜயம்)
==============================================
Next : நமது நேற்றைய ஊன்றீஸ்வரர் கோவில் உழவாரப்பணி கண்கள் பனிக்க, இதயம் சிலிர்க்க, மெய் உருக, மிக மிக சிறப்பாக நடந்தேறியது. விபரங்கள் விரைவில்.
==============================================
[END]
அருமை அருமை அருமை.
சிவராத்திரி ஸ்பெஷல் தொடர் இன்று சிவன் தலைவர்க்கெல்லாம் தலைவன்.
சிவனின் குடும்பத்தையே எடுத்துகாட்டு கூறி கூட்டு குடும்பத்தின் பல்வேறு குணமுள்ளவர்கள் ஒன்றாக வாழ முடியும் என்று சொல்லிய உங்களுக்கு ஒரு மிக பெரிய SALUTE.
மிகவும் நன்றாக உள்ளது.
சிரசின் மேல் நீர், நெற்றியில் நெருப்பு, தலை முடி மேல் அமிர்த கிரணம் கொண்ட சந்திரன், தொண்டைக் குழியில் விஷம் அற்புதமான வரிகள்.
செல்வத்திற்கோ சுகத்திற்கோ ஆசைப்படாத சிவனை நாம் கஷ்டத்தில் மட்டுமல்ல நம் வாசகர்கள் எல்லா நேரங்களிலும் அவரைத்தான் நினைப்பார்கள்.
சுந்தர்ஜி
சிவராத்திரி தொடர் கட்டுரை மிக அருமை. சிவபெருமானின் குடும்பம் பற்றிய கதை அருமையான பொருளும் இன்றைய குடும்பங்களுக்கு தேவையான செய்தியும் கொண்டுள்ளது. இறைக்குடும்பம் நம்மையும் நல்ல துணையொடு சேர்த்து நிறைக் குடும்பமாக வாழ வைக்கட்டும் . படத்தை மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்தேன். நன்றி
டியர் சுந்தர்ஜி
சிவராத்திரி பதிவு மிகவும் அருமை.
//நம்மை பொருத்தவரை கடந்த சில மாதங்களாக அவர் மீது ஒரு சிறிய மனஸ்தாபம். ஆகையால் தான் அவர் மகனை பிடித்துக்கொண்டு திரிகிறோம். அப்பா கவனிக்கலேன்னா பிள்ளை கிட்டே போறதும், பிள்ளை கவனிக்கலேன்னா அப்பா கிட்டே ஓடி வர்றதும் நமக்கெல்லாம் ஒன்னும் புதுசில்லையே…//
நீங்கள் வணங்கும் குன்றத்தூர் முருகன் நிச்சயம் உங்களுக்கு துணை புரிவார். இந்த சிவ ராத்திரி விரத பலன் கண்டிப்பாக வெகு விரைவில் உங்களுக்கு கிட்டும்
வாழ்க வளமுடன்
நன்றி
உமா
சுந்தர் சார் …ரொம்ப அதி அற்புதமான கட்டுரை சார்…
சிவனின் பெயரை சிந்தை மறக்காது என்றால் மீண்டும் மீண்டும் இங்கு பிறக்கவேண்டும்.
குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,
பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும்,
இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால்
மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே!
மிக அருமையான விளக்கம்.இதயம் நிறைந்தது.நன்றி வாழ்க வளமுடன்
என்னுடைய கமெண்டை திருவிளையாடல் படத்தில் வரும் பாண்டிய மன்னன் தருமியின் கொங்குதேர் வாழ்க்கை பாட்டை கேட்டுவிட்டு பாராட்டுவானே, அதுபோல் பாவித்து படிக்கவும்.
அருமையானே பதிவு. அற்புதமான விளக்கம். எத்தனையோ பேரின் விளக்கத்தை கேட்டும் என்னால் புரிந்துகொள்ள முடியாத சிவ தத்துவத்தை தனி ஒரு புலவனாக (மனிதனாக) புரிய வைத்த நமது சூப்பர் சுந்தர் அவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் (நன்றிகள்). இந்த பதிவில் எந்த நக்கீரனாலும் குறை சொல்லமுடியாது. அவ்வளவும் நிறைகள்.
ஒரு தலைவன் எப்படி இருக்கவேண்டும் என்பதை சிவபெருமான் குடும்பம் மூலம் கொடுக்கப்பட்ட விளக்கம் – அருமை அருமை.