பதினெட்டாம் நூற்றாண்டில் இவர் மட்டும் தோன்றவில்லை என்றால் துடுப்பில்லா படகு போல ஹிந்து மதம் தடுமாறியிருக்கும். சரியான நேரத்தில் இவர் அவதாரம் அமைந்து அவர் மூலம் நரேந்திரன் என்கிற சுவாமி விவேகானந்தர் அடையாளம் காணப்பட்டு ஹிந்து மதத்தின் வேர் பட்டுப்போகாமல் காப்பாற்றப்பட்டது.
இன்று (பிப்ரவரி 18, 1836) ராமகிருஷ்ண பரமஹம்சரின் பிறந்த நாள். பரமஹம்சரை பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் எழுதிக்கொண்டே போகலாம் என்றாலும் அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவர் கூறிய மிக மிக அர்த்தமுள்ள ஆழமான ஒரு கதையை இங்கு உங்களுக்காக தருகிறோம்.
துறவிக்கு கிடைத்த நரகம்!
ஒரு வீட்டு வாசலில் ஒரு மரம் இருந்தது. அதன் கீழ் ஒரு துறவி அமர்ந்திருந்தார். அந்த வீட்டில் ஒரு வேசி இருந்தாள். அவருக்கு வேசியின் மேல் மிகவும் அக்கறை. “ஐயோ, இவள் இந்தத் தீய தொழிலைச் செய்து இப்படி வீணாகப் போகிறாளே” என்று. ஒரு ஆசாமி உள்ளே போனதும் ஒரு சிறிய கல்லை எடுத்துப் போடுவார். அப்படிப் போட்டதில் மலைபோலக் குவிந்துவிட்டது.
வேசிக்கோ துறவியைப் பார்த்துப் பொறாமை. “ஆஹா, இவர் எப்போதும் தெய்வத்தைநினைத்துத் தியானத்திலேயே இருக்கிறாரே, நாம் இந்தப் பாவத் தொழிலைச் செய்து கொண்டு இருக்கிறோமே” என்று எப்போதும் நினைத்து வருந்தியபடி இருந்தாள்.
ஒரு நாள் அவள் இறந்துபோனாள். பார்த்தால் தேவதூதர்கள் புஷ்பக விமானத்தில் அவளை அழைத்துப் போவது துறவிக்குத் தெரிந்தது.
துறவிக்கு ஒரே ஆச்சரியம்.
சிறிது நாட்களில் துறவி இறந்தார். அவரை யம தூதர்கள் வந்து நரகத்துக்கு அழைத்துப் போனார்கள். துறவிக்கு வந்ததே கோபம். “என்ன இது அநியாயம். நான் எப்போதும் இறை நினைவாகவே இருந்தேன். எனக்கு நரகம், அதோ கல்குவியல் அளவுக்கு ஆண்களோடு சுகித்த வேசிக்குப் புஷ்பக விமானமா?” என்றார்.
அவர்கள் கூறினர் “ஐயா! அவள் இறைவனைத் தியானம் செய்யமுடியவில்லையேஎன்று இரவும் பகலும் எண்ணியபடியே தன் தொழிலைச் செய்தாள். நீங்களோ இந்தக் கல்குவியல் அளவுக்கு அவளது பாவத்தையே நினைத்துப் பாவம் சம்பாதித்துக் கொண்டீர்கள்” என்று.
நாட்டிற்குள் பலபேர் மேற்படி சந்நியாசி போலத் தான் திரிகிறார்கள். மற்றவர்களின் தவறுகளை எண்ணிக்கொண்டிருப்பதால் நீங்கள் ஒருபோதும் புனிதராகிவிடமுடியாது!
[END]
சரியான நேரத்தில் சரியான செய்தி .
நல்ல குரு; குரு போற்றும் நல்ல சிஷ்யன் .
அவனி பாராட்டும் அளப்பரும் பணி …
தங்களது பணியும் அவர்கள் ஆசிகளுடன் தொடரட்டும் .
நச்சுனு ஒரு [ பாவ புண்ணிய கணக்கு….] அய்யா கதை.
மிக அர்த்தமுள்ள ஆழமான கதையை ,எளிமையான விளக்கத்துடன் அளித்த விதம் அருமை .
-மனோகர்
சுந்தர் சார் வணக்கம் …..மிக அற்புதமான பதிவு …. தனலட்சுமி
டியர் சுந்தர்ஜி
very good ஸ்டோரி. Thanks for sharing
regards
உமா