மறைகள் நிந்தனை சைவ நிந்தனை பொறா மனமும்
தறுகண் ஐம் புலன்களுக் கேவல் செய்யுறாச் சதுரும்
பிறவி தீதெனாப் பேதையர் தம்மொடு பிணக்கும்
உறுதி நல்லறம் செய்பவர் தங்களோ டுறவும்
யாது நல்லன்பர் கேட்கினும் உதவுறும் இயல்பும்
மாத வத்தினோர் ஒறுப்பினும் வணங்கிடு மகிழ்வும்
ஓது நல்லுப தேச மெய் யுறுதியும்
அன்பர் தீது செய்யினும் சிவச்செயல் எனக் கொளுந் தெளிவும்
மனமும் வாக்கும் நின்னன்பர்பால் ஒருப்படு செயலும்
கனவிலும் உனதடியருக் கன்பராங் கருத்தும்
நினைவில் வேறொரு கடவுளை வழிபடா நிலையும்
புனித நின் புகழ் நாள்தொறும் உரைத்திடும் பொலிவும்
தீமையாம் புறச்சமயங்கள் ஒழித்திடு திறனும்
வாய்மை யாகவே பிறர்பொருள் விழைவறா வளனும்
ஏமு றும் பர தாரம் நச்சிடாத நன்னோன்பும்
தூய்ம்மை நெஞ்சில் யான் எனதெனும் செருக்குறாத் துறவும்
“துறக்கமீ துறைகினும் நரகில் தோய்க்கினும்
இறக்கினும் பிறக்கினும் இன்பம் துய்க்கினும்
பிறைக்கொழுந் தணிசடைப் பெரும இவ்வரம்
மறுத்திடா தெனக்குநீ வழங்கல் வேண்டுமால்”
1. வேதங்களையும் சைவத்தையும் நிந்தனை செய்வதைப் பொறாத மனம்.
2. ஐம்புலன்களுக்கு அடிமையாகி அவற்றுக்காகப் பணி செய்யாத நிலை.
3. பிறவி என்பது தீதென்று கருதி உலக சுகத்தைப் பெரிதென்று கருதும் பேதையரை விலகி நிற்கும் உறுதி. 4. நல்லறங்களைச் செய்தவர்களுடன் உறவு.
5. நல்லவர்கள் என்ன கேட்டாலும் உதவி செய்கின்ற இயல்பு.
6. அரும்தவம் செய்தோரை வணங்கிடும் பண்பு.
7. நல்ல உபதேசங்களை ஏற்றுக் கொள்ளும் தன்மை.
8. அன்பர்கள் தீது செய்தாலும் அவற்றை சிவச்செயல் என ஏற்கும் தெளிவு.
9. மனமும் வாக்கும் அன்பர்பால் ஒருமைப்படும் செயல்.
10.கனவிலும் சிவனடியார்க்கு அடிமை யாதல்.
11. சிவபெருமானைத் தவிர வேறுயாரையும் கடவுளாக வழிபடாத நிலை.
12. சிவபெருமானின் புகழை நாள்தோறும் உரைத்திடும் பொலிவு.
13. பிற சமயங்களை விட்டு விலகி நிற்கும் ஆற்றல்.
14.பிறர் பொருள்மீது ஆசை ஏற்படாமை.
15. நல்ல நோன்புகளை நோற்றிருத்தல்.
16.நான், எனது என்னும் செருக்கும் சுயநலமும் இல்லாமை.
இந்தப் பதினாறு வரங்களையும் நந்தி தேவர் தனக்காகக் கேட்கவில்லை. உலக மக்களுக்காகவே சிவபெருமானிடம் வேண்டினார். அதனால், தன்னை வணங்குபவருக்கு மட்டுமல்ல நந்திதேவரை வணங்கியவருக்கும் மோட்ச சுகத்தையும் மக்கட்பேற்றையும், பக்தியையும், ஊக்கத்தையும், காரிய சித்தியையும் எல்லா வரங்களையும் அளித்து வருகிறான் சிவபெருமான்.
நந்தியின் பெருமையை உலகோர் அறிந்து நந்தியைத் தொழ வேண்டும், அதன் மூலம் எல்லா வரங்களையும் பெற வேண்டும் என்பதே சிவபெருமானின் சித்தம். நானும் நந்தியும் வேறல்ல என்ற சிவபெருமானின் வாக்கிலிருந்து நந்தியைத் தொழுவதும் சிவனைத் தொழுவதும் ஒன்றே என்பதை அன்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
NEXT : தலைவர்க்கெல்லாம் தலைவர் சிவபெருமான்!
================================================================
முக்கிய அறிவிப்பு :
நம் வாசகி வள்ளி அவர்கள் கீழ்கண்ட மின்னஞ்சலை நமக்கு சென்ற வாரம் அனுப்பியிருந்தார். அடுத்தடுத்து பணிச் சுமையால் அளிக்கமுடியவில்லை. நேற்றைக்கு அளிக்கவேண்டியது… மறந்துவிட்டோம். மன்னிக்கவும். பயன்படுத்திக்கொண்டு குருவருள் பெறவேண்டும் என்று வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். நன்றி!
வணக்கம். இங்கு MICHIGAN / USA என்ற இடத்தில் உள்ள Dr ரவிக்குமார் என்பவர் பாபநாசம் அருகே உள்ள கல்யாண தீர்த்தத்தில், அகத்திய பெருமானுக்கும் லோபமுத்ரா அன்னைக்கும் ஒரு சிறிய கோவில் ஒன்று எழுப்பி வருகிறார். (கோவில் என்றால் கட்டடம் போல் அல்ல. ஒரு தேர் அமைப்பு போல. அதில் ஸ்வாமிகளை எழுந்தருள பண்ணி இருக்கிறார்.) இன்னும் பணி முழுவதும் முடியவில்லை. வரும் FEB-15th அன்று கணபதி ஹோமம் மற்றும் சுதர்சன ஹோமம் நடத்தவிருக்கிறார். எல்லோரும் இதில் பங்கு பெறலாம். தங்களுடய பெயர் நட்சத்திரம் இவைகளை கொடுத்தால் சங்கல்ப்பம் செய்து கொள்ளுவார்கள். கட்டணம் எதுவும் இல்லை. இதற்காக இணய தளம் ஒன்றை வடிவமைத்து உள்ளார். முகவரி(URL) கீழே உள்ளது. தயவு செய்து இந்த செய்தியை தங்கள் இணய தளத்தில் போட்டால் பலரும் பார்க்கும் வாய்ப்பு உள்ளது. எனவே தான் உங்களுக்கு அனுப்பி உள்ளேன்.
http://sriagathiyarlopamudratemple.com/news_announcement.html
Please spread the word to the world Sir. Thank you so much.
================================================================
[END]
அருமையான பதிவு தம்பி ,
நந்தியம் பெருமான் பெற்றது 16 பேறு..இதைப் படித்து ஒன்றையாவது கடைப் பிடிக்க முடிந்தால் நாம் செய்த புண்ணியம்…மகா பெரியவா கூறியதைப் போல ..சதா சர்வ காலமும் ஈசனை நினைக்க மாட்டேன் என்கிறதே இந்த பாழாய்ப் போன மனசு…வாழ்க வளமுடன் தம்பி…நீங்கள் எல்லா நலமும் பெற்று வாழ என் வாழ்த்துக்கள்._/|\_
தனக்காக 16ம் பெறாமல் மக்களுக்காகபெற்றதால்தான் நந்தியமனை இறைவன் தனது இடத்தில இடம்கொடுதிருகிறர்போல…
\\நந்தியின் பெருமையை உலகோர் அறிந்து நந்தியைத் தொழ வேண்டும், அதன் மூலம் எல்லா வரங்களையும் பெற வேண்டும் என்பதே சிவபெருமானின் சித்தம். நானும் நந்தியும் வேறல்ல\\
“ஓம் சிவ சிவ ஓம் ”
-மனோகர்
டியர் சுந்தர்ஜி
நந்தியை வணங்கினால் சிவனின் அருட் பார்வை நம் மேல் நிச்சயம் விழும். பதிவு மிக அருமை
நன்றி
உமா
இந்த பாடல்கள் எந்த நூலிலுள்ளன என்று தெரியப்படுத்தினால் பெரும் உதவியாயிருக்கும். நன்றி
மதுரை டால்பின் பள்ளி திருவாசக முற்றோதலையடுத்து வெளியிட்ட ஒரு நூலில் கண்டது இது.
– சுந்தர்