இயற்கையின் விதிப்படி ஒட்டகச் சிவிங்கியின் குட்டி பிறந்த ஒரு மணிநேரத்துக்குள் தானே எழுந்து நிற்கும் வல்லமையை பெற்றுவிடும்.
எப்படியெனில் பிறந்த உடனேயே எழுந்து நிற்பதற்கான பயிற்சியை குட்டி தானே துவங்கிவிடும். அந்த முயற்சியில் ஓரிருமுறை கீழே விழும். சில குட்டிகளால் அவ்வாறு எழுந்திருக்க முடியாது. அப்போது தாய் சிவிங்கி தனது நீண்ட பெரிய கால்களால் குட்டியை மிதமாக ஒரு உதை உதைக்கும். குட்டி எழுந்திருக்கவில்லையெனில், மீண்டும் ஒரு முறை உதைக்கும். இம்முறை உதை சற்று பலமாக இருக்கும். இந்த முறை குட்டி எழுந்திருக்க முயற்சி செய்யும். மீண்டும் சுருண்டு கீழே விழும். மீண்டும் தாய் ஒரு உதை உதைக்கும். உதை தாங்கமுடியாமல் நடுங்கும் கால்களுடன் குட்டியானது கஷ்டப்பட்டு பேலன்ஸ் செய்து எழுந்து நிற்கும்.
தனது குட்டி எழுந்து நிற்பதை பார்த்து சந்தோஷப்படும் சிவிங்கி, மீண்டும் ஒரு உதை உதைத்து அதை கீழே தள்ளும். ஆனால் இம்முறை குட்டி சுதாரித்துக்கொண்டு உடனே எழுந்துவிடும்.
“இதை இதைத் தான் நான் எதிர்பார்த்தேன்!” என்று குட்டியை உச்சி முகர்ந்து தனது APPRECIATION ஐ தெரிவிக்கும். தனது குட்டி வாழ்க்கையின் மிக முக்கிய பாடம் ஒன்றை கற்றுக்கொண்டுவிட்டது என்பது ஒட்டகச் சிவிங்கிக்கு தெரியும். “நீ எத்தனை முறை எப்படி கீழே விழுந்தாலும் சரி… மீண்டும் எழுந்திருக்க வேண்டும். அப்போது தான் நீ உயிர் வாழமுடியும். உனக்கு தேவையான பலம் உன்னிடமே இருக்கிறது.” என்பது தான் அது. பிறந்த பத்து மணிநேரத்துக்குள் குட்டி வேகமாக ஓடவே பயிற்சி பெற்றுவிடும்.
ஏன் இத்தனை கடுமையான பயிற்சி பிறந்த குட்டிக்கு ?
ஒட்டகச் சிவிங்கிகள் சிங்கம், சிறுத்தை, புலி ஆகியவை வசிக்கும் காடுகளில் தான் வசிக்கும். அவற்றுக்கு ஓட்டங்கச் சிவிங்கியின் மாமிசம் என்றால் மிகவும் பிடிக்கும். அத்தகைய விலங்குகளிடமிருந்து தனது குட்டியை காக்கவே அது இவ்வாறு செய்கிறது.
கேரி ரிச்மாண்ட்ஸ் எழுதிய ‘A VIEW FROM ZOO’ என்னும் நூலில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒட்டகச் சிவிங்கி நமக்கு கற்று தரும் முக்கிய பாடம் என்னவென்றால்….எத்தனை முறை வீழ்கிறோம் என்பது முக்கியமல்ல. ஒவ்வொரு முறையும் விழும்போது உடனே சுதாரித்துக்கொண்டு எழுந்து நிற்கிறோமா? என்பது தான் முக்கியம்.
“நம்மை பெற்ற தாயே நம்மை இப்படி உதைக்கிறாளே? இப்படி உதைக்க வேண்டியதன் அவசியம் என்ன??” என்று அந்த குட்டி நினைத்தால், அது எத்தனை அறிவீனமோ அதே போலத் தான் இறைவன் சோதனைகளை தரும்போது நாம் நினைப்பது.
தாயானது எப்படி குட்டியை பாதுகாக்க, விரைவில் நிற்க வைக்க முயற்சிக்கிறதோ அதே போலத் தான் இறைவனும் நமக்கு சோதனைகளை தந்து நம்மை நிற்க வைக்கிறான். நம்மை தலை நிமிர்ந்து நிற்கச் செய்யவும் நம்மை ஆபத்துக்களில் இருந்து காக்கவும் தான் சில சமயம் நாம் அவனால் பந்தாடப்படுகிறோமே தவிர, அவனுடைய பொழுதுபோக்குக்காக அல்ல.
இர்விங் ஸ்டோன் என்பவர், மைக்கேல் ஏஞ்சலோ, சிக்மண்ட் ப்ரூட், சார்லஸ் டார்வின், வின்சென்ட் வேன்காக், போன்ற உலகப் புகழ் பெற்ற அறிஞர்களின் வரலாற்றை எழுத தனது வாழ்நாள் முழுவதையும் செலவிட்டார்.
“இத்தனை சாதனையாளர்களின் வரலாற்றை வரலாற்றை எழுதினீர்களே? அவர்கள் அனைவரிடமும் ஒற்றுமையாக காணப்பட்ட விஷயம் ஏதேனும் உண்டா?” என்று ஸ்டோனிடம் ஒரு சமயம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஸ்டோன், “வாழ்க்கையில் ஏதேனும் ஒரு உன்னதமான லட்சியத்தை கொண்டு அதை அடைய கிளம்பியவர்கள் இவர்கள் அனைவரும். அந்த லட்சியப் பயணத்தின்போது அவர்கள் தலையிலேயே அடி மேல் அடி விழுந்தது. ஏன் இடி கூட விழுந்தது. கீழே தள்ளப்பட்டார்கள். காயப்படுத்தப்பட்டார்கள். உதைக்கப்பட்டார்கள். ஏளனம் செய்யப்பட்டார்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் கீழே விழும்போதும் உடனே சுதாரித்து எழுந்துவிட்டார்கள். இப்படிப்பட்டவர்களை யாராலும் தடுக்க முடியாது. அழிக்கவும் முடியாது. அவர்கள் எடுத்துக்கொண்ட லட்சியத்தை அடைந்ததோடல்லாமல் சரித்திரத்திலும் இடம் பிடித்துவிட்டனர்!!!” என்றார்.
நீங்க எப்படி?
வாழ்க்கையில ஏதாவது சாதிக்கணும்னு ஆசைப்பட்டா இறைவனோ சந்தர்ப்ப சூழ்நிலைகளோ தரும் உதைகளை பொருட்படுத்தாதீங்க. அதெல்லாம் நம்ம நன்மைக்கு தான் அப்படின்னு நினைச்சிகிட்டு போய்கிட்டே இருங்க. வெற்றிக்கான பயணம் எப்பொழுதுமே தோல்வி என்கிற ஸ்டேஷன்கள் வழியாகத்தான் இருக்கும். தோல்வியில் இருந்து பாடம் எதையும் கற்றுகொள்ளவில்லை என்றால் அது தான் உண்மையான தோல்வி.
(பி.கு.: ஆண்டவன் ரொம்ப பொறுமைசாலிங்க… பின்னே நான் எழுந்து நிற்கிற வரைக்கும் அஞ்சாறு வருஷமா தொடர்ந்து உதைச்சிகிட்டே இருந்தானே! கடந்த காலங்கள்ல ஆண்டவன் விட்ட உதைகள் தான் இப்போ நம்மளை ஓரளவு எழுந்து நிற்க வெச்சிருக்கு. அப்போ, இப்போ வாங்குற உதையெல்லாம்…………? அது நாம வேகமா ஓடுறதுக்கு!!!!!!!! how is it????)
=============================================================
முந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….
http://rightmantra.com/?s=MONDAY+MORNING+SPL&x=4&y=6
=============================================================
சுந்தர் சார்.
மிக நல்ல பதிவு.
ஒட்டகசிவிங்கியின் குட்டியின் கதை நன்றக உள்ளது.
ஆண்டவன் கொடுக்கும் உதையும் நாம் சாதிக்க தான். நன்றாக உள்ளது
தோல்வியில் இருந்து பாடம் எதையும் கற்றுகொள்ளவில்லை என்றால் அது தான் உண்மையான தோல்வி.
என்னால் தாங்கமுடிந்த அளவுக்கு தான் கஷ்டம் கொடுப்பன் என்றாலும் சில நேரம் சில் மன வேதனைகளை பொறுத்துக்கொள்ள முடிவதில்லை.
அந்த மனபக்குவத்தை ஆண்டவன் நிறைய கொடுக்கவேண்டும்
ியர் சுந்தர்ஜி
monday morning ஸ்பெஷல் சூப்பர்.
//வாழ்க்கையில ஏதாவது சாதிக்கணும்னு ஆசைப்பட்டா இறைவனோ சந்தர்ப்ப சூழ்நிலைகளோ தரும் உதைகளை பொருட்படுத்தாதீங்க. அதெல்லாம் நம்ம நன்மைக்கு தான் அப்படின்னு நினைச்சிகிட்டு போய்கிட்டே இருங்க//
நமக்கும் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் வாழ்கை சக்கரம் ஓடி கொண்டிருக்கிறது இறைவன் உதைத்த உதையில் இப்பொழுது தான் எழுந்திருக்க முயற்சி செய்கிறேன்., ஓடுவதற்கு நாட்கள் ஆகும்.
‘Failue is the stepping stone to success
நன்றி
உமா
சுந்தர் சார் வணக்கம்
உண்மையோ உண்மை சார் அடி பட்டவனுக்கு தான் தெரியும்,
அருமையான தகவல் சார்
நன்றி
\\\வாழ்க்கையில ஏதாவது சாதிக்கணும்னு ஆசைப்பட்டா இறைவனோ சந்தர்ப்ப சூழ்நிலைகளோ தரும் உதைகளை பொருட்படுத்தாதீங்க. \\\
monday spl சூப்பர் .
-மனோகர்
சுந்தர் சார்,
நல்ல ஒரு சிறந்த பதிவு. ஒட்டகசிவிங்கியின் குட்டியின் கதை நல்ல உதாரணம்.
நன்றியுடன் அருண்