பேட்டியெல்லாம் முடித்துவிட்டு ஒரு டீ சாப்பிடலாம் என்று பக்கத்தில் டீக்கடையை தேடி நடந்தபோது ‘நேதாஜி தங்கிய இல்லம்’ என்று கல்வெட்டு பொறிக்கப்பட்ட ஒரு கட்டிடத்தை பாரதி சாலையில் பார்க்க நேர்ந்தது.
(* மேலே கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தி.நகர் முகவரி, இந்த கல்வெட்டிய நிறுவிய ‘தியாகிகள் புகழ் பரப்பும் இயக்கத்தின்’ முகவரி. மற்றபடி இந்த வீடு அமைந்திருப்பது ராயபேட்டை பாரதி சாலை தான்!!)
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு நேதாஜி இருமுறை அங்கு வந்து தங்கிச் சென்றதை அந்த கல்வெட்டில் குறிப்பிட்டிருந்தனர். நேதாஜி என்ற வார்த்தையை கேட்டாலே நாடி நரம்பெல்லாம் முருக்கேறும். சாமானியனுக்கும் சுதந்திர தாகத்தை வீரத்துடன் ஊட்டியவரல்லவா அவர்? உடனே அந்த கல்வெட்டு நமது ஹீரோ ஆகிவிட்டது. அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.
பிறகு அந்த வீட்டை பற்றி விசாரித்தபோது தான் தெரிந்தது அந்த வீட்டின் பெயர் ‘காந்தி பீக்’ என்பதும், அந்த வீட்டை கட்டிய திரு.எஸ்.பி.அய்யா சாமி முதலியார் என்பவர் இந்திய தேசிய போராட்டத்துக்கு பல உதவிகள் செய்தவர் என்பதும்,. அவரது பேரன் திரு.தனஞ்செயா தற்போது அந்த வீட்டின் இரண்டாவது தளத்தில் வசித்துவருகிறார் என்ற தகவலும் கிடைத்தது.
நேதாஜி பிறந்த நாள் ஜனவரி 23 வருவதால், வேறொரு நாள் வந்து இந்த வீட்டை பற்றிய விரிவான கவரேஜ் செய்து அதை நேதாஜி பிறந்த நாள் சிறப்பு பதிவாக அளிக்கலாம் என்று முடிவு செய்தோம்.
இதையடுத்து ஒரு நாள் அலுவலகம் முடிந்து, மாலை அந்த வீட்டுக்கு மீண்டும் சென்றோம்.
இரண்டாவது தளத்தில் வசித்து வந்த தனஞ்செயா என்பவரை சந்தித்தோம். நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டோம். நேதாஜி தங்கிய அறை குறித்து கவர் செய்ய வந்திருப்பதாக கூறினோம். மீடியா என்றதும் சற்று தயங்கினார். நமது தளத்தை பற்றியும் அதன் நோக்கத்தை பற்றியும் சொன்னவுடன் “சரி… உள்ளே வாங்க…” என்று கூறி நம்மை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார்.
பரஸ்பர அறிமுகம் நிகழ்ந்தது. எதேச்சையாக இந்த கட்டிடத்தின் கீழே பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டை பார்க்க நேர்ந்ததும் நேதாஜி பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பதிவுக்காக அவரை சந்திக்க வந்திருப்பதாகவும் கூறினோம்.
“முக்கிய தகவல்களை இப்போ சொல்றேன். நோட் பண்ணிக்கோங்க. ஃபோட்டோ எடுக்கணும்னா மார்னிங் டயத்துல வாங்க. நேதாஜி தங்கியிருந்த அறை மாடியில இருக்கு. அதை திறந்து காட்டுறேன். உள்ளே ஃபோட்டோல்லாம் இருக்கு. அதையும் நீங்க படம் எடுத்துக்கலாம்.” என்றார்.
தொடர்ந்து இந்த வீடு குறித்து ஹிந்து நாளிதழில் சில வருடங்களுக்கு முன்பு வந்திருந்த நகலையும், நாம் எழுத சுலபமாக இருக்கும் பொருட்டு தந்தார்.
“காந்தி பீக்’ங்கிற இந்த வீட்டைக் கட்டியது, என்ஜீனியரான எங்க தாத்தா எஸ்.பி.அய்யா சாமி முதலியார். சுதந்திரப் போராட்டத்துக்கு எதிரான பிரிட்டிஷ் ஆட்சியின் அடக்குமுறைகள் இருந்த காலகட்டத்திலேயே காந்தி பேர்ல வீடுகட்டி, வீட்டு உச்சியில் காந்தி சிலையையும் வெச்சார் அவர். இந்த வீட்டைக் கட்ட அப்போ (1930) ஆன செலவு மொத்தமே 45,000 ரூபாய் தான்.
இது மட்டுமில்லே டி.டி.கே. சாலையில் இருந்த எஸ்.எஸ்.வாசன் வீடு, கர்சன் & கோ, செல்லாராம்ஸ் இந்த கட்டிடங்களை கட்டினதும் எங்க தாத்தா தான்.
எங்க தாத்தா நேரடியா விடுதலை போராட்டத்தில் ஈடுபடலைனாலும் போராட்டத்தில் ஈடுபடுகிறவர்களுக்கு நிறைய உதவினார். தேசத் தலைவர்களுக்குத் தொண்டு செய்வதை பெரும் பாக்கியமா நினைச்சு நிறைய விஷயங்கள் செய்து இருக்கார். இந்த வீட்டின் மூணாவது மாடியைக் கட்ட அடிக்கல் நாட்டியவர் இந்தியாவின் முதல் ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத். காந்தி சிலையைத் திறந்துவெச்சது ராஜாஜி.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் காங்கிரஸ் தலைமையோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஃபார்வர்டு பிளாக் இயக்கத்தைத் தொடங்கி அதற்கு ஆதரவு திரட்டுறதுக்காக சென்னை வந்திருந்தார். அப்ப சத்தியமூர்த்தி தான் காங்கிரஸ் கமிட்டி தலைவர். அவர் நேதாஜிக்கு ஆதரவு தர வேண்டாம்னு சொல்லி இருந்ததால இங்கே சென்னையில் அவருக்கு இடம் தர பலரும் தயங்கினாங்க. அப்ப புலியூர் ஜமீன்தார் ஜானகிராம் எங்க தாத்தாவிடம், ‘நேதாஜியை உங்க வீட்ல தங்கவெச்சுக்குங்க’னு சொல்லி இருக்கார். ‘நம்ம வீட்டு பேரே காந்தி பீக். அவரோடு கருத்துவேறுபாடு உள்ளவரு நம்ம வீட்ல எப்படித் தங்குவார்?’னு எங்க தாத்தாவுக்குச் சந்தேகம். ஆனா, கொஞ்சம்கூட யோசிக்காம இங்கே தங்க சம்மதிச்சார் நேதாஜி!
நேதாஜி காலையில் மிக ஆழ்ந்த தியானத்தில் இருப்பார். “எடுப்பான தோற்றமும், பொலிவான முகமும் கொண்ட நேதாஜி ஒரு நாள் என்னையும் என் சகோதரியையும் பக்கத்தில் அழைத்து ஆளுக்கு ஏழு ரூபாய் கொடுத்து வாழ்த்தியது எங்கள் நெஞ்சில் பசுமையாக நிலைத்து விட்டது” என்று என் தந்தையும் அய்யாசாமி முதலியாரின் இளைய மகனுமான அமரர் எஸ்.பி.சபேசன் எங்களிடம் கூறி மகிழ்வார் என்று பேரன் தனஞ்ஜெயன் கூறி பெருமிதமடைகின்றார்.
யோகாப் பயிற்சியும் ஆன்மீக ஈடுபாடும் கொண்ட அய்யாசாமி முதலியார் மனித வாழ்க்கை எவ்வாறு வளர்ச்சியடைகிறது என்பதை தாயுமானவரின் பராபரக்கண்ணி பாடல்களைப் பொருத்திக்காட்டி அருமையான ஆங்கில நூலையும் எழுதியுள்ளார்.
1939-ம் ஆண்டு செப்டம்பர் 3-ம் தேதி ‘வந்தே மாதரம்’ கோஷம் முழங்க வெள்ளிக் குடை பிடித்து நேதாஜியை இந்த வீட்டுக்கு அழைச்சு வந்திருக்காங்க. இந்த வீட்டின் முன் நின்றவர் இரு கைகளையும் கூப்பி மேலே பார்த்தபடி வணங்கியிருக்கார். முன்னதாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்த்தில் நேதாஜிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
அப்ப இந்த வீட்டின் மூன்று மாடிகளிலும் ‘லயன் ஆஃப் பெங்கால்’, ‘லாங் லிவ் எஸ்.சி.போஸ்’, ‘டெரர் ஆஃப் ஹை கமாண்ட்’னு வெள்ளை நிறத் துணிகளில் எழுதி வரவேற்பு கொடுத்து இருக்காங்க. அவர் இந்த வீட்டின் உச்சியில் உள்ள காற்றோட்டமான இந்த அறையில்தான் தங்கி இருந்திருக்கார். அவர் தங்கியிருந்த இந்த அறைக்கு மேல்தான் காந்தி சிலை இருந்தது என்பது இன்னொரு சுவாரஸ்யம்.
காந்தி பீக் இல்லத்தில் நேதாஜி இருமுறை தங்கியுள்ளார். முதல்முறை மூன்று நாள்கள் செப்டம்பர் 3,4,5. முதல் நாளில் திருவல்லிக்கேணி கடற்கரையில் எஸ். சீனிவாச அய்யங்கார் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய நேதாஜி “இரண்டாம் உலகப் போர் தொடங்கி விட்டது. ஆங்கிலேயர்களுக்கெல்லாம் துயரம் தொடங்குகிறது. இந்தியர்களுக்கு நல்ல காலம் தொடங்குகிறது. இந்தியா விரைவில் விடுதலை பெறும்” என முழக்கமிட்டார்.
நேதாஜியோடு அய்யாசாமி முதலியார் எடுத்துக்கொண்ட மார்பளவு புகைப்படம் உள்ளிட்ட படங்களை அரிய செல்வங்களாகப் பாதுகாத்து வருகின்றனர் தனஞ்ஜெயன் குடும்பத்தார்.
இதே இல்லத்தில் காங்கிரஸ் மாநாட்டிற்கான ஆலோசனை கூட்டம் ஒன்று 1935 ஆம் ஆண்டு பாபு ராஜேந்திரபிரசாத் தலைமையில் நடைபெறுவதைக் காட்டும் புகைப்படம் ஒன்றுள்ளது.
இந்திய தேசிய காங்கிரசின் பொன்விழாவை குறிக்கும் அந்த கூட்டம் நடைபெற்றது. அதற்கு தலைமை தாங்கியது டாக்டர்.ராஜேந்திர பிரசாத். அப்போ இந்த வீட்டில் முதல் மற்றும் இரண்டாம் தளம் மட்டுமே இருந்தது. மேலே உள்ள அறை கிடையாது. காந்தியின் பெயரில் ஏதேனும் செய்ய விரும்பினார் எங்கள் தாத்தா. அதற்கு அடிக்கல் நாட்டியது ராஜேந்திர பிரசாத்.
“இவ்வாறு வரலாற்றுப் புகழ் சுமக்கும் மூன்று அடுக்குகள் கொண்ட இக்கட்டடத்திற்கு 1935-ல் தமிழர் ஒருவர் காந்தி சிகரம் (Gandhi Peak) என்று பெயரிட்டதையும் காந்தி சிலையையும் அப்போதே எழுப்பியுள்ளதையும் எண்ணி எண்ணி வியந்து பெருமிதப்படுகிறோம்.” என்கிறார் தனஞ்ஜெயன். தனது மூத்த மகனுக்கு நேதாஜியின் நினைவாக சுபாஷ் சந்திரா என்று பெயர் வைத்த்ததாக கூறினார் தனஞ்செயன்.
நேதாஜியின் இரண்டு படங்களில் ஒன்றில் Subash C Bose என்றும் இன்னொன்றில் Subhash Chandra Bose என்றும் கையெழுத்திட்டுள்ளார்.
நேதாஜி மறுபடியும் 1940-ல் வந்து ரெண்டு நாள் இங்க தங்கியிருக்கார். நம் வரலாற்றை மக்கள் தெரிஞ்சுக்க 2001-ல் ‘நேதாஜி தங்கியிருந்த வீடு’ என்று வீட்டின் முன் பொறிக்கப்பட்ட கல்வெட்டைக் நடிகர் கமல் திறந்துவெச்சார். இந்த வீட்டைப் பராமரிக்கிறதைப் பெரும் பாக்கியமா நினைக்கிறேன்” என்கிறார் தனஞ்செயன்.
2005 ஆம் ஆண்டு இந்த வீட்டிற்கு நேதாஜியின் மகள் அனிதா போஸ் வருகை தந்தது மறக்க முடியாத ஒன்று. தனது அப்பா தங்கியிருந்த அறையை பார்த்தபோது அனிதா போஸ் சற்று உணர்ச்சிவசப்பட்டாராம்.
மறுநாள் காலை புகைப்படம் எடுக்கச் சென்றபோது, மேலும் பல அரிய தகவல்களையும் 1930 களில் சென்னை எப்படி இருந்தது என்பது பற்றியும் திரு.தனஞ்செயன் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
“அந்த காலத்துல இந்த வீட்டுக்கே மணி அடிக்கிற வீடுன்னே பேறு. அப்போல்லாம் யார் வீட்டுலேயும் கடிகாரம் கிடையாது. வாட்செல்லாம் ரொம்ப ரொம்ப விலை உயர்ந்த ஒரு பொருள். மக்கள் மத்தியில் கடிகாரம் புழக்கத்தில் வராத அந்தக் காலத்துலேயே எங்க தாத்தா மக்களுக்கு நேரம் தெரிஞ்சிக்க உதவியா இருக்கட்டும்னு பெரிய ஆலய மணி ஒண்ணை வாங்கி, வீட்டு உச்சியில கட்டிவெச்சு, காலை 5 மணியில இருந்து மத்தியானம் 12 மணி வரை ஒவ்வொரு மணி நேரத்துக்கு ஒருமுறை மணியடிக்க ஒரு ஆளையும் வேலைக்கு வெச்சிருந்தார். அந்த மணி எங்க தாத்தா காலத்தில் இருந்து எங்க அப்பா சபேசன் காலம் வரைக்கும் 31 வருஷம் ஒலிச்சுது. இதெல்லாம் இந்த வீட்டின் சிறப்புக்கள்.” என்று சற்று இடைவெளி விட்டு தொடர்ந்தார்.
அப்போ இந்த பகுதியிலேயே இது தான் உயரமான கட்டிடம்.1930 களில் இங்கே மாடியில இருந்து பார்த்தா பீச் தெரியும். 1967 இல் அண்ணாநகர் டவுன்ஷிப் டெவலப் செஞ்சப்போ டவர் கட்டினாங்க. அது கூட இங்கே இருந்து பார்த்தா நல்லா தெரியும்.
“இது நேதாஜி தங்கியிருந்தப்ப எங்க பாட்டி தனம்மாள் எழுதின வரவு செலவு கணக்கு நோட்டு. ‘மூன்று நாள் செலவு 58 ரூபாய்’னு எழுதியிருக்காங்க. அப்ப 58 ரூபாய்ங்கிறது மிகப் பெரிய தொகை.” கூறியபடி ஒரு நோட்டை காட்டினார்.
நேதாஜி தங்கியிருந்த அறையை வெவ்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்து, நாமும் புகைப்படங்கள் எடுத்துகொண்டோம். கீழே உள்ள ஹாலை சுற்றிக்காட்டினார் தனஞ்செயன்.
“இங்கே தான் பாபு ராஜேந்திர பிரசாத் தலைமையில் காங்கிரஸ் கூட்டம் நடைபெற்றது…” – அந்த இடம் தற்போது இந்த வீட்டின் பூஜை அறையாக மாறி இருந்தது.
“இவர் தான் எங்க தாத்தா அய்யாசாமி முதலியார்!” என்று வீட்டை கட்டிய அந்த புண்ணியனை காட்டினார்.
நேதாஜி தங்கியிருந்த அறையிலும் சரி, இந்த ஹாலிலும் சரி…. ஒரு வித வைப்ரேஷன் இருப்பதை உணரமுடிந்தது. வரலாற்று சிறப்பு மிக்க ஒரு இடத்தில் நாம் இருக்கிறோம் என்கிற பெருமித உணர்வில் மனம் திளைத்தது.
இவர் தாத்தா எஸ்.பி.அய்யாசாமி முதலியாரோட அண்ணன் சிங்காரவேலு முதலியார் பச்சையப்பாவுல ப்ரொபசரா இருக்கும்போது கணித மேதை ராமானுஜன் அவரோட மாணவர் என்கிற ஒரு புதிய தகவலை கூறினார். அது தொடர்பான சில ஆவணங்களை காண்பித்தார்.
ராமானுஜன் பிறந்தநாளை முன்னிட்டு நமது தளத்தில் அளிக்கப்பட்ட சிறப்பு பதிவை பற்றி குறிப்பிட்டோம். “ஓ…வெரி குட்… வெரி குட்” என்று கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுதித்தினார்.
இந்த வீட்டின் வரலாற்று தொடர்பு விரிந்துகொண்டே போவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அவர் வீட்டு பூஜை அறையில் (காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற இடம்) சிறிது நேரம் பிரார்த்தனை செய்தோம்.
“சார்… இவங்களையும் கும்பிட்டுக்கோங்க. எங்க பாட்டி தனம்மாள். இந்த வீட்டுல வாழ்வாங்கு வாழ்ந்து சுமங்கலியா போய் சேர்ந்தவங்க” என்று கூறி ஒரு படத்தை காண்பித்தார். அவரையும் வணங்கிவிட்டு, இறுதியில் தனஞ்செயன் அவர்களையும் அவருடைய திருமதியுடன் தம்பதி சமேதராய் நிற்க சொல்லி, அவர்களின் கால்களில் வீழ்ந்து ஆசிபெற்றோம். “எல்லா வளமும் பெற்று வாழ்க!” என்று வாழ்த்தினார்கள்.
அனைத்தும் முடிந்து விடைபெற்று கிளம்பும்போது, “இந்த வீட்டுக்கு வந்து காலடி எடுத்து வெச்சுட்டீங்க… இனிமே பாருங்க… நினைப்பதெல்லாம் நடந்து ஓஹோ என்று வருவீர்கள்!” என்றார்.
நமக்கு சற்று புதிராக இருந்தது. ஏன் அப்படி சொல்கிறார் என்று தெரிந்துகொள்ள வேண்டி, “எதனால சார் அப்படி சொல்றீங்க..? ஏதாவது SPECIFIC ரீஸன் இருக்கா?? I MEAN வீட்டோட ராசி… அந்த மாதிரி ஏதாவது?”
“எப்பேற்பட்ட பெரிய மனிதர்களெல்லாம் இங்கே வந்துட்டு போயிருக்காங்க… இந்த வீட்டுல ஒரு சின்ன ஆலோசனை கூட்டத்திற்க்கு தலைமை ஏற்ற ராஜேந்திர பிரசாத், பின்னால நாட்டோட முதல் ஜனாதிபதியா வந்தாருன்னா… இந்த வீட்டோட ராசியை பார்த்துக்கோங்க…!!!” என்றார்.
ஆம்… அவர் சொல்வது உண்மை தான். நீதியும் நேர்மையும் சிமெண்ட்டாக குழைத்து உழைப்பு என்னும் செங்கற்களால் எழுப்பப்பட்டு, எல்லாவற்றையும் விட உயர்ந்து நின்று, ஊருக்கே நேரம் சொல்லி, தியாக சீலர்கள் வந்து தங்கி புனிதப்படுத்ததியமையால் நிச்சயம் இந்த வீட்டிற்க்கு என்று ஒரு ராசி இல்லாமல் போகுமா என்ன?
ஜெய் ஹிந்த்!
குறிப்பு : ஒன்று மட்டும் உறுதியாக தெரிவித்துக்கொள்ள ஆசைப்படுகிறோம். நாம் உயர்ந்தால் நிச்சயம் அது தனிப்பட்ட ஒரு மனிதனின் உயர்வாக மட்டுமே இருக்காது. குறைந்தது ஒரு 1000 பேராவது நம்முடன் உயர்வார்கள் என்பது உறுதி. உயரே சென்ற பின்னர் மேலும் பலரை கைதூக்கிவிட உறுதி பூண்டிருக்கிறோம்.
திருவருள் துணை புரியவேண்டும்!
==========================================================
Also check :
நேதாஜியுடன் விடுதலை போரில் பணியாற்றிய தொண்டர் கூறும் சிலிர்ப்பூட்டும் தகவல்கள்
நேதாஜிக்கு எடைக்கு எடை பொன் கொடுத்த தமிழர்கள் – INA வீரரின் சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள்!
நேதாஜியுடன் விடுதலை போரில் பணியாற்றிய தொண்டர் கூறும் சிலிர்ப்பூட்டும் தகவல்கள்
“என் தேசம் விடுதலை பெற்று பலனை யார் அனுபவிக்கிறார்கள்?” MUST READ
==========================================================
ஆளும் வளரனும் அறிவும் வளரனும் என்று முழங்கிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!
சைவ சமயத்தில் தீவிர பற்று வைத்திருந்த வ.உ.சி. அனைவரிடமும் வற்புறுத்தியது என்ன தெரியுமா?
சுப்பிரமணிய சிவா — வ.உ.சி. என்கிற துப்பாக்கியின் தோட்டா!
இவை வெறும் முகங்களில்லை… தேசத்தின் முகவரிகள்!
மகன் திருமணத்திற்கு நண்பரிடம் உதவி கேட்டுப் போன வ.உ.சி. — நடந்தது என்ன?
தேவாரம், திருவாசகம், வந்தே மாதரம் – கொடிகாத்த குமரனின் மறுபக்கம்!
“என்னை தூக்கிலிடவேண்டாம்… சுட்டுக்கொல்லுங்கள்!” என்று சொன்ன பகத்சிங். ஏன் ?
உங்கள் இழப்பு மற்றவர்களுக்கு லாபமாக இருக்கட்டும் – காந்தி ஜெயந்தி ஸ்பெஷல்!
ஒரு தலைவனின் தகுதி – மகாத்மா காந்தி உணர்த்திய உண்மை!
“விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம்!” – பாரதியின் மனைவி செல்லம்மாளின் வானொலி உரை!
பாரதி விழாவும் எறும்புகளும் – MONDAY MORNING SPL 23
==========================================================
[END]
அன்பு சகோதரா
எங்களுடைய வாழ்த்துக்கள் எல்லாமே பலிக்கும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது ..ஆம் அய்யா சொல்லி விட்டாரே ‘இந்த வீட்டிற்கு வந்தவர்கள் பெரிய ஆளாக வருவார்கள் ‘ என்று…உங்கள் நல்ல உள்ளத்திற்கும் தொண்டுள்ளதிர்க்கும் ஆண்டவன் நிச்சயம் ஆசீர்வதிப்பான் …அவனின் ஆசீர்வாதமே…உங்களை இந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளது அவரது ஆசியையும் பெற்று தந்துள்ளது…உங்கள் எழுது நடை பிரமாதமாக உள்ளது…எந்த ஒரு இடத்திலும் ‘நான் ‘ என்ற வார்த்தை வருவதே இல்லை ‘நாம் ‘ என்ற வார்த்தைதான் இந்த ஒரு குனதிர்க்க்ககவெ உங்களை ஆண்டவன் என்றும் ஆசீர்வதிக்க வேண்டும் வாழ்க வளமுடன் தம்பி. _/|\_
சுந்தர்ஜி,
வாழ்த்துக்கள்.
தாங்கள் சுபாஷ் தங்கிய வீட்டுக்கு சென்றது, பேட்டி எடுத்தது பிறகு தங்களுக்கே உரித்தான அழகிய நடையில் திறம்பட எழுதியது
எல்லாமே தாங்கள் கை தேர்ந்த எழுத்தாளர் என்பதை பறை சாற்றுகின்றது. நாங்கள் நேரில் சென்று பார்த்ததை போன்று ஒரு நேர்த்தியாக உள்ளது.
hilight -ஏ இங்கதான்……………….
அனைத்தும் முடிந்து விடைபெற்று கிளம்பும்போது, “இந்த வீட்டுக்கு வந்து காலடி எடுத்து வெச்சுட்டீங்க… இனிமே பாருங்க… நினைப்பதெல்லாம் நடந்து ஓஹோ என்று வருவீர்கள்!” என்றார்.
வெற்றி மீது வெற்றி வந்து உன்னை சேரும் அப்பா ……
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நன்றி.
Sundar,
Based on the first pic, I guess the address is in T.nagar, pls. confirm,
Also is this open to everyone ? or there is a specific time… I am not sure whether you remember me, I have been following you and talking to you from your long itself… we had spoken also over the phone… you are doing a good job
நன்றி. எப்படி இருக்கிறீர்கள்? நீங்கள் வருகை தந்தது மகிழ்ச்சி.
கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தி.நகர் முகவரி, இந்த கல்வெட்டிய நிறுவிய ‘தியாகிகள் புகழ் பரப்பும் இயக்கத்தின் முகவரி. மற்றபடி இந்த வீடு அமைந்திருப்பது ராயபேட்டை பாரதி சாலை தான்.
– சுந்தர்
வீர நேதாஜி அவர்களை நேரில் பார்த்த ஒரு பரவச உணர்வு இந்த பதிவை படித்தபிறகு ஏற்பட்டது. சென்னையில் நேதாஜி தங்கி இருந்தார் என்பதே நமக்கு பெருமை.
நம் தளத்திற்கு பல அரிய தகவல்களை அள்ளித்தந்த தனஞ்செயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. அருமையான எழுத்து நடையில் அழகான புகைப்படங்களுடன் ஒரு தரமான பதிவைக்கொடுத்த சுந்தருக்கு நன்றி.
NICE ARTICLE. THANKS FOR GIVEN THIS.
Dear sundarji,
Very interesting and mind blowing article.
All the best.
Thanks & Regards
Harish.V
வழக்கம் போல் அருமையான எழுத்துநடை.நேதாஜி பற்றிய அறிய தகவல்கள் தொகுப்பு அருமை .
நன்றி ஜி .
-மனோகர்
Super… Blessed to read this article.. 🙂 Thanks Sundar…
டியர் சுந்தர்ஜி
Superb article . உங்களின் எழுத்து நடை மிக அருமை. திரு அரூர்தாஸ் அவர்களின் எழுத்து நடை போல் உள்ளது. நீங்கள் பெரிய உரைநடை ஆசிரியராக வர என் வாழ்த்துக்கள்
நன்றி
உமா
Sundar sir
அரிய பொக்கிசயமான தகவல் sir
தாங்கள் எடுக்கும் நல்ல முயற்சிகள் அனைத்தும் இனிதை நடக்க நல் வாழ்த்துக்கள்
nandri
நேதாஜி யின் பிறந்த நாளை ஏன் அரசு விடுமுறையாக அற்விக்க வில்லை என்று தெரியவில்லை ….இன்று இந்திய போர் படைக்கு அத்தியயாம் எழுதியவர் ….
எவளோ பேருக்கு நேற்று அவரது பிறந்த நாள் என்று தெரியவில்லை ..அப்படி இருக்க சென்னையில் இப்படி ஒரு இடம் இருப்பதும் அது உங்கள் கண்ணில் பட வேண்டிய நேரத்தில் படுவதும் ….
ஆண்டவன் சித்தம் செயலில்
ஒரு தலைவரை கௌரவிப்பது என்றால் அவர் பிறந்த நாளை விடுமுறை நாளாக அறிவிப்பது தான் என்ற எண்ணம் அனைவர் மனத்திலும் பதிந்துவிட்டது. காரணம் நமது அரசுகளுக்கு மிகவும் சுலபமான ஒரே ஒரு அரசாணையில் செய்யக்கூடிய வேலை அது. ஆனால் அதனால் அந்த தலைவருக்கு என்ன பெருமை?
அதற்கு பதில் அந்த தலைவரின் கொள்கைகளுக்கு உயிரூட்டலாம். அவரது உரைகளை புத்தகங்களாக வெளியிடலாம். அவர் பெயரில் நூலகங்கள், பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள், துவக்கலாம். இப்படி இன்னும் ஆக்கப்பூர்வமான எத்தனையோ விஷயங்கள் செய்யலாம்.
மற்றபடி நேதாஜியின் பிறந்த நாள் ஜனவர் 23 என்று எமக்கு தெரியும். ஆனால் அவர் தங்கிய இல்லத்தை பற்றிய ஒரு பிரத்யேக பதிவை அளிக்கப்போகிறோம் என்று தெரியாது. நீங்கள் கூறியது போல எல்லாம் அவன் சித்தம்.
– சுந்தர்
//ஆனால் அதனால் அந்த தலைவருக்கு என்ன பெருமை?//
Muthalil இவரை போன்றவை எளிதில் இளைய தலைமுறைகள் மறக்காமல் இருக்கவே அது உதவும் …மற்றபடி நீங்கள் கூறுவது போல் அவரது கொள்கைகளை செயல் படுத்துவதே அவர்களுக்கு பெருமை
ஒரு நல்ல பதிவு