ஏதோ ஒரு கட்டிடம் கட்ட அடித்தளம் அமைக்க நிலத்தை தோண்டியபோது முருகன் சிலை ஒன்று கிடைக்க, அதையே பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பிவிட்டார்கள். இது நடந்தது 40 வருடங்களுக்கு முன்பு.
ராமநாதீஸ்வரர் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பும்போது அப்படியே இந்த கோவிலுக்கும் சென்றுவிட்டு வருவது வழக்கமாக கொண்டிருந்தோம். பார்ப்போர் மயங்கும் வண்ணம் அத்தனை அழகு இந்த கோவிலும் இதன் மூலவர் பாலசுப்ரமணியரும். வணிக நோக்கமின்றி கட்டப்பட்ட கோவில் என்பதால் நம் மனம் தானாகவே ஒன்றிவிடுகிறது.
இரண்டாவது நாள் அந்த கோவிலுக்கு செல்லும்போது எதேச்சையாக அந்த கோவில் கிணற்றை பார்க்க நேர்ந்தது. கிணறு பிள்ளையார் சன்னதிக்கு அருகில், அதாவது பக்தர்கள் கை, கால் கழுவ குழாய்கள் அமைக்கப்பட்டுள்ள இடத்தின் அருகிலேயே இருந்தது. பாதுகாப்பு கிரில் எதுவுமின்றி கிணறு திறந்து கிடந்ததும் கிணற்றின் சுற்றுச் சுவரின் உயரமானது மிகவும் குறைவாக இருப்பதும், பார்த்து திடுக்கிட்டோம்.
சுற்றுச் சுவரின் உயரமானது நமது கால் முட்டி அளவு கூட இல்லை. அதைவிட குறைவு. இது மிகவும் ஆபத்தாயிற்றே…. பண்டிகை மற்றும் விஷேட நாட்களில் பக்தர்கள் கூட்டம் பெருமளவு வருவார்கள் அவர்களுடன் குழந்தைகளும் வரக்கூடும். குழந்தைகள் ஆர்வக்கோளாரில் கிணற்றின் அருகில் சென்றால் கூட ஆபத்தாயிற்றே. ஒரு இரும்பு கிரில் அல்லது காங்க்ரீட் மூடி தயார் செய்து மூடக்கூடாதா? நகரில் பிரதான இடத்தில் இருக்கும் ஒரு கோவிலில், இப்படி ஒரு பாதுகாப்பு குறைபாடா? பேசாமல் கோவில் அலுவலகத்தில் சென்று இது பற்றி முறையிடலாமா? அவர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் தெரியவில்லையே… அவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்றால், நாமே களமிறங்க வேண்டியது தான். ஆனால் கிரில் அமைக்க ஆயிரக்கணக்கில் செலவாகுமே… என்ன செய்வது? என்ன ஆனாலும் சரி… கிணற்றுக்கு கிரில் வைத்தே தீரவேண்டும்…. நாம் இதுகுறித்து ஏதேனும் செய்யவேண்டும்… நாளை ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் அந்த பழி நம் முருகனுக்கல்லவா போய் சேரும் ? இவ்வாறாக பல சிந்தனைகள் எழுந்தது. ஆனால் ஒரு தெளிவான ஒரு முடிவு எடுக்கமுடியவில்லை.
அடுத்த நாள் போகும்போதும் மனம் கிணற்றை பற்றியே நினைத்துக்கொண்டிருந்தது. நம்முடன் வந்திருந்த மாரீஸ் கண்ணனிடம் இது பற்றி கூறியபோது…. “ஆமாம்… என்ன இது இப்படி வெச்சிருக்காங்க. அதை மூடக்கூடாதா? குழந்தைகள் வந்தால் ஆபத்தாயிற்றே…” என்று அவரும் சொன்னார்.
கோவில் அலுவலகத்தில் இது பற்றி பேசினால்… “நீங்க வேணும்னா செலவு செய்து போட்டு கொடுங்க” என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது? ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள கைங்கரியங்களை செய்வதற்கே முழி பிதுங்குகிறது. இதில் புதிதாக எப்படி ஒப்புக்கொள்வது? ஒரே தவிப்பு எமக்கு….
(எமக்கு வசதி மட்டும் கொஞ்சம் இருந்தால் சொந்த செலவில் நாமே ஏற்பாடுகள் செய்து ஒரே நாளில் கிரில்லை வைத்திருப்போம்!)
எதற்கும் கோவிலில் பேசிப்பார்ப்போம். அவர்கள் ஏதேனும் சொன்னால்… கிரில்லை தயார் செய்ய நம் பங்கிற்கு நாம் ஏதேனும் ஒரு சிறிய தொகையை தருகிறோம் என்று சொல்லலாம் என்று தீர்மானித்தோம். சூழ்நிலையை நொந்துகொள்வதவிட அதை மாற்ற ஒரு சிறிய முயற்சியாவது செய்வது மேலல்லவா?
இதற்கு சரியாக இரண்டாவது நாள், ராமநாதீஸ்வரரை தரிசித்துவிட்டு வழக்கம்போல இந்த கோவிலுக்கு சென்றால்…. அங்கே நாம் கண்ட காட்சி… ஒரே இன்ப அதிர்ச்சி!!!!!!!!!!!!
கிணற்றுக்கு காங்க்ரீட் மூடி தயார் செய்யும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது.
பணியாட்கள் வந்து கம்பிகளை கட்டிக்கொண்டிருந்தார்கள். எமக்கு ஒரே சந்தோஷம். அடடா…. நம்ம மனக்குறை முருகனுக்கு எட்டிடிச்சி போல… என்று நெகிழ்ந்துபோனோம்.
ஏதோ நாமே கைக்காசை போட்டு கிரில் அமைப்பது போல ஒரு சந்தோஷம் அதை பார்க்கும்போது ஏற்பட்டது. எம் சூழ்நிலையில் உங்களை பொருத்திப்பாருங்கள். அந்த சந்தோஷாத்த்தின் அர்த்தம் புரியும்.
தரிசனம் செய்யும்போது, முருகப் பெருமானிடம் நன்றி கூற தவறவில்லை.
அர்ச்சகரிடம், “இது பத்தி நானே கோவிலில் பேசவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன் சுவாமி. ரொம்ப சந்தோஷம். மிகவும் அவசியமான ஒண்ணு இது.”
“இப்படியே திறந்து கிடக்கிறது சேப்டி இல்லை… காம்பவுண்ட் உயரம் வேற கம்மி. அதான் கோவில் கமிட்டில பேசி உடனே ஏற்பாடு செய்துவிட்டோம்” என்றார்.
“இதில் எங்கள் பங்கும் இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறோம்! எங்களால் முடிந்த ஒரு சிறிய தொகையை இதற்கு அளிக்கிறோம்!” என்றோம்.
“தாராளமா… ரொம்ப சந்தோஷம் சார்…!” என்றார்.
கிளம்பும் முன்னர் அங்கே அந்த கிரில் அமைக்கும் பணி செய்துகொண்டிருந்த தொழிலாளர்களுக்கு நம் செலவில் டீ வாங்கிக்கொடுத்தோம்.
அடுத்தடுத்த நாட்களில் காங்க்ரீட் கிரில் தயார் செய்து கிணற்றை பாதுகாப்பாக மூடிவிட்டார்கள்.
கோவிலுக்கு எத்தனையோ பேர் வந்து செல்கிறார்கள். ஆனால் இது குறித்து சிந்தித்தவர்கள் எத்தனை பேர் என்று தெரியாது. ஒருவேளை யாராவது ஒருத்தர் இது பத்தி யோசிச்சாக்கூட போதும்… நான் பார்த்துக்கொள்கிறேன் என்று முருகப் பெருமான் நினைத்தானோ என்னவோ?
இந்த சம்பவத்துல நமக்கு ஒளிந்துள்ள மெஸ்ஸேஜ் என்ன தெரியுமா?
நல்ல விஷயங்கள் நடக்கவேண்டும் என்று நினைத்தால் கூட போதும். இறைவன் அதை நடத்திக்கொள்வான் – என்பது தான்.
நாம் அடிக்கடி கூறுவது போல நம் எண்ணங்களுக்கு உள்ள அளப்பரிய சக்தியையே இது காட்டுகிறது. ஆகவே தான் எப்போதும் நல்லதே நினைக்கவேண்டும். நல்லதே பேசவேண்டும். நல்லதே செய்யவேண்டும். செய்தால்….? நல்லதே என்றும் நடக்கும்!!
நல்ல விஷயங்கள் நடக்கவேண்டும் என்று நினைக்க கூடவா நம்மால் முடியாது?
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து. (குறள் 596)
===============================================================
Also check :
மிளகளவு கைங்கரியமும் மலையளவு புண்ணியமும்! மார்கழி முதல் நாள் தரிசனம்!!
===============================================================
[END]
Dear sundarji,
Kandhanuku theriyadha vishayama.Avan indri onrum illai.
Om saravana bhava
Thanks & Regards
V.Harish
உயர்வான எண்ணத்திற்கு எப்போதும் பலன் உண்டு என்பது நிதர்சனமான உண்மை. எண்ணம் தான் நம் வாழ்க்கை.
நன்றி
ப. சங்கரநாராயணன்
மனித என்னங்கலுக்கு அதீத சக்தி உண்டு என்பதனை படித்திருகின்றேன் ..ஒருவன் எதனை நினைக்கின்ராணோ அதுவாகவே ஆகின்ரான் என்பத்னையும் கீதை வசனத்தில் கேல்விபட்டிருக்கிறேன்..
சிலபேர்கல் அது நடப்பதில்லை என்பார்கல்.அதர்க்கு காரனம் அவர்கலின் தீவிர சிந்தனை அதனைபற்றி இல்லை என்பதுதான் அது ..
நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும் தீயதை நினைத்தால் தீயதே நடக்கும் இது உன்மயிலு உன்மை…உங்கலது அனுபத்தில் நடந்ததை எங்கலுக்கு எடுத்துரைத்தமைக்கு நன்ரிகல்…அந்த முருகனின் அருல் அனைவக்கும் கிடைக்கட்டும்..
டியர் சுந்தர்ஜி
உங்கள் எண்ணத்தை படித்து முருகன் அதை நிறைவேற்றிவிட்டார். உங்கள் நல்ல எண்ணம் நிறை வேறியதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நன்றி
உமா
Lovely article. This reflects the power of our Subconscious Mind. Yes! Miracles Do happen … 😀 Feeling charged Bro., !!!
கோவில் குளத்துலே டிரெஸ்ஸை கழட்டிப்பொட்டு வர்றதுக்கு
பரிகாரம்னு பேரா? அப்படி கோவிலை அசிங்கம் பண்றதை பத்தி எழுதுங்கோ சார். அதை யார் சுத்தம் செய்வாங்க ? சொல்லிவிட்ட ஜோசியரா? தனியா ஒரு பதிவு எழுதுங்கோ சார்