நமது ஒவ்வொரு பிரார்த்தனை கிளப் பதிவிற்கும் தவறாமல் வந்திருந்து அதில் வாசகர்கள் கூறியுள்ள பிரச்சனைகளை படித்து அவற்றுக்கு அற்புதமான பரிகாரங்களை சொல்லி வருபவர் நண்பர் விஜய் பெரியசுவாமி அவர்கள். திரு.விஜய் பெரியசுவாமி மூலம் நமக்கு பொழியும் இறைவனின் கருணை மழையை பயன்படுத்தி கொண்டவர் எத்தனை பேரோ நாம் அறியோம். ஏனெனில் சுலபமாக கிடைக்கும் எதன் மதிப்பையும் நாம் உணர்வதில்லை. வள்ளலாரையே ‘கடைவிரித்தேன்… கொள்வாரில்லை’ என்று குமுற வைத்தவர்களாயிற்றே நாம்!
சரி… விஷயத்திற்கு வருகிறோம். கல்பாக்கத்தை சேர்ந்த திரு.விஜய் பெரியசுவாமி தினத்தந்தி-ஆன்மீக மலர் உள்ளிட்ட பத்திரிக்கைகளில் ஆன்மிகம், திருத்தலங்கள் உள்ளிட்டவைகளை பற்றி கட்டுரை எழுதிவருகிறார். நமது வாசகராக அறிமுகமாகி நண்பரானவர். நமது தளத்தின் ஆண்டுவிழாவிற்கு வந்திருந்து நம்மை கௌரவித்தார்.
இவரது “திக்கற்றோருக்கு தெய்வமே துணை – சகலத்துக்கும் பரிகாரங்கள்’ நூல் புத்த கண்காட்சியில் பூங்கொடி பதிப்பகத்தின் ஸ்டாலில் கிடைக்கிறது.
இன்று ஒரு எழுத்தளராக அறியப்பட்டாலும் இவர் கடந்து வந்த பாதை மிகவும் கரடு முரடானது. அடிப்படையில் எழுத்தார்வம் மிக்க இவர், எத்தனையோ பத்திரிக்கைகளுக்கு தொன்மை வாய்ந்த – பரிகார சக்தி மிக்க திருத்தலங்கள் குறித்து கட்டுரைகள் எழுதி அனுப்பினார். ஆனால் அவர்கள் திருப்பி அனுப்பினர். இவர் மனம் தளரவில்லை. தொடர் முயற்சியின் இறுதியில் இவரது கட்டுரைகள் பத்திரிக்கைகளில் வெளியாக துவங்கின.
தனது பரிகாரங்கள் தொடர்பான கட்டுரைகளை தொகுத்து அதை நூலாக வெளியிட விரும்பி எத்தனையோ பதிப்பகங்கள் ஏறி இறங்கினார். அதில் பட்ட அவமானங்கள், சந்தித்த புறக்கணிப்புக்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அவற்றையெல்லாம் தன்னை பட்டை தீட்டவே பயன்படுத்திக்கொண்டார். தனது முயற்சியில் சற்றும் மனம் தளரவில்லை.
ஏற்கனவே சாதித்துவிட்டவர்களுக்கும் சாதிக்க துடிப்பவர்களுக்கும் இருக்கக்கூடிய மிக முக்கிய வேறுபாடு என்ன தெரியுமா? சாதித்துவிட்டவர்களிடம் (மற்றும் தங்களை அப்படி நினைத்துக்கொள்பவர்களிடம்) அவர்களையுமறியாமல் ‘ஈகோ’ வந்துவிடும். ஆனால் சாதிக்கத் துடிப்பவர்களிடம் அது இருக்கவே இருக்காது.
ஏன் தெரியுமா?
சாதிக்க நினைப்பவர்களுக்கு, தங்கள் முன்னேற்றத்துக்கு ‘ஈகோ’ ஒரு மிகப் பெரிய எதிரி என்று அவர்கள் ஆழ்மனதில் (SUBCONSCIOUS MIND) இயற்கையாகவே ரெஜிஸ்டர் ஆகிவிடும். (அங்கே தான் இறைவன் வேலை செய்கிறான்!)
(சாதித்துவிட்டவர்களிடம் ஈகோ இருப்பதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. ஆனால், எதுவுமே சாதிக்காமல் உண்டு, உறங்கி, நாட்களை கழிப்பவர்களிடமும் இந்த ஈகோ இருப்பதை பார்க்கும்போது சில சமயம் நமக்கு எரிச்சல் தான் வருகிறது.)
ஆனால் விஜய் பெரியசுவாமி அவர்களை பொருத்தவரை, சாதிக்கத் துடிக்கும் போதும் சரி… சாதித்துக்காட்டிய பின்னரும் சரி, ஈகோ என்பதே துளியும் இல்லாதவர்.
(ஆன்மீக எழுத்தாளர், பரிகாரம் சொல்கிறார் எனவே விஜய் பெரியசுவாமி ஏதோ வயதான நபர் என்று நினைத்துவிடாதீர்கள். இவர் மிகவும் சிறு வயது. மனைவி மற்றும் குழந்தைகளோடு இனிய இல்லறம் நடத்திவருகிறார். மத்திய அரசு நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார்.)
திருப்போரூருக்கு அருகே உள்ள நெல்லிக்குப்பத்தை அடுத்து காட்டூர் என்ற ஊரில் ஒரு சிறிய மலை மீது கால பைரவர் கோவில் ஒன்று உள்ளது. மிகவும் பழமையான இந்த கோவிலில் நமது உழவாரப்பணியை செய்ய வேண்டும் என்று விஜய் பெரியசுவாமி அவர்கள் நமக்கு கடந்த சில மாதங்களாக வேண்டுகோள் விடுத்து வந்தார்.
நமது இடைவிடாத பணிகளின் காரணமாக அவருக்கு சரியான முறையில் நம்மால் ரெஸ்பான்ஸ் செய்யமுடியவில்லை. இரண்டு மாதங்கள் இப்படியே போனது. இந்த கோவிலை பொருத்தவரை சர்வே செய்ய செல்வதற்கே நமக்கு அரை நாள் வேண்டும். இருந்தாலும் விஜய் பெரியசுவாமி நம்மை தவறாக எடுத்துக்கொள்ளாது, தொடர்ந்து அவ்வப்போது அதுபற்றி நினைவூட்டி வந்தார். இந்த இடைப்பட்ட காலத்தில் நாம் வேறு இரண்டு ஆலயங்களில் உழவாரப்பணி செய்து விட்ட நிலையில் வேறு யாராவது அவர் இடத்தில் இருந்திருந்தால் “சரி தான் போய்யா” என்று போயிருப்பார்கள். ஆனால் விஜய் பெரியசுவாமி அப்படி செய்யவில்லை. காரணம், தனது தனிப்பட்ட மான அவமானங்களை விட அந்த கால பைரவருக்கு கைங்கரியம் நடைபெறுவது தான் அவருக்கு முக்கியமாகபட்டது. கைங்கரியம் நடக்கிறதோ இல்லையோ இப்படி ஒரு பழமை வாய்ந்த கோவில் இன்ன இடத்தில் இருக்கிறது என்று சில நூறு பேருக்காவது தெரியட்டுமே என்று தான் அவர் நினைத்தார்.
அவருக்கும் அவரது சொல்லுக்கும் மதிப்பளிக்கவேண்டி ஒரு நாள் நாம் நமது டூ-வீலரிலேயே காட்டூர் புறப்பட்டோம். அது பற்றிய விரிவான பதிவை புகைப்படங்களுடன் இந்த பதிவில் பார்க்கவும். http://rightmantra.com/?p=7400)
திரு.விஜய் பெரிய சுவாமி அவர்களிடம் நமக்கு பிடித்த மற்றொரு குணம் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி நமக்கு உதவ நினைப்பது. நம்முடன் பழகுவது. நமது தளத்தில் பரிகாரங்கள் அளிக்கும்போதெல்லாம்… “நான் கமெண்ட் போடுவது உங்களுக்கு உதவும் பொருட்டு தான் சார்…. என் பேரெல்லாம் வேண்டாம். நீங்கள் நீங்கள் அந்த பரிகாரங்களை சொல்ற மாதிரி சொன்னாக்கூட போதும்!” என்று பெருந்தன்மையுடன் கூறினார். அடுத்தவர்கள் உழைப்பில் நாம் ஷீல்டு வாங்குவதா என்று நான் அதற்கு மறுத்துவிட்டேன்.
இந்த புத்தகம் வெளிவந்த செய்தியை கூட, அவர் நமக்கு ஒரு தகவலாக எஸ்.எம்.எஸ். மூலம் தான் சொன்னார். மற்றபடி இது பற்றி தளத்தில் போடுங்கள் என்றோ அல்லது என் புத்தகத்தை அனைவருக்கும் REFER செய்யுங்கள் என்றோ அவர் கேட்கவில்லை. நம்மிடம் எதிர்பார்க்கவுமில்லை.
இந்த உலகத்தின் சக்கரமே ‘சுயநலம்’ என்கிற அச்சாணியில் தான் இயங்கிக்கொண்டிருக்கிற நிலையில் அவரது செயல் எனக்கு ஆச்சரியம் தான்.
ஒரு அறிமுக எழுத்தாளனுக்கு தனது படைப்பும் அதன் விற்பனையும் எந்தளவு முக்கியம் என்பதை நாமறிவோம். தினமும் ஆயிரக்கணக்கானோர் படிக்கக் கூடிய ஒரு தளம் நடத்துபவரிடம் கூட அது பற்றி கூறி சாதித்துக்கொள்ளவேண்டும், என்கிற ஆசை அவருக்கு இல்லை என்பதை எண்ணும்போது உண்மையில் நெஞ்சம் நெகிழ்கிறது. இவரைப் போன்றவர்களை ஊக்குவிப்பது நம் கடமையல்லவா?
எனவே சமீபத்தில் புத்தக சந்தை சென்ற போது ‘பூங்கொடி பதிப்பகம்’ ஸ்டாலுக்கு சென்று (ஸ்டால் எண்: 381) இந்நூலை வாங்கினோம்.
இந்த பதிவை எழுதும் இந்த நொடி வரை இப்படி ஒரு பதிவை நாம் அளிக்கப்போவது அவருக்கு தெரியாது.
கீழே கூறியுள்ள முன்னுரையில் விஜய் பெரியசுவாமி அவர்கள் கூறியுள்ளது போன்று, தங்கள் பிரச்னைகளுக்கான பரிகாரங்களுக்கு கண்ட கண்ட மாந்திரீகர்களிடமும் பணம் பறிக்கும் ஜோதிடர்களிடமும் சென்று ஆயிரக்கணக்கான ரூபாயை செலவு செய்வதற்கு பதில், நம் வாசக அன்பர்கள் இந்த பரிகாரங்களில் கூறப்பட்டுள்ள ஆலயங்களுக்கு பக்தியுடன் சென்று வந்தாலே போதும். அல்லவை அகன்று நல்லது நடக்கும்.
இந்நூலில் வழக்கமான பொது பிரச்னைகளான வறுமை, நோய், கடன், திருமணத் தடை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு பரிகாரங்கள் தவிர நடனக் கலைகளில் சிறந்து விளங்க, எழுத்தாற்றல் பெற, வீடு கட்டுவதில் உள்ள தடைகள் அகன்று விரைவில் வீடு கட்டிமுடிக்க, காசநோய் அகல, வீட்டில் உள்ள வாஸ்து கோளாறுகள் நீங்க, சர்க்கரை நோய் குணமாக, மனநிலை பாதிப்பு நீங்க எனப் பல பல பிரச்சனைகளுக்கும் கோரிக்கைகளுக்கும் எளிய பரிகாரங்கள், அவற்றுக்கு உரிய அந்தந்த திருத்தலங்கள் பற்றிய விபரங்கள் சொல்லப்பட்டுள்ளது.
இந்நூலை வேண்டுவோர் 22/01/2014 க்கு முன்னர் புத்தக கண்காட்சிக்கு சென்று பூங்கொடி பதிப்பகத்தின் ஸ்டாலில் (ஸ்டால் எண்: 381) வாங்கலாம். கண்காட்சிக்கு பின்னர் நூலை வாங்க விரும்பினால், கீழ்கண்ட முகவரிக்கு கடிதம் அனுப்பினால் போதும். வி.பி.பி. V.P.P. (VALUE PAYABLE POST) மூலம் நூலை அனுப்புவார்கள். தபால்காரரிடம் பணத்தை கொடுத்துவிட்டு நூலை வாங்கிக்கொள்ளலாம்.
நூலின் விலை ரூ.130/-. மொத்தம் 206 பக்கங்கள். (புத்தக சந்தையில் வாங்கினால் 10% டிஸ்கவுண்ட் உண்டு!)
பூங்கொடி பதிப்பகம்,
14, சித்திரைக்குளம் மேற்கு வீதி,
மயிலாப்பூர், சென்னை – 600 004.
தொலைபேசி : 044-24643074
======================================================================
இந்நூலில் விஜய் பெரியாசுவாமி அவர்கள் அளித்துள்ள அற்புதமான முன்னுரை வருமாறு :
முற்பிறவியிலும், இப்பிறவியிலும் நாம் அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களினால் பல தோஷங்கள் நம்மை தொடர்கின்றன. நம் சந்ததியினரை வாட்டுகின்றன. இக்காலத்தில் தோஷமற்ற ஒரு ஜாதகரை காண்பது அரிது. எந்த ஒரு ஜாதகத்தை எடுத்துப் பார்த்தாலும் ஏதாவது ஒரு தோஷம் இல்லாமல் இல்லை. இதனால் முன்ஜென்ம வினைகளினால் ஒருவருக்குப் படிப்பில் பிடிப்பின்மை, திருமணத் தடை, செய்வினை தோஷங்கள், பொருளாதார சிக்கல், குழந்தைப் பேறு தாமதம், புதுப் புது நோய்கள், தீயோர் நட்பு, வேலை இல்லாமை, குடும்பப் பிரச்னைகள்.
இவைகளிலிருந்து மீளவேண்டுமா?
ஆம் எனில், நீங்கள் பரிகாரத்திற்கு போலி மாந்திரீகர்களையும் மற்றவர்களையும் நாடிச் சென்று ஆயிரக்கணக்கில் ரூபாய் செலவழிக்க வேண்டியதில்லை. இப்புத்தகத்தில் நாம் கூறியுள்ள கோவில்களுக்கு சென்று வாருங்கள். உங்கள் வாழ்வு வளமாகும்.
நம் பாரத நாட்டில் குறிப்பாக தமிழ் நாட்டில் மிகப் பழமையான ஒவ்வொரு பிரச்னைகளையும் தீர்த்து வைக்கக்கூடிய திருக்கோவில்கள் ஏராளம். அக்கோவில்கள் பலவற்றில் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக நம் முன்னோர்களும் முனிவர்களும் சித்தர்களும் இயந்திரப் பிரதிஷ்டை செய்து வைத்துள்ளனர். இதனால் ஆலய கருவறைக்குள் அதியற்புத சக்தி உள்ளது. முனிவர்களும் சித்தர்களும் தங்கள் தவ வலிமையால் எந்த தோஷத்திற்கு அல்லது எந்த துன்பத்திற்கு எந்த பரிகாரம் சிறந்தது என கூறிச் சென்றிருக்கின்றனர்.
அவை அனைத்தும் எளிமையானவை & சக்தி மிக்கவை. இந்த எளிமையான பரிகாரங்களை ஈடுபாட்டுடன் செய்யவேண்டும். செய்ய வேண்டிய கடன் இருக்கிறதே என்று செய்யக்கூடாது.
நீங்கள் நாம் கூறியுள்ள ஆலயத்திற்கு சென்று சுவாமியை தரிசித்து அந்தந்த கோவில் முறைப்படி (அர்ச்கர்களிடம் கேட்டு) அர்ச்சனை செய்து, நெய் தீபமும் ஏற்றி வாருங்கள் போதும். உங்கள் பிரச்னை குறுகிய காலத்திற்கு முன்பாகவே தீர்ந்து உங்கள் வாழ்வு வசந்தம் ஆவதை உணர்வீர்கள். ஆம். அதற்கு நாம் கியாரண்டி.
“தீராத வினையெல்லாம் தீர்ந்துபோகுங்க…
அது தீராவிட்டால் வந்து என்னைக் கேளுங்க”
இந்நூலில் கூறப்பட்டுள்ள பரிகாரங்கள் அனைத்தும் சொந்த அனுபவங்கள் மூலமும், ஆலய அர்ச்சகர்களின் உதவியோடும் ஆலய தல வரலாறு புத்தகங்களின் துணையோடும் ஆலய கல்வெட்டு ஆதாரங்கள் மூலமும், வலைத் தளங்கள் மூலமும் தமிழ் ஆன்மீக இதழ்களின் துணையோடும் எழுதப்பட்டுள்ளன.
“திருக்கோவில் தரிசனம்… உடனடி நிவாரணம்… பாப விமோசனம்”
இந்நூலில் கூறப்பட்டுள்ள சில கோவில்கள் கிராமங்களில் உள்ளதால் அருகில் பூக்கள், நெய், கற்பூரம் கிடைப்பது அரிது. அதனால் அத்தகைய கோவில்களுக்கு நீங்கள் செல்லும்போது கையோடு மேற்கூறியவற்றை வாங்கிக்கொண்டு செல்லவேண்டும்.
இப்புத்தகத்தில் நாம் ஆலய முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்களை கொடுத்துள்ளோம். அவர்களை தொடர்புகொண்டு உங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ளுங்கள்.
இந்நூலில், முடிந்த அளவிற்கு விபரங்களை நாம் இணைத்துள்ளோம்.
இந்நூலில் நிறைகள் இருந்தால் உங்கள் உறவினர்களிடமும் நண்பர்களிடமும் சொல்லுங்கள். குறைகள் இருந்தால் நம்மிடமும் தெரிவியுங்கள்.
ப்ரியமுடன்
உங்கள் அன்பன்,
அ. விஜய் பெரியசுவாமி,
கல்பாக்கம்
[END]
சகோதரா சுந்தர்…
நீங்கள் பதிவிட்ட நேரம் அதி காலை 3.22 …ஈஸ்வரா….மற்றவரின் நலனுக்காக நேரம் காலம் பார்க்காமல் உழைக்கும் உங்களின் தொண்டுள்ளம் கண்டு மெய் சிலிர்த்து போனேன்…மஹா பெரியவா உங்களுடன் எப்பொழுதும் இருந்து உங்களுக்கு அருள வேண்டும்…உங்களின் பதிவுகள் ஒரு தலைப்பு மட்டும் இல்லது…அனைத்து வித துறைகளிலும் உங்கள் ஆற்றலை வெளிப் படுத்தி நல்ல சேவை செய்து வருகிறீர்கள்…வாழ்க வளமுடன்…பதிவுகளை எழுதுவதோடு மட்டுமல்லாமல் அவரவர் மனதின் என்ன ஓட்டங்களையும் சேர்த்து எழுதுவது மிக சிறப்பாக உள்ளது…உழவாரப் பணிகளுக்கு நீங்கள் மேற் கொள்ளும் முயற்சிகள் மகிழ வைக்கின்றன…என்று தாய் நாடு திரும்பி உங்களின் உழவாரப் பணியில் நம்மை ஈடு படுத்திக் கொள்வோம் என்று மனம் ஏங்குகிறது….விரைவில் சிந்திப்போம் சகோதரா ..வாழ்க வளமுடன்…
_/|\_
மறுநாள் விடுமுறை என்பதால் பொதுவாக சனிக்கிழமை இரவுகளில் சற்று விழித்திருந்து பதிவு எழுதுவது வழக்கம். அதுவும் இப்பொதெல்லாம் மின்சாரம் எப்போது போகும் எப்போது வரும் என்று சொல்ல முடியாத ஒரு சூழல். எனவே மின்சாரம் இருக்கும்போதே வேலையை முடித்துவிட வேண்டும் என்று கருதியே சற்று விழித்திருந்து பதிவு அளிக்கிறேன்.
கடந்த மாதம் முழுக்க மார்கழியை முன்னிட்டு தினமும் அதிகாலை கோவிலுக்கு சென்று வந்ததால் சனிக்கிழமைகளில் அதிக நேரம் கண் விழிக்க இயலவில்லை. நீண்ட நாள் கழித்து இன்று தான் வாய்ப்பு கிடைத்தது.
மற்றபடி வேறு ஒன்றுமில்லை.
நன்றி!
– சுந்தர்
சுந்தர்,மிகவும் அருமையான பதிவு.ஆனால் என்னால் தான் வாங்கி படிக்க முடியாது இந்தியா வரும் போது தான் வாங்க முடியும் அது போலவே சுந்தர காண்டம் புத்தகமும் வாங்க வேண்டும்.
டியர் SUNDARJI
EVERY SATURDAY, IN DINA THANTHI, ் AM READING HIS ARTICLE. IT IS USEFUL TO EVERYONE. MY REGARDS TO MR VIJAY PERIYASAMY
THANKDS
UMA
ரொம்ப நன்றி உமா மேடம் .. …எல்லாம் சுந்தர் சார் விட்ட வழி …..சிவாய நம்
நல்ல பயனுள்ள பதிவு. மிக்க நன்றி
சுந்தர் சார்,
இந்த பதிவு தான் மிக சிறந்த பதிவு என்று நினைக்கிறேன். இந்த பதிவை படிபவர்கள் மிக பாக்கியசாலி என்று கருதுகிறேன். அதை விட திரு விஜய் பெரியசாமி அவர்கள் எழுதிய இந்த புத்தகத்தை வாங்கி படித்து பலன் பெறுபவர்கள் மிக அதிஷ்டசாலி.
மிக்க நன்றி சுந்தர் சார்.
திரு விஜய் பெரியசாமி அவர்களுக்கு மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்து கொள்கிறேன்.
நன்றியுடன் அருண்
Its really very good thought Mr.vijay periyasami .. every peoples life useful for your informations . am really appreciate and hopeful to say thanks for you