Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, September 8, 2024
Please specify the group
Home > Featured > கோவிலுக்கு எப்படி செல்லவேண்டும் தெரியுமா? Rightmantra Prayer Club

கோவிலுக்கு எப்படி செல்லவேண்டும் தெரியுமா? Rightmantra Prayer Club

print
‘இந்தக் கோவிலுக்கு செல்வதால் அந்த பலன்’, ‘அந்த கோவிலுக்கு செல்வதால் இந்த பலன்’, ‘கோவிலுக்கு அடிக்கடி போவது நல்லது’, ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்று கோவிலுக்கு செல்வது பற்றி சான்றோர்கள் கூற கேட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். பலமுறை அப்படி போய் வந்துள்ளோம். வருகிறோம். சரிதானே? ஆனால், கோவிலுக்கு சென்று வருவதால் பலன் எதுவும் கிடைத்தாற்போல தெரியவில்லையே.. என்று சில சமயம் தோன்றுகிறது அல்லவா? அது ஏன்?

Kumara Vayalur Subramaniya Swamy
குமாரவயலூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவில்

கோயிலுக்குச் செல்லும் எல்லாருக்கும் பலன் கிடைக்கிறதா என்றால் ஓரளவுக்கு கிடைக்கிறது. காரணம், திரிகரணசுத்தியுடன் இறைவனை யாரும் வணங்குவதில்லை.

திரிகரணசுத்தி என்றால் என்ன?

மனிதனுக்கு பொறாமை, கோபம், ஆசை, பகை முதலிய குணங்கள் உள்ளன. இவற்றை தியானம் என்ற தீர்த்தத்தாலும், பொய், கோள்மூட்டுதல், தீயசொல் ஆகியவற்றை ஸ்லோகங்கள், பாடல்கள் உள்ளிட்ட துதி என்னும் தீர்த்தத்தாலும், களவு, கொலை, பிறன்மனை காணுதல் ஆகிய அழுக்குகளை அர்ச்சனை என்ற தீர்த்தத்தாலும் கழுவ வேண்டும். இதுவே திரிகரணசுத்தி எனப்படுகிறது.

இவற்றையெல்லாம் கழுவாமல், ஆயிரங்களையும், லட்சங்களையும் கொட்டி பூஜை செய்வதால் பயனேதும் இருக்காது. எல்லாரும் பலனடைய வேண்டுமானால் திரிகரணசுத்தி செய்யுங்கள். இறைவனின் அருளைப் பெறுங்கள்.

Kandakottam Kandaswamyஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்

உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்

பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை
பேசா திருக்க வேண்டும்

பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியா திருக்க வேண்டும்

மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை
மறவா திருக்க வேண்டும்

மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற
வாழ்வுனான் வாழ வேண்டும்

தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே

தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே

===============================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குவது யார் தெரியுமா?

விஷேட நாட்களில் செய்யப்படும் நமது ஆலய மலர்க் கைங்கரியத்திற்கு லாபநோக்கின்றி மலர்களை தரும் வடபழனியில் மலர் மாலை கடை வைத்திருக்கும் மணிகண்டன்!

பணம் ஒன்றையே குறிக்கோளாக கருதி வருபவர்கள் தலையில் எதையாவது கட்டி பொருளீட்டும் வியாபாரிகளுக்கு நடுவே மணிகண்டன் அவர்களின் தொண்டு உண்மையில் மகத்தானது.

DSC_6249

இவரைப் பற்றியும் இவர் எந்தளவு நமது மலர் கைங்கரியத்திற்கு உதவி வருகிறார் என்பது பற்றியும் பதிவுகளே அளித்திருக்கிறோம். இவரது தொண்டை கௌரவிக்கவும், உலகறியச் செய்யவும், சென்ற மாதம் நடைபெற்ற நமது பாரதி விழாவில், மணிகண்டன் அவர்களை நாம் மேடைக்கு அழைத்து, கௌரவித்தது நினைவிருக்கலாம். (மணிகண்டனை தேடி வந்த முருகன்! ஒரு உண்மை சம்பவம்!!)

விழாவில் எந்த குன்றத்தூர் முருகனுக்கு அவர் இலவச மாலைகள் கொடுத்து நமது கைங்கரியத்திற்கு துணை புரிந்தாரோ அதே மாலைகளுடன் கூடிய பெரிய புகைப்படத்தை பிரேம் செய்து அவருக்கு விழாவில் அளித்தோம்.

நமது பிரார்த்தனை கிளப்பிற்கு இந்த வாரம் தலைமை ஏற்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டபோது அன்புடன் ஒப்புக்கொண்டார். இறைவனுக்கு மாலைகளை கோர்க்கும்போது பிரார்த்தனை செய்துகொண்டே கொர்ப்பதாக கூறியிருக்கிறார். இதைவிட சிறப்பு வேறு என்ன வேண்டும் நமக்கு?

மணிகண்டனுக்கு நன்றி. அவரை நமக்கு அடையாளம் காட்டிய முருகனுக்கும் நன்றி!

==================================================================

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

My life and land both should prosper

Sir,

My name is arul prakash. i am a Post graduate in computers. i have been reading your website right mantra.com for the past 1 year.

Despite my best efforts my first marriage which is an arranged marriage failed in feb 2012 within 3 years of time and got separated legally. I returned home leaving my job to look after agriculture after my failed marriage .

we reside in  salem district (attur) and there is no sufficient rain in our area for the last 2 years which is a necessary one for agriculture . please pray for sufficient rain in our area and for getting a success in identifying and setting up  a new business for my future.

regards
m.arul

==================================================================

விவாகரத்து வழக்கில் நல்ல முடிவு ஏற்பட்டு – நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கவேண்டும்!

வணக்கம் சுந்தர்ஜி மற்றும் நண்பர்களே.

என் குழந்தை தர்ஷனாவை பிரிந்து இருந்தபோது அவளுடன் சேரவேண்டும் என்று நம் பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியிருந்தேன். மஹா பெரியவரின் அருளால் அது நிறைவேறிவிட்டது. குழந்தை என்னுடன் சேர்ந்துவிட்டாள். (Check : உங்கள் உலகம் பெரிதாகி துன்பங்கள் கடுகாக வேண்டுமா?)

இருப்பினும், விவாகரத்து வழக்கு இங்கு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு தொடர்பாக செலவுகள் உயர்ந்து எனது பொருளாதார நிலையை அசைத்து பார்த்துவருகிறது. அரும்பாடுபட்டு உழைத்து சம்பாதித்து வந்த பணத்தை – பல லட்சங்களை – நான் இதன் மூலம் இழந்து வருகிறேன். இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை.

இவ்வழக்கில் விரைவில் ஒரு நல்ல முடிவு ஏற்பட்டு எனக்கு நல்ல நீதி கிடைக்க அனைவரையும் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.

– அனுராதா,
சிங்கபூர்

==================================================================

இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியிருக்கும் திரு.அருள், எத்தனையோ பிரச்சனைகள் தனது வாழ்வில் இருந்தபோதும் அவற்றின் கூடவே விவசாயம் செழிக்க மழை வேண்டியும் கோரிக்கை சமர்பித்திருக்கிறார்.

அடுத்து அனுராதா அவர்கள். திருமண வாழ்க்கை தோல்வியுற்று விவாகரத்தை எதிர்நோக்கியிருக்கும் இவர் தனது குழந்தை தன்னுடன் சேரவேண்டும் என்று விடுத்த கோரிக்கை ஏற்கனவே நமது பிரார்த்தனை கிளப்பில் சமர்ப்பிக்கப்பட்டு அது நிறைவேறிவிட்டது. இருப்பினும், சட்ட ரீதியிலான சிக்கல், அது தொடர்பாக எழும் செலவினங்கள் இன்னும் தொடர்ந்துவருகிறது என்பதை சமீபத்தில் அவரிடம் பேசும்போது அறிந்துகொண்டோம்.

தங்களுக்கு புண்ணியம் சேர்க்க வேண்டி பெரும்பாலானோர் நமது கைங்கரியத்திற்கு உதவி வரும் நிலையில், நமது தளம் சார்பாக நடைபெறும் பாரதி விழா போன்ற விழாக்களுக்கோ அல்லது நமது தளம் நடத்துவது தொடர்பாக எழும் நடைமுறை செலவினங்கக்கோ உதவுபவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படி உதவுபவர்களில் ஒருவர் அனுராதா என்பது குறிப்பிடத்தக்கது. தன்னலம் என்பதே சிறிதும் இன்றி, நமது பணிகளுக்கு உதவி வருபவர்.

அந்த நல்லுள்ளம் மேலும் மேலும் சோதனைகளில் சிக்காமல் விரைவில் அதனினின்று விடுபட பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

==================================================================

இந்த வார பொது பிரார்த்தனை

விவசாயி வாழவேண்டும்!

Tamilnadu Droughtநமது நேற்றைய பதிவு தான் இன்றைய பொது பிரார்த்தனை.

நம் அனைவருக்கும் சோறுபோடும் உழவன் அவன் படும் துயரங்கள் பற்றியும், நாட்டின் முதுகெலும்பான விவசாயம் எந்தளவு அழிந்துவருகிறது என்பது பற்றியும் உழவர் திருநாளை முன்னிட்டு நாம் அளித்த சிறப்பு பதிவில் குமுறியிருக்கிறோம்.

வானம் தவறாது மழை பொழியவும், விவசாயம் செழிக்கவும், விளைநிலங்கள் பெருகவும், விளைச்சல் பெருகவும் அதன் மூலம் விவசாயியின் வாழ்வு செழிக்கவும் இறைவனை பிரார்த்திப்போம்.

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
நான்மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்!
– கந்தபுராணம்

DSCN0505

==================================================================
http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgதிரு.அருள் அவர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள துன்பம் நீங்கி அவர் நல்வாழ்வு பெறவும், விரைவில் லாபகரமான தொழில் ஒன்றை அவர் துவங்கவும், வாசகி அனுராதா அவர்களுக்கு விவாகரத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கவும், அதன் மூலம் எழும் செலவினங்கள் குறைந்து, அவர் சுபிக்ஷம் பெறவும் மேன்மேலும் மகிழ்ச்சியுடன் அவர் தன்னை தொண்டில் ஈடுபடுத்திகொள்ளவும், நமக்கெல்லாம் சோறு போடும் விவசாயிகள் அகமும் புறமும் குளிர்ந்து அவர்கள் வாழ்வு ஏற்றம் பெறவும், நம் நாட்டில் விவசாயத் துறை சந்தித்துவரும் பல்வேறு பிரச்சனைகள் முடிவுக்கு வந்து தானிய உற்பத்தி பெருகவும் திருவருள் வேண்டி பிரார்த்திப்போம்.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : ஜனவரி 19,  2014 ஞாயிறு  நேரம் : மாலை 5.30 – 5.45

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

============================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை சொல்லை பிரார்த்தித்துவிட்டு கூடவேஇங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

============================================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=======================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131
=======================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் ஆலயத்தில்  பசுக்களை பராமரித்து வரும் திரு.பாலாஜி.

[END]

11 thoughts on “கோவிலுக்கு எப்படி செல்லவேண்டும் தெரியுமா? Rightmantra Prayer Club

  1. அன்பு சகோதரா சுந்தர்
    வல்லார் அவர்களின் அருமையான வரிகளுடன் எழுதப் பட்ட இந்த பதிவு மிக நேர்த்தி….பிரார்த்தனை குழுவிற்கு தலைமை தாங்க நீங்கள் தெரிவு செய்யும் ஒவ்வொருவருமே எளிமையான ஆனால் திறமையான சுய நலமின்றி கடமையே கண்ணாக கருதும் நல் உள்ளங்கள்…அவர்களைத் தெரிவு செய்யும் உங்களை மனமாரப் பாராட்டுகிறேன்…இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள அன்புள்ளங்களின் பிரச்சினைகள் மஹா பெரியவாவின் அருளுடன் சரியாக வேண்டும் என நானும் என் பங்கிற்கு பிரார்த்தனை செய்கிறேன். ஆம்.இந்த வருடமும் மழை பொய்த்து விட்டது…மும்மாரி பெய்யும் காலம் போய் புயலடித்தால் மழை என்ற நிலைக்கு தள்ளப் பட்டு விட்டோம்…மஹா பெரியவா நம் கஷ்டத்தை உணர்ந்து நிச்சயம் நல்ல மழை பொழிய வைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது..வாழ்க வளமுடன்… _/|\_

  2. மணிகண்டன் இந்த வார பிராத்தனைக்கு தலைமை ஏற்றிருப்பது மிக்க மகிழ்ச்சி. அவருக்கு எனது பணிவான வணக்கம்

    திரு அருள் மற்றும் அனுராதா அவர்களுக்கககவும் மற்றும் மழை வேண்டியும் பிரார்தனை செய்வோம்

    வழக்குகளில் வெற்றி பெற

    மேதாத: கீர்த்தித: ஸோக ஹாரீ தௌர்பாக்யநாஸந:
    ப்ரதிவாதி முகஸ்தம்ப: துஷ்டசித்த ப்ரஸாதந:
    இதைக் கூறினால் வழக்குகளில் நமக்கு வெற்றி உண்டாகும்.

    ஜய ஸீலோ ஜய காங்க்ஷ? ஜாதவேதா ஜய: ப்ரத
    கவி: கல்யாணத காம்யோ மோக்ஷதோ மோஹநாக்ருதி

    இதைக் கூறினால் வழக்குகளில் நமக்கு வெற்றி உண்டாகும்.

    நன்றி
    உமா

  3. கொள்ளிடக்கரை ஓரம் உள்ள புங்க மரங்கள் சூழ இருக்கும் இடம் திருப்புங்கூர். தற்போது இந்த பகுதி திருப்புன்கூர் என்று அழைக்கப்படுகிறது. இங்கு சவுந்தர நாயகி சமேத சிவலோகநாத சுவாமி கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறார்.இத்தல இறைவனையும், இறைவியையும் தரிசிக்க ஏயர் கோன் கலிக்காம நாயனாருடன் வந்திருந்தார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். இதுபற்றி அறிந்ததும் அந்த பகுதி மக்களும், மன்னன் ராஜேந்திரச் சோழனும் உள்ளம் மகிழ்ந்தனர். திருப்புங்கூர் முழுவதும் மழையில்லாமல் வறண்டு பஞ்சம் தலைவிரித்தாடிய தருணம் அது என்பதால், சுந்தரரின் வருகையை எண்ணி உள்ளம் களித்தனர். ராஜேந்திரச் சோழன் ஓடோடி வந்து சுந்தரரை பணிந்து, மழை பெய்ய அருள்புரிய வேண்டும் என்று வேண்டி நின்றான். உடனே சுந்தரர், திருப்புன்கூர் ஈசனுக்கு 12 வேலி நிலம் கொடுத்தால், கோரிக்கையை நிறைவேற்றுவதாக மன்னனிடம் தெரிவித்தார். மன்னனும் சம்மதம் தெரிவித்து விட்டான். இதையடுத்து ஈசனை வேண்டி பதிகம் பாடினார் சுந்தரர். வான்மழை விடாது பெய்யத் தொடங்கியது. அந்த வான் மழையிலும், இறைவனின் அருள்மழையிலும் மன்னனும் மக்களும் ஆனந்தமாக நனைந்தனர். மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. மழையை நிறுத்த நிலம் மழை மிகுதியைக் கண்ட மன்னன், அதை நிறுத்தாவிட்டால் பெருஞ்சேதம் உண்டாகுமே என்று அஞ்சினான்.மழையை நிறுத்துமாறு, சுந்தரரிடம் மீண்டும் வேண்டி நின்றான். சுந்தரரோ, மீண்டும் இத்தல ஈசனுக்கு 12 வேலி நிலம் கொடுக்க வேண்டும் என்று கேட்க, அதனையும் மன்னன் கொடுத்தான். உடனே சுந்தரர் மீண்டும் பதிகம் பாடி மழையை நிறுத்தினார். இந்த சம்பவத்திற்கு சாட்சியாக இன்னும் இங்கு பன்னிரு வேலி என்ற ஊர் இருப்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் கூட மழை இல்லாதபோது நாகப்பட்டினம், தஞ்சாவூர், கடலூர், திருவாரூர் மாவட்ட விவசாயிகள் இங்கு வந்து ஒரு சிறப்பு பூஜை செய்தால் உடனே மழை பெய்கிறது.அதே போல மழைக்காலத்தில் நிற்காது பெய்யும் தொடர் மழையை நிறுத்தவும் திருப்புன்கூர் ஈசனின் அருளைத்தான் நாடுகிறார்கள், அங்குள்ள விவசாயிகள்.
    சுந்தரர் திருமுறை பதிகம் :
    திருச்சிற்றம்பலம்

    அந்த ணாளன்உன் அடைக்கலம் புகுத
    அவனைக் காப்பது காரண மாக
    வந்த காலன்தன் ஆருயி ரதனை
    வவ்வி னாய்க்குன்றன் வன்மைகண் டடியேன்
    எந்தை நீஎனை நமன்றமர் நலியில்
    இவன்மற் றென்னடி யானென விலக்கும்
    சிந்தை யால்வந்துன் றிருவடி அடைந்தேன்
    செழும்பொ ழில்திருப் புன்கூர் உளானே.

    வையக முற்றும் மாமழை மறந்து
    வயலில் நீரிலை மாநிலந் தருகோம்
    உய்யக் கொள்கமற் றெங்களை என்ன
    ஒலிகொள் வெண்முகி லாய்ப்பரந் தெங்கும்
    பெய்யும் மாமழைப் பெருவெள்ளந் தவிர்த்துப்
    பெயர்த்தும் பன்னிரு வேலிகொண் டருளும்
    செய்கை கண்டுநின் திருவடி அடைந்தேன்
    செழும்பொ ழில்திருப் புன்கூர் உளானே.

    ஏத நன்னிலம் ஈரறு வேலி
    ஏயர் கோன்உற்ற இரும்பிணி தவிர்த்துக்
    கோத னங்களின் பால்கறந் தாட்டக்
    கோல வெண்மணற் சிவன்தன்மேற் சென்ற
    தாதை தாள்அற எறிந்தசண் டிக்குன்
    சடைமி சைமலர் அருள்செயக் கண்டு
    பூத ஆளிநின் பொன்னடி அடைந்தேன்
    பூம்பொ ழில்திருப் புன்கூர் உளானே.

    நற்ற மிழ்வல்ல ஞானசம் பந்தன்
    நாவினுக் கரையன் நாளைப்போ வானும்
    கற்ற சூதன்நற் சாக்கியன் சிலந்தி
    கண்ணப் பன்கணம் புல்லனென் றிவர்கள்
    குற்றஞ் செய்யினும் குணம்எனக் கருதும்
    கொள்கை கண்டுநின் குரைகழல் அடைந்தேன்
    பொற்றி ரள்மணிக் கமலங்கள் மலரும்
    பொய்கை சூழ்திருப் புன்கூர் உளானே.

    கோல மால்வரை மத்தென நாட்டிக்
    கோள ரவுசுற் றிக்கடைந் தெழுந்த
    ஆல நஞ்சுகண் டவர்மிக இரிய
    அமரர் கட்கருள் புரிவது கருதி
    நீலம் ஆர்கடல் விடந்தனை உண்டு
    கண்டத் தேவைத்த பித்தநீ செய்த
    சீலங் கண்டுநின் திருவடி அடைந்தேன்
    செழும்பொ ழில்திருப் புன்கூர் உளானே.

    இயக்கர் கின்னரர் ஞமனொடு வருணர்
    இயங்கு தீவளி ஞாயிறு திங்கள்
    மயக்கம் இல்புலி வானரம் நாகம்
    வசுக்கள் வானவர் தானவர் எல்லாம்
    அயர்ப்பொன் றின்றிநின் றிருவடி அதனை
    அர்ச்சித் தார்பெறும் ஆரருள் கண்டு
    திகைப்பொன் றின்றிநின் றிருவடி அடைந்தேன்
    செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே.

    போர்த்த நீள்செவி யாளர்அந் தணர்க்குப்
    பொழில்கொள் ஆல்நிழற் கீழறம் புரிந்து
    பார்த்தனுக்கன்று பாசுப தங்கொடுத்
    தருளி னாய்பண்டு பகீரதன் வேண்ட
    ஆர்த்து வந்திழி யும்புனற் கங்கை
    நங்கை யாளைநின் சடைமிசைக் கரந்த
    தீர்த்த னேநின்தன் திருவடி அடைந்தேன்
    செழும்பொ ழில்திருப் புன்கூர் உளானே.

    மூவெ யில்செற்ற ஞான்றுய்ந்த மூவரில்
    இருவர் நின்திருக் கோயிலின் வாய்தல்
    காவ லாளர்என் றேவிய பின்னை
    ஒருவ நீகரி காடரங் காக
    மானை நோக்கியோர் மாநடம் மகிழ
    மணிமு ழாமுழக் கஅருள் செய்த
    தேவ தேவநின் றிருவடி அடைந்தேன்
    செழும்பொ ழில்திருப் புன்கூர் உளானே.

    அறிவி னால்மிக்க அறுவகைச் சமயத்
    தவ்வவர்க் கங்கே ஆரருள் புரிந்து
    எறியு மாகடல் இலங்கையர் கோனைத்
    துலங்க மால்வரைக் கீழடர்த் திட்டுக்
    குறிகொள் பாடலின் இன்னிசை கேட்டுக்
    கோல வாளொடு நாளது கொடுத்த
    செறிவு கண்டுநின் றிருவடி அடைந்தேன்
    செழும்பொ ழில்திருப் புன்கூர் உளானே.

    கம்ப மால்களிற் றின்னுரி யானைக்
    காமற் காய்ந்ததோர் கண்உடை யானைச்
    செம்பொ னேயொக்குந் திருவுரு வானைச்
    செழும்பொ ழில்திருப் புன்கூர் உளானை
    உம்பர் ராளியை உமையவள் கோனை
    ஊரன் வன்றொண்டன் உள்ளத் தாலுகந்
    தன்பி னாற்சொன்ன அருந்தமிழ் ஐந்தோ
    டைந்தும் வல்லவர் அருவினை இலரே.

    திருச்சிற்றம்பலம்

  4. மடப்புரம் [மதுரை ]பத்ரகாளியம்மனை வணங்கினால் கோர்ட் சம்பந்தபட்ட வழக்கு விசாரணைகள் எளிதில் வெற்றி கிடைக்கிறது. வியாபார விருத்திக்காக இத்தலத்தில் வழிபட்டு . மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் ஆனவர்கள் பலர் ..கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் [சிவகங்கையிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள கொல்லங்குடி அரியாக்குறிச்சியில் அமைந்துள்ளது. ] வழிபாடும் உகந்ததே…

  5. சகாயவல்லி திருமேனிநாதர் திருக்கோயில், திருச்சுழி[அருப்புக்கோட்டையிலிருந்து 15.கி.மீ]..இத்தல சுந்தரர் திருமுறை பதிகம் பாடி வந்தால் [48 நாட்கள் ] நெருக்கடி சூழல் மாறி செல்வம் சேரும் ….வழகுகளில் வெற்றி எற்படும் …..வியாபாரம் வெற்றி பெரும் …கண்டிப்பாக உணவில் அசைவம் கூடாது …….

    திருச்சிற்றம்பலம்
    ஊனாய்உயிர் புகலாய்அக லிடமாய் முகில்பொழியும்
    வானாய்வரு மதியாய்விதி வருவானிடம் பொழிலின்
    தேனாதரித் திசைவண்டினம் மிழற்றுந்திருச் சுழியல்
    நானாவிதம் நினைவார்தமை நலியார்நமன் தமரே.

    தண்டேர்மழுப் படையான்மழ விடையான்எழு கடல்நஞ்
    சுண்டேபுரம் எரியச்சிலை வளைத்தான்இமை யவர்க்காத்
    திண்டேர்மிசை நின்றானவன் உறையுந்திருச் சுழியல்
    தொண்டேசெய வல்லாரவர் நல்லார்துயர் இலரே.

    கவ்வைக்கடல் கதறிக்கொணர் முத்தங்கரைக் கேற்றக்
    கொவ்வைத்துவர் வாயார்குடைந் தாடுந்திருச் சுழியல்
    தெய்வத்தினை வழிபாடுசெய் தெழுவாரடி தொழுவார்
    அவ்வத்திசைக் கரசாகுவர் அலராள்பிரி யாளே.

    மலையான்மகள் மடமாதிட மாகத்தவள் மற்றுக்
    கொலையானையின் உரிபோர்த்தவெம் பெருமான்றிருச் சுழியல்
    அலையார்சடை யுடையானடி தொழுவார்பழு துள்ளம்
    நிலையார்திகழ் புகழால்நெடு வானத்துயர் வாரே.

    உற்றான்நமக் குயரும்மதிச் சடையான்புலன் ஐந்துஞ்
    செற்றார்திரு மேனிப்பெரு மானூர்திருச் சுழியல்
    பெற்றான்இனி துறையத்திறம் பாமைத்திரு நாமங்
    கற்றாரவர் கதியுட்செல்வர் ஏத்தும்மது கடனே.

    மலந்தாங்கிய பாசப்பிறப் பறுப்பீர்துறைக் கங்கைச்
    சலந்தாங்கிய முடியான்அமர்ந் திடமாந்திருச் சுழியல்
    நிலந்தாங்கிய மலராற்கொழும் புகையால்நினைந் தேத்துந்
    தலந்தாங்கிய புகழாம்மிகு தவமாஞ்சது ராமே.

    சைவத்தசெவ் வுருவன்றிரு நீற்றன்னுரு மேற்றன்
    கைவைத்தொரு சிலையால்அரண் மூன்றும்மெரி செய்தான்
    தெய்வத்தவர் தொழுதேத்திய குழகன்றிருச் சுழியல்
    மெய்வைத்தடி நினைவார்வினை தீர்தல்லெளி தன்றே.

    பூவேந்திய பீடத்தவன் றானும்மடல் அரியுங்
    கோவேந்திய வினையத்தொடு குறுகப்புகல் அறியார்
    சேவேந்திய கொடியானவன் உறையுந்திருச் சுழியல்
    மாவேந்திய கரத்தான்எம சிரத்தான்றன தடியே.

    கொண்டாடுதல் புரியாவரு தக்கன்பெரு வேள்விச்
    செண்டாடுதல் புரிந்தான்திருச் சுழியற்பெரு மானைக்
    குண்டாடிய சமண்ஆதர்கள் குடைச்சாக்கியர் அறியா
    மிண்டாடிய அதுசெய்தது வானால்வரு விதியே.

    நீரூர்தரு நிமிலன்றிரு மலையார்க்கயல் அருகே
    தேரூர்தரும் அரக்கன்சிரம் நெரித்தான்றிருச் சுழியல்
    பேரூரென உரைவானடி பெயர்நாவலர் கோமான்
    ஆரூரன தமிழ்மாலைபத் தறிவார்துயர் இலரே.

    திருச்சிற்றம்பலம்

    திருச்சுழி தெய்வத்தினை வழிபட்டுவரும் அடியார்களை தொழுதாலே நம்மை விட்டு திருமகள் பிரியா …செல்வம் நம்மை விட்டு அகலா …நாம் தலைமை ஏற்கும் பொறுப்பு நம்மை நாடி ஓடி வரும் ..இதனை சுந்தரர் தம் திருமுறை பதிகத்தில் பதிவ் செய்துள்ளார் ..”..திருச் சுழியல்
    தெய்வத்தினை வழிபாடுசெய் தெழுவாரடி தொழுவார்
    அவ்வத்திசைக் கரசாகுவர் அலராள்பிரி யாளே”.

  6. கான்செர் குணமாக ஸ்ரீவாஞ்சியம் சென்று வழிபட்டு வர வேண்டும் …..

  7. திரிகரணசுத்தி என்றால் என்ன?

    புதுமையான அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல் .

    நிச்சயம் அனைவருக்கும் பயனுள்ளதாக அமைத்துள்ளது .

    மணிகண்டன் இந்த வார பிராத்தனைக்கு தலைமை ஏற்றிருப்பது மிக்க மகிழ்ச்சி. அவருக்கு எனது பணிவான வணக்கம் .
    திரு அருள் அவர்களுக்காகவும் மற்றும் மழை வேண்டியும் பிரார்தனை செய்வோம் .

    சகோதரி அனுராதா அவர்களுக்கு ,தர்ஷனா தங்களுடன் இணைத்தது போல் வழக்கின் தீர்ப்பும் நல்லதாகவே அமையும் .

    மகா பெரியவாவிடத்தில் சமர்பிக்கப்பட்ட தாங்களின் அனைவரின் வேண்டுகோளும் விரைவில் சரியாகிவிடும் …

    ” ஓம் சிவ சிவ ஓம்”

    -மனோகர்

  8. மிக்க நன்றி சுந்தர் சார்,

    இந்த வார பிராத்தனைக்கு தலைமை ஏற்றிருக்கும் மணிகண்டன். அவருக்கு எனது நன்றி. இறைவனுக்கு சென்றடையும் மாலைகளோடு எங்கள் பிரார்த்தனையும் சேரும் என்பது மிக்க மகிழ்ச்சி.

    திரு.அருள் அவர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள துன்பம் நீங்கி அவர் நல்வாழ்வு பெறவும், விரைவில் லாபகரமான தொழில் ஒன்றை அவர் துவங்கவும், எங்களது வழக்கு முடிவுக்கு வரவும் பெரியவாவை வணங்கி பிரார்த்தனை செய்வோம்.

    எங்களுக்காக பிரார்த்தனை செய்யும் அனைத்து உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.

  9. மேற்கூரிய அனைத்து விஷயங்களுக்கும் பிரார்த்தனை செய்து கொள்ளுகிறேன்.

  10. மதிப்பிற்குரிய சுந்தர் அவர்களுக்கும் கூட்டு பிரார்த்தனையில் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *