இதன் நோக்கம் என்னவெனில், வாழ்வில் வெற்றி பெற, சோதனைகளை சாதனைகளாக்க அவர்கள் கையாண்ட வழிமுறைகள், அணுகுமுறைகள், சூட்சுமங்கள் உள்ளிட்டவைகளை அவர்களிடம் பேசி, அறிந்து, புரிந்து அதை இங்கு நம் தளத்தில் பகிர்ந்துகொள்வதன் மூலம் பலரது வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவது தான்.
சாதனையாளர்கள் என்றால் பணத்தை சம்பாதித்துக்கொண்டு கார் பங்களா என்று வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் மட்டும் தான் என்று தயவு செய்து நினைக்கவேண்டாம். சாதனைக்கு அது மட்டுமே அளவுகோல் அல்ல. அப்படி நினைப்பதும் தவறு. பணத்தை ஒரு பொருட்டாகவே கருதாமல் தொண்டுள்ளம் கொண்டு வாழ்ந்துவரும் பலரை நாம் பார்த்திருக்கிறோம். பார்த்துவருகிறோம்.
எனக்கு தெரிந்து ஒரு மிகப் பெரிய பணக்காரர் இருக்கிறார். சென்னை நகரில் அவருக்கு நான்கு பெரிய வீடுகள் இருக்கின்றன. ஒரு பென்ஸ் மற்றும் ஒரு பி.எம்.டபிள்யூ. கார் உள்ளிட்ட அரை டஜன் கார்கள், மற்றும் ஊட்டி, கொடைக்காணல் போன்ற இடங்களில் பல எஸ்டேட்டுக்கள் இருக்கின்றன. சொடக்கு போட்டால் வந்து நிற்க நூற்றுக்கணக்கான வேலைக்காரர்கள் இருக்கிறார்கள்.
ஆனாலும் என்ன பயன்? நினைத்ததை சாப்பிட முடியாத அளவிற்கு அவருக்கு சர்க்கரை நோய் உச்சத்தில்… போதாகுறைக்கு சிறுநீரகம் வேறு பழுதடைந்துள்ளது. பார்த்து பார்த்து ஒரே மகனுக்கு கல்யாணம் செய்துவைத்தார். அவனுக்கோ திருமண வாழ்க்கையில் தோல்வி ஏற்பட்டு, மனைவி அவனை விட்டுப் பிரிந்து சென்றுவிட, அவன் புத்தி கலங்கி எங்கோ தெருவில் சுற்றிக்கொண்டிருப்பதாக தகவல்.
(இதை நமது ஆண்டுவிழா உரையில் கூட குறிப்பிட்டோம்.)
இப்போது சொல்லுங்கள்… பணத்தை சம்பாதிப்பதும் அதை லாக்கரில் வைத்திருப்பதும் மட்டுமே சாதனையா?
சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்து ஒன்றில் சிக்கி, முதுகெலும்பு உடைந்து, அதனால் கழுத்துக்கு கீழே எந்தவித செயல்பாடும் கிடையாது என்கிற நிலையில் உள்ள ஒருவர், கட்டிலில் படுத்துக்கொண்டே பல ஊர்களுக்கு (குறிப்பாக கிராமப்புறங்களுக்கு) சுற்றுப் பயணம் செய்து தேவாரம், திருவாசகம், திருக்குறள் உள்ளிட்டவைகளின் பெருமையை பேசிவருகிறார். ஆதரவற்றோருக்கும் முதியோருக்கும் புகலிடம் அளித்து காப்பாற்றி வருகிறார். எத்தனை பெரிய சாதனை இது!!!!! (இவரது சந்திப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது. விரைவில் தளத்தில் வெளியிடவிருக்கிறோம்!)
நீதி நூல்களிலும் புராண இதிகாசங்களிலும் கூட கற்றுக்கொள்ள முடியாத நீதிகளை இப்படி ஒவ்வொரு சாதனையாளரிடமும் நாம் கற்றுவருகிறோம் என்றால் மிகையல்ல.
உண்டு, உறங்கி, கேளிக்கை கொண்டாட்டங்களில் காலத்தை கழித்தது போதும். வாருங்கள்… நம் முன்னே மிகப் பெரிய இலட்சியங்கள் இருக்கின்றன. ஆற்றவேண்டிய கடமைகள் பல காத்திருக்கின்றன. சாதிக்க வேண்டியவை இன்னும் பலப் பல காத்திருக்கின்றன.
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி. (குறள் 618)
இதுபோன்ற சந்திப்புக்களில் நம்முடன் பங்கேற்க விரும்புகிறவர்கள் வரவிரும்புகிறவர்கள் நம்மை தாராளமாக தொடர்புகொள்ளலாம்.
நமது அடுத்த சாதனையாளர் சந்திப்பு (Role Model / VIP Meet) நாளை மதியம் (15th Jan) சென்னையில் நடைபெறவிருக்கிறது. நம்முடன் வரவிரும்புகிறவர்கள் நம்மை உடனடியாக தொடர்புகொள்ளவும்.
(இனி வரும் காலங்களில் இறையருளால் வெளியூர்களிலும், வெளிமாவட்டங்களிலும் கூட இந்த சந்திப்புக்கள் நடைபெறும். அப்போது உங்களுக்கு தகவல் தெரிவிப்போம். ஆகையால் சென்னையை தவிர்த்து வெளியூரில் இருப்பவர்கள் விரும்பினாலும் நம்முடன் கரம் கோர்க்கலாம்! இன்றே உங்கள் தொடர்பு விபரங்களை நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும்!)
விடுமுறை நாட்களில் எப்போது வேண்டுமானால் தொடர்புகொள்ளலாம். வேலை நாட்களில் மாலை 7.00 மணிக்கு மேல் தொடர்புகொள்ளவும்.
விவேகானந்தர் 100 இளைஞர்களை கேட்டார். நாம் கேட்பதோ பத்தே பத்து இளைஞர்களைத் தான்!
நம்முடன் கரம் கோர்க்க விரும்புகிறவர்களுக்கு நாம் சில நிபந்தனைகளை விதிக்க நினைத்தோம். ஆனால் தேவையில்லை என்று பின்னர் முடிவு செய்தோம். நம்மிடம் வந்தால் அவர்களிடம் அவர்களை அறியாமல் ஒட்டிக்கொண்டுள்ள ‘அல்லவைகள்’ தானாகவே உதிர்ந்து ஓடிவிடும்… அவர்களும் புதிய மனிதர்களாகிவிடுவார்கள் என்கிற நம்பிக்கை எமக்கிருக்கிறது!
முகநூல் நண்பர்கள் இந்த பதிவை பகிர்ந்துகொண்டு இந்த பணியில் உதவும்படி கேட்டுக்கொள்கிறோம்.
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
சின்னஞ் சிறு கைகளை நம்பி
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி
சின்னஞ் சிறு கைகளை நம்பி
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி
தவறு என்பது தவறிச் செய்வது
தப்பு என்பது தெரிந்து செய்வது
தவறு என்பது தவறிச் செய்வது
தப்பு என்பது தெரிந்து செய்வது
தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும்
தப்பு செய்தவன் வருந்தியாகணும்
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி ……
அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்
தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்
அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்
தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்
இரண்டும் இருந்தால் பெயரை வாங்கலாம்
பெயரை வாங்கினால் ஊரை வாங்கலாம்
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
சின்னஞ் சிறு கைகளை நம்பி
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி ……
கருணை இருந்தால் வள்ளலாகலாம்
கடமை இருந்தால் வீரனாகலாம்
கருணை இருந்தால் வள்ளலாகலாம்
கடமை இருந்தால் வீரனாகலாம்
பொறுமை இருந்தால் மனிதனாகலாம்
மூன்றும் இருந்தால் தலைவனாகலாம்…..
இந்த மூன்றும் இருந்தால் தலைவனாகலாம்!
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி …..
– சுந்தர்,
www.rightmantra.com
M : 9840169215
E : simplesundar@gmail.com, rightmantra@gmail.com
டியர் சுந்தர்ஜி
உங்கள் இலக்கான 1000 சாதனையாளர்களை சந்திக்க எனது வாழ்த்துக்கள்
regards
உமா
Hi Sundarji
you can meet 63 year old youth… He runs a hotel Kasi vinayaga Mess in triplicane… Since 40 Years… From a room boy in Victoria hostel (Presidency college Chennai) to Hotel owner he has made a remarkable journey… There were lot news about this hotel… But I felt the story about him would inspire people more…
You can google about the mess before going to meet him….
Sure. thanks for your info.
– Sundar
Article about this mess in Hindu dated 12-Aug
http://www.thehindu.com/madras375/continuing-to-serve-in-the-bachelors-paradise/article6305531.ece
thanks a ton. will soon meet them.
நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ , உங்களிடத்தில் என்ன இருக்கிறதோ அவற்றைக்கொண்டு உங்களால் என்ன செய்ய முடியுமோ… அதைச் செய்யுங்கள் !’ என்று சொன்னார் ரூஸ்வெல்ட்.
நமது சுந்தர் ஜி 1000 சாதனையாளர்களை சந்திக்க ,நம்மை அழைப்பது எவ்வளவு பெரியமனது வேண்டும் என்று நினைக்கும் போது அவரை பாராட்ட வார்த்தைகள் இல்லை .
இந்த அறிய வாய்ப்பினை நமது வாசகர்கள் அனைவரும் பயன்படுத்திக்கொண்டு , rightmantra குடும்பத்தில் இணைந்திருப்போம் .
-நன்றியுடன்
மனோகர்
Ungal thalathin pathivugal miga miga arumai