Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, November 5, 2024
Please specify the group
Home > Featured > யார் உங்கள் தலைவர்?

யார் உங்கள் தலைவர்?

print
யாரை உங்கள் வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள்? அவரது பண்புகள் என்ன? அவர் உங்களை சரியாக வழி நடத்துகிறாரா? உங்கள் குழப்பங்களை தீர்த்துவைக்கிறாரா? சுயநலமற்று இருக்கிறாரா? காட்சிக்கு எளியரா? எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

எல்லோரும் தலைவனாகிவிடமுடியாது. தலைவனாக திகழ்பவனுக்கு பிறரை வழி நடத்தி செல்லும் திறமைகள்  இருக்கவேண்டும். நல்ல பண்புகள் இருக்கவேண்டும். அப்போதுதான் அவனை பின்பற்றி செல்பவர்களும் இந்த உலகும் நன்மை அடையும்.

தீய பண்புகள் உடைய தலைவர்கள் திறமை உடையவர்களாக இருப்பினும் நல்ல பண்புகள் இல்லாவிட்டால் அவர்களை  பின்பற்றி செல்பவர்களும் இந்த உலகும் மிகுந்த துன்பத்திற்கு ஆளாவது தவிர்க்கமுடியாதது.

தலைவர் என்பவர் மாற்றத்திற்கு வித்திடுபவர். அந்த மாற்றம் தன்னை சார்ந்தவர்களிடையே ஒரு பெரிய சலனத்தை ஏற்படுத்திவிடும். ஒரு செயலை செய்ய, செய்து முடிக்க மற்றவர்களுக்கு மிகப்பெரிய தூண்டுதலாக இருப்பார். அந்த தூண்டுதல் அந்த குழுவின் வளர்ச்சிக்கும் நன்மதிப்பிற்கும் வித்தாக இருக்கும். ஒரு உண்மையான தலைவன், தான் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறாரோ அதனை மற்றவர்களிடம் இருந்து பெற்றிடுவார். ஆனால் நினைப்பது மற்றவர்களின் நலன் நன்மதிப்பிற்கான இலக்காகத்தான் இருக்கும்.

விவேகானந்தர் உலகின் பல நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்துவிட்டு தாயகம் திரும்பியிருந்த சமயம். அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

“செல்வத்திலும் தொழில்நுட்பத்திலும் சிறந்த நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்குத் தாங்கள் விஜயம் செய்துள்ளீர்கள். பல ஆண்டுகள் அங்கு இருந்திருக்கிறீர்கள். இப்போது இந்தியாவை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்பதே அக்கேள்வி.

அதற்கு சுவாமி விவேகானந்தர் பதில் கூறுகையில், “பாரத நாடு! அதனை நான் முன்பு நேசித்தேன். ஆனால் இப்பொழுது அதன் ஒவ்வொரு தூசி கூட எனக்குப் புனிதமாக தெரிகிறது. இந்த புண்ணிய பூமிக்கு ஈடு இணை எதுவும் கிடையாது!” என்று நம் மண்ணை கைகளில் எடுத்து முத்தமிட்டுக்கொண்டே சொன்னார்.

Swami Vivekanda

குண்டு சட்டியில் சுயநலமென்னும் குதிரை…

குண்டு சட்டியில் சுயநலமென்னும் குதிரை ஓட்டிக்கொண்டு, செக்குமாடு போன்று செயல்பட்டுக்கொண்டிருந்த எனக்கு வாழ்வில் மிகப் பெரியமாற்றத்தை ஏற்படுத்தி அந்த மாற்றத்தின் மூலம் பல சமூக ஆன்மீக பணிகளுக்கு நம்மை ஒரு வித்தாக்கிய பெருமை அவர் ஒருவரையே சாரும். வள்ளுவர், பாரதிக்கு பிறகு அவர் ஒருவரது வார்த்தைகளையே நாம் வேதமாக கருதுகிறோம். (இவருக்கு அடுத்து கண்ணதாசன்!)

வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், இக்கட்டான தருணங்களிலும் அவர் மானசீகமாக உடனிருந்து எம்மை வழி நடத்துவதாகவே உணர்கிறோம்.

WHAT YOU THINK YOU BECOME என்கிற அவரது வார்த்தையே எம்மை நாம் உணர உதவி புரிந்தது. எமக்கு தேவையான ஆற்றலும் உதவியும் எனக்குள்ளேயே இருக்கிறது அதை வெளியில் தேடுவது வீண்வேலை. நமக்குரிய அங்கீகாரத்தை நாம் தான் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். மற்றவர்கள் அதை தருவார்கள் என்று எதிர்பார்ப்பது அறிவீனம் என்று நாம் முடிவுக்கு வந்தது அவரின் வார்த்தைகளை படித்தபின்பு தான்.

ராமகிருஷ்ண மடத்தின் பாராட்டு பெற்றபோது!
ராமகிருஷ்ண மடத்தின் பாராட்டு பெற்றபோது!

ஜனவரி 12 – எம் தலைவர் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள். இளைஞர்களின் எழுச்சி நாள்.

சுவாமிஜி மீது எனக்கு சிறு வயது முதலே பற்று இருந்து வந்துள்ளது என்றாலும் சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னைக்கு விஜயம் செய்த ‘VIVEKANANDA EXPRESS’ என்னும் சுவாமிஜின் கொள்கை பிரச்சார ரயில் வண்டியை பார்வையிட்டது தான் நம் வாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது.

Swami Vivekananda Quote

சுற்றிப் பார்க்க விவேகானந்தர் ரயிலில் ஏறிய நாம் இறங்கும்போது ஒரு புது மனிதனாகத் தான் இறங்கினோம். காரணம் அது ரயில் அல்ல… பவர் ஹவுஸ்! அதற்கு பிறகு நாம் எடுத்த முடிவுகள் தான் இன்றைக்கு இப்படி ஒரு உருவத்தை உங்கள் முன் நிறுத்தியுள்ளது.

இந்த நன்னாளில் எம் தலைவரை பற்றிய சில அற்புதமான தகவல்களை உங்களிடம் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.

விவேகானந்தர் எக்ஸ்ப்ரெஸ் ரயில் சென்னை சென்ட்ரல் வந்தபோது....
விவேகானந்தர் எக்ஸ்ப்ரெஸ் ரயில் சென்னை சென்ட்ரல் வந்தபோது….

வாழ்க்கையில் உங்களுக்கு இருக்கும் குழப்பங்களுக்கு, அச்சங்களுக்கு தீர்வு சொல்லி, நீங்கள் செல்ல வேண்டிய பாதையை காட்டவேண்டிய ஒரு உன்னத தலைவரை தேடிக்கொண்டிருக்கிறீர்களா?

இதோ எம் தலைவரை பற்றிக்கொள்ளுங்கள். அவர் காட்டும் பாதையில் செல்லுங்கள். மலையும் பிளந்து கடலும் உங்களுக்கு வழிவிடும். இது சத்தியம்!

========================================================

சக்தி ஊட்டுபவரா? சக்தியை உறிஞ்சுபவரா? யார் உங்கள் தலைவர்?

அந்தத் துறவி சத்சங்கத்தை முடித்துக்கொண்டு ஊருக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார். துறவி கூறியது அந்தப் பெண்ணுக்கு பிடித்திருந்தது. துறவியிடம் பேச சந்தர்ப்பத்தை தேடிக்கொண்டிருந்தாள்.

“சுவாமி, காலைல உங்க உபந்நியாசம் மிகவும் அருமை. எனக்கொரு கேள்வி…”

“சொல்லுங்க” என்றார் துறவி.

“சினிமா, அரசியல் ஏன் ஆன்மீகத்தில் கூட ஏகப்பட்டோர் மக்களை கவர்கிறார்கள். இதிலே பலர் தங்களை தலைவர்னு சொல்லிக்கிறாங்க. ஒரு தலைவரை நாம் எப்படி அடையாளம் காண்பது?”

துறவியை சுற்றியிருந்தச் சிலரும் இந்த கேள்வியை வரவேற்று அவர் பேசுவதற்காக அமைதி காத்தனர்.

Swamiji

அருகிலிருந்த இன்னொரு பெண், “சுவாமிஜி, ஆன்மீக விஷயங்களிலும் கூட பல குருமார்கள் பல விதங்களில் கூறுகிறார்கள். ஒருவர் குண்டலினியை எழுப்பு என்கிறார். இன்னொருவர் நாமசங்கீர்த்தனம் தான் சிறந்தது என்கிறார். இவர்களுள் யாரைப் பின்பற்றுவது?” என்று கேட்டார்.

துறவி, அந்த பெண்ணை பார்த்து சிரித்து, “நல்ல கேள்வியை நீங்க கேட்டுருக்கீங்க. ரயில் புறப்படப்போகுது. அதனால் சுருக்கமாக சொல்கிறேன்” என்றார்.

சென்ற நூற்றாண்டில், வாழ்ந்த அமெரிக்க பெண்மணியான மிசஸ் லேல்லாத் என்பவர் ஒரு முறை கூறினார் :

‘நான் என் வாழ்வில் இரண்டு முக்கியமானவர்களை சந்தித்திருக்கிறேன். முதல் மனிதர் கைசர் என்கிற ஜெர்மானிய சக்கரவர்த்தி. மக்களை கவர்ந்திழுக்கும் காந்த சக்தி படைத்தவர்.

‘அவர் முன் செல்ல, எல்லாரும்  ஆசைப்படுவர்.அவரிடம் கைகுலுக்க தோன்றும். ஆட்டோகிராப் கேட்க பிடிக்கும். அவர் நம்மிடம் பேசுவாரா என்கிற ஏக்கம் வரும். ஆனால் அவரை நெருங்கினால் அந்த எண்ணமே வராது.

விவேகானந்தரை பார்க்கும்போது, ‘இவர் எவ்வளவு சிறந்தவர். இவரது கருத்துக்களை பின்பற்றினால் என்னையும் இவர் சிறந்தவராக்குவார் என்ற நம்பிக்கை பிறக்கும்.’

துறவி கூறி முடித்ததும் ரயில் புறப்படும் ஒலி கேட்டது. ரயிலில் ஏறியபடி அவர், “இப்படி யார் உங்களை தன்னம்பிக்கையுடன் உங்கள் காலில் நிற்க வைக்கிறாரோ அவரே உங்கள் சரியான தலைவர். தலைவர் என்பவர் உங்கள் நம்பிக்கையை, உங்கள் சக்திகளை, புத்தியை உற்சாகப்படுத்தி ஊக்கமூட்டுபவராக இருக்க வேண்டும். அவற்றை உறிஞ்சுபவராக இருக்கக்கூடாது” என்றார்.

உடனே அந்த பெண் வேகமாக, “ஒருவேளை வாழும் தலைவர்களுள் அப்படிப்பட்டவர்கள் இல்லையென்றால்… சுவாமிஜி?” என்று கேட்டாள்.

துறவி, “வாழும் தலைவர் இல்லையென்றால், மறைந்தாலும் வாழ்ந்துவரும் தலைவர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் காட்டிய பாதையில் செல்லுங்கள்” என்றார்.

அந்த பெண் அந்த துறவியை வணங்கினாள். துறவி அவளுக்கு ஒரு படம் தந்தார். அதை வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டாள் அந்த பெண்.

அந்த படம் யாருடையது என்று உணர்ந்த உங்களுக்குள்ளும் ஒரு கம்பீரம் வந்திருக்குமே?

(- ஸ்ரீ ராம கிருஷ்ண விஜயம், ஜனவரி 2014)

=======================================================
அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றும்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை – (குறள் 635)
=======================================================

[END]

9 thoughts on “யார் உங்கள் தலைவர்?

  1. Excellent Article. Beautiful. தாங்கள், (நம்மால் ஒதுக்கி வைக்கப்பட்ட ஆனால் ஒதுக்கவே கூடாத) புத்த பிரானை பற்றி தயவு செய்து எழுதுங்கள். நன்றி

    1. நிச்சயம். புத்தரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது பொன்மொழிகள் பலவற்றை வியந்து ரசித்திருக்கிறேன். மேலும் வடக்கில் இன்றும் ஒரு சாரார் புத்தரை மகா விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்றாகவே கருதுகிறார்கள்.

      – சுந்தர்

  2. Dear sundarji

    Good morning

    Energetic article about swamy vivekanandar.

    Wish you and all the readers of right mantra
    happy and prosperous pongal.

    Thanks and Regards
    Harish V

  3. ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு குணம் உண்டு ,ஒவ்வொரு குணம் கொண்டவனுக்கும் ஒரு தலைவனுண்டு ,இதில் எந்த குணம் கொண்டவன் எந்ததலைவனை பின்பற்றுகிறான் என்பதை அந்த தலைவனின் குணத்தை கொண்டு கணிக்கலாம் …ஆனால் எல்லா தலைவனையும் இந்த உலகத்தில் தலைவன் என்று ஏற்க்க முடியாது…

    தான்கள் கூறியதுபோல தலைவனாக திகழ்பவனுக்கு பிறரை வழி நடத்தி செல்லும் திறமைகள் இருக்கவேண்டும். நல்ல பண்புகள் இருக்கவேண்டும். அப்போதுதான் அவனை பின்பற்றி செல்பவர்களும் இந்த உலகும் நன்மை அடையும்.

    தீய பண்புகள் உடைய தலைவர்கள் திறமை உடையவர்களாக இருப்பினும் நல்ல பண்புகள் இல்லாவிட்டால் அவர்களை பின்பற்றி செல்பவர்களும் இந்த உலகும் மிகுந்த துன்பத்திற்கு ஆளாவது தவிர்க்கமுடியாதது.

    மிக அற்ப்புதமாக உள்ளது…நன்றி..

  4. சுந்தர் சார்,

    மிக அருமையான பதிவு. அதை சுவாமி ஜி அவர்களின் பிறந்த நாள் அன்று படிப்பது என்பது மிக சிறப்பு.

    நன்றியுடன் அருண்

  5. டியர் சுந்தர்ஜி ,

    நான் துவண்டு இருந்த வேலையில் என்னவாகி இருப்பேன் என்றே சொல்லி இருக்க முடியாத ஒரு மனநிலையில், விவேகானந்தர்-இன் பொன்மொழிகளையும் அவரது தன்னபிக்கை ஊட்டும் பேச்சுகளும் தான் மனதயிரத்தை பன்மடங்கு பெருக்கியது.

    இப்படி ஒரு மாமனிதர் வாழ்ந்த இந்த நாட்டில் நாமும் பிறந்தோம் என்பதில் மற்றட்ட மகிழ்ச்சி. என்றும் குருவின் வழியில்

    எப்பொழுதும் போல் இந்த தலைப்பு அருமை.
    யார் உங்கள் தலைவர்? – விவேகானந்தர் .

    என் உள்ளம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

    நன்றி ,
    வீ.பாலு மகேந்திரன்.

  6. ஹலோ …சுந்தர்ஜி உங்கள் பதிவு மிக அற்புதம்…என் தலைவராக இருப்பவர் சுவாமி விவேகானந்தர் தான்…நன்றி…வாழ்த்துக்கள் ..

  7. சுந்தர் சார்,
    மிக அருமையான பதிப்பு .

    மனோகரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *