Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, October 10, 2024
Please specify the group
Home > Featured > தேவாரம், திருவாசகம், வந்தே மாதரம் – கொடிகாத்த குமரனின் மறுபக்கம்!

தேவாரம், திருவாசகம், வந்தே மாதரம் – கொடிகாத்த குமரனின் மறுபக்கம்!

print
ந்தாம் வகுப்புக்கு மேல் தொடர்ந்து படிக்க குமாரசாமிக்கு வழியில்லை. குடும்பத்தின் வறுமை நிலை தான் அதற்கு காரணம். `அதை அவரும் அறிவார். கல்வி கற்க இயலவில்லையே என்ற ஏக்கம் அவருக்கு இருக்கவே செய்தது. அந்த குறையை போக்குவதற்கு அவர் அவ்வப்போது நூல்களை படிக்கும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தார். அவ்வாறு நூல்களை படிக்க படிக்க அவருக்கு அறிவு வளர்ந்தது. பண்பு மிளிர்ந்தது.

Tirupurkumaran 2இயற்கையாக அமைந்திருந்த பண்போடு நூலறிவும் சேர்ந்ததால் அந்த பண்பு மெருகு பெற்று விளங்கிற்று. அவர் அன்பும் அடக்கமும் நிறைந்து விளங்கினார். தமிழ் இலக்கிய நூல்களை கற்றதால் அவர் சிறந்த தமிழறிவு பெற்று திகழ்ந்தார். தமிழருடைய பண்பாடு, நாகரிகம், கோட்பாடு ஆகியவற்றை அவர் தெளிவாக உணரவும் முடிந்தது.

சிறந்த சிவபக்தி உடைய குடும்பத்தில் உதித்தவர் அல்லரா குமாரசாமி? அவர் மட்டும் இறைபக்தி இல்லாதவராக இருந்துவிடுவாரா? கடவுள் பக்தியில் அவர் தலை சிறந்து விளங்கினார். சிறு வயதில் இருந்தே அவர் தெய்வபக்தி உடையவராக இருந்தார். சைவ சமயத்திலே அவருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. சைவ சமய நூல்கள் பலவற்றை அவர் விரும்பி படித்தார். தேவாரமும் திருவாசகமும் அவருடைய உள்ளம் கவர்ந்த நூல்கள். நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த காலத்திலும் சரி, டேலி கிளார்க் வேலை பார்த்த காலத்திலும் சரி, தேவார திருவாசகப் பாடல்களை முறையாக ஓதிடத் தவறியது இல்லை. எல்லையறு பரம்பொருளாம் இறைவனது எல்லையில்லாப் பெரும் புகழை பாடுவதில் எல்லையிலா மகிழ்ச்சி கொண்டார், குமாரசாமி.

தெய்வ வழிபாட்டில் மிகுந்த நம்பிக்கை உடைய குமாரசாமி பஜனைகளில் கலந்து கொள்ளத் தவறுவதே இல்லை. மனித வாழ்வில் ஓய்வும் ஒழிச்சலுமின்றி வேலைகள் இருக்கவே செய்கின்றன. அந்த வேலைகளிலே மூழ்கி இறைவனை வழிபட நேரமில்லை என்று கூறுவது அறிவுடையோர் செயலாகாது. இறைவழிபாட்டிற்கு என்று நேரம் ஒதுக்கி இறைவனை வழிபடுவதே பிறவி பெருங்கடலை கடப்பதற்கான வழியாகும்.

உண்டு, உறங்கி வீணே காலத்தை கழிப்பதோ, ‘கண்டதே காட்சி! கொண்டதே கோலம்’ என கொட்டம் அடிப்பதோ மாறி மாறி வரும் பிறவிகளை அறுத்திட வழி செய்யா. அந்த மெய்யான தத்துவத்தை மெய்யாக உணர்ந்தாரே இறைவனை வழிபட்டு இதயம் உருகி நிற்பார். அத்தகைய மெய்ஞ்ஞான அடியார்களுள் குமாரசாமியும் ஒருவரெனக் கூறின், மிகையாகாது.

Kamakshiகுமாரசாமி குடியிருந்த வீட்டுக்கு அருகில், காமாட்சி அம்மன் கோவில் ஒன்று உண்டு. அந்த காமாட்சி அம்மனிடம் குமாரசாமி மிகுந்த பக்தி கொண்டிருந்தார். அவரைப் போலவே காமாட்சி அம்மனிடம் பக்தி கொண்ட அன்பர்கள் பலர் அந்த கோவில் அருகில் இருந்தனர். குமாரசாமி அத்தனை அன்பர்களையும் ஒன்று திரட்டினார். பஜனைக் கோஷ்டி ஒன்றினை உருவாக்கினார். அந்த கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் சனிக்கிழமைதோறும் காமாட்சி அம்மன் கோவிலில் கூடிப் பஜனை செய்யலானார்கள். அந்தப் பஜனைக் கோஷ்டி பல ஆண்டுகள் தொடர்ந்து இயங்கிற்று. மனித வாழ்க்கையின் நிலையாமை உணர்ந்து பக்தி வாழ்க்கையை மேற்கொண்ட குமாரசாமியை எப்படிப் பாராட்டாமல் இருக்கமுடியும்?

உலகம் முழுவதற்கும் பொதுமறையாக திகழ்வது திருக்குறள். அதிலே இல்லாத பொருளில்லை. அதனால் அதை ஏற்காத நாடோ மனிதரோ இல்லை. திருக்குறளில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் காலத்தால் அழிக்கப்படமுடியாத வலிமை பெற்றவை. அத்துணை சிறப்பு வாய்ந்த திருக்குறள் தமிழரின் வேதமாகும்.

Tirupur Kumaran Statueஅந்த வேதத்தின்பால் குமாரசாமி கொண்டிருந்த பற்று அளவிடற்கரியது. ஆம்… திருக்குறளில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் அவரது மனத்தைக் கவர்ந்தன. கடவுள் பக்தராக விளங்கியது போல, திருக்குறள் பக்தராகவும் அவர் விளங்கினார்.

காந்தி-இர்வின் ஒப்பந்தத்தையடுத்து கடற்கரையோரம் வசிக்கும் மக்கள் உப்பை எடுக்கும் அதிகாரம் பெற்றனர். அந்நிய துணிக்கடைகள் முன்பும், மதுக்கடைகள் முன்பும் இந்தியர்கள் சாத்வீகமான முறையில் போராட்டம் நடத்த அனுமதியும் தரப்பட்டது.

அந்த போராட்டங்கள் குமாரசாமியின் இதயத்தைக் கவர்ந்தன. அவர் மதுக்கடை மறியலிலும் அந்நியத் துணிக்கடை மறியலிலும் கலந்துகொள்ளத் துடித்தார். இறுதியில் கலந்தும்கொண்டார். அப்போது, கடைக்காரன் ஒருவன் தொண்டர்கள் மீது ஆத்திரமும் கோபமும் கொண்டான். சாத்வீக மறியலில்  ஈடுபட்டிருந்த தொண்டர்கள் மீது பட்டாசு கட்டுகளை கொளுத்திப் போட்டான்.

அந்தப் பட்டாசு கட்டுகளுள் ஒன்று நம் குமாரசாமியின் முகத்தில் விழுந்தது. அப்போது அவர் பயந்து ஓடினாரா? அது தான் இல்லை. அஞ்சாத நெஞ்சம் படைத்த அவர் அந்த இடத்திலேயே நின்றுகொண்டிருந்தார். பட்டாசுக் கட்டு முகத்தில் விழுந்து வெடித்ததால் முகமெல்லாம் புண்ணாயிற்று.

குமாரசாமி, வீட்டிற்கு சென்றபோது அவருடைய முகத்தில் இருந்த தீப்புண்களை கண்டு எல்லோரும் துடித்து போய்விட்டார்கள். தீப்புண்கள் எப்படி ஏற்பட்டன என்று கேட்டு அறிந்துகொண்டார்கள். பட்டாசுக் கட்டுகளை கொளுத்திப் போட்டதால் ஏற்பட்ட புண்கள் என்பதை அறிந்ததும் அவர்கள் ஒரு சபதம் எடுத்துக்கொண்டார்கள். அது என்ன சபதம் தெரியுமா? “இன்று முதல் நம் குடும்பத்தினர் எந்த சூழ்நிலையிலும் பட்டாசு வெடிக்கக்கூடாது!” என்பதே அந்த சபதம்.

அந்த சபதத்தை இன்றளவும் அந்த குடுமபத்தினர் நிறைவேற்றி வருகின்றனர். அதை அறியும்போது நமக்கே வியப்பு ஏற்படுகின்றது.

Tirupur postal stamp

இதற்கிடையே வெலிங்க்டன் பிரபு அதிகாரத்தை பலவிதங்களில் துஷ்ப்ரயோகம் செய்து காந்திஜியை சிறையிலடைத்தார். நாடே கொதித்தெழுந்தது. நகரத்தில் வாழ்ந்த மக்கள், கிராம மக்கள் என எல்லோரும் போராட்டங்களில் குதித்தார்கள்.

திருப்பூரும் போராட்டத்தில் ஈடுபட தயாராயிற்று. அந்த அறப்போரில் கலந்துகொள்ளவேண்டும் என்று குமாரசாமியும் விரும்பினார். அதற்கு ஆறு மாதத்திற்கு முன்பு தான் அவர் தந்தையார் காலமாகியிருந்தார். குடும்பம் அந்த சோகத்தில் இருந்தே இன்னும் மீளவில்லை.

குமாரசாமியின் மனைவி இராமாயி அப்போது ஊரில் இல்லை. குமாரசாமியின் தாயார் கறுப்பாயி அம்மாளுக்கு விஷயம் தெரிய வந்தது. ஏற்கனவே கணவனை இழந்து வாடிக்கொண்டிருந்த அவருக்கு மகனும் இப்படி போராட்டத்தில் கலந்துகொள்வது கவலையை ஏற்படுத்தியது. போராட்டத்தில் ஈடுபட்டு மகன் சிறை சென்றுவிட்டால் குடும்பத்தை யார் காப்பாற்றுவது?

எதேதோ கூறி மகனை தடுக்கப்பார்த்தார். குமாரசாமியோ தம் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. அன்னையாரோ துயரம் தாங்காது கதறி அழுதார். அந்த அழுகையை கண்டும் குமாரசாமியின் மனம் மாறவில்லை.

அக்கம்பக்கத்தினர், உறவினர், குமாரசாமி வேலை பார்த்த நிறுவன முதலாளிகள் ஆகியோர், குமாரசாமியிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தனர். போராட்டத்தில் ஈடுபடுவதால் சிறைக்கு செல்ல நேரிடும்  என்றும், போலீசாரின் காட்டுமிராண்டித் தனமான தாக்குதலுக்கும் சித்ரவதைகளுக்கும் உள்ளாக நேரிடும் என்றும் குமாரசாமியை அச்சுறுத்தி பார்த்தனர். ஆனால் குமாரசாமி அதற்க்கெல்லாம் அசைந்துகொடுக்கவில்லை.

தாம் இறந்துவிட்டால் தம் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் சோற்றுக்கு என்ன செய்வார்கள் என்பதை பற்றிக் குமாரசாமி சிறிதும் கவலைப்படவில்லை. எல்லோரையும் காக்க இறைவன் இருக்கிறான் என்பதில் குமாரசாமி அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். மேலும் நெசவாளர் குடும்பப் பெண்கள் மானமாக வாழ்வதற்குப் பரம்பரையாக வந்த நெசவுத் தொழில் என்றும் கை கொடுக்கும். அதையும் குமாரசாமி அறியாதவரல்லர்.

எத்தனை பேர் அறிவுரை கூறியும் இறுதியில் குமாரசாமியே வென்றார். அவர் தம் தாயாரிடமும் நண்பர்களிடமும் நயந்து பேசியும் கெஞ்சி வேண்டியும் அவர்களுடைய அனுமதியைப் பெற்றார்.

போராட்டத்திற்கு செல்லும் முதல் அணியிலேயே  பெற்றுவிடவேண்டும் என்று குமாரசாமி துடித்தார். அறப்போரில் கலந்துகொள்வதற்கு முதல் நாளே நண்பர்கள் வீட்டிற்கும் உறவினர்கள் வீட்டிற்கும் சென்று ஆசி பெற்றார். தாம் யாருக்குப் பணம் கொடுக்க வேண்டுமோ அவர்களை அழைத்துப் பணத்தை கொடுத்து கடனை தீர்த்தார். எதனை எதிர்பார்த்து அவர் அப்படி நடந்துகொண்டாரோ? எல்லாம் வல்ல இறைவனையன்றி அதனை யார் அறிவார்?

ஜனவரி 11 – 1932  திருப்பூர் குமரன் நினைவு நாள் !

(‘நாட்டுக்கு ஒரு நல்லவர்’ – திருப்பூர் குமரன் நூலிலிருந்து….)

==========================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will ?

Our A/c Details: 

Name : Rightmantra Soul Solutions |  A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056. IFSC Code : UTIB0001182

You can also Cheques / DD  drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.

Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

==========================================================

Also check : 

நாட்டை உலுக்கிய ‘குலசேகரப்பட்டினம் கலவர வழக்கு’ – சுதந்திர தின SPL – MUST READ

அங்கே புனித உடல் புதைக்கப்பட்டது – இங்கே கனவுகளில் ஒன்று விதைக்கப்பட்டது!

இவை வெறும் முகங்களில்லை… தேசத்தின் முகவரிகள்!

சுப்பிரமணிய சிவா — வ.உ.சி. என்கிற துப்பாக்கியின் தோட்டா!

மகன் திருமணத்திற்கு நண்பரிடம் உதவி கேட்டுப் போன வ.உ.சி. — நடந்தது என்ன? 

சைவ சமயத்தில் தீவிர பற்று வைத்திருந்த வ.உ.சி. அனைவரிடமும் வற்புறுத்தியது என்ன தெரியுமா?

வறுமையில் வாடும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் குடும்பத்தினர் – கல்விக்கே கடன் வாங்கும் பரிதாபம்!

ஜான்சி ராணி லக்ஷ்மி பாய் – பாரதிக்கு முன்பே வாழ்ந்த புதுமை பெண்!

தேவாரம், திருவாசகம், வந்தே மாதரம் – கொடிகாத்த குமரனின் மறுபக்கம்!

“என்னை தூக்கிலிடவேண்டாம்… சுட்டுக்கொல்லுங்கள்!” என்று சொன்ன பகத்சிங். ஏன் ?

கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து குடுகுடுப்பைக்காரனுக்கு தந்த பாரதி – ஏன் தெரியுமா???

உங்கள் இழப்பு மற்றவர்களுக்கு லாபமாக இருக்கட்டும் – காந்தி ஜெயந்தி ஸ்பெஷல்!

ஒரு தலைவனின் தகுதி – மகாத்மா காந்தி உணர்த்திய உண்மை!

 

5 thoughts on “தேவாரம், திருவாசகம், வந்தே மாதரம் – கொடிகாத்த குமரனின் மறுபக்கம்!

  1. வணக்கம் சார்.
    பதிவு நன்றாக உள்ளது.
    கொடி காத்த குமரனின் கடவுள் பக்தியும் தேச தொண்டும் அவர் நினைவு நாளில் எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  2. திருப்பூர் குமரனைப் பற்றிய ஆழமான அகலமான பதிவு ,குமரனின் உன்னதமான உயிர்த் தியாகம் …தக்க சமயத்தில் பதிவு..
    வாழ்த்துக்கள்

  3. அந்த காலத்தில் வாழ்ந்த இவர்களை போன்றவர்களின் சரித்திரத்தை படித்து விட்டு, இன்றைய அரசியலையும் பார்த்தால் கண்ணீர் தான் வருகின்றது. நன்றி.

  4. வந்தே மாதரம்.

    நேற்று Times of India வில் ஒரு நியூஸ் வந்திருந்தது. maதுரையில் ினிமா டிக்கெட்ஸ் விலை கூடுதலாக விற்பதாக போலீசில் சிலர் கம்ப்ளைன்ட் செய்தார்களாம். அதற்க்கு அந்த அதிகாரி அம்மா அப்பா தரும் பணத்தை இப்படி வீணாக்காமல் 2 அல்லது 3 நாள் கழித்து வந்து பாருங்கள் என அறிவுரை சொல்லி அனுப்பினாராம்.

    இப்படியும் சில இளையவர்கள் மற்றும் சில நல்ல போலீஸ் அதிகாரிகள்.

    இந்திய சுதந்திரம் இப்படி தப்பானவர்கலின் கையில் போய் விட்டதே என வருத்தமாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *