அதன்படி பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் சந்நியாசிகள் போல வேடம் புனைந்து அத்திரி மகரிஷியின் ஆசிரமம் வந்தனர். அவர்களை முறைப்படி வரவேற்ற அனுசுயா தேவி உணவு பரிமாற ஆயத்தமாகும்போது, “நாங்கள் மும்மலங்களை அறுத்தவர்கள். எனவே ஆடை எதுவுமின்றி நிர்வாண நிலையில் வந்து உணவிட்டால் தான் உண்போம்” என்று மூன்று பேரும் நிபந்தனை விதித்தனர்.
தன் கணவர் அத்திரி மகரிஷியை எண்ணி வணங்கிய அனுசூயா, வந்திருப்பவர்கள் யாரென்று புரிந்துகொண்டாள். “நான் கற்புக்கரசி என்பது உண்மையானால், என் கணவரையே தெய்வமென்று தொழுவது உண்மையானால் இவர்கள் குழந்தைகளாக மாறட்டும்” என்று தனது கற்பின் திறத்தால் மும்மூர்த்திகளையும் சிறு குழந்தைகளாக்கி பின்னர் உணவு பரிமாறினாள்.
அக்குழந்தைகளைத் தன்னிடமே வைத்துக்கொண்டாள். கணவர்களைக் காணாமல் தவித்த மூன்று தேவியரும் உண்மையறிந்து அனுசூயாவிடம் வந்து மன்னிப்பு கேட்டனர். அவளும் மும்மூர்த்திகளையும் பழைய நிலைக்குக் கொண்டு வந்தாள்.
“உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்று அவர்கள் கேட்க, “உங்கள் மூவரின் அம்சத்தோடும் ஒரு மகன் வேண்டும்” என்றாள்.
அதன்படி மும்மூர்த்திகளின் அம்சமாக அவதரித்தவரே தத்தாத்ரேயர். ஆறு கரங்கள் கொண்டவர். மேலிரு கரங்களில் சூலமும் சங்கும்; நடுவிரண்டு கரங்களில் சக்கரமும் கதாயுதமும்; கீழிரண்டு கரங்களில் ருத்ராட்ச மாலையும் கமண்டலமும் கொண்டு திகழ்கிறார். (சில படங்களில் இவ்வமைப்பு மாறுபட்டும் காணப்படும்.) அவருக்குப் பின்புறமாக காமதேனு காட்சி அளிக்கும். நான்கு வேதங்களும் நாய் வடிவில் அவருடனிருக்கும்.
தத்தாத்ரேயரை வழிபட்டால் தீராத வயிற்றுவலி, இதய நோய், புத்தி சுவாதீனமின்மை, சத்ரு உபாதை, கடன் தொல்லைகள் நீங்கும். பெண்களுக்கு மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பர். இவரை வணங்குவதால் மும்மூர்த்திகளையும் பூஜித்த பலன் கிடைக்கும்.
தத்தாத்ரேயர் தன்னை பூஜித்தவர்களின் துன்பத்தை போக்கி நன்மைகளை கொடுத்து காப்பாற்றினார்.
குரு மும்மூர்த்திகளின் அவதாரமானதால் அவரை,
“குருர் பிரம்மா குருர் விஷ்ணு
குருர் தேவோ மகேஸ்வர:
குரு ஸாட்ஷாத் பரம் பிரம்மா:
தஸ்மை ஸ்ரீ குரவே நம:”
என்று துதிக்கிறார்கள்.
தத்தாத்ரேயரிலிருந்து தான் குரு பரம்பரை ஆரம்பமானது. அவரின் அடுத்த அவதாரங்கள் தான் ‘ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபராக’ பீடிகாபுரத்திலும் (ஆந்திர மாநிலத்தில் உள்ள பிடாபுரம்), ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதியாக மகாராஷ்டிரத்தில் உள்ள ‘கரஞ்சா’ என்னும் ஊரில் பிறந்து வெகு நாட்கள் கானகாபுரத்திலும் (இது கர்நாடக மாநிலத்தில் உள்ளது) இருந்து லீலைகளை காண்பித்து, அங்கே தனது நிர்குண பாதுகைகளை பிரதிஷ்டை செய்தார்.
ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபர், ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதி சுவாமிகளின் வரலாறு தான் இந்த ஸ்ரீ குரு சரித்திரம். (* இந்நூல் முழுக்க முழுக்க தமிழில் உள்ள ஒன்றாகும். படிப்பதற்கு மிகவும் இனிமையான ஒரு அனுபவமாக இருக்கும்.)
நம் வாசகர் ஹரீஷ் என்பவர் நமக்கு இந்த நூலை பற்றி கூறியதோடு இந்த நூலை சப்தாக பாராயணம் செய்த போது எப்படி தமது கோரிக்கை நிறைவேறியது என்கிற சிலிர்ப்பூட்டும் தகவலையும் கூறினார்.
இந்த குரு சரித்திரத்தை ஸ்ரீநரசிம்ம சரஸ்வதியின் சீடரான ஸ்ரீ கங்காதர சரஸ்வதி மராத்தியில் எழுதினர். பிறகு ஸ்ரீ வாசுதேவானந்த சரஸ்வதி அவர்கள் (1854-1914) சமஸ்கிருதத்தில் எழுதினார். பிறகு பல மொழிகளில் பல பேர் எழுதினார்கள்.
முதலில் எழுதிய ஸ்ரீ கங்காதர சரஸ்வதி அவர்கள் இன்னல்களை போக்க முக்தி பெற குருபக்தர்களை இந்நூலினை பாராயாணம் செய்ய சொன்னார். இதை தினமும் காலையில் பாராயணம் (படிக்க) செய்யலாம்.
துன்பங்களும், ஆபத்துக்களையும், வியாதிகளையும் போக்க, குறிப்பிட்ட வேண்டுதல் நிறைவேற, சப்தாக பாராயணம் (ஏழு நாட்களுக்குள் படிக்கச் செய்தால்) அவர்களின் வேண்டுதல்கள் நிறைவேறும்.
தத்தாத்ரேயரின் குரு பரம்பரையில் அவதரித்த சத்குரு ஸ்ரீ சீரடி சாய்பாபா தன் பக்தரான சாடே அவர்களை இரண்டு முறை இந்த குரு சரித்திரத்தை சப்தாக பாராயணம் செய்ய சொன்னார். (சாய் சத் சரிதம் 18, 19 அத்தியாயம்), இதர பக்தர்களையும் பாராயணம் செய்ய சொன்னதில் இதன் மகிமை எல்லையற்றது என்று தெரியவருகிறது.
ஆகையால் பக்தர்கள் இதனை பாராயணம் செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்த நூலை பாராயணம் செய்வதற்கு என்று சில வழிமுறைகள் இருக்கின்றன. அது இந்நூலில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
* இந்நூல் முழுக்க முழுக்க தமிழில் உள்ள ஒன்றாகும். படிப்பதற்கு மிகவும் இனிமையான ஒரு அனுபவமாக இருக்கும்.
ஓம் குருப்யோ நமஹ!
==========================================================
நூல்வேண்டுவோர் கவனத்திற்கு…
வேல்மாறல், சுந்தரகாண்டம், குருசரித்திரம் பற்றிய பதிவுகளை அளிக்கும்போது பல புதிய அன்பர்கள் தொடர்புகொண்டு அந்த நூல்களை கூரியர் அனுப்பும்படி கேட்கின்றனர். அறிமுகம் இல்லாத புதியவர்களுக்கு அனுப்பும்போது POST-DELIVERY FOLLOW UP, PAYMENT FOLLOW UP போன்றவற்றை செய்ய நமக்கு கடினமாக இருக்கிறது. அவற்றிற்க்கெல்லாம் நமக்கு நேரமிருப்பதில்லை. சிலர் நமது நேரத்தை வீணடிப்பதோடு கூறியரை ரிட்டர்ன் அனுப்பி நம்மை வேதனைப்படுத்துகிறார்கள். எனவே இது போன்ற சேவைகள் இனி நம் விருப்ப சந்தாதார்களுக்கும், நமது தளத்தின் பணிகளில் துணை நிற்பவர்களுக்கும் மட்டுமே நம்மால் செய்ய இயலும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்பர்கள் நமது ‘விருப்ப சந்தா’ திட்டத்தில் இணையும் பட்சத்தில் நமக்கு நூல்கள் அனுப்புவதற்கு ஒரு ஆர்வம் ஏற்படும். மனநிறைவாகவும் இருக்கும். இல்லையெனில் அவர்களாக முயற்சி எடுத்து சம்பந்தப்பட்ட இடங்களில் வாங்கிக்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுக்கு நன்றி!
Mobile : 9840169215 | E-mail : editor@rightmantra.com
==========================================================
Support Rightmantra in its mission!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us.
Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
For more information click here!
==========================================================
[END]
மும்மூர்த்திகளின் ஒரே வடிவமான தத்தாத்ரேயர் அவர்களின் தகவல் எனக்கு ஒரு புதிய தகவல் மட்டுமல்லாமல் தத்தாத்ரேயரின் குரு பரம்பரையில் அவதரித்த சத்குரு ஸ்ரீ சீரடி சாய்பாபா -அவர்கள் என்பதனை புதியாக தெரிந்துகொண்டேன்..தினம்தினம் புதிய தகவல்களை தேடித்தேடி பதிவளிக்கும் உங்களுக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றிகள்..
அன்பு சகோதரா,
மிக நல்ல பயனுள்ள பதிவு, ஷிர்டி சாய் தத்தாத்ரேயரின் சொரூபம் என்பது முன்பே தெரியும் எனினும் சாய் சட்சரித்ரா தினமும் படித்து வந்தாலும் குரு சரித்ரா குறித்து நீங்கள் வெளியிட்டுள்ள விவரம் புதியது…மிக்க நன்றி…வாழ்க வளமுடன்…உங்கள் தொண்டுள்ளம் சிறக்க..அணைத்து வகையிலும் உங்களுக்கு ஆதரவு பெருக மஹா பெரியவாளிடம் என்னுடைய பிரார்த்தனைகள்… _/|\_
காலையில் இந்த நல்ல பதிவுடன் இந்த நாள் ஆரம்பித்துள்ளது. குரு தத்தாத்ரேயர் பற்றி புதிய தகவல்களை இன்று தெரிந்துகொண்டேன். அதோடு அவரது பரம்பரையை சேர்ந்தவர் ஷிர்டி சாய்பாபா எனபது இதுவரை எனக்கு தெரியாது. முத்தான பதிவிற்கு நன்றி சுந்தர். எப்படிப்பட்ட ஒரு புண்ணிய பூமியில் நாம் எல்லோரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த பாரத புண்ணிய பூமியின் அருமை பெருமை தெரிந்து அதன் மூலம் பலன் பெற்று வாழ்வோம்.
டியர் சுந்தர்ஜி
குரு சரித்தரம் பற்றி பதிவு அளித்தது மிக்க மகிழ்ச்சி. ஷிர்டி பாபா is the incarnation of lord தத்தாத்ரேயா . எனது மகன் ஹரிஷ் குரு charithra 7 நாட்களில் படித்து seventh day அன்று அவனுக்கு job கிடைத்தது. அனைவரும் குரு சரித்திரம் படித்து பயன் அடைய இறைவனை பிராத்திக்கிறேன்.
மிக்க நன்றி
உமா
சுந்தர்ஜி
வாசகர் ஹரீஷ் அவர்களுக்கு நன்றி! தான் பெற்ற இன்பம் பிறருக்கும் கிடைக்க வேண்டும் என செய்த அவர்களுக்கு குருவின் அருள் நிரம்பட்டும். வெளியிட்ட உங்களுக்கும் நன்றி.
இந்த புத்தகத்தை தமிழில் வாங்க வேண்டுமா ? (நீங்கள் வெளியிடுள்ள் முதல் படம் தமிழ் புத்தகத்தின் அட்டைபடம் போல் உள்ளது) அல்லது சமஸ்க்ருதத்தில் தான் பாராயணம் செய்ய வேண்டுமா? தெளிவுபடுத்தவும்.
இந்நூல் முழுக்க முழுக்க தமிழில் உள்ள ஒன்றாகும். படிப்பதற்கு மிகவும் இனிமையான ஒரு அனுபவமாக இருக்கும்.
– சுந்தர்
If anyone wants to read gurucharitra in english pl. go to this link and read ..
http://babatemple.com/shri_guru_charitra.html
சுந்தர் சார்
மிகவும் அறிய தகவல் சார்
நன்றி
Dear sundarji,
Very happy to see this article.Such an interesting book to be read
by every one.
Small info:
The book should be read within 7days.
Thank you
Thanks & Regards
Harish.V
need gurucharitra in tamil
You can get it in Mylaopre Saibaba temple and in Giri Trading agency all branches.
– Sundar
தயவு செய்து எனக்கு குரு சரித்ரம் வேண்டும். எப்படி
அணுகுவது.
If you are residing out of Chennai or Tamil Nadu, i can send. Please send your postal address with mobile number to editor@rightmantra.com