ஐக்கிய அரபு நாடுகளில் வசிப்போர்களுக்கு குருவின் மகிமையை கேட்பதற்கு இனியதொரு சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. விரைவில் திரு.சுவாமிநாதன் அவர்கள் ஐக்கிய அரபு நாடுகளில் ‘மகா பெரியவா மகிமைகள்’ சொற்பொழிவை நிகழ்த்தவுள்ளார்.
பஹ்ரெய்ன், அபுதாபி, துபாய், மஸ்கட் ஆகிய நகரங்களில் வசிக்கும் நம் வாசக அன்பர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி குருவின் மகிமையை கேட்டு பயன்பெறவேண்டுகிறோம்.
குருவின் பெருமையை சிரவணம் செய்வது (கேட்பது) இரு வினையை தீர்க்க வல்லது. கலியுகத்தில் சிரவணம் தான் கண்கண்ட மருந்து.
சென்ற ஆண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி, நமது தளம் சார்பாக குரு மகிமை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மஹா பெரியவா குறித்து திரு.சுவாமிநாதன் சொற்பொழிவு நிகழ்த்தினார். தவிர நமது ஆண்டு விழாவிலும் கலந்துகொண்டு உரையாற்றி நமது தளத்தை கௌரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகா பெரியவா சரணம்.
காஞ்சி மகா பெரியவாளின் கருணையாலும் ஆசிர்வாதத்தாலும் அவரது மகிமையை ஐக்கிய அரபு நாடுகளில் சொல்லப் போகின்ற ஒரு வாய்ப்பு எனக்கு அமைந்திருக்கிறது.
ஆம்!
பஹ்ரெய்ன், அபுதாபி, துபாய், மஸ்கட் ஆகிய இடங்களில் எனது ‘மகா பெரியவா மகிமை’ உட்பட பல ஆன்மிகச் சொற்பொழிவுகள் நிகழ இருக்கின்றன.
நிகழ்ச்சிகள் விவரம்:
பஹ்ரெய்ன்: 2014 ஜனவரி 17 மற்றும் 18
………………………………………………………….
அபுதாபி: ஜனவரி 23 மற்றும் 24
……………………………………………….
துபாய்: ஜனவரி 25, 26, 27
………………………………………….
மஸ்கட்: ஜனவரி 30, 31 மற்றும் பிப்ரவரி 1
……………………………………………………………….
இந்தப் பயணம் குறித்த மேல் விவரங்களுக்கும் மற்ற விசாரிப்புகளுக்கும்:
n.ramesh1967@gmail.com மற்றும் swami1964@gmail.com ஆகிய இரண்டு மெயில் ஐ.டி.க்கும் தொடர்பு கொள்ளவும்.
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
அன்புடன்,
பி. சுவாமிநாதன்
சென்னை
சுந்தர்ஜி
ஜெகமெங்கும் தன் அருளை வாரி வழங்க திரு.சுவாமிநாதன் வாயிலாக மஹா பெரியவா கிளம்புவதாகதான் அடியேன் எண்ணுகிறேன். திரு.சுவாமிநாதன் அவர்களின் ஜீ டிவி சொற்பொழிவு எல்லோர் இல்லங்களிலும் பெரியவாவை அமர வைத்துள்ளது என்றால் அது மிகையில்லை. அடுத்து பெரியவாவை பற்றிய அவரது புத்தகமும் பெரியவாவின் அருள் பிரவாகத்தை நம் இதயங்களில் பொழிய செய்கிறது. நம் தளத்திற்கு அடுத்தபடியாக, மஹா பெரியவா மகிமைகளை திரு.சுவாமிநாதன் மூலம் உலகமெங்கும் உள்ள் வாசகர்கள் பெற்று உய்ய இந்த தகவலை பரிமாறியதற்கு நன்றி.
மஹா பெரியவாவின் கருணை மகத்தானது.
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர…
-மனோகர்
டியர் சுந்தர்ஜி
மகா பெரியவரின் பெருமையை உலகெங்கும் பரப்பும் திரு சுவாமிநாதன் அவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கம்.
வாழ்க அவரது தொண்டு
நன்றி
uma
நன்றி சுந்தர்.
எல்லாமே மகா பெரியவா அருள் அன்றி வேறில்லை.
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர
அன்புடன்,
பி. சுவாமிநாதன்