Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, October 6, 2024
Please specify the group
Home > Featured > செல்வத்துள் பெரிய செல்வம் எது தெரியுமா ? MONDAY MORNING SPL 26

செல்வத்துள் பெரிய செல்வம் எது தெரியுமா ? MONDAY MORNING SPL 26

print
யாரோ தனது வீட்டு வாசலுக்கு வந்திருப்பதை பார்த்த அந்த பெண், வெளிய வந்து பார்க்கிறாள். அங்கே நீண்ட வெள்ளை தாடிகளுடன் மூன்று பேர் நின்றுகொண்டிருப்பதை பார்க்கிறாள். அவர்கள் யாரென்று தெரியவில்லை. பார்த்தால் மிகப் பெரிய யோகிகளை போல காணப்பட்டனர்.

Treasure Chestவிருந்தோம்பலில் சிறந்து விளங்கும் குடும்பம் அது என்பதால், “நீங்கள் மூவரும் பசியோடிருக்கிறீர்கள் என்று கருதுகிறேன். உள்ளே வாருங்கள். சாப்பிட்டுவிட்டு சற்று இளைப்பாறிவிட்டு செல்லலாம்”

“உங்கள் கணவர் வீட்டில் இருக்கிறாரா?”

“இல்லை!”

“அப்போது நாங்கள் வரமுடியாது. நாங்கள் எதிரே உள்ள மரத்தடியில் உட்கார்ந்திருக்கிறோம். உங்கள் கணவர் வந்த பின்பு எங்களை கூப்பிடு” என்று கூறிவிட்டு போய்விடுகின்றனர்.

சற்று நேரம் கழித்து அவள் கணவர் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். அவரிடம் விஷயத்தை கூறினாள் அந்த பெண்.

“நான் வந்துவிட்டதாக கூறி அவர்களை வீட்டிற்கு கூப்பிடு” என்கிறான் கணவன்.

இவள் மறுபடியும் வெளியே வந்து அவர்களை அழைக்கிறாள்.

“எங்களில் யாராவது ஒருவர் தான் வருவோம். நாங்கள் மூவரும் சேர்ந்து ஒரு வீட்டிற்குள் நுழையமாட்டோம்” என்கின்றனர்.

இவளுக்கு சற்று வியப்பு. “ஏன் அப்படி?”

அவர்களில் ஒருவர், “என் பெயர் செல்வம், அவர் பெயர் கருணை. அதோ அவர் பெயர் வெற்றி. உங்கள் வீட்டிற்கு சென்று உங்கள் கணவரிடம் பேசி எங்களில் யாரை அழைப்பது என்று முடிவு செய்துவிட்டு வாருங்கள்.”

இதை தன் கணவரிடம் சொன்னவுடன் அவர் ரொம்ப சந்தோஷப்பட்டார்.

“அப்படித் தான் விஷயம் என்றால் நாம் செல்வத்தை அழைப்போம். ஏனெனில் நமக்கு இப்போதைக்கு அது தான் தேவை.”

“இல்லைங்க…. வெற்றியை அழைப்போம். தொட்டதெல்லாம் துலங்கினால் செல்வம் தானே வந்துவிடும்” என்றாள் மனைவி.

இதை கேட்டுக்கொண்டிருந்த அவர்களின் சுட்டிப் பெண் குழந்தை… “இல்லை… இல்லை…. நாம் கருணையை அழைப்போம். நம் இல்லமெங்கும் கருணை நிரம்பி வழியும். அது பார்க்க சந்தோஷமாக இருக்கும்!” என்றாள்

தங்கள் குழந்தையின் வேண்டுகோளையே அவர்கள் நிறைவேற்ற விரும்பினார்கள்.

வெளியே மரத்தடிக்கு சென்று, “உங்களில் கருணையை மட்டும் அழைக்கிறோம்” என்றாள் அந்த பெண்.

“நன்றி அம்மா!” என்று கூறி கருணை எழுந்து வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தது. ஆனால் கருணையின் பின்னே செல்வமும், வெற்றியும் கூட சேர்ந்து நடந்து வந்தார்கள்.

அந்த பெண், “நான் கருணையை மட்டும் தானே அழைத்தேன். நீங்களும் ஏன் வருகிறீர்கள்?”

அப்போது மூவரும் சேர்ந்து சொன்னார்கள், “நீங்கள் வெற்றியையோ செல்வத்தையோ அழைத்திருந்தால் மற்ற இருவரும் வந்திருக்க மாட்டோம். ஆனால் கருணையை அழைத்துவிட்டீர்கள். கருணை இருக்குமிடத்தில் இது இரண்டும் இருந்தே ஆகவேண்டும் என்பது இறைவனின் ஆணை! எனவே நாங்கள் மூவரும் வருகிறோம்!!”

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள. (குறள் 241)

(குறளின் அர்த்தத்தை கூகுள் செய்து பார்ப்பீர்கள் என்று நம்புகிறோம்!)

=============================================================

முந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….

http://rightmantra.com/?s=MONDAY+MORNING+SPL&x=4&y=6
=============================================================

[END]

10 thoughts on “செல்வத்துள் பெரிய செல்வம் எது தெரியுமா ? MONDAY MORNING SPL 26

  1. குட் மோர்னிங் சுந்தர்ஜி,
    கருணையை காட்டினால் செல்வமும், வெற்றியும், தேடி வரும் என்பது சத்யமான உண்மை. Monday Spl வழக்கம் போல் சூப்பர்.

    நன்றி,
    நாராயணன்.

  2. \\அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
    பூரியார் கண்ணும் உள.\\

    ” செல்வம் எல்லாவற்றுள்ளும் சிறந்த செல்வம் உயிர்களிடம் அருள் கொண்டிருக்கும் செல்வம்; பொருளால் வரும் செல்வங்கள் கொடிய உள்ளம் கொண்ட கீழோரிடத்தும் உண்டு.
    monday marning spl simply சூப்பர் .

    காலை வணக்கத்துடன்,
    -மனோகர்

  3. அன்பு சகோதரா….வழக்கம் போல பின்னீட்டிங்க போங்க…அமர்க்களம்…திகில் கதை போல் ஆரம்பித்து…நீதிக் கதை வழங்கி விட்டீர்கள்…புத்தாண்டு புலரும் வேளையில்..அனைவரும் கண்டிப்பாக கடை பிடிக்க வேண்டிய குணத்தை அழகாய் விளக்கி விட்டீர்கள் …உங்கள் உதவும் குணத்திற்கு உங்கள் நல்ல எண்ணங்களுக்கு உரு துணையாக நல்ல உள்ளங்களில் கருணை குணம் மிகுந்து நிற்க என் அப்பன் ஈசனிடம் பிரார்த்தனை செய்து…எப்பொழுதும் உங்களை என் பிரார்த்தனையில் இருத்தி உங்கள் சகோதரி…நளினா கீரன் _/\_

  4. சூப்பர். சுந்தர்…. நான் ஆகாயம் பற்றி ஓர் பதிவை அனுப்பினேன். அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவும்.
    நன்றி.

  5. ஆகாயம் – வெற்றியின் வாயில்படி…

    ஆகாயம் – அதை ஐந்தாவது பூதம் என்று சொல்வது சரியல்ல, ஏனென்றால் பிற பூதங்களைவிட உயர்ந்தது. மற்ற நான்குமே அதைச் சார்ந்தே செயல்படுகின்றன. இப்போது நாம் ஒரு வட்டவடிவ கிரகத்தில் இருக்கிறோம். பூமி, சூரிய மண்டலம், இந்தப் பால்வெளி மண்டலம், ஒட்டுமொத்த பிரபஞ்சம் என்று அனைத்துமே ஆகாயம் என்னும் வெளியில்தான் இருக்கின்றன. நீங்களுமே ஆகாயத்தின் பிடியில்தான் இருக்கிறீர்கள்.
    ஆகாயத்தின் ஒத்துழைப்பைப் பெற, ஒரு எளிமையான செயல்பாட்டை நீங்கள் செய்யலாம்.
    24 மணி * 15 டிகிரி = 360 டிகிரி

    சூரிய உதயத்திற்க்குப் பிறகு – 2 மணி நேரத்திற்குள். , சூரியன் 30 டிகிரி கோணத்தைக் கடப்பதற்கு முன்னர், வானத்தை ஒரு முறை அண்ணாந்து பார்த்து, இன்று இந்த இடத்தில் உங்களைப் பிடித்து வைத்திருப்பதற்காக அதற்கு நன்றி சொல்லுங்கள்.

    சூரியன் 30 டிகிரி கோணத்தைக் கடந்தபிறகு, அன்றைய நாளின் வேறெதாவது ஒரு சமயத்தில், ஒருமுறை வானத்தை அண்ணாந்து பார்த்து, தலை வணங்குங்கள். சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு, மீண்டும் ஒரு முறை ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து, தலை வணங்குங்கள். அங்கிருக்கும் ஏதோ ஒரு கடவுளைப் பார்த்து நீங்கள் தலை வணங்கவில்லை.

    உங்களை இன்று, இந்த இடத்தில் பிடித்து வைத்திருக்கும் அந்த வெற்றிடத்தை வணங்குகிறீர்கள். இதைச் செய்து வந்தால், உங்கள் வாழ்க்கை ஆச்சரியப்படத்தக்க வகையில் மாறும். ஒரு நாளைக்கு மூன்று முறை இப்படி விழிப்புணர்வுடன் செய்து வந்தால், உங்களுக்கு அந்த ஆகாயத்தின் ஒத்துழைப்பு கிடைத்துவிட்டால், வாழ்க்கை பல வழிகளிலும் ஒரு மந்திரஜாலத்தைப் போல நிகழும்.

  6. நன்றி சுந்தர் ஜி..சற்று குழப்பத்தில் இருந்த எனக்கு கொஞ்சம் தெளிவு பிறக்க வாய்த்த பதிவிது..நன்றி….

    நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்…

    அன்புடன்
    விஷ்வா

  7. அன்பு சார்,

    இந்த பதிவு நன்றாக உள்ளது. கருணைக்கு மகா பெரியவரை விடவா.

    நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *