அது குறித்து விரிவான பதிவு நம் தளத்தில் இடம்பெற்றது. (பார்க்க : கந்தனின் கருணையில் திளைத்து அதில் மூழ்கி எழுந்த ஒரு ஆத்மானுபவம்!)
பணம் ஒன்றையே குறிக்கோளாக கருதி வருபவர்கள் தலையில் எதையாவது கட்டி பொருளீட்டும் வியாபாரிகளுக்கு நடுவே மணிகண்டன் அவர்களின் கைங்கரியம் நம்மை சிலிர்க்க வைத்தது.
அவர் வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமிக்கு அளித்த அந்த மாலையை குன்றத்தூர் கோவிலில் உற்சவருக்கு அணிவித்தபோது அதை நாம் புகைப்படம் எடுத்திருந்தோம். அந்த புகைப்படத்தை ஒரு பெரிய சைசில் அழகாக பிரின்ட் எடுத்து அதை ஃபிரேம் செய்து வடபழனி சென்று மணிகண்டனுக்கு அளித்து அவரை திக்குமுக்காடச் செய்யவேண்டும் என்று திட்டமிட்டிருந்தோம்.
இந்நிலையில் பாரதி விழா வரவே, அந்த விழாவில் அவரது தொண்டை பற்றி எடுத்துக்கூறி அனைவர் முன்னிலையிலும் கௌரவிக்கவேண்டும் என்று விரும்பினோம். எனவே அவரை பாரதி விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தோம்.
இரண்டு திருமண நிகழ்ச்சிகளில் அன்று கலந்துகொள்ளவிருப்பதாகவும் வருவது மிகவும் கஷ்டம் என்றும் கூறினார்.
நாம் அவரை கௌரவிக்கவிருக்கும் விஷயத்தை சொல்லாமல், நமக்காக ஒரு பத்து நிமிடமாவது நிச்சயம் குடும்பத்துடன் வந்துவிட்டு செல்லவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.
கடைசியில் “சரி நிச்சயம் உங்கள் அன்புக்காக வருகிறேன்!” என்றார்.
இதையடுத்து, மேற்படி புகைப்படம் உடனே பெரிய சைசில் பிரிண்ட் போடப்பட்டு அது அழகாக பிரேம் செய்யப்பட்டது.
பாரதி விழா அன்று சொன்னது போல மணிகண்டன் தனது குழந்தையுடன் வந்திருந்தார்.
நிகழ்ச்சியின் இடையில், அவரை பற்றி அவரது தொண்டை பற்றி, தனது லாபத்தை பற்றி கவலைப்படாமல் கந்தசஷ்டிக்கு அவர் முருகனுக்கு இலவசமாக மாலைகளை அளித்ததை அனைவருக்கும் எடுத்துக்கூறி, நமது புஷ்ப கைங்கரியத்தில் தன்னையும் இணைத்துக்கொண்டு நமது எளிய சேவையை மிகப் பெரிய சேவையாக மாற்றிய அவரை பாராட்டும் வகையில் அவர் அளித்த மாலைகளுடன் தம்பதி சமேதராக முருகப் பெருமான் காட்சி தரும் அந்த அழகான படத்தை அனைவருக்கும் காண்பித்தோம்.
தொடர்ந்து மணிகண்டன் மேடைக்கு அழைக்கப்பட்டார்.
“இறைவனுக்கு தன்னலமற்ற தொண்டு செய்பவர்களை கௌரவம் தேடி வரும் என்பதற்கு மணிகண்டன் சிறந்த உதாரணம். ஏனெனில் இதை அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். கந்த சஷ்டிக்கு அவர் மாலையும் மலர்களும் அளித்தபோது இதையெல்லாம் அவர் எதிர்பார்த்திருப்பாரா? இதெல்லாம் நடக்கும் இப்படியெல்லாம் நடக்கும் என்று எங்களுக்கே தெரியாது. ஏனெனில் இது முருகப் பெருமானின் திருவுள்ளம். தன்னலமற்ற பக்தியையும் அன்பையும் இறைவனிடம் செலுத்துபவர்களுக்கு கௌரவமும் அங்கீகாரமும் தேடி வரும் என்பதையே முருகப் பெருமான் இதன் மூலம் உணர்த்துகிறான்” என்று கூறி, பலத்தை கைதட்டல்களுக்கிடையே மணிகண்டனுக்கு ‘தேவார முரசு’ திரு.கி.சிவக்குமார் உள்ளிட்ட சிறப்பு விருதினர்களின் மூலம், அந்த படம் அளிக்கப்பட்டது.
மணிகண்டன் இதை உண்மையில் எதிர்பார்க்கவில்லை. அந்த நொடி வரையில் அவருக்கு நாம் இப்படி ஒரு ஏற்பாடு செய்திருப்பது தெரியாது.
ஒரு கணம் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனார். மனமெங்கும் நெகிழ்ச்சியில் நிறைந்திருக்க அந்த படத்தை பெற்றுக்கொண்டார்.
மேடையைவிட்டு இறங்கும்போது நம்மிடம் அவர் சொன்னது “ரொம்ப நன்றி சார். என் தொண்டு தொடரும்…!” என்பது தான்.
அவருக்கு இன்று சான்றோர் முன்னிலையில் சபையில் கிடைத்த கௌரவம் அவரை எந்தளவு உற்சாகப்படுத்தியிருக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமா என்ன?
தொண்டு செய்பவர்களை தட்டிக்கொடுப்பது, உற்சாகப்படுத்துவது, அந்த தொண்டிற்கு இணையான புண்ணியத்தை தரும் என்பது தெரியுமா?
ஆனால் நாம் இதை செய்தது புண்ணியம் கருதி அல்ல. இது எம் கடமை. ஏனெனில்…. இது ஆண்டவன் இட்ட கட்டளை!
(குறிப்பு : மணிகண்டனுக்கு நாம் முருகனின் படத்தை அளித்த டிசம்பர் 8, பாரதி விழா அன்று தான் முருகப் பெருமானுக்கு உரிய சஷ்டி. முந்தைய சஷ்டியில் மாலை அளித்தவருக்கு அடுத்த சஷ்டிக்கு மரியாதை தேடி வந்துவிட்டது. குமரனின் திருவிளையாடல்கள் எப்போதும் ஆச்சரியமானவை தான்!)
சுந்தர்ஜி
தன்னலம்மற்ற தொண்டு, மக்கள் சேவை இதை தான் இறைவன் நம்மிடம் எதிர்பார்க்கிறார் மணிகண்டன் போல் ஒரு தொழிலில்
நேர்மை, தொண்டு நம்மை மெயசிர்க்கவைகிறது.
ஆண்டவன் இட்ட கட்டளை ஏற்று அதை திறம்பட செய்து வரும் நம் தாள எழுத்தாளர் திரு சுந்தர்ஜி அவர்களை இந்த நேரத்தில் பாரட்ட வேண்டும்.
சுந்தர்ஜி,
மிகவும் நெகிழ்ச்சியான பதிவு.
திரு மணிகண்டன் அவர்கள் கைகள் எத்துனை மாலைகளை தொடுத்து முருகனுக்கு கொடுத்து இருக்கும். அந்த கைகளுக்கு சான்றோர் முன்னிலையில் சபையில் கிடைத்த கௌரவம்………………. அந்த குமரனின் திருவிளையாடல் அன்றி வேறு எதுவும் இல்லை.
மணிகண்டன் அவர்களின் சேவை தொடர வாழ்த்துக்கள்.
சுந்தர்ஜி,
எப்படிப்பா ………….. இப்படி எல்லாம் ……….. யோசித்து யோசித்து
கௌரவம் செய்கின்றீர்கள். எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. வாழ்த்துக்கள் சொல்வதை தவிர . வாழ்க வளமுடன்.
கலி பிடித்து உழலும் நம்மை கரையேற்றும் கந்தன் கருணை…….
விழிக்குத் துணை, திரு மென் மலர்ப் பாதங்கள், மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை, முருகா எனும் நாமங்கள், முன்பு செய்த
பழிக்குத் துணை, அவன் பன்னிரு தோளும், பயந்த தனி
வழிக்குத் துணை, வடிவேலும் செங்கோடன் மயூரமுமே!
வழிக்குத் துணை ……. வழித்துணை நாதரின் மகனின் வேலும் மயிலும் ….
நெகிழ வைக்கிறீர்கள் சுந்தர் அவர்களே!!!!!!!!!!!!!!!!!!!!!
டியர் சுந்தர்ஜி
ஹாப்பி morning
நேரில் இந்த நிகழ்ச்சியை பார்த்து மிகவும் பரவசமானேன். மணிகண்டனை சான்றோர்கள் அவையில் நீங்கள் கெளரவித்து அவரை மகிழ்ச்சி கடலில் திக்குமுக்காட வைத்தது அவருக்கு நிஜமாகவே மேலும் நற்பணி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கட்டாயம் இருந்திருக்கும்.. அவரை ஊககுவித்த உங்களுக்கு மிக்க நன்றி.
உமா