Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, October 8, 2024
Please specify the group
Home > Featured > பாக்கியசாலிகள் யார் தெரியுமா? Rightmantra Prayer Club

பாக்கியசாலிகள் யார் தெரியுமா? Rightmantra Prayer Club

print

ம்மிடம் இல்லாதவற்றுக்காக இறைவனுக்கு நன்றி கூறுவோம். ஏனெனில் அவை தான் இறைவனை நமக்கு அடையாளம் காட்டுகின்றன!

நமக்கு ஏதாவது தெரியவில்லை என்றால் இறைவனுக்கு நன்றி கூறுவோம். ஏனெனில் புதியவைகளை கற்றுக்கொள்ள அது வாய்ப்பளிக்கிறது.

12_Lotus-feet-of-Sri-Krishna-chandra

சோதனையான காலகட்டம் வரும்போது இறைவனுக்கு நன்றி கூறுவோம். ஏனெனில் அது தான் நம்மை சுற்றியிருப்பவர்களை நமக்கு அடையாளம் காட்டுகிறது.

நம்மிடம் உள்ள குறைபாட்டுக்காக இறைவனுக்கு நன்றி கூறுவோம். ஏனெனில், அது நம்மை நாம் மேம்படுத்திக்கொள்ள உதவுகிறது.

நாம் செய்த தவறுகளுக்காக இறைவனுக்கு நன்றி கூறுவோம். ஏனெனில், அது பாடங்களை கற்றுக்கொள்ள உதவுகிறது.

நமது பாதையில் நமக்கு ஏற்படும் தடைகளுக்கு நன்றி கூறுவோம். ஏனெனில் அது நமது மனவுறுதியை அதிகரிக்கிறது.

நாம் சந்திக்கும் துரோகங்களுக்கு இறைவனுக்கு நன்றி கூறுவோம். ஏனெனில் அது எப்போதும் நம்மை விழிப்புடன் இருக்கச் செய்கிறது.

நாம் சந்திக்கும் அவமானங்களுக்கு இறைவனுக்கு நன்றி கூறுவோம். ஏனெனில் அது நாம் நம்மை உணர வழி ஏற்படுத்துகிறது.

நமக்கு கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போனால் இறைவனுக்கு நன்றி கூறுவோம். ஏனெனில் அதை விட சிறந்த ஒன்றை பெறுவதற்கு அது உதவுகிறது.

நம்மை யாராவது உதாசீனப்படுத்தினால் இறைவனுக்கு நன்றி கூறுவோம். ஏனெனில் தகுதியற்றவர்களிடம் வைக்கப்படும் நமது அன்பு காப்பாற்றப்படுகிறது.

எப்பொழுதும் எந்த சூழ்நிலையிலும் இறைவனுக்கு நன்றி கூறுவோம்.

இறைவனிடம் என்றும் எதற்கும் நன்றியுடன் இருப்பவர்களே பாக்கியசாலிகள். ஏன் தெரியுமா? அவர்களுக்கு தான் அவனிடம் எதிர்பார்க்கவும் உரிமையிருக்கிறது. பெற்றுகொள்ளவும் தகுதியிருக்கிறது.

=========================================================

பெரிய இடத்து பெண்!

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் பாரதி கண்ட புதுமைப் பெண் பாஸிட்டிவ் கௌசல்யா. கௌசல்யாவை பற்றி உங்களுக்கு அறிமுகம் தேவையில்லை. நமது பாரதி விழாவின் கௌரவ விருந்தினர்களில் ஒருவர்.

Positive Kousalya Periasamyt
பாஸிட்டிவ் கௌசல்யா நம் பாரதி விழாவில் உரையாற்றும் அந்த பொன்னான தருணம்!

சொந்த அத்தை மகனை மணந்த கௌசல்யாவுக்குத் திருமணம் ஆன பத்தாம் நாளே காய்ச்சல். சோதனை முடிவில் அவருக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்பு இருப்பதாகத் தெரியவந்தது. லாரி டிரைவரான அத்தை மகன், விஷயத்தை மறைத்து இவரை மணம் செய்திருந்தார். திருமணமான ஏழாவது மாதம் கணவர் தற்கொலை செய்து கொண்ட போது கௌசல்யாவுக்கு வயது 20. ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தாலும் சமூகத்தாலும் எப்படியெல்லாம் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்த கௌசல்யா, ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார். சென்னையில் ’98-ல் ‘பாஸிட்டிவ் விமன் நெட்வொர்க்’ என்ற அமைப்பைத் துவக்கினார். அது இப்போது பல மாநிலங்களில் கிளை விரித்துள்ளது. ஹெச்.ஐ.வி. பாதித்த பெண்களுக்கு கவுன்சிலிங், அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு தேவையான வாழ்வாதரங்களை ஏற்படுத்துவது என சமூக தொண்டாற்றிவருகிறார்.

DSC_6363

இறைவனின் நேரடி பார்வையில் இருக்கும் அவன் பணியாள் கௌசல்யா என்றால் மிகையாகாது. (ஆகையால் தான் அவரை பெரிய இடத்து பெண் என்று கூறியிருக்கிறோம்!) எச்.ஐ.வி.யால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு உதவுவதற்கென்றே இவர் படைக்கப்பட்டிருக்கிறார். ஏனெனில் சமுதாயத்தால் புறக்கணிக்கப்படும் அவர்களை பற்றி கவலைப்படவும் ஒருவர் வேண்டுமல்லவா? எனவே தான் இவரை போன்றவர்களுக்கு இறைவன் சோதனையை தந்து அதன் மூலம் இன்று எத்தனையோ பெண்களின் வாழ்வில் நம்பிக்கை ஒளியை ஏற்றி வைத்திருக்கிறான்.

DSC_6364

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்ட போது மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். கௌசல்யா பெரியசாமி அவர்கள் நமது பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பதை நாம் மிகவும் பெருமையாக கருதுகிறோம். நிச்சயம் இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியிருப்பவர்களுக்கும் சரி… இதுவரை அனுப்பியிருப்பவர்களுக்கும் சரி… அனைத்து எண்ணங்களும் ஈடேறும் என்பது உறுதி.

====================================================================

நம் சிறந்த வாசகர் & சிறந்த தொண்டர்!

இந்த வார பிரார்த்தனைக்கு முதலில் கோரிக்கை அனுப்பியிருக்கும் திரு.சத்தியநாதன் தனது கடிதத்தில் கூறியிருப்பதை போன்று நம் சிறந்த வாசகர் & சிறந்த தொண்டர் ஆவார். இவரது உதவி இல்லையேல் ஆண்டுவிழாவும் சரி, பாரதி விழாவும் சரி முழுமை பெற்றிருக்காது. நமது பல அறப்பணிகளில் தோள் கொடுத்து எந்த வித எதிர்பார்ப்புமற்ற உதவிகளை நமது தளம் வழியே சமூகத்திற்கும் ஆன்மீக உலகிற்கும் செய்து வருகிறார்.

இவர் தற்போது தனது பணி தொடர்பாக கேட்டிருப்பது கூட, ஒரு வகையில் தனது சேவையை இன்னும் சிறப்பாக செய்யத்தான். சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்? சூழ்நிலைகள் சாதகமாக இருந்தால்  எப்பேர்ப்பட்டவர்களாலும் தர்மகாரியங்களை தொடர்ந்து செய்ய முடியும்? எனவே அவரது கோரிக்கையில் உள்ள நியாயத்தை அவரது வார்த்தைகளிலேயே நீங்கள் உணர்ந்துகொள்ளமுடியும்.

சிலருடைய வசந்தத்தில் இரசிப்பதற்கு ஒன்றும் இருக்காது. அதாவது அதனால் அவர்கள் குடும்பத்தினரை தவிர வேறு எவருக்கும் எந்த பயனும் இருக்காது. ஆனால் இவரை பொருத்தவரை இவர் வாழ்வில் ஏற்படும் வசந்தம் நமது பல அறப்பணிகளுக்கு துணையாய் விளங்கி நமது பயணத்தையும் அர்த்தமுள்ளதாக்கும் என்பதால் வாசகர்கள் நண்பர்கள் அனைவரும் இவருக்காக பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஒரு MORAL SUPPORT!

அடுத்து ராதாமணி அவர்கள். நமது தளத்தின் பிரதான வாசகிகளில் ஒருவர். கமெண்ட் பகுதிகளில் தவறாமல் வந்து தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டு நம்மையும் உங்களையும் உற்சாகப்படுத்தி வருபவர்.  நமது பணிகளில் என்றும் ஒரு MORAL SUPPORT ஆக இருப்பவர். எத்தனையோ பிரச்னைகள் தனக்கிருந்த போதும், இறைவனிடம் பிறர் நலன் வேண்டும் ஒரு நல்ல ஜீவன்.

இவருடைய பிரார்த்தனைகள் சீக்கிரம் நிறைவேறி இவரும் இவர் குழந்தைகளும் அனைத்து நலன்களையும் சந்தோஷங்களையும் பெற இறைவனை வேண்டுவோம்.

====================================================================

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

Expecting a best job to serve better!

Friends,

I am an ardent reader and follower of Rightmantra,com ever since its inception.

I am staying in Abudhabi and working in Dubai and for the past 1 yr. I am driving 250 kms per day, so i want to change job in Abudhabi. Transfering a job is not easy, lot of formalities are there, first i have to get a good place for work, why bcoz in 2012 i changed my job and the worst thing happened, nearly one full year I have wasted, since my wife is also employed and by gods grace i came from difiucult situation, so again i dont want to face the same situation. So kindly pray for me to get a good job in Abudhabi.

Also pray for my family and children’s health and happiness forever.

– Sathiyanathan, UAE

====================================================================

என் குழந்தைக்கு நோயற்ற வாழ்வும் நல்ல கல்வியும் வேண்டும்! எனக்கொரு சிறந்த துணை அமையவேண்டும்!!

சுந்தர்ஜி மற்றும் ரைட்மந்த்ரா குடும்பத்தினருக்கு என் பணிவான வணக்கங்கள்.

கடந்த  ஜுலை மாதம் நமது பிரார்த்தனை கிளப் மூலம் எனது குழந்தைகளுக்கு நல்ல ஒரு தந்தை மற்றும் எனக்கும் ஒரு மறுவாழ்வு வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தேன். இதைத் தொடர்ந்து நம் தளத்தின் வாசகி ஆனேன்.

எனக்கு இரு குழந்தைகள். ராகுல், பிரீத்தி.

என் குடும்ப சூழ்நிலை காரணமாகவும் அவனது நல்ல கல்விக்காகவும் ராகுலை கோவை ராமகிருஷ்ண வித்யாலயத்தில் விடுதி மாணவனாக சேர்த்து இருந்தோம். அங்கு அவனது உடல் நலம் அடிக்கடி பாதிக்கப்படுகிறது. அவன் கல்வியும் இதனால் தடைபடுகிறது. கணவர் இல்லாத சூழ்நிலையில் பணிக்கு செல்ல வேண்டியிருக்கும் எனக்கு இதனால் அலைச்சலும் மன வேதனையும் அதிகரிக்கிறது.

எனவே என் குழந்தை ராகுல், பரிபூரண உடல்நலத்துடன் சந்தோஷமாக கல்வி பயில அவனுக்காக பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எனது முந்தைய வேண்டுதலுக்காகவும், ரைட் மந்த்ரா வாசகர்கள் அனைவரையும் பிரார்த்தனை செய்யுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

நன்றி!

ராதாமணி,
கோயமுத்தூர்

===========================================================

நம் பொது பிரார்த்தனை

எய்ட்ஸ் இல்லா தமிழகம்! எச்.ஐ.வி. இல்லா பாரதம்!!

தமிழகத்தில் எச்.ஐ.வி. யால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக திருமணம் மூலம் மட்டுமே எய்ட்ஸ் பாதிப்புக்கு உள்ளாகும் அப்பாவி பெண்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருகிறது. நாமக்கல்லில் மட்டும் சுமார் 20,000 எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட பெண்கள் உள்ளனராம்.

எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட குழந்தைகள் காப்பகத்தில்....
எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட குழந்தைகள் காப்பகத்தில்….

ஒருபுறம் எய்ட்ஸ் நோயாளிகள் உயர்ந்துகொண்டே வர, மறுபுறம் தாங்கள் எந்த விதத்திலும் நேரடி சம்பந்தம் இல்லாமல் பாதிப்புக்கு உள்ளானவர்களை அறியாமல் திருமணம் செய்துகொள்வதன் மூலம், பாதிக்கப்படும் பெண்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றனர்.

எச்.ஐ.வி. பாதிப்புக்கு உள்ளானவர்கள் சமூகத்தில் படும் பாடு சொல்லி மாளாது. ஒரு புறம் புறக்கணிப்பு, மறுபுறம் அவமதிப்பு, மற்றொரு புறம் குடும்பத்தினரின் பாராமுகம் என அவர்கள் நெருப்பிலிட்ட புழுவாய் துடிக்கின்றனர்.

அவர்களுக்கு உரிய மருத்துவமோ சிகிச்சையோ சத்தான உணவுகளோ தற்போது கிடைப்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது.

எச்.ஐ.வி.க்கு எதிராக போராடி வரும் கௌசல்யா போன்றவர்களின் போராட்டம் வெற்றி பெறவேண்டும். எச்.ஐ.வி. என்பதே இல்லாத நாடு இந்தியா என்று உலக அரங்கில் நம் நாடு பெயர் பெறவேண்டும்.

இந்த வார பிரார்த்தனைக்கு தலை ஏற்கும் ‘பாரதி கண்ட புதுமை பெண்’ கௌசல்யா அவர்கள் தனது போராட்டத்தில் வெற்றி பெற்று நோயற்ற வாழ்வையும் குறைவற்ற செல்வத்தையும் பெற்று வாழ்வாங்கு வாழ இறைவனை வேண்டுவோம்.

மகாகவி பாரதியின் ஆன்மா கௌசல்யா அவர்களுக்கு என்றும் துணையிருப்பதாக!

===========================================================

வாசகர் நண்பர் திரு.சத்தியநாதன் அவர்களுக்கு அவர் விரும்பும் வகையில் நல்ல இடத்தில் வேலை கிடைக்கவும், அவர் குடும்பத்தினர் சகல சௌபாக்கியங்களையும் பெற்று மகிழ்ச்சியோடு இருக்கவும் வாசகி ராதாமணி அவர்களின் மகன் ராகுலுக்கு அடிக்கடி ஏற்படும் உடல்நல பாதிப்பு நீங்கி அக்குழந்தை பரிபூரண ஆரோக்கியத்துடன் கல்வி பயிலவும் ராதாமணி அவர்களுக்கு சிறந்ததொரு எதிர்காலம் உடனே அமையவும், எய்ட்ஸ் இல்லா தமிழகமும் எச்.ஐ.வி. இல்லா பாரதமும் காண இறைவனை வேண்டுவோம்.

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgபிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை சொல்லை பிரார்த்தித்துவிட்டு கூடவேஇங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : டிசம்பர் 15, 2013 ஞாயிறு  நேரம் : மாலை 5.30 – 5.45

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

============================================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

=============================================================உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=======================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131
=======================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் :  இராமம்பாளையம் பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் சரஸ்வதி மற்றும் ஆசிரியர் பிராங்க்ளின்

[END]

17 thoughts on “பாக்கியசாலிகள் யார் தெரியுமா? Rightmantra Prayer Club

  1. அமர்க்களம் சுந்தர்…உங்கள் எழுது பிரவாளம் கட்டிப் போட வைக்கிறது….மெய் சிலிர்க்கிறது….உங்கள் அன்புள்ளமும் தொண்டுள்ளமும் சிறந்த முறையில் வாழ்வில் எல்லாவிதத்திலும் நலிவடைந்தவர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது…உங்கள் எண்ணங்கள் எல்லாம் சிறப்பாய் அமைய என்னால் இயன்றவற்றை செய்யக் காத்திருக்கிறேன்….உங்களுக்காக என்னுடைய பிரார்த்தனை என்றும் உண்டு ..ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர… _/\_

    1. தொண்டிற்கு தோள் கொடுப்பேன் என்று கூறியதற்கு மிக்க நன்றி!

      போவோர் வருவோர் கால்களிலெல்லாம் கருவேப்பிலையாக மிதிபட்டுக்கொண்டிருந்த இந்த எளியவன் இன்று துளசி தளமாக மாறி பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறேனென்றால் அதற்கு காரணம் இறைவனின் கருணையேயன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?

      எல்லாப் புகழும் இறைவனுக்கே!

      – சுந்தர்

  2. டியர் சுந்தர்ஜி

    as usual உங்கள் பதிவு மிக அருமை. நீங்கள் மிக பெரிய எழுத்தாளர்.
    கடவுளின் ஆசி உங்களுக்கு எப்பொழுதும் உண்டு. நீங்கள் வெகு விரைவில் உயர்ந்த நிலைக்கு வருவீர்கள்.

    “”நாம் சந்திக்கும் துரோகங்களுக்கு இறைவனுக்கு நன்றி கூறுவோம். ஏனெனில் அது எப்போதும் நம்மை விழிப்புடன் இருக்கச் செய்கிறது.

    நாம் சந்திக்கும் அவமானங்களுக்கு இறைவனுக்கு நன்றி கூறுவோம். ஏனெனில் அது நாம் நம்மை உணர வழி ஏற்படுத்துகிறது.

    நாம் கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போனால் இறைவனுக்கு நன்றி கூறுவோம். ஏனெனில் அதை விட சிறந்த ஒன்றை பெறுவதற்கு அது உதவுகிறது.

    நம்மை யாராவது உதாசீனப்படுத்தினால் இறைவனுக்கு நன்றி கூறுவோம். ஏனெனில் தகுதியற்றவர்களிடம் வைக்கப்படும் நமது அன்பு காப்பாற்றப்படுகிறது.”

    வாசகர் நண்பர் திரு.சத்தியநாதன் அவர்களுக்கு அவர் விரும்பும் வகையில் நல்ல இடத்தில் வேலை கிடைக்கவும், அவர் குடும்பத்தினர் சகல சௌபாக்கியங்களையும் பெற்று மகிழ்ச்சியோடு இருக்கவும் வாசகி ராதாமணி அவர்களின் மகன் ராகுலுக்கு அடிக்கடி ஏற்படும் உடல்நல பாதிப்பு நீங்கி அக்குழந்தை பரிபூரண ஆரோக்கியத்துடன் கல்வி பயிலவும் ராதாமணி அவர்களுக்கு சிறந்ததொரு எதிர்காலம் உடனே அமையவும், எய்ட்ஸ் இல்லா தமிழகமும் எச்.ஐ.வி. இல்லா பாரதமும் காண இறைவனை வேண்டுகிறேன்.

    இந்த வார பிரார்த்தனைக்கு தலை ஏற்கும் ‘பாரதி கண்ட புதுமை பெண்’ கௌசல்யா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி

    தேங்க்ஸ் அண்ட் regards

    ரைட் manthra ardent reader உமா

  3. இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கும் கௌசல்யா அவர்களுக்கு எங்கள் நன்றிகள்.

    சகோதரர் சத்தியநாதன் அவர்களுக்கு அமுதாபியில் அவர் விரும்பிய வேலை கிடைக்கவும், ராதாமணி அவர்களின் குழந்தை விரைவில் நலம் பெற்று, பூரண உடல்நலத்துடன் சந்தோஷமாக கல்வி பயிலவும், எய்ட்ஸ் இல்லா உலகம் வேண்டியும் மனம் உருகி பிரார்த்தனை செய்வோம்.

  4. The following பதிகம் is for getting job by திருஞானசம்பந்தர்

    வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
    வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
    ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே
    சூழ்க வையக முந்துயர் தீர்கவே.

    அரிய காட்சிய ராய்த்தம தங்கைசேர்
    எரியர் ஏறுகந் தேறுவர் கண்டமுங்
    கரியர் காடுறை வாழ்க்கைய ராயினும்
    பெரிய ராரறி வாரவர் பெற்றியே.

    வெந்த சாம்பல் விரையெனப் பூசியே
    தந்தை யாரொடு தாயிலர் தம்மையே
    சிந்தி யாஎழு வார்வினை தீர்ப்பரால்
    எந்தை யாரவர் எவ்வகை யார்கொலோ.

    ஆட்பா லவர்க் கருளும் வண்ணமும் ஆதிமாண்புங்
    கேட்பான் புகில்அள வில்லை கிளக்க வேண்டா
    கோட்பா லனவும் வினையுங் குறுகாமை யெந்தை
    தாட்பால் வணங்கித் தலைநின் றிவைகேட்க தக்கார்.

    .
    ஏதுக்க ளாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்
    சோதிக்க வேண்டா சுடர்விட் டுளன் எங்கள்சோதி
    மாதுக்கம் நீங்க லுறுவீர் மனம்பற்றி வாழ்மின்
    சாதுக்கள் மிக்கீர் இறையே வந்து சார்மின்களே.

    ஆடும் மெனவும் அருங்கூற்றம் உதைத்து வேதம்
    பாடும் மெனவும் புகழல்லது பாவம் நீங்கக்
    கேடும் பிறப்பும் அறுக்கும் மெனக்கேட்டீ ராகில்
    நாடுந் திறத்தார்க் கருளல்லது நாட்ட லாமே.

    கடிசேர்ந்த போது மலரான கைக்கொண்டு நல்ல
    படிசேர்ந்த பால்கொண்டங் காட்டிடத் தாதை பண்டு
    முடிசேர்ந்த காலையற வெட்டிட முக்கண் மூர்த்தி
    அடிசேர்ந்த வண்ணம் அறிவார் சொலக்கேட்டு மன்றே.

    வேத முதல்வன் முதலாக விளங்கி வையம்
    ஏதப் படாமை யுலகத்தவர் ஏத்தல் செய்யப்
    பூத முதல்வன் முதலே முதலாப் பொலிந்த
    சூதன் ஒலிமாலை யென்றே கலிக்கோவை சொல்லே.

    .
    பாராழி வட்டம் பகையால் நலிந்தாட்ட ஆடிப்
    பேராழி யானதிடர் கண்டருள் செய்தல் பேணி
    நீராழி விட்டேறி நெஞ்சிடங் கொண்ட வர்க்குப்
    போராழி யீந்த புகழும் புகழுற்ற தன்றே.

    மாலா யவனும் மறைவல்ல நான் முகனும்
    பாலாய தேவர்பக ரில்லமு தூட்டல் பேணிக்
    காலாய முந்நீர் கடைந்தார்க் கரிதா யெழுந்த
    ஆலாலம் உண்டங்கம ரர்க்கருள் செய்த தாமே.

    அற்றன்றி அந்தண் மதுரைத் தொகை யாக்கினானுந்
    தெற்றென்ற தெய்வந் தெளியார் கரைக்கோலை தெண்ணீர்ப்
    பற்றின்றிப் பாங்கெதிர் வினூரவும் பண்பு நோக்கில்
    பெற்றொன் றுயர்த்த பெருமான் பெருமானு மன்றே.

    .
    நல்லார்கள் சேர்புகலி ஞானசம் பந்தன் நல்ல
    எல்லார் களும்பரவும் ஈசனை யேத்து பாடல்
    பல்லார் களும்மதிக்கப் பாசுரஞ் சொன்ன பத்தும்
    வல்லார்கள் வானோ ருலகாளவும் வல்ல ரன்றே.

    திருச்சிற்றம்பலம்

  5. The following பதிகம் is for good health getting by திருநாவுக்கரசர்

    தலையே நீவணங்காய் – தலை
    மாலை தலைக்கணிந்து
    தலையா லேபலி தேருந் தலைவனைத்
    தலையே நீவணங்காய்.

    கண்காள் காண்மின்களோ – கடல்
    நஞ்சுண்ட கண்டன்றன்னை
    எண்டோ ள் வீசிநின் றாடும் பிரான்றன்னைக்
    கண்காள் காண்மின்களோ.

    செவிகாள் கேண்மின்களோ – சிவன்
    எம்மிறை செம்பவள
    எரிபோல் மேனிப்பி ரான்றிறம் எப்போதுஞ்
    செவிகள் கேண்மின்களோ.

    மூக்கே நீமுரலாய் – முது
    காடுறை முக்கணனை
    வாக்கே நோக்கிய மங்கை மணாளனை
    மூக்கே நீமுரலாய்.

    வாயே வாழ்த்துகண்டாய் – மத
    யானை யுரிபோர்த்துப்
    பேய்வாழ் காட்டகத் தாடும் பிரான்றன்னை
    வாயே வாழ்த்துகண்டாய்.

    நெஞ்சே நீநினையாய் – நிமிர்
    புன்சடை நின்மலனை
    மஞ்சா டும்மலை மங்கை மணாளனை
    நெஞ்சே நீநினையாய்.

    கைகாள் கூப்பித்தொழீர் – கடி
    மாமலர் தூவிநின்று
    பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக்
    கைகாள் கூப்பித்தொழீர்.

    ஆக்கை யாற்பயனென் – அரன்
    கோயில் வலம்வந்து
    பூக்கை யாலட்டிப் போற்றி யென்னாதவிவ்
    வாக்கை யாற்பயனென்.

    கால்க ளாற்பயனென் – கறைக்
    கண்ட னுறைகோயில்
    கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக்
    கால்க ளாற்பயனென்.

    உற்றா ராருளரோ – உயிர்
    கொண்டு போம்பொழுது
    குற்றா லத்துறை கூத்தனல் லால்நமக்
    குற்றார் ஆருளரோ.

    இறுமாந் திருப்பன்கொலோ – ஈசன்
    பல்கணத் தெண்ணப்பட்டுச்
    சிறுமா னேந்திதன் சேவடிக் கீழ்ச்சென்றங்
    கிறுமாந் திருப்பன்கொலோ.

    தேடிக் கண்டுகொண்டேன் – திரு
    மாலொடு நான்முகனுந்
    தேடித் தேடொணாத் தேவனை என்னுளே
    தேடிக் கண்டுகொண்டேன்.

    திருச்சிற்றம்பலம்

    1. பொருத்தமான பதிகங்களை தகுந்த நேரத்தில் பகிர்ந்தமைக்கு நன்றி உமா அவர்களே.

      – சுந்தர்

  6. சுந்தர்ஜி
    இன்றைய பிரார்த்தனை பதிவு என்னை பொருத்தவரை ஒரு வரபிரசாதம். ராமருக்கு இருந்த அவ்வளவு பெரிய படைபலத்திலும் ஒரு சிறு அணில் செய்த சிறு உதவிக்கு மகத்தான கௌரவம் ராமர் அதற்கு கொடுத்தார். அதை போல் என்னை தளத்திற்கு MORAL சப்போர்ட் என குறிப்பிட்டது உங்களின் பெருந்தன்மை. ஏன் என்றால் நம் தளமும் வாசகர்களும் எனக்கு தான் மாரல் சப்போர்ட். வாழ்க்கையே வெறுத்த நிலையில் அடுத்து என்ன செய்வது எனதெரியாமல் பல முறை குழம்பிய நிலையில் நம் தளமும் நல்லோர் நட்பும் , அதோடு மஹா பெரியவா திருவடி நிழலும் எங்கள் குடும்பத்திற்கு கிடைத்தது மிகபெரிய புண்ணியம்.

    இந்த வாரம் பிரார்த்தனைக்கு தலைமை தாங்கும் திருமதி கௌசல்யா அவர்களை வணங்குகிறேன். அவருக்கு இறைவன் நீண்ட ஆயுளை கொடுத்து அவர் பணியில் துணை நிற்கட்டும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை படத்தில் பார்க்க மனம் உருகுகிறது. பெரியவர்கள் செய்யும் தவறுகளுக்கு குழந்தைகளுக்கு எவ்வளவு கொடுமையான தண்டனை. இறைவா சீக்கிரம் இவர்களுக்காக மனம் இறங்கு! எய்ட்ஸ் இல்லா உலகம் விரைவில் கிடைக்கட்டும்.

    திரு.சத்தியநாதன் அவர்களுக்கு நல்ல பணி அவர் விரும்பிய மாதிரி கிடைத்து தன் சேவையை தொடரவும், எங்கள் குடும்பத்தின் வேண்டுதலுக்கும் கூட்டு பிரார்த்தனை செய்யவிருக்கும் அனைத்து ரைட் மந்திரா வாசகர்களுக்கும் சுந்தர்ஜி அவர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். நீங்கள் அனைவரும் வாழ்வாங்கு வாழ நானும் மஹா பெரியவாவை உள்ளன்போடு வேண்டிகொள்கிறேன் .
    நன்றி

  7. சுந்தர்ஜி
    இறைவனுக்கு நன்றி கூறுவோம் என்ற வார்த்தைக்கு தான் எதனை மகிமை. முதலில்
    நம்மை மனிதனாக படைத்ததற்கு இறைவனுக்கு நன்றி கூறுவோம்.
    கை, கால்.கண் சுகமாய் படைத்ததற்கு இறைவனுக்கு நன்றி கூறுவோம்.
    rightmantra என்ற தளம் நமக்கு தந்ததற்கு இறைவனுக்கு நன்றி கூறுவோம்.
    இந்த தளத்தில் நமக்காக ஆன்மிகம், சுயமுன்னேற்றம் , ஆலய தரிசனம், நீதிகதைகள் , ரோல் மாடல் , வி ஐ. பி , மஹா பெரியவா போன்ற அருமையான பதிவுகள் அளிக்கும் நம் தாள எழுத்தாளர் நம் சுந்தர்ஜி போன்ற நல்வரை நமகளித்த இறைவனுக்கு நன்றி கூறுவோம்

    இந்த வார பிரார்த்தனைக்கு தலை ஏற்கும் ‘பாரதி கண்ட புதுமை பெண்’ கௌசல்யாவை நமகளித்த இறைவனுக்கு நன்றி கூறுவோம்

    பிறருக்காக பிராத்தனை செய்யும் அன்னைவருக்கும் நன்றி கூறுவோம்

  8. நாம் இறைவனுக்கு நன்றி கூறும் பொன்மொழிகள் கீதசாரம் போல அருமையாக உள்ளது. நீங்கள் கூறி உள்ளதை பார்த்தால் அவனுக்கு நன்றி கூற அவன் பல சந்தர்பங்களையும் பல வெற்றி தோல்விகளையும் நமக்கு கொடுத்துள்ளான்.
    கௌசல்யா மேடம் அவர்களை பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.
    மனித நேயத்திற்கு ஒரு முன்மாதிரியாக விளங்குபவர்.
    திரு சத்தியநாதன் அவர்களுக்கு நல்ல ஒரு வேலை கிடைத்து அவர் குடும்பம் சந்தோசமாக இருக்கவும், மற்றும் சகோதரி ராதாமணி அவர்களுக்கு அவர் எதிர்பார்த்தபடி நல்ல துணை அமைய வேண்டுவோம். மேலும் அவர் குழந்தைகள் நலமுடன் குணமடைய வேண்டுவோம்.
    எல்லாம் கூடிய விரைவில் மங்கலமாக நடக்கும் மகா பெரியவர் அருளால்.

  9. சுந்தர்ஜி,

    இந்த வாரம் தலைமை ஏற்று இருக்கும் திருமதி கௌசல்யா அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். கடவுள் நேரில் வருவது இல்லை நிச்சயம் கௌசல்யா போன்று எந்த பலா பலன்களையும் எதிர் பார்க்காமல் உதவி வரும் அவரிடம் நிச்சயம் உடன் இருப்பார். இந்த வார பிரார்த்தனையை அவர் ஏற்று கொண்டது நாம் செய்த புண்ணியம் அன்றி வேறு எதுவம் இல்லை.

    குறை, தவறு,தடை, துரோகம்.அவமானம் கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போனது, உதசீனபடுதுவது எல்லாவற்றுக்கும் தாங்கள் கொடுத்துள்ள விளக்கம் எங்களை பக்குவ படுத்துகின்றது.

    மனதார சொல்கின்றேன். உண்மையில் ரைட் MANTRA கிடைத்தது நாங்கள் செய்த புண்ணியம் ஆகும்.

    வாசகர் நண்பர் திரு.சத்தியநாதன் அவர்களுக்கு அவர் விரும்பும் வகையில் நல்ல இடத்தில் வேலை கிடைக்கவும், அவர் குடும்பத்தினர் சகல சௌபாக்கியங்களையும் பெற்று மகிழ்ச்சியோடு இருக்கவும் வாசகி ராதாமணி அவர்களின் மகன் ராகுலுக்கு அடிக்கடி ஏற்படும் உடல்நல பாதிப்பு நீங்கி அக்குழந்தை பரிபூரண ஆரோக்கியத்துடன் கல்வி பயிலவும் ராதாமணி அவர்களுக்கு சிறந்ததொரு எதிர்காலம் உடனே அமையவும், எய்ட்ஸ் இல்லா தமிழகமும் எச்.ஐ.வி. இல்லா பாரதமும் காண இறைவனை வேண்டுவோம்.

    நன்றி.

  10. சுந்தர் சார், உங்கள் வாக்கியம் எனக்கு நம்ம்பிக்கை துளிர்க்க செய்கின்றன. நான் தினமும் கடவுளை வணங்குபவன், ஒவ்வொரு வாரமும் தவறாமல் நான் பிராத்தனை செய்கின்றேன். எனக்கு என் தங்கை மற்றும் நண்பன் நன்றாக இருந்தால் போதும், எல்ல்லோரும் தயவு செய்து என் தங்கைக்காக மீண்டும் ஒரு முறை பிராத்திக்க வேண்டுகிறேன்.

  11. மிளகுப் பொதியை எடுத்துச் சென்ற வணிகனுக்கு விரிஞ்சிபுரம் [வேலூர் அருகே] இறைவன் வழித் துணையாகச் சென்றதால் விரிஞ்சிபுரம் பெருமான் வழித்துணை நாதர்[மார்க்கபந்தீஸ்வரர்] என்ம் பெயர் பெற்றார். சிவபெருமானின் திருமுடி.யைக் காண பிரம்மனும் பாதத்தினைக் கண்டு வருவதாக திருமாலும் சென்ற வேளை நான்முகன் சிவனின் திருமுடியினைத் தொட்டதாகப் பொய் ஒன்றைக் கூறினார் அதற்குத் தண்டனையாக மனித உருவத்தினைப் பெற்று விரிஞ்சிபுரம் வழித்துணைநாதர் இறைவனைப் பூசை செய்து வந்த தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார் நான்முகன். சிவசர்மன் எனப்பெயரிடப்பட்ட அவர் தன் ஜந்தாம் வயதில் தந்தையினை இழந்தார், பூசை செய்யும் உரிமையினை உறவினர் பறித்துக்கொண்டனர். இதனால் கவலையுற்ற சிவசர்மனின் தாயார் சிவனிடம் மன்றாட சிவன் அவர் கனவில் தோன்றி திருக்கோயிலின் பிரம்ம தீர்த்தத்தில் மகனை நீராட்டிக் காத்திருக்கும் படியும் தாம் வழிகாட்டுவதாகவும் கூறினார் எனக் கருதப் படுகின்றது. கனவு கண்ட மறுநாள் கார்த்திகை கடைசி ஞாயிற்றுக்கிழமை ஒரு முதியவர் உருவில் வந்த அம்பலவாணன்[சிவன் ] சிவசர்மனுக்குப் பூணூல் அணிவித்து, பிரம்ம, சிவதீட்சை அனைத்தும் செய்து மறைந்ததாகக் கூறப்படுகின்றது. விரிஞ்சிபுரத்தில் அமைந்துள்ள சிம்மக்குளத்தில் நீராடி சிவனுக்கு அபிசேகம்,அர்ச்சனை செய்து வழிபட்டால் உங்கள் குழந்தைக்கும் ,அவனது படிப்புக்கும் வழித்துணை நாதர்[மார்க்கபந்தீஸ்வரர்] சத்தியமாய் துணை வருவார் …கல்வியிலும் சிறந்து விளங்கலாம் …..பில்லி,சூன்யம் ,நோய்கள் யாவும் சிம்மகுளத்தில் நீராடி வழிபட்டால் விலகும் …அதுபோல் உங்களுக்கு மறுமணம் நடைபெறவும் விரிஞ்சிபுரம் சென்று சிம்மக்குளத்தில் நீராடி சிவனுக்கு அபிசேகம்,அர்ச்சனை செய்து வழிபட்டால்மறுமணம் கூடி வரும் …. கூடவே தினமும் 3 முறை மார்க்கபந்து ஸ்தோத்திரதை[(ஸ்ரீ அப்பய்ய தீக்ஷிதரால் இயற்றப்பட்டது.வாழ்வின் இறுதியில் சிதம்பரம் திருக்கோவிலில் ஆடல்வல்லான் பெருமானையும், கோவிந்தராஜப் பெருமாளையும் வழிபட்டு தோத்திரம் அருளினார். ஒரு நாள் பிரதோஷ வேளையில், தில்லை நடராஜப் பெருமானோடு ஒன்றிவிட்டார். தில்லையில் இறைவனோடு ஐக்கியமானவர்கள் மூவர்; மாணிக்கவாசகர்
    நந்தனார் மற்றும்
    அப்பய்ய தீட்சிதர் )]. படித்து வாருங்கள் ..சிவனே துணை வருவார் ….மனித வாழ்வில் எந்த நிலையில் பார்த்தாலும் ஒரு துணை தேவைப் படுகிறது. மனிதன் பிறந்ததும் தாயின் துணையோடு வாழ ஆரம்பிக்கிறான். கொஞ்சம் பெரியவனாகி விளையாடும் பருவம் வந்ததும் விளையாட ஒரு துணை தேவைப்படுகிறது. பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்ததும் பக்கத்து வீட்டுப் பெரிய பையனோ, பெரிய பெண்ணோ, ஆயாவோ துணைக்குவருகிறார்கள்.பரீக்ஷை வந்து விட்டால் பேப்பரில் ஸரஸ்வதி துணை. முருகன் துணை என்று மாணவர்கள் தங்கள் இஷ்ட தெய்வங்களைத் துணைக்கு அழைக்கிறார்கள்.வேலை கிடைத்து திருமணம்! வாழ்க்கைத்துணை!இப்பொழுதும் லாரிகளிலும் ஆட்டோக்களிலும் பார்வதியம்மன் துணை, ஐயா துணை, பேச்சியம்மன் துணை என்று எழுதப்படுகிறது. யாராவது வெளியூர் சென்றால் வீட்டில் விளக்கேற்றி வைத்து மார்க்க பந்து ஸ்தோத்திரம் சொல்லி விபூதி இட்டு அனுப்பி வைப்பார்கள். “மார்க்கபந்து” என்றால் வழித்துணை என்று பொருள். வழித்துணையாக சிவபெருமான் வந்து காக்க வேண்டும் என்று அந்த தோத்திரம் சொல்கிறது.இப்படி நமது வாழ்க்கையில் ஒவ்வொரு இடத்திலும் துணை தேவைப் படுகிறது ,விரிஞ்சிபுரம்வழித்துணை நாதர்[மார்க்கபந்தீஸ்வரர்] கண்டிப்பாக நமக்கு துணையாய் வருவார்…நல்ல வேலை கிடைக்கவும் ,கிடைத்த வேலை நன்கு அமையவும் விரிஞ்சிபுரம்வழித்துணை நாதர்[மார்க்கபந்தீஸ்வரர்] நம் கூடவே வருவார்…அயல் நாட்டில் இருப்போரும் , துணை இல்லாதவர்களும் சென்று வழிபட்டு ,மார்க்க பந்து ஸ்தோத்திரம் தினமும் 3 முறை சொல்லி வாருங்கள் ..வசந்தம் தேடி வரும் …
    “சம்போ மஹாதேவ தேவ, சிவ சம்போ மஹா தேவ. தேவேச சம்போ, சம்போ மஹாதேவ தேவ”

    ஆதி சிவன் தாள் பணிந்து அருள் பெறுவோமே!
    ஆதி சக்தி நாயகனின் துணை பெறுவோமே!

  12. சம்போ மஹாதேவ தேவ சிவ சம்போ மஹா தேவ
    தேவேச சம்போ சம்போ மஹாதேவ தேவ

    பாலாவநம் ரத்ந கிரீடம் பாலநேத்ராச்சிஷா தக்த பஞ்சேஷுகீடம்
    சூலா ஹதாராதிகூடம் சுத்தமர்த் தேந்து சூடம் பஜே மார்க்க பந்தும் (சம்போ)

    அங்கே விராஜத் புஜங்கம் அம்பரகங்கா தரங்காபி ராமோத்த மாங்கம்
    ஓங்கார வாடீ குரங்கம் ஸித்தஸம்ஸேவி தாங்க்ரிம் பஜே மார்க்க பந்தும் (சம்போ)

    நித்யம் சிதானந்த ரூபம் நின் ஹுதா சேஷலோகேச வைரி ப்ரதாபம்
    கார்த்த ஸ்வரா கேந்த்ர சாபம் க்ருத்தி வாஸம் பஜே திவ்ய ஸன்மார்க்க பந்தும் (சம்போ)

    கந்தர்ப்ப தர்ப்பக்ன மீசம் காலகண்டம் மஹேசம் மாஹ வ்யோ மஹேசம்
    குந்தாபதந்தம் ஹுரேசம் கோடி சூர்ய ப்ரகாசம் பஜே மார்க்க பந்தும் (சம்போ)

    மந்தார பூதேருதாரம் மந்தார கேந்த்ர ஸாரம் மஹா கௌர்ய தூரம்
    ஸிந்தூர தூரப்ராசரம் ஸிந்து ராஜாதி தீரம் பஜே மார்க்க பந்தும் (சம்போ)

    அப்பய்ய யஜ்வேந்த்ர கீதம் ஸ்தோத்ர ராஜம் படேத்யஸ்து பக்த்யா ப்ரயாணே
    தஸ்யார்த்த ஸித்திம் விதத்தே மார்க மத்யே பயம் சாசு தோஸோ மஹேச; (சம்போ)

    ……….மார்க்க பந்து ஸ்தோத்திரம் [ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதர்]

  13. சுந்தர் சார்

    மிகவும் அருமையான பதிவு

    தக்க சமயத்தில் கிடதமைக்கு நன்றி…

  14. என் மகன் மூலம் இந்த தளத்தினை அறிந்தேன். நல்ல செயல்களைச்
    செய்கிறீர்கள். இறைவன் தங்களுக்கு எல்லா அருளையும் அளிக்க
    வேண்டுகின்றேன்.

    அன்புடன்,

    பி.கே.ஜீவன்.
    கும்பகோணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *