Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, September 8, 2024
Please specify the group
Home > Featured > நம்பினோர் கெடுவதில்லை! இது நான்மறை தீர்ப்பு!!

நம்பினோர் கெடுவதில்லை! இது நான்மறை தீர்ப்பு!!

print
ம் தளத்தின் சார்பாக டிசம்பர் 8, ஞாயிறு மாலை நடைபெற்ற 2013 ஆம் ஆண்டு பாரதி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

பாரதி விழாவின் சிறப்பு விருந்தினர்களில் ஒருவரான திரு.வீ.கே.டி. பாலன் அவர்களின் தாயார் எதிர்பாராத விதமாக சில நாட்களுக்கு முன்னர் இயற்கை எய்துவிட, அச்செய்தி நமக்கு பேரிடியாக அமைந்தது. போதாகுறைக்கு சென்னையை திடீரென்று புயல் மையம் கொண்டு பயமுறுத்த, சனிக்கிழமை முழுதும் மழை சென்னையை புரட்டி எடுத்தது. ஞாயிறும் மழை தொடர்ந்தால் என்ன செய்வது என்று கலங்கித் தான் போனோம். அரும்பாடுபட்டு செலவு செய்து நடத்தும் விழா நல்லபடியாக முடியவேண்டுமே… ஒரே பதைபதைப்பு.

DSC_6281

ஒரு பக்கம் சிறப்பு விருந்தினர் பாலன் அவர்கள் வர இயலாத ஒரு சூழ்நிலை. மறுபக்கம் புயல் மழை. மற்றொரு பக்கம் நம்பியவர்களின் பாராமுகத்தால் கடும் நிதி நெருக்கடி. இவற்றால் எதையும் திட்டமிட முடியாது, தடுமாற்றத்திலேயே நேரம் சென்றுகொண்டிருந்தது.

விளைவு… ஏற்கனவே மூன்று நாட்களாக எமக்கு சரியான உறக்கமில்லை. சனிக்கிழமை கேட்கவே வேண்டாம்… உறங்கவே இல்லை.

(http://www.dailythanthi.com/2013-12-08–rained-today-in-the-coastal-districts)

ஒரு பக்கம் மகா பெரியவரிடமும் மறுபக்கம் குன்றத்தூர் முருகனிடமும் பிரார்த்தித்துக்கொண்டே இருந்தோம்.

ஞாயிறு காலை எழுந்தவுடன் முதல்வேலையாக குன்றத்தூர் ஓடிச்சென்று கந்தனிடம் சரணடைந்தோம்.

DSC_6347

சுப்ரமணிய சுவாமியின் காலடியில் நிகழ்ச்சியின் அழைப்பிதழை வைத்துவிட்டு “ஐயனே நிகழ்ச்சியை நல்லபடியாக முடித்துக்கொடுக்க வேண்டியது உன் கடமை. இதில் ஏதேனும் இழப்பு ஏற்பட்டால் அதை எங்களால் தாங்கிக்கொள்ளவே முடியாது. காலமெல்லாம் உன் அன்னை பராசக்தியை பாடிவந்த ஒரு புலவனுக்கு நாங்கள் செலுத்தும் நன்றி இந்த விழா. எங்கள் சக்திக்கு மீறியே இதை நாங்கள் செய்கிறோம் என்பதை நீ அறிவாய். நாங்கள் நம்பியவர்கள் எல்லாரும் எங்களை கைவிட்டுவிட்டார்கள். நீயும் எங்களை கைவிட்டுவிடாதே. அறியாமல் இந்த எளியவர்கள் ஏதேனும் பிழை செய்திருந்தால் அதை பொருத்தருள வேண்டுகிறோம்” என்று நம் பிரார்த்தனையை உருக்கமாக சொல்லிவிட்டு வந்தோம்.

குன்றத்தூர் படியை விட்டு இறங்குகிறோம்… மப்பும் மந்தாரமுமாக இருந்த மேகங்கள் விலகி கதிரவன் தெரிய ஆரம்பித்தான். பிறகு தான் நம்பிக்கை துளிர்த்தது.

DSC_6362

மாலை நிகழ்ச்சி துவங்குவதற்கு சற்று நேரத்திற்கு முன்னர் வீ.கே.டி. பாலன் அவர்களிடம் இருந்து அழைப்பு. “தம்பி நான் எத்தனை மணிக்கு அங்கே இருக்கணும்?” என்று.

எங்களால் நம்பவே முடியவில்லை.

வரமாட்டார் என்று நாங்கள் நினைத்தவர் வந்திருந்து சிறப்பாக பேசி விழாவை நடத்திக்கொடுத்துவிட்டு சென்றார். சனிக்கிழமை முழுதும் அடித்து நொறுக்கி கொண்டிருந்த மழை, ஞாயிறு எட்டிக்கூட பார்க்காமல் அமைதி காத்தது. விழா செலவுகளுக்கு கடும் நிதி பற்றாக்குறை ஏற்பட்ட நிலையிலும் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தேறியது.

DSC_6449

இந்த அற்புதம் யாராலே சாத்தியமாயிற்று?

அவன் அவன் ஒருவனை தவிர வேறு யாராலே இருக்க முடியும்??

DSC05494

நம்பினோர் கைவிடப்படார்…! இது நான்மறை தீர்ப்பு!!

இறைவனுக்கு நன்றி சொல்லும் இந்த தருணத்தில் நம்மை என்றும் வழி நடத்தும் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாய் விளங்கிவரும் மகா பெரியவா அவர்களுக்கும் நம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். நமக்காக இறைவனிடம் அவரும் பிரார்த்தனை செய்திருப்பார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இருக்க முடியாது. குருவருளின்றி திருவருள் சாத்தியமே இல்லை.

DSC_6365

மேலும் இந்த நிகழ்ச்சி சிறந்த முறையில் நடைபெற உதவிட்ட அனைத்து நண்பர்ளுக்கும் வாசகர்களுக்கும் களப்பணி செய்து நம் சுமையை பெருமளவு குறைத்த நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஊர் கூடி இழுத்த இந்த தேரின் வடத்தில் யார் கை பட்டது யார் கை படவில்லை என்பதை இறைவன் அறிவான். எனவே அது குறித்து நாம் எதுவும் கூறுவதற்கு இல்லை. எல்லாம் நன்மைக்கே!!

DSC_6348

(மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு இந்த பதிவை தட்டச்சு செய்திருக்கிறோம். சில விஷயங்கள் விடுபட்டிருக்கும். இது நிகழ்ச்சி எப்படி நடந்ததோ தெரியவில்லையே என்று பதைபதைப்புடன் ஆவலுடன் காத்திருப்பவர்களுக்கு ஒரு சிறிய அப்டேட். உங்களை மகிழ்ச்சியிலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தக்கூடிய பல விஷயங்களை விழாவில் செய்திருக்கிறோம். புதிய விஷயங்கள் சேர்க்கப்படும்.)

6 thoughts on “நம்பினோர் கெடுவதில்லை! இது நான்மறை தீர்ப்பு!!

  1. சுந்தர்ஜி

    ஹாட்ஸ் ஆப் டு சுந்தர்ஜி அண்ட் மகா பெரியவா! பிரார்த்தனை என்றும் வீண் போகாது என்பதை மற்றவர்களுக்கு உங்கள் மூலம் நீருபிக்க இறைவன் செய்த லீலை தான் இடையில் வந்த சோதனைகள். மிக மகிழ்ச்சியாக இருக்கிறது இந்த பதிவை படிப்பதற்கு. ரைட் மந்திரா இஸ் ரைட் மந்திரா டு ஆல். நன்றி

  2. வணக்கம் சுந்தர் சார்

    வர இயலமைக்கு மிகவும் வருந்துகிரேன்

    தங்கள் பணி மேன்மலும் சிறக்க என் வாழ்த்துக்கள் சார்

    நன்றி

  3. சுந்தர்ஜி அவர்களுக்கு வணக்கம் .

    நேற்றைய விழா,மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்தமைக்கு நன்றி .
    விழாவில் கலந்து கொண்டு விழா தலைமை ஏற்று சிறப்புரை ஆற்றிய ஆன்மீக சொற்பொழிவாளர் திரு : கி.சிவகுமார் அவர்கள் உரை மிகவும் அருமை .அனைவரையும் அசையாமல் செய்துவிட்டார் .

    கலைமாமணி .திரு.பாலன் அய்யா அவர்கள் உரை மிகவும் ரசிக்கும்படி அமைந்தது சிறப்பு.

    திரு .பாஸ்கர் பாரதி IAS . அவர்களின் சிறப்புரை ரசிக்கும்படி அமைந்தது .
    மற்றும் கௌரவ விருதினர்கள் கௌசலியா பெரியசாமி அவர்களின் POSITIVE SPEECH மிகவும் ENERGETICகாக இருந்தது .

    விரிவான பதிவிற்காக காத்திருக்கும்
    நண்பர்களில் நானும்..
    -மனோகர்

  4. சுந்தர்ஜி
    தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி
    மெய்வருத்தக் கூலி தரும்.
    நம் முயற்சி என்றும் வீண் போகாது.

    குரு நடத்துகிற சோதனைகளை கடந்து வெற்றி பெற நிச்சயமாக திட மனதும் குரு/தெய்வத்தின் அருள் நிறையவே வேண்டும்.
    தங்களுக்கு குரு/தெய்வத்தின் அருள் நிறையவே உண்டு.
    மஹான்களும் தொடர்ந்து ஆதரவளிக்க ஸ்ரீ பகவான் பூரணமாக அனுக்ரஹிக்கட்டும்
    விழா சிறப்பாக நடதமைக்கு மகிழ்ச்சி.

  5. ஹாய் சுந்தர்,

    ஒரு நல்ல நிகழ்ச்சியை இம் முறை தவற விட்டுவிட்டேன்.. சில முக்கியமான காரணங்களால் என்னால் வர இயலவில்லை .

    நிகழ்ச்சி இனிதே நடந்தேறியதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்..

    விரிவான பதிவிற்கு காத்திருக்கிறேன்…

    PVIJAYSJEC

  6. முருகன் அருள் உங்களுக்கு எப்பபோழ்தும் இருக்க நான் வேண்டுகிறன்

    வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *