Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, November 9, 2024
Please specify the group
Home > Featured > அக்கினிக் குஞ்சுகளின் சங்கமத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!

அக்கினிக் குஞ்சுகளின் சங்கமத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!

print
ண்பர்களே, டிசம்பர் 8, ஞாயிறு மாலை நடைபெறும் நம் தளத்தின் இரண்டாம் ஆண்டு பாரதி விழாவின் அழைப்பிதழை இத்துடன் இணைத்திருக்கிறோம். இதையே எங்கள் தனிப்பட்ட அழைப்பாக ஏற்றுக்கொண்டு அனைவரும் அவசியம் வந்திருந்து நிகழ்ச்சியை சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நம் தளம் சார்பாக ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் ஆண்டு விழாவும், டிசம்பர் மாதம் பாரதி விழாவும் நடத்தப்படும். பதிவுகள் வழியே பேசிக்கொண்டிருக்கும் உங்கள் அனைவரையும் நேரில் பார்க்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு. மேலும் பார் புகழும் சான்றோர்களை, சரித்திரம் படைத்த சாதனையாளர்களை நேரில் சந்திக்க, அவர்கள் பேசுவதை கேட்க, உங்களுக்கு ஒரு வாய்ப்பு.

பாரதியை போல ஒரு வெகுஜனக் கவிஞனை தமிழகம் கண்டதில்லை. அவரை போல ஒரு சீர்திருத்தவாதியையும் கண்டதில்லை. திருக்குறளுக்கு அடுத்து மெய்ப்பொருள் அதிகம் காணப்படுவது பாரதியின் கவிதைகளில் தான்.

நம் நாட்டில் வாழும்போது அருமை தெரியாமல் உதாசீனப்படுத்தப்பட்டவர்களில் பாரதியும் ஒருவர். வாழும்போது தான் அவருக்கு உரிய அங்கீகாரத்தை இந்த சமூகம் வழங்கவில்லை. மறைந்த பின்பாவது வழங்குவோம்.

“தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்று ஒரு ஏழைத் தொழிலாளியின் பசி குறித்து பாடிய அந்த கவிஞன் தன் வாழ்நாளில் வயிறு நிரம்ப சோறு கண்டதில்லை.

“எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா…” என்று பாடிய அந்த கவிஞன் உடுத்தியிருந்தது கிழிந்த ஒட்டுப்போட்ட ஆடைகள் தான்.

அனைத்து சௌகரியங்களும் அமையபெற்றவர்கள் கூட இறைவனை பல சமயம் நிந்தித்து என்ன வாழ்க்கை இது என்று சலித்துக் கொள்ளும் சூழ்நிலையில் போராட்டமே வாழ்க்கை, வறுமையே சுவாசிக்கும் காற்று என்று வாழ்ந்த பாரதி “உயிர்களிடத்தில் அன்பு வேணும்; தெய்வம் உண்மையென்று தானறிதல் வேணும்” என்று பாடினான்.

Double click on the image & again click to ZOOM & READ the contents
……………………………………………………………………………………………………………….

Bharathi Invitation 1

……………………………………………………………………………………………………………….

Bharathi Invitation 2
……………………………………………………………………………………………………………….

தொண்டிற்காகவே பிறந்து, தமிழுக்காகவே வாழ்ந்து, தாய் நாட்டிற்காகவே உழைத்து, ஒரு மெழுகுவர்த்தியாய் தன்னை தியாகம் செய்து மறைந்த பாரதி போன்றவர்களை இந்த சமூகம் எந்த சூழ்நிலையிலும் மறக்கக்கூடாது. அந்த மனவுறுதியை, தியாகத்தை, சிந்தனையை நினைவு கூர நமக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு.

(பாரதியின் பிறந்த நாள் டிசம்பர் 11. அனைவரின் சௌகரியத்தை மனதில் கொண்டு சற்று முன்னதாக டிசம்பர் 8 ஞாயிற்றுக் கிழமை விழாவை ஏற்பாடு செய்துள்ளோம்.)

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு – தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?

இந்த பாரதி விழாவில் பாரதி வழி நின்று இந்த சமூகத்திற்காக வாழ்ந்துவரும் தன்னலமற்ற உத்தமர்களை அழைத்து அவர்களை பேசவைத்து, கேட்கவிருக்கிறோம்.

மேலும் பெண் விடுதலை மற்றும் பெண்கள் முன்னேற்றம், அறிவியல் தமிழ், ஏழைகளின் கல்வி இவற்றில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு தன்னலமற்ற சேவையை இந்த உலகிற்கு வழங்கி பாரதியின் கனவை தங்களால் இயன்றவரையில் நிறைவேற்றி வரும் சில உத்தமர்களை உங்களிடையே அறிமுகம் செய்துவைத்து அவர்களை கௌரவிக்க உள்ளோம்.

இந்த எளிய முயற்சிக்கு பக்கபலமாக நின்று விழா சிறக்க துணை நிற்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

==========================================================

உங்கள் அன்பான கவனத்திற்கு…

வீட்டை விட்டு வெளியே இறங்கினால் சுவாசிக்கும் காற்றைத் தவிர அனைத்திற்கும் விலை கொடுக்கும் ஒரு யுகத்தில் நாம் வாழ்கிறோம். பணத்தை தேடி ஓடிக்கொண்டிருப்பவர்கள் மத்தியில் நாம் அனைவரும் புண்ணியத்தை தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம் என்பது நீங்கள் அறிந்ததே.

நம் தளம் சார்பாக நாம் மேற்கொள்ளும் அறப்பணிகளில் பலர் மனமுவந்து தங்களை இணைத்துக்கொண்டு தங்களுக்கு புண்ணியம் தேடிக்கொள்வது மகிழ்ச்சியே!! என்றாலும் நமது தளத்தின் ROUTINE செயல்பாடுகளுக்கோ அல்லது இது போன்ற சமூக விழாக்களுக்கோ தாங்களாக முன்வந்து உதவிக்கரம் நீட்டுபவர்கள் வெகு சிலர் மட்டுமே.

இந்த தளத்திற்கு ஒவ்வொரு மாதமும் சர்வர் கட்டணம் மட்டுமே ரூ.3100/- ஆகிறது என்பது தெரியுமா? (OUR WEBSITE IS HOSTED IN VIRTUAL DEDICATED SERVER). பிராட்பேண்ட் இணைப்பு உள்ளிட்ட நிர்வாகச் செலவுகள் என்று பட்டியலிட்டால் அது தனி…!! (விளம்பரங்கள் மூலம் வருவாய் திரட்டலாமே… அப்படி செய்யலாமே… இப்படி செய்யலாமே என்று சிலருக்கு யோசனை தோன்றும். நாம் பணிக்கு சென்றுகொண்டே ஓய்வு நேரத்தில் இந்த தளத்தை நடத்துகிறோம் என்பதை நினைவில் கொள்ளவும்!)

பாரதி விழாவிற்கு ஒரு சிலரைத் தவிர இன்னும் எவரும் பொருளுதவி வழங்கவில்லை. எம்மையும் எம் சில நண்பர்களையும் நம்பித்தான் இந்த இந்த மாபெரும் பணியில் நம்மை ஈடுபடுத்திக்கொண்டுள்ளோம் என்றாலும் வாசகர்களாகிய உங்கள் பங்கும் அதில் சேரும்போது விழாவை இன்னும் சிறப்பாக நடத்திட முடியும் என்பது யதார்த்தம்.

நம் நிகழ்ச்சிகள் வணிக ரீதியாக நடத்தப்படுபவை அல்ல. அனைவருக்கும் பயனுள்ளதாய் இருக்கவேண்டும் என்கிற அடிப்படையில் வர்த்தக நோக்கமின்றி சமூக நோக்கத்துடன் நடத்தப்படுபவை. எனவே வாசக அன்பர்கள் விழாவிற்கு தங்களால் இயன்ற நிதி உதவியை வழங்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அழைப்பிதழை பாருங்கள். இதற்கு உதவுவதா வேண்டாமா என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

எமக்கு நீங்கள் செய்யும் மிகப் பெரிய உதவி, இது போன்ற சந்தர்ப்பங்களில் தோள் கொடுத்து துணை நிற்பதே!

சிறுதுளி பெருவெள்ளம்!!

தளத்தின் வங்கிக் கணக்கு விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.

Bank A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

தொகையை செலுத்திய பின்பு, மறக்காது நமக்கு simplesundar@gmail.com, rightmantra@gmail.com ஆகிய முகவரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பவும். அல்லது 9840169215 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்பவும்.

தங்கள் ஆதரவுக்கு நன்றி!

Sundar,
Founder & Editor,
www.rightmantra.com and Right Mantra Soul Solutions
Mobile : 9840169215
E-mail : simplesundar@gmail.com, rightmantra@gmail.com
=======================================================
2012 ஆம் ஆண்டு நடைபெற்ற பாரதி விழா பற்றிய விபரங்களுக்கு :
http://rightmantra.com/?p=1569
=======================================================

11 thoughts on “அக்கினிக் குஞ்சுகளின் சங்கமத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!

  1. பாரதி விழாவினை காண நிச்சயம் கலந்து கொள்வோம் சார்…

  2. சுந்தர்ஜி,

    அழைப்பிதழ் மிகவும் நன்றாக உள்ளது. II will attend the function with my son.

    விழா நல்லபடியாக நடக்க எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்பார்.

    நன்றி
    உமா

  3. சுந்தர் ஜி அவர்களுக்கு ,
    பாரதி விழா மிகவும் சிறப்பாக நடைபெற எல்லாம்வல்ல திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் துணையும் ,நம் தல வாசகர்கள்,நண்பர்கள் துணை என்றென்றும் உண்டு .
    ஆண்டுவிழா போன்று சிறப்பாக நடைபெறும் .எங்களுடைய முழு ஒத்துழைப்பு தங்களுக்கு உண்டு .

    விழாவை எதிர்நோக்கி ஆவலுடன் ,
    -மனோகர்

  4. சுந்தர்ஜி
    பாரதி விழா சிறப்பாக நடக்க மஹா பெரியவா அருளட்டும் என வேண்டிக்கொள்கிறேன். எத்தனையோ விருந்தினர்களை அறிமுகபடுத்தி இருந்தாலும் இந்த முறை நீங்கள் அழைத்திருக்கும் திருமதி.கவுசல்யா அவர்களை கௌரவபடுத்துவது மிக உன்னதமான விஷயம். தாய் தந்தை இழந்தவர்களை பார்வை அற்றவர்களை பராமரிப்பதைவிட எய்ட்ஸ் நோயாளிகளை பராமரிப்பதில் மிக சிக்கலான விசயங்கள் உள்ளன. அந்த நோய் உள்ளவர்கள் அதை வெளியே சொல்ல மாட்டார்கள். அப்படிப்பட்ட சூழலில் திருமதி.கவுசல்யா அவர்கள் துணிந்து நடத்தும் நெட்வொர்க் மிகவும் பாராட்டுக்குரியது. நன்றி

  5. சுந்தர்ஜி,

    அரிது அரிது மானிடராதல் அரிது. அதனினும் கூன் குருடுசெவிடு நீங்கிப் பிறத்தல் அரிது என்பதோடு மட்டும் ஒளவை தனது பாடலை நிறுத்திவிட்டார்.

    வளர்ந்து வரும் மனித வாழ்க்கையில் ஒவ்வொருவரும், எடுக்கவும் கொடுக்கவும் கூடிய சமுதாய அமைப்பை இப்பொழுது பெற்று வருகிறோம். எனவே தானமும் தவமும்கூட எந்த ஒரு விதத்திலாவது செய்துவிட முடியும். ஆனால் பாரதியை போல ஒரு வெகுஜனக் கவிஞனை தமிழகம் கண்டதில்லை. அவரை போல ஒரு சீர்திருத்தவாதியையும் கண்டதில்லை. அப்படிப்பட்ட ஒருவருக்கு அவரை கௌரவிக்கும் வகையில் தாங்கள் நடத்தும் விழா சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

    நம் நிகழ்ச்சிகள் வணிக ரீதியாக நடத்தப்படுபவை அல்ல என்று தள
    வாசகர்கள் அனைவருக்கும் தெரிந்ததே . எங்களால் முடிந்த உதவி செய்ய என்றென்றும் கடமை பட்டுள்ளோம். எல்லாம் நல்ல படியாக நடக்கும்.

    நன்றி.

  6. அழைப்பிதழுக்கு நன்றி…
    விழா சிறக்க வாழ்த்துக்கள் சுந்தர் சார்.

  7. சுந்தர்ஜி,
    பாரதீ விழா சிறப்பாக நடக்க எல்லாம் வல்ல இறைவனை [மஹா பெரியவா] வேண்டிக்கிறேன். நம் தளம் வணிக ரீதியாக நடத்தப்படுபவை அல்ல என்று எல்லோருக்கும் தெரியும்.மேலும் நம் விருத்தினர் அனைவரும் போற்றதக்கவர்கள். அவர்கள் அனைவரும்
    ஒவ்வொரு சிப்பியில் தோன்றிய முத்துகள். மேலும் கௌசல்யா பாரதி கண்ட புதுமை பெண்.பாரதியின் கனவை நாம் எல்லோரும் நிறைவேற்வோம் .
    தொண்டிற்காகவே பிறந்து, தமிழுக்காகவே வாழ்ந்து, தாய் நாட்டிற்காகவே உழைத்து, ஒரு மெழுகுவர்த்தியாய் தன்னை தியாகம் செய்து மறைந்த பாரதி போன்றவர்களை இந்த சமூகம் எந்த சூழ்நிலையிலும் மறக்கக்கூடாது. அந்த மனவுறுதியை, தியாகத்தை, சிந்தனையை நினைவு கூர நமக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு. – மேலும் நாம் அனைவரும் இது போன்ற சந்தர்ப்பங்களில் தோள் கொடுத்து துணை நிற்போம்

  8. கண்டிப்பாக வருகிறேன் சென்ற ஆண்டை விட மிக பிராமாண்ட வெற்றி பெரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது

  9. விழா சிறக்க வாழ்த்துக்கள் சுந்தர் சார் ..

    அன்புடன்,
    விஜி

  10. டியர் சுந்தர்ஜி,

    விழா சிறப்புடன் நடக்க எமது வாழ்த்துகள்.

    பாலு மகேந்திரன்.வீ

  11. உங்களுக்கு உதவும் வல்லமையை இறைவன் எனக்கு அருளட்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *