Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, September 14, 2024
Please specify the group
Home > Featured > நீங்கள் எந்த அளவு அதிர்ஷ்டசாலி?

நீங்கள் எந்த அளவு அதிர்ஷ்டசாலி?

print
அதிர்ஷ்டத்துல உங்களுக்கு நம்பிக்கை இருக்கோ இல்லையோ அதை விடுங்க. இந்த நிமிஷம் பெரிய அதிர்ஷ்டசாலி யார் தெரியுமா?

அட நீங்க தாங்க!

எப்படி தெரியுமா?

மேலே படிங்க.. உங்களுக்கே புரியும்.

* உண்ண உணவும், உடுக்க உடையும், வசிக்க இடமும் உனக்கு இருந்தால் உலகில் உள்ள 75% மக்களைவிட அதிக வசதிகளை நீ பெற்றிருக்கிறாய்.

* வங்கியில் உனக்குப் பணமிருந்தால் அவ்வாறு உள்ள 8% பணக்காரர்களுள் நீயும் ஒருவன்.  (80% மக்களுக்கு வங்கிக் கணக்கே இல்லை!)

* உன்னிடம் கணிப்பொறி இருந்தால் நீ அவ்வாறு வாய்ப்பு பெற்ற 1% மனிதர்களுள் ஒருவன்.

* நினைத்த நேரத்தில் நினைத்த நபருடன் மொபைலில் உன்னால் பேச முடிந்தால் அவ்வாறு வாய்ப்பே இல்லாமல் இந்த உலகில் இருக்கும் 175 கோடி மக்களை விட நீ மேலானவன்.

* நோயின்றி, காலையில் புத்துணர்வுடன் நீ எழுந்தால், அந்த வாய்ப்பற்று இரவு படுக்கையிலேயே உயிர் துறந்த பலரைவிட நீ பாக்கியவான்.

* பார்வையின்மை, செவித்திறன் குறைபாடு, வாய் பேசாமை, உள்ளிட்ட எந்த குறைபாடுகளும் இல்லாது நீ இருந்தால் அவ்வாறு உள்ள 20 கோடி மக்களை விட நீ நல்ல நிலையில் இருக்கின்றாய்.

* போர், சிறைத்தண்டனை, பட்டினி போன்ற சித்ரவதையில் நீ சிக்காமல் இருந்தால், உனக்கு உலகிலுள்ள 70 கோடி மக்களுக்குக் கிடைக்காத நல்ல வாழ்க்கை அமைந்துள்ளது என்பதை அறிந்திடு.

* கொடுமைக்கு உள்ளாக்கப்படாமல் நீ விரும்பும் தெய்வத்தைத் தொழ முடிந்தால், உலகிலுள்ள 300 கோடி மக்களுக்குக் கிடைக்காத சலுகையைப் பெற்றவன் நீ.

* உன் பெற்றோரை பிரியாமல் அவர்கள் உங்களுடன் இருந்தால் நீ துன்பத்தை அறியாதவன் என்பதைப் புரிந்து கொள்.

[pulledquote][typography font=”Cantarell” size=”14″ size_format=”px”][typography font=”Cantarell” size=”13″ size_format=”px”]நீங்கள் அனுபவித்து வரும் வசதிகளையும், தொழில்நுட்பத்தையும் அனுபவிக்க இயலாமல், ஏன் அது பற்றிய அறிவு கூட இல்லாமல் கோடிக்கணக்கானோர் இந்த உலகில் இருக்க, ஆண்டவன் இவ்வளவு விஷயம் உங்களுக்கு கொடுத்திருக்கும் போது நீங்க அதிர்ஷ்டசாலி இல்லையா பின்னே?[/typography] [/pulledquote]

* தாகம் எடுத்தால் குடிப்பதற்கு உங்களுக்கு பபுள் டாப்பில் தண்ணீர் கிடைக்கிறதா? அப்படியெனில் நீங்கள் கொடுத்து வைத்தவர். ஏனெனில், உலகம் முழுதும் சுமார் 100 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு பாதுகாப்பான தண்ணீர் குடிப்பதற்கு இல்லை.

* உன்னால் தலை நிமிர்ந்து நின்று சிரிக்க முடியுமானால் அவ்வாறு செய்ய இயலாத அளவுக்குத் தைரியமும் நம்பிக்கையும் இல்லாதவர்களையும்விட நீ கொடுத்து வைத்தவன்.

*கல்வியறிவு பெற்றிருந்து இந்தச் செய்தியைப் உன்னால் படிக்க முடிந்தால் அவ்வாறு செய்ய இயலாத 80 கோடி பேர்களுக்குக் கிடைக்காத கல்வியை நீ பெற்றுள்ளாய். (உலக அளவில் எழுத படிக்க தெரியாத மக்களின் எண்ணிக்கை மட்டுமே 80 கோடிக்கும் மேல்).

* இணையத்தில் இந்த செய்தியை உன்னால் பிரவுசிங் செய்து படிக்க முடிந்தால் அது கிடைக்காத 300 கோடி மக்களை விட நீ மேலானவன்.

நீங்கள் அனுபவித்து வரும் வசதிகளையும், தொழில்நுட்பத்தையும் அனுபவிக்க இயலாமல் ஏன் அது பற்றிய அறிவு கூட இல்லாமல் கோடிக்கணக்கானோர் இந்த உலகில் இருக்க, ஆண்டவன் இவ்வளவு விஷயம் உங்களுக்கு கொடுத்திருக்கும்போது நீங்க அதிர்ஷ்டசாலி இல்லையா பின்னே?

COUNT YOUR BLESSINGS; NOT TROUBLES!

எனவே கடவுளுக்கு நன்றி சொல்லுங்க முதலில். சந்தர்ப்ப சூழ்நிலைகளை குறை சொல்லிக்கொண்டிராமல் முன்னேற்றப் பாதையில வேகமா போங்க!

ALL THE BEST!

[END]

16 thoughts on “நீங்கள் எந்த அளவு அதிர்ஷ்டசாலி?

  1. அட என்ன சுந்தர் நீங்க? நம்ம மக்களுக்கு மழை பெஞ்சா தப்பு. அதுவும் அலுவலகம் போகும் நேரத்தில் மழை பெஞ்சா ரொம்ப தப்பு. வருண பகவானும் வெதர் ரிப்போர்ட் ரமணனும் இவங்க கண்ட்ரோல்ல இருக்கணும். கொசு கடிக்க கூடாது. அப்படியே கடிச்சாலும் மலேரியா டெங்கு காய்ச்சல் வரக்கூடாது. அப்படியே வந்தாலும் அரசாங்கத்த குறை சொல்லணும். இதுக்கே நேரம் சரியா இருக்கும்போது நமக்கு கிடைச்சிருக்கிற ஆசீர்வாதங்களுக்கு கடவுளுக்கு நன்றி எப்ப சொல்லுறது.

    ———————————————————
    கொசுவை ஒழிப்பது அரசாங்கத்தின் கையில் மட்டும் உள்ள விஷயம் அல்ல. நம் வீட்டையும் நம் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருந்தாலே போதுமானது.

    அதே நேரம் சென்னை நகரின் சாலைகள் நிலை மிக மிக மோசமாக இருப்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இத்தகைய சாலைகளால் சாதாரண மழைக்கே டிராபிக் ஜாமாகி விடுகிறது. இதனால் அலுவலகம் செல்வோர் படும் பாடு சொல்லி மாளாது.

    – சுந்தர்

  2. Hello sir

    The above lines and matters are very sensitive. I think these words are using to every person to be confident in their life. But Kannadhasan had said in single line simply that UNAKKUM KEELE ULLAVAR KODI NINAITHU PARTHU NIMMATHI NADU. is it right?

    ——————————————–
    Yes… i too wanted to quote that when i was writing this post. Since i don’t want to pack too many heavy stuff in a single post. So i avoided it.
    Actually i wish to write a special article on that song alone. Will write. thanks Mr.Kesavan.
    – Sundar

  3. உண்மையில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலிதான்……

  4. Nandri Nandri Nandri! ennumo etho irkomnu , i thought of myself as a little creature… Now u made me to find the power of us…thanks anna!!

  5. Sunder sir.. what is this.. We all know that we are very much lucky enough to read Rishi sir’s WORLD is not enough and to your this Rightmandra too.. wat luck we want more to thank god?? this itself is much more luck that god poured on us..NAHARANI CHENNAI

  6. wow sema matter sundar ,ennada namma vaalakai ippadi irukke nu ninakura pala perukku ithai padikkum pothu migavum santhosamaga irukkum

  7. நானும் ரொம்ப ரொம்ப அதிர்ட்டசாலி தான்
    சார். இவ்வளவு நாலா இது தெரியாம தாழ்வு
    மனப்பான்மையில் இருந்து இருக்கேன் என
    நினைக்கும் பொது கஷ்டமா இருந்தது. தங்களின்
    கட்டுவுரை படித்த பின் ரொம்ப ரொம்ப சந்தோசமா
    இருக்கிறேன்.

    சுந்தர் சார் கு
    மிக்க நன்றி .

  8. இந்த பதிவை படித்த பிறகு தான் நாம் எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலி என்று தெரிந்து கொண்டோம் . I thank the Almighty for giving me such a good life.

    Very excellent

    thanks & regards
    uma

  9. ஹலோ சார் , இது சத்தியமான உண்மை. ரொம்ப இடைவழிக்கு பிறகு மீண்டும் ரைட் மந்திரா வை பார்க்கும் வாய்பை கொடுத்த இறைவனுக்கு நன்றி .
    சுந்தர் சார் க்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *