சுமார் ஒரு லட்சம் காலண்டர்கள் வரை அது முன்பதிவு செய்யப்பட்ட சாதனை படைத்தது. நம் தளத்திலும் அது பற்றி ‘வருடம் முழுக்க இனி லக்ஷ்மி கடாக்ஷம் தான்!’ என்கிற தலைப்பில் சென்ற ஆண்டு இதே நேரம் நாம் ஒரு பதிவளித்திருந்தோம். காலண்டரை வாங்க விரும்பும் மெய்யன்பர்கள் அதை முன்பதிவு செய்யவேண்டுமென கேட்டுக்கொண்டோம். பல வாசகர்கள் அதை முன்பதிவு செய்து பெற்றார்கள்.
இந்த ஆண்டு, ‘ஸ்ரீராமனின் பாதையில்…’ என்கிற தலைப்பில் ராமபிரானின் மகத்துவங்களை விளக்கி அதற்கு பொருத்தமான வண்ண ஓவியங்கள் மற்றும் ஸ்லோகங்களுடன், முக்கிய நாள், கிழமை விஷேடங்கள் இவற்றை பற்றிய குறிப்புக்களோடு காலண்டர் தயாராகி வருகிறது. 12 பக்கங்கள் கொண்ட அழகிய வண்ண காலண்டர் இது.
தமிழ், மற்றும் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் இந்த காலண்டர் தயாராகி வருகிறது என்பது தான் இதன் சிறப்பு. இது தினசரி தாள் காலண்டர் அல்ல. மாத காலண்டர்.
இந்த காலண்டரை வாங்க விரும்பும் நம் வாசகர்கள் அதை முன்பதிவு செய்யவேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
முன்பதிவு முடிய இன்னும் சில நாட்களே உள்ளன. நவம்பர் 27, 2013 அன்று முன்பதிவு முடிவடைகிறது. முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே காலண்டர் கிடைக்கும். கடைகளில் இது கிடைக்காது.
முன்பதிவை http://kinchitkaramtrust.org/kkt/sri-ramanin-padhayil இணையத்திலும் செய்யலாம் அல்லது சிட்டி யூனியன் வங்கியின் கிளைகளிலும் நேரில் சென்று செய்யலாம்.
முன்பதிவு செய்பவர்கள் அவர்களுக்குரிய காலண்டரை சிட்டி யூனியன் வங்கியின் கிளைகளில் (புக் செய்த கிளையில்) 31 டிசம்பர் முதல் 10 ஜனவரி 2014 வரை பெற்றுக்கொள்ளலாம். கூரியர் மூலம் வேண்டுபவர்கள் கூரியரிலும் பெற்றுக்கொள்ளலாம்.
காலண்டரை புக் செய்பவர்களுக்கு வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் வர்ணனையுடன் கூடிய ‘ஸ்ரீராமனின் பாதையில்’ டி.வி.டி.க்கள் 4 இலவசமாக வழங்கப்படும்.
‘ஸ்ரீராமனின் பாதையில் 2014’ காலண்டர் + ஸ்ரீராமனின் பாதையில் வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் வர்ணனையுடன் கூடிய வீடியோ டி.வி.டி! இன்றே புக் செய்யுங்கள்!!
ஸ்ரீராமாயணத்தின் அருமைகளை உண்மைகளை அது உணர்த்தும் வாழ்வியல் நீதிகளை அடுத்த தலைமுறைக்கு பரிசளிக்க இது ஒரு பொன்னான வாய்ப்பு. காலண்டரை புக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பரிசளிக்கலாம்.
இதில் வரும் வருமானம் முழுக்க திருக்கோவில் புனருத்தாரனங்கள், வேத பாடசாலை பரமாரிப்பு, திவ்ய பிரபந்தங்களின் வகுப்புகள் உள்ளிட்ட இறைபணிகளுக்கே செலவிடுப்படுகிறது. எனவே இந்த காலண்டரை வாங்குவதன் மூலம் பகவத் சேவையிலும் உங்களை ஈடுபடுத்திக்கொண்டவர்களாவீர்கள்! மேலும் விபரங்களுக்கு http://kinchitkaramtrust.org/kkt/index.php/ramanujarya-divyajnya என்ற முகவரியை செக் செய்யவும்.
மேற்படி இணையத்தில் சென்று நீங்கள் ஆன்லைன் மூலம் காலண்டரை புக் செய்ய, அந்த தளத்தில் USERNAME create செய்துகொள்வது அவசியம். ஏனெனில், ரிசர்வ் வங்கி மற்றும் நிதி அமைச்சகத்தின் புதிய விதிமுறைப்படி BILLDESK & PAYMENT GATEWAY மூலம் பணம் செலுத்துபவர்கள் LOG IN ID மூலம் LOG IN செய்தே பணத்தை செலுத்தவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
TO BOOK ONLINE & மேலும் விபரங்களுக்கு:
http://kinchitkaramtrust.org/kkt/sri-ramanin-padhayil
[END]
Dear sundarji
Happy Morning. Thank you for your information. I will book in CUB Branch and collect the same.
Regards
Uma
என்னுடைய ஊரில் சிட்டி யூனியன் வங்கி (ஸ்ரீவில்லிபுத்தூர் ) உள்ளது. .ஆதலால் வங்கி மூலமாக ‘ஸ்ரீராமனின் பாதையில் 2014′ காலண்டர் முன் பதிவு செய்ய உள்ளேன் . அருமையான தகவலுக்கு
நன்றி சுந்தர்ஜி
Dear Sundarji,
Thanks for the info